Tuesday, November 17, 2015

தொழிற்­சங்க பலமும் பேரம் பேசும் சக்­தி­யுமே போதுமானது

பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு உரிய சம்­பள உயர்­வினை பெற்றுக் கொடுப்­ப­தற்கு அர­சியல் பலம் அவ­சி­ய­மில்லை. தொழிற்­சங்க பலமும் பேரம் பேசும் சக்­தி­யுமே தேவை. அமரர் சௌமிய மூர்த்தி தொண்­டமான் இத­னையே கையாண்டு சாதனை படைத்தார் என்று சௌமிய இளைஞர் நிதி­யத்தின் தலைவர் எஸ்.பி. அந்­தோ­னி­முத்து தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், கூட்டு ஒப்­பந்த நவ­டிக்­கைகள் தற்­போது இழு­ப­றி­யான தன்­மை­யினை அடைந்­தி­ருக்­கின்­றன. தொழி­லா­ளர்கள் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு முகம் கொடுத்து வரு­கின்ற நிலையில் உட­ன­டி­யாக சம்­பள உயர்­வினை பெற்றுக் கொடுக்க வேண்­டிய தேவை மேலெ­ழுந்­துள்­ளது. எனினும் இது சாத்­தி­யப்­ப­டாமல் போயி­ருக்­கி­றது. 1970 முதல் 77 வரை­யான கால­கட்­டத்தில் அமரர் தொண்­டமான் எவ்­வி­த­மான அர­சியல் பலமோ அந்­தஸ்தோ இல்­லாது பல்­வேறு தொழிற்­சங்க போராட்­டங்­க­ளையும் நடத்தி மலை­யக மக்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுத்தார். துன்ப துய­ரங்­களை தன­தாக்கிக் கொண்டு துணி­வுடன் செயற்­பட்டார். அக்­கா­லப்­ப­கு­தியில் பெருந்­தோட்ட மக்கள் சொல்­லொணா துன்­பங்­களை அனு­ப­வித்துக் கொண்­டி­ருந்த நிலையில் முழு மலை­ய­கமும் ஸ்தம்­பிக்கும் வகையில் ஒரு பாரிய வேலை நிறுத்தப் போராட்­டத்தை தலை­மை­யேற்று நடத்­தினார்.
 
சாத்­வீக போராட்­டங்­களை நடத்­திய அவ­ருக்கு 1977இல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராகும் வாய்ப்பு கிடைத்­தது. அமரர் தொண்­டமான் அர­சி­யலில் கிங் மேற்­க­ராக திகழ்ந்தார். அவர் நடத்­திய பிரார்த்­தனை ரீதி­யி­லான தொழிற்­சங்க போராட்­டமே பெருந்­தோட்ட மக்­க­ளது பிரஜா உரி­மைக்கும் சம்­பள உயர்வு மற்றும் சம­சம்­ப­ளத்­திற்கும் வித்­திட்­டது எனலாம்.
 
உரிமை இல்­லா­தி­ருந்த மலை­யக சமூ­கத்­திற்கு உரி­மை­க­ளையும், முக­வ­ரி­யையும் தொண்­ட­மானே பெற்றுக் கொடுத்தார் என்றால் மிகையா­காது. மலை­யக மக்கள் தலை­நி­மிர்ந்து வாழ்­வ­தற்கு அவரே உந்து சக்­தி­யாக இருந்தார் என்­பதே உண்­மை­யாகும்.
 
அர­சியல் பலம் இல்­லாத போதும் தொழிற்­சங்க பலம், பேரம் பேசும் சக்தி என்­பன மலை­யக மக்கள் பல்­வேறு உரி­மை­க­ளையும் பெற்றுக் கொள்ள வழி­வ­குத்­தது. இத்­த­கைய செயற்­பா­டுகள் ஒரு முன்­னு­தா­ர­ண­மா­கவும் அமைந்­தது. தொழி­லாளர் சம்­பள உயர்வு விட­யத்­திலும் அமரர் தொண்­ட­மானின் காய் நகர்த்­தல்­களை முன்­னி­றுத்தி செயற்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்டும்.
 
இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு தடவை கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் கம்­ப­னிகள் நட்டம் ஏற்­பட்டு விட்டதாக கூக்குரல் இடுவதனை விடுத்து இலாபம் தரும் நோக்கில் கம்பனிகளின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மேல்மட்ட செலவுகளை கட்டுப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினை பெற்றுக்கொடுப்பது ஒன்றும் கம்பனிகளுக்கு கடினமான விடயமல்ல என்றார்.

இ.தொ.கா வை விமர்சிப்பதிலேயே காலம் கழிகிறது

அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரா­கிய பின்னர் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு அதிக சம்­ப­ளத்தை பெற்­றுத்­த­ரு­வ­தாக சிலர் கூறினர். அவ்­வாறு கூறி­ய­வர்­களே தற்­போது காணாமல் போயுள்­ள­தாக ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் தெரி­வித்­துள்ளார். அமைச்சு அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு பேசு­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்து பேசு­கையில்.
 
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு நாட்­சம்­ப­ளத்தை ஆயிரம் ரூபா­வாக அதி­க­ரித்துக் கேட்­ட­வர்கள் நாமே­. நாம் மக்­க­ளுடன் தான் இருக்­கின்­றோ­மே­யன்றி எங்கும் காணாமல் போய்­வி­ட­வில்லை. ஆனால் தேர்தல் காலத்தில் தனக்கு வாக்­க­ளித்து வெற்றி பெற­வைத்து தான் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரானால் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளி­னது நாட்­சம்­ப­ளத்­தை அதி­க­ரித்து பெற்­றுக்­கொ­டுப்­பே­னென்று மலை­யக அமைச்சர் ஒருவர் கூறி­யி­ருந்தார்.
 
அவர் பொய்­யான வாக்­கு­று­தி­களை வழங்கி மக்­களை ஏமாற்­றி­யுள்ளார். அவர் அமைச்­ச­ரா­கிய பின்னர். தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள அதி­க­ரிப்பு குறித்து பேசு­வதே கிடை­யாது. அவர் தான் தற்­போது காணாமல் போயுள்ளார். தோட்டத் தொழி­லா­ளர்க­ளுக்கு எவ்­வ­ளவு, சம்­பள உயர்­வென்­றா­வது குறிப்­பிட்ட அமைச்­ச­ருக்கு அறி­விக்க முடி­கின்­றதா?
 
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­பள உயர்வு கேட்­டது இ.தொ.கா. வேயாகும். ற்­போ­தைய வாழ்­க்கைச்­செ­லவு உயர்­வுக்கு அமைய கோரப்­பட்ட ஆயிரம் ரூபா சம்­பள உயர்வும் போதாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. மா மற்றும் பருப்பு உள்­ளிட்ட பொருட்­களின் விலை உயர்­வையும் இங்கு குறிப்­பி­டலாம்.
 
அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரா­கி­யதும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாகக் கூறிய கூற்று தற்­போது என்­ன­வா­யிற்று? ஒரு வரு­டத்தில் இரு­பது வீடு­களை மட்டும் கட்­டி­விட்டு, இரு­பத்து மூவா­யிரம் வீடு­களை, மலை­ய­கத்தில் நிரு­மா­ணித்த இ.தொ.கா. வை குறை­கூறி விமர்­சிப்­ப­தற்கு எவ­ருக்கும் அரு­கதை கிடை­யாது.
 
மலை­ய­கத்தில் அமைச்­சர்­க­ளா­கியும் கூட, மலை­யக மக்­களின் மேம்­பா­டுகள் குறித்து செயற்­ப­டாமல், எதற்­கெ­டுத்­தாலும் இ.தொ.கா. வை விமர்­சிப்­ப­தி­லேயே அவர்கள் காலத்தை கழித்து வரு­கின்­றனர்.
 
இ.தொ.கா. சார்பில் மத்­திய அரசில் அமைச்­சர்­க­ளாக இல்­லாத போதிலும் தோட்டத் தொழி­லா­ளர்களின் மேம்­பாடு விட­யத்தில், இயன்­ற­வ­ரை­யி­லான சேவை­களை மேற்­கொண்டு வரு­கி­ன­்றது. இந்­நி­லையில் மலை­ய­கத்தில் அமைச்­சர்­க­ளாக இருப்­ப­வர்கள் தமது இய­லா­மையை உணர்ந்து வெட்­கப்­படல் வேண்டும்.
 
மலை­யக அமைச்­சர்­க­ளாக இருக்கும் இவர்கள் தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்­கான சம்­பள உயர்வு தொடர்­பாக எத்­தனை போராட்­டங்­களை நடத்­தி­னார்கள் என்­பது கேள்வி குறி­ய­தாகும். இத்தகைய நிலையை கைவிட்டு தோட்டத்தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை அவர்கள் முன்னெடுக்க பழகிக்கொள்ளல் வேண்டும்.
 
மக்களுக்கு சேவை செய்ய இந்த அமைச்சர்களுக்கு திராணியில்லாவிட்டால் அந்த அமைச்சர் பதவியினால் எத்தகைய பயனும் கிடையாது என்பதனையும் உணர வேண்டும் என்றார்.

நேபாளத்தைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்துக

மோடி அரசாங்கம், நேபாளத்துடன் மேற்கொண்டுள்ள மோதல் போக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய - நேபாள உறவில் விரிசலை ஏற் படுத்தி இருக்கிறது. பாஜக அரசாங்கம், செப்டம்பர் 20ஆம் தேதி, நேபாளத்தில் பிரகடனம் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத் திற்கு எதிர்மறையான அணுகுமுறையைப் பின்பற்றத் தொடங்கியபின், மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது அதிகரித்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக, இந்தியாவிலிருந்து நேபாளம் செல்லும் அனைத்துப் பாதைகளும் அடைக்கப்பட்டிருக் கின்றன. நேபாளம், தன்னுடைய அனைத்து அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் வர்த்தகத்தையும் இந்தியா வழியாகத்தான் செய்து வந்தது. மோடி அரசாங்கத்தால் தூக்கிப்பிடிக்கப்பட்டுள்ள மாதேசி கிளர்ச்சி காரணமாக, ராக்சால் - பிர்குஞ்ச் குறுக்குச்சாலையும் மற்றும் பல பாதைகளும் அடைக்கப்பட்டுவிட்டன. இது அத்தியாவசியப் பொருள்கள் மற் றும் எரிபொருள் பற்றாக்குறையை கடுமையாக ஏற்படுத்தி இருக்கிறது.

நேபா ளம் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபின், அப்பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் புனர்நிர் மாண வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். சாலைகள் அடைக்கப்பட்டதால் புனர்நிர் மாண வேலைகளில் ஈடுபட்ட மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குளிர்காலம் வருவதற்குள்ளாகவே ரெடிமேட் வீடுகளைக் கட்டிட வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மலைப்பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்துவந்த ஹெலிகாப்டர் களுக்குப் போதிய எரிபொருள் கிடைக்காத தால் அவற்றின் இயக்கமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் சமையலுக்கான எரிபொருள் கிடைக் காததால், காட்டு மரங்களை வெட்டி விறகுகளாகப் பயன்படுத்துகிறார்கள். இது வனத்தையே அழிக்கக்கூடிய அளவிற்கு இட்டுச்சென்று கொண்டிருக்கிறது. மாதேசி கிளர்ச்சியால்தான் சாலைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன என்றும், அவ்வாறு சாலைகள் அடைக்கப் பட்டிருப்பதற்கும், இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கிற இந்திய அரசாங்கத்தின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே யான எல்லைப் பகுதிகளில் போக்கு வரத்து இயல்பாக நடந்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று இந்திய அரசின் சார்பில் இதுவரை ஓர் அறிக்கை கூட வெளியிடப்படவில்லை. இருநாடுகளுக்கும் இடையே போக்கு வரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளப்பட்டதாகவும் தெரியவில்லை. உண்மையில், கிளர்ச்சிகள் எதுவும் நடைபெறாத கிழக்கு நேபாள எல்லையில்கூட சாலைகளை அடைத்திட இந்திய அரசுஅதிகாரப்பூர்வமற்ற முறையில் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்ப தாகக் கூறப்படுகிறது.நேபாளத்தில் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததற்குப்பின்னர், கே. பி. சர்மா ஒலி பிரதமராகப் பொறுப்பேற்றதை அடுத்து, புதிய அரசாங்கம் நேபாளத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, நேபாளத் துணைப் பிரதமர்தில்லிக்கு விஜயம் செய்தார். இந்திய அயல்விவகாரங்கள் துறை அமைச்சருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, கிழக்குப் பகுதியில் சில குறுக்குச் சாலை கள் போக்குவரத்திற்காக, திறந்துவிடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் இவரது வேண்டுகோளுக்கு இந்தியாவின் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித பதிலும் இல்லை. மாதேசி கிளர்ச்சியை ஆதரிப்பதில் இந்திய அரசாங்கம் எவ்விதத் தயக்கமும் காட்டவில்லை. மாதேசி கிளர்ச்சிக் குழுவினர் நரேந்திர மோடி மற்றும் இந்தியஅரசாங்கத்தின் ஆதரவினை வெளிப் படையாகவே கோரி வருகின்றனர்.

அக்டோபரின் கடைசி வாரத்தில், மாதேசி தலைவர்களின் தூதுக்குழுவினர் தில் லிக்கு விஜயம் செய்திருந்தனர். இது, நேபாளத்தின் உள் விவகாரங்களில் பகிரங்க மாகவே தலையிடும் விஷயமாகும். பிர்குஞ்ச் பகுதியிலிருந்து கிளர்ச்சியா ளர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று நேபாள அதிகாரிகள் கோரியபோது, .இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, போலீஸ் துப்பாக்கிச்சூடு நடைபெறுவதற்கு இட்டுச்சென்றது. இதில்இந்திய சிறுவன் ஒருவன் இறந்தான். கிளர்ச்சியில் ஈடுபட்ட சில இந்தியர்களைக் கைது செய்திருப்பதாக, நேபாள அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இந்திய அரசாங்கத்தின் மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை இந்திய அயல்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கைஅம்பலப் படுத்திவிட்டது. அவர் அந்தஅறிக்கையில், “நேபாளத்தை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் அரசியல் முக்கியத்துவம் உடையவைகளாகும். அவற்றை வலுக்கட்டாயமாகத் தீர்த்திட முடியாது. தற்போதைய மோதலுக்குக் கார ணங்களாக அமைந்துள்ளவை குறித்து, நேபாள அர சாங்கம் உண்மையாகவும், வலுவாகவும் தீர்மானிக்க வேண்டியது அவசியமாகும்.’’ இந்தியா ஆதரிக்கும் மாதேசிகளின் கோரிக்கையை நேபாளம் அங்கீகரிக்க வேண்டியது அவசியம் என்று இந்தியா நேபாளத்தின் நெற்றியில் துப்பாக் கியை வைத்து மிரட்டும் செயலே இது வன்றி வேறல்ல. இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அனைத்து சாலைகளையும் அடைத்து வைத்திருப்பது, நேபாள மக்களின் மத்தியில் கடும் எரிச்சலை ஏற் படுத்தி இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராகமக்களில் பெரும்பான்மையோர் ஆத்திரப் படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேபாள அரசாங்கத்தையும் அதன் அரசி யல் நிறுவனத்தையும் மிரட்டி அடக்க மோடி அரசாங்கம் முரட்டுத்தனமாக மேற் கொண்டுள்ள முயற்சிகளுக்கு எதிராக நேபாளத்தில் இயங்கும் அனைத்துக் கட்சிகளும் கட்சி வித்தியாசமின்றி ஒன்று பட்டுள்ளன. இதனால் நேபாளம் சீனாவைஅணுக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி யுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஓர்ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, திபெத்திலிருந்து தரைமார்க்கம் வழியாக சீனா 1000 மெட்ரிக் டன் பெட்ரோல் வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்தியாஅனைத்து சாலைகளையும் அடைத்து வைத்திருப்பது குறித்து, நேபாள அயல்துறை அமைச்சர் ஐ.நா.அமைப்பிடம் முறையிட்டிருக்கிறார். நேபாள மக்கள் சாலைகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதன் காரண மாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து சார்க் நாடுகள் அனைத்தும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன. நேபாளம் குறித்த மோடி அரசாங்கத்தின் அணுகுமுறை ஓர் அரைவேக்காட் டுத் தனமான ஒன்று என்று சொல்வதற் கில்லை. இந்தப் பிராந்தியத்தில் தான் ஒரு தேசிய வெறி கொண்ட பெரிய வல்லரசு நாடு என்று காட்டிக்கொள்வதற்காக, மோடி அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள் கிறது. மேலும் நேபாள அரசியல் நிர்ணயசபை, நேபாளத்தை ஓர் மதச்சார்பற்ற குடியரசு என்று பிரகடனம் செய்ததற் காக, ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்கள் நேபாள அரசை பகிரங்கமாகவே அவமதித்துக் கொண்டிருக்கின்றன. நரேந்திர மோடி யும், பாஜக அரசாங்கமும் மாதேசிகளின் ஆதரவினைப் பெறுவதற்காக நேபாள அர சைப் பகைத்துக்கொள்ளவும் தயாராகவே இருக்கின்றன. இதன்மூலம் பீகாரில் வாழும் மாதேசிகளின் ஆதரவினைப் பெற்று தேர்தலில் வென்றுவிடலாம் என் பது பாஜகவின் எண்ணம். ஆனால் அது நடக்கவில்லை.தெற்கு ஆசியாவில் மோடி அரசாங்கத்தின் அயல்துறைக் கொள்கையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித்ஜோவல், வடிவமைத்துக் கொண்டிருக் கிறார். இவரது நடவடிக்கைகளின் காரண மாக பாகிஸ்தானுடனான உறவுகள் ஏற்க னவே சிதிலமடைந்துவிட்டன. இப்போது, மிக நீண்ட காலம் கலாச்சார ரீதியாகவும், நாகரிக உறவுகளிலும் மிகவும் நெருக்க மாக இருந்த நேபாளத்தையும் எதிரி நாடாகமாற்றிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, நேபாளம் பாதுகாப்புக் கோரி, சர்வ தேச அமைப்புகளை அணுக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறது. இதனால்சர்வதேச அளவில் இந்தியாவின் சித்திரம்மிகவேகமாக சிதைந்து கொண்டிருக்கிறது.நேபாளத்தைக் கொடுமைப்படுத்தும் இக்கொடூரமான கொள்கையை மோடி அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண் டும். நேபாள அரசாங்கத்துடன் கலந்துபேசி எல்லையில் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடைகளை அகற்றிட வேண் டும். மாதேசிகள் மற்றும் ஜன்ஜாதிகள் பிரச்சனைகள் நேபாளத்திற்குள் அரசியல் நடவடிக்கைகள் மூலமாக சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இந்தத் திசை வழியில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு மாதேசி குழுக்களிடம் இந்திய அரசு தன் செல்வாக்கினைப் பயன்படுத்திட வேண்டும்.

(தமிழில்: ச. வீரமணி)

நன்றி- தேனீ இணையம்

ஸ்ரீலங்காவுக்கு வருகை தரவிருந்த தமிழ்நாட்டு தீவிரவாத இஸ்லாமியத் தலைவர் ஜெய்னுல் ஆப்தீனின் முயற்சி ஸ்ரீலங்காவிலுள்ள மிதவாத முஸ்லிம் தலைவர்களால் முறியடிக்கப்பட்டது

தீவிரவாத இஸ்லாத்தின் தமிழ் முகம் அவருடையது. மௌலவி பி ஜெய்னுல் ஆப்தீன், பிஜே, என்று பிரபலமாக அறியப்படுபவர், மற்றும் அடிப்படைவாதிகளான தமிழ்நாடு தௌகீத் ஜமாத்தினது (ரிஎன்ரிஜே) நட்சத்திரப் பேச்சாளர், ஸ்ரீலங்காவில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய மாநாட்டில் “உண்மையான இஸ்லாம்” என்ற தலைப்பில் அவர் போதிப்பதாக இருந்த பேச்சை நடத்துவதற்காக அவருக்கு ஸ்ரீலங்காவுக்கு வருவதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் உள்ள முஸ்லிம் சமூகம், பௌத்த கடும்போக்காளர்கள் மற்றும் தமிழ் புலிகள் ஆகிய இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட அநேக கலவரங்கள் மற்றும் தாக்குதல்களினாலும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைத் தாங்கியுள்ளது, இல்லையெனில் அதைப்பற்றி சிந்தித்தும் உள்ளது. பிஜே யினை ஸ்ரீலங்கா தொளவீத் ஜமாத் (எஸ்எல்ரிஜே) நவம்பர் 8ல் குரானின் சிங்கள மொழிபெயர்ப்பை வெளியிடுவதற்காக  ஸ்ரீலங்காவுக்கு அழைத்திருந்தது.

அகில இலங்கை ஜமய்த்து உலாம மற்றும் ஏனைய மிதவாத முஸ்லிம் அமைப்புக்கள் இந்த வரவை எதிர்த்திருந்தன, மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அதற்கு இணங்கவேண்டியதாயிற்று. இஸ்லாம் பற்றிய பிஜே யின் வகாபி கருத்துக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தலாம் என இந்த மிதவாத முஸ்லிம் குழுக்கள் உணர்ந்தன. முன்னர் 2005லும் பிஜே இதே காரணங்களுக்காக இங்கிருந்து வெளியேற்றப்பட்டார். தான் இஸ்லாம் அல்லாதது எனக் கருதும் பிரபலமான இல்லாமிய நடவடிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதற்கும் மக்களின் மத நம்பிக்கைகளை மாற்றுவதற்கும் ஏற்ற இடமாக ஸ்ரீலங்காவை அவர் இலக்கு வைத்துள்ளார்.

பி.ஜே .யிற்கு மிதமான நிலைப்பாடு கிடையாது
தமிழ் நாட்டை சேர்ந்த தீவிரமான அடிப்படைவாதியான ஒரு மௌலவி, குரான் மற்றும் சுன்னாவினை அடிப்படையாகக் கொண்ட தூய இஸ்லாத்தை கூட்டலோ அல்லது குறைத்தலோ இன்றி பரப்பும் பணியினை மேற்கொள்வதற்காக தன்னை ஒப்படைத்துள்ளார், என்பதை அவரது இணையத்தளம் தெரிவிக்கிறது. ஜெய்னுல் ஆப்தீன் தனது அரசியல் செயற்பாட்டை தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை (ரிஎன்எம்எம்கே) 1995 ல் நிறுவியதன் மூலம் ஆரம்பித்தார். எனினும் 2004ல் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் ஒரு பிளவு உருவானதால் பிஜே தமிழ்நாடு தௌகீத் ஜமாத்தினை, மதம் மற்றும் அரசியல் கலந்த ஒரு அமைப்பாக உருவாக்கினார்.
.
நீதிபதி ரங்கநாதன் மிஸ்ரா ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக்காக போராடுவதைக் காட்டிலும், இஸ்லாம் ஒரு அமைதியான மதம் அதன் கலாச்சாரம் இன நல்லிணக்கம் என்பதையே, அந்த அமைப்பு சித்தரித்து வந்தது. இது ஒரு சாமர்த்தியமான உத்தி, ஏனென்றால் உள் வகுப்புவாத நல்லிணக்கத்தை பரப்பும் அதேவேளை, அவர் வெளிப்படையாகவே சிகாக்கள், போராக்கள் மற்றும் அகமதியாக்கள் அல்லது காடிவானிகள் போன்ற பல்வேறு அடிப்படைவாதமற்ற இஸ்லாமிய அமைப்புக்களின் இருப்பினை எதிர்த்து வந்தார்.
பின்னணி
ஸ்ரீலங்காவில் உள்ள முஸ்லிம்கள் இப்போது 21 மில்லியனான தீவின் மொத்த சனத்தொகையில் 9.5 விகிதமாவார்கள், கிமு 7ம் நூற்றாணடில் ஏற்பட்ட அவர்களது வருகையிலிருந்து சமாதானத்தை நேசிக்கும் ஒரு சமூகமாகவே அவர்கள் இருந்து வருகிறார்கள். எனினும் அவர்களது தொழில் முனைப்பும் மற்றும் அமைதியான இருப்பும் காலத்துக்கு காலம் பயங்கரமான சவால்களை எதிர்கொள்ளவேண்டியதாக உள்ளது. 1980 களில் தமிழர்கள் சுதந்திரத் தமிழீழத்தை அடைவதற்காக ஆயுதப் போராட்டத்தை அணுகியபோதும், முஸ்லிம்கள் தங்களை அதில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. வியாபாரிகள் என்கிற வகையில் அவர்கள் சமாதானத்தையே விரும்பினார்கள் மற்றும் இதனால் எரிச்சலடைந்த புலிகள் 75,000 முஸ்லிம்களை அவர்களின் இருப்பிடத்திலிருந்து துரத்தியடித்தார்கள்.
பின்னர் சிங்கள குடிமக்களும் கூட அவ்வப்போது முஸ்லிம்கள்மீது தாக்குதலை மேற்கொண்டார்கள். மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் (2005 – 2014)  புதிய அமைப்பான பொதுபலசேன, ஹிஜாப் மற்றும் ஹலால் சான்றிதழ்களுக்கு தடை ஏற்படுத்தவேண்டும் என்று அழைப்பு விடுத்ததுக்கும் மற்றும் மசூதிகளைத் தாக்குவதற்கும் ஊக்கம் வழங்கியது.

ஜூன் 2014ல் பொதுபலசேனாவினால் ஏவப்பட்ட சிங்களவர்களால் ஒரு கலகம் தொடங்கப்பட்டது. முஸ்லிம்களின் பொருளாதார பின்புலத்தை தகர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியினால் அந்தச் சமூகம் ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிராக பாராளுமன்றத் தேர்தலில்  வாக்களிப்பதற்கு வழிசெய்தது, அதன் காரணமாக அவரது வெளியேற்றத்தையும் காணமுடிந்தது. கடந்த பல வருடங்களாக வகாபிக்கள், சுபிக்கள், சுன்னிகள், ஷிகாக்கள், போராக்கள், மலேயர்கள், இந்திய மற்றும் இலங்கை வம்சாவழியை சேர்ந்த முஸ்லிம்கள் ஆகிய அனைவரும் ஒன்றுசேர்ந்து குறைந்தது சமூக மற்றும் அரசியல் நலன்களுக்காக ஒரு ஒற்றை முஸ்லிம் சமூகமாக மாறியுள்ளார்கள்.

நிலவரம்
1.2012 குடிசன மதிப்பீட்டின்படி ஸ்ரீலங்கா கொண்டுள்ள முஸ்லிம் சனத்தொகையானது 1,967,227 ஆகும், அது மொத்த சனத்தொகையின் 9.5 விகிதமாகும்.
2.நாட்டிலுள்ள முஸ்லிம் சனத்தொகையில் அதிகளவு எண்ணிக்கையானவர்கள் வர்த்தகர்கள். அவர்கள் நாட்டுக்கு வந்தது முதல் இதையே செய்து வருகிறார்கள்.

1990 படுகொலைகள்
தமிழ் புலிகள், ஓகஸ்ட் 3,1990ல் காத்தான்குடி ஜூம்மா பள்ளிவாசலில் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த முஸ்லிம்களை படுகொலை செய்தார்கள். அடுத்த சில மாதங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள், வட மாகாணத்தை சேர்ந்த முஸ்லிம்கள்  ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு உளவு பார்ப்பதாக குற்றம் சுமத்தி கிட்டத்தட்ட 75,000 முஸ்லிம்களை அங்கிருந்து விரட்டியடித்தார்கள்.
2009ல் ஏற்பட்ட குழப்பங்கள்

சிங்களவர்களுக்கும் மற்றும் முஸ்லிம்களுக்கும் இடையிலான ஒற்றுமை, எல்.ரீ.ரீ.ஈயின் அழிவு மற்றும் 2006 – 2009ல் நடந்த ஈழப்போர் 4 ன் போது தமிழர்கள் அவமானப் படுத்தப் பட்டதின் பின்னர் தளர்வடைய ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து சிங்கள வர்க்கம் முஸ்லிம்களை அடக்கியாள தொடங்கியது. மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் ஒரு புதிய அமைப்பான பொது பல சேனா என்கிற அமைப்பு ஹிஜாப், மற்றும் ஹலால் சான்றிதழ்களுக்கு தடை ஏற்படுத்த வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கும்  மற்றும் பள்ளிவாசல்களைத் தாக்கும் செயல்களுக்கும் கூட ஊக்கம் அளித்தது.

2014 கலவரங்கள்
ஜூன் 2014ல், நாட்டின் தென் மேற்கு பகுதிகளில் மத மற்றும் இன கலவரங்கள் ஏற்படுவதற்கு ஸ்ரீலங்கா சாட்சியானது. முஸ்லிம்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் என்பன களுத்துறை மாவட்டத்தின் மூன்று நகரங்களில் சிங்கள பௌத்தர்களால் தாக்குதலுக்கு உள்ளாகின. அவர்கள் குறைந்தது மூன்று பேரைக் கொன்றதுடன் 80 பேருக்கு காயம் விளைவித்தார்கள். 8,000 முஸ்லிம்கள் மற்றும் 2,000 சிங்களவர்கள் இந்தக் கலவரத்தால் இடம்பெயர்ந்தார்கள், வீடுகள், வாத்தக நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் வீடற்றவர்களானார்கள். கடும்போக்கு பௌத்த குழுவான பொது பல சேனா ஊhவலம் நடத்தியதின் விளைவாகவே கலவரங்கள் ஏற்பட்டதாக கருதப்படுகிறது, ஆனால் அந்தக் குழுவினர் அதற்கான பொறுப்பை நிராகரிக்கின்றனர்.

தீவிரவாதிகளின் தாக்குதல்
2013ல் பௌத்த கடும்போக்காளர்களினால் முஸ்லிம்கள்மீது ஒரு சில தாக்குதல்கள் மேற்கொள்ளப் பட்டன. அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொழும்புக்கு அருகில் உள்ள முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். ஒரு முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான ஆடைக் களஞ்சியத்தை அவர்கள் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.




பி.கே. பாலச்சந்திரன்

 தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
(நன்றி: நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்)

Wednesday, November 11, 2015

335 உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­களில் 30 உள்­ளூராட்சி நிறு­வ­னங்­க­ளா­வது இருக்க வேண்டும்

மலை­ய­கத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தொகையை அதி­க­ரிக்க வேண்­டுமே தவிர வட்­டா­ரங்­களை விஸ்த­ரிப்­பதால் உரிய பயன் விளையப் போவ­தில்லை என்று மலை­யக மக்கள் முன்­ன­ணியின் ஏ.லோரன்ஸ் தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், உள்­ளூ­ராட்சி விட­யங்கள் தொடர்பில் தற்­போது அதி­க­மாக பேசப்­ப­டு­கின்­றது. உள்­ளூ­ராட்சி முறை­மையை சாத­க­மாக்கிக் கொள்ள ஒவ்­வொரு சமூ­கத்­தி­னரும் முயன்று வரு­கின்­றனர். இந்­நி­லையில் மலை­ய­கத்­த­வர்­க­ளுக்கு உள்­ளூ­ராட்சி முறையை சாத­க­மாக்கிக் கொடுக்க மலை­யக அர­சி­யல்­வா­திகள் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்டும். மலை­யக மக்கள் மலை­ய­கத்தின் பல பகு­தி­களில் செறி­வாக வாழ்­கின்­றார்கள். எனினும் சனத்­தொ­கைக்­கேற்ப உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­களின் எண்­ணிக்கை போதா­துள்­ளது. மலை­யக அர­சியல்வாதிகள் இவ்­வி­ட­யத்தில் கரி­ச­னை­யுடன் செயற்­பட வேண்­டிய தேவை இருக்­கின்­றது.
 
மலை­யக மக்கள் சுமார் 15 இலட்சம் பேர் உள்­ளனர். எனவே மொத்­த­மாக உள்ள 335 உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­களில் எம்­ம­வர்­க­ளுக்கு 30 உள்­ளூராட்சி நிறு­வ­னங்­க­ளா­வது இருக்க வேண்டும். எனினும் இப்­போது இரண்டு பிர­தேச சபை­களும் இரண்டு நகர சபை­க­ளுமே எம்­வ­ச­மாக உள்­ளன. வட்­டார முறை இப்­போது இடம்­பெற்று வரு­கின்­றது. வட்­டா­ரங்­களை 35 இற்கு மேற்­ப­டக்­கூ­டாது என்று மேல் எல்­லையும் வகுத்­துள்­ளார்கள். மேல் எல்லை வகுக்­கப்­ப­டாது இருந்­தி­ருந்தால் மலை­யகப் பகு­தி­களில் வட்­டா­ரங்­களின் தொகை அதி­க­ரித்­தி­ருக்கும். குறிப்­பாக அம்­ப­கல பகு­தியில் நாற்­பது அல்­லது ஐம்­பது வட்­டா­ரங்­களும் நுவ­ரெ­லியா பகு­தியில் பல வட்­டா­ரங்­களும் ஏற்­ப­டுத்­தப்­படும் வாய்ப்­புள்­ளது. எனினும் மேல் எல்லை எமக்கு மிகவும் பாத­க­மா­கி­யுள்­ளது.
 
இரண்டு இலட்சம் பேருக்கு உள்ள வட்­டா­ரங்­களின் தொகையும் 60 ஆயிரம் பேருக்கு உள்ள வட்­டா­ரங்­களின் தொகையும் ஒரே­ய­ளவில் இருப்­ப­தனை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது.
 
இதில் என்ன நியாயம் இருக்­கின்­றது? தல­வாக்­கலை நகர சபைக்கு ஒன்­பது வட்­டா­ரங்­களும், நுவ­ரெ­லியா மாந­கர சபைக்கு 12 வட்­டா­ரங்­க­ளு­மா­கவே ஏற்­பா­டுகள் இடம் பெற்­றுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. வட்­டார ஏற்­பா­டு­களில் நாம் பின்­தள்­ளப்­பட்­டி­ருக்­கிறோம் என்­பது புல­னா­கின்­றது. இதுவும் ஒரு மோச­மான நிலை­மை­யையே வெளிப்­ப­டுத்­து­கின்­றது.
 
நாட்டில் அநே­க­மான கிராம சபைகள் காணப்­ப­டு­கின்­றன. வாக்­கு­ரிமை பறிக்­கப்­பட்ட நிலையில் கிரா­ம­சபை வாய்ப்­புக்கள் கூட எமக்கு கைந­ழுவிப் போய் உள்­ளமை வருத்­தத்­தக்க விட­ய­மாகும். 1987ஆம் ஆண்டு 15ஆவது இலக்க பிர­தே­ச­சபைச் சட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு உட்­பட்ட பிர­தேச சபைகள் உரு­வாக்­கப்­பட்­டன. இந்த நிலையில் மலை­யக மக்­க­ளுக்கு பிர­தேச செய­ல­கங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் பிர­தேச சபை­களும் ஏற்­ப­டுத்த முடி­யாமல் போய்­விட்­டது. பிர­தேச செய­ல­கங்­களை உரு­வாக்­காமல் பிர­தேச சபை­களை பற்றி யோசிக்க முடி­யாது. நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 12 பிர­தேச செய­ல­கங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென மலை­யக கட்­சிகள் அனைத்தும் ஒன்­றி­ணைந்து கோரிக்கை விடுத்­தி­ருந்­தன. இப்­போது 5 பிர­தேச செய­ல­கங்கள் மட்­டுமே காணப்­ப­டு­கின்­றன. எனினும் இது சாத்­தி­யப்­ப­ட­வில்லை. இவ்­வாறு சாத்­தி­யப்­ப­டு­மி­டத்து தமிழ் மக்கள் வாழும் பகு­தி­களில் 7 பிர­தேச சபை­களும் சிங்­கள மக்கள் வாழும் பகு­தி­களில் 5 பிர­தேச சபை­க­ளு­மாக மொத்­த­மாக 12 பிர­தேச சபைகள் உரு­வாகும். மலை­ய­கத்தில் அதி­க­மான நக­ர­ச­பை­களை ஏற்­ப­டுத்தும் வாய்ப்­புள்­ளது. கொட்­ட­கலை, பொக­வந்­த­லாவை, மஸ்­கெ­லியா, அக்­க­ரப்­பத்­தனை, கந்­தப்­பளை, இரா­கலை, உட­பு­சல்­லாவ, புசல்­லாவ, பூண்­டு­லோயா போன்ற இடங்­களை தர­மு­யர்த்­து­வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
 
உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­களின் ஊடாக எமது மக்­க­ளுக்கு உரிய சேவை கிடைப்­ப­தில்லை என்­பது உண்­மைதான். எனினும் நுவ­ரெ­லியா, தம்­ப­க­முவ போன்ற பகு­தி­களில் மாகாண மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் உத­வி­யுடன் உள்­ளூ­ராட்சி உறுப்­பி­னர்கள் பல வேலைத்­திட்­டங்­க­ளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். கீழ் மட்ட குடியரசாகிய உள்ளூராட்சி மன்றங்களில் எமது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு அதிகரித்துக் கொண்டதன் பின்னர் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்தி உள்ளூராட்சி மன்ற நிதியினை எமது சமூகத்துக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதைவிடுத்து உள்ளூராட்சி நிதி எமக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக உள்ளூராட்சி தேர்தலில் நாம் போட்டியிடாமல் இருந்துவிட முடியாது. எமது பிரதிநிதித்துவம் மிகவும் அவசியமாகும் என்றார்.

இழு­பறி நிலை கூட்டு ஒப்பந்தம் தாமதத்துக்கு காரணம்

முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்திற்கும் பெருந்­ தோட்ட தொழிற்­சங்­க­ளுக்கும் இடை­யே­யான இழு­பறி நிலை கார­ண­மா­கவே தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தொடர்­பான கூட்டு ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டு­வது கால தாம­த­மா­வ­தாக தெரி­வித்த அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன ஆயிரம் ரூபா சம்­பள உயர்­வுக்கு முத­லா­ளிமார் சம்­மே­ளனம் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.
 
கொழும்பு டார்லி வீதி­யி­லுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே தொழில் மற்றும் தொழி­லாளர் உற­வுகள் தொடர்­பான அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன இவ்­வாறு தெரி­வித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,
 
பெருந்தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பளம் இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை முத­லா­ளிமார் சம்­மே­ள­னமும் தோட்ட தொழிற்­சங்­கங்­களும் இணைந்து கையெ­ழுத்­திடும் கூட்டு ஒப்­பந்­தத்தின் மூலமே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.
 
டந்த மார்ச் 31 ஆம் திகதி இந்தக் கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யா­கி­விட்­டது. இந்­நி­லையில் முத­லா­ளிமார் சம்­மே­ளனம், தோட்டத்தொழி­லாளர் சங்­கங்கள் மற்றும் தேசிய ஊழியர் ஆலோ­சனை சபை­யுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டன.
 
நானும் இப்­பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­கொண்டேன். இதன்­போது தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­பள உயர்வு வழங்­கப்­பட வேண்டும் என தொழிற்­சங்­கங்கள் வலி­யு­றுத்­தின.
 
ஆனால் முத­லா­ளிமார் சம்­மே­ள­னமும் இக் கோரிக்­கைக்கு தமது கடு­மை­யான எதிர்ப்பை வெளி­யிட்­டது. 620 ரூபா வழங்­கு­வ­தற்கு முத­லா­ளிமார் சம்­மே­ளனம் இணக்கம் தெரி­வித்­தது.
 
இதனை தொழிற்­சங்­கங்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. இதன்­போது 770 ரூபா சம்­பள உயர்வு தொடர்­பி­லான யோச­னையை நான் முன் வைத்தேன்.
 
ஆனால் இது­வ­ரையில் இத்­தொகை தொடர்பில் முத­லா­ளிமார் சம்­மே­ள­னமும் தொழிற்­சங்­கங்­களும் இணக்­கப்­பாட்­டுக்கு வராது இழு­பறி நிலை­யி­லேயே உள்­ளது. எனவே தான் தோட்டத்தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தொடர்­பான கூட்டு ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டு­வது காலதாம­த­மா­கி­யுள்­ளது.
 
இவ் ­வி­டயம் தொடர்பில் இரு தரப்பினரிடமும் இணக்கப்பாட்டுக்கு வருமாறு நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இணக்கப்பாடு காணப்படாததனாலேயே தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

நன்றி- வீரகேசரி

 

Thursday, November 5, 2015

மலையகத்தில் சீரற்ற காலநிலை

மலையகத்தில் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன

அந்தவகையில் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ்  பகுதியில் கடும்மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மேற்படி தோட்டப்பகுதியில் அமைந்துள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்ததால் வெள்ளம் அப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கும், கடைகளுக்கும் உட்புகுந்ததால் 70 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.எனினும் நீர் வடிந்து சென்றதன் பின் தங்களுடைய வீடுகளுக்கு சென்று விட்டனர். இப்பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை சந்தித்து வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர். 

அத்தோடு ஹட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியிலான வீதி நேற்றிரவு நீரில் மூழ்கியது. இதனால் பல மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இடைவிடாது பெய்துவரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
மேலும் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்டத்தை சேர்ந்த 25 வீடுகளில் வெள்ள நீர் உட்புகுந்ததனால் மக்கள் இடம் பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். அத்துடன்  நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலரண்டன் தோட்டத்தில் 45 க்கும் மேற்பட்ட வீடுகளும் நீரில் மூழ்கி உள்ளன.

இது தவிர தலவாக்கலை டயகம பிரதான வீதியில் பாரிய கற்பாரைகள் சரிந்து விழுந்ததால் சில மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. அக்கரப்பத்தனை ஹோல்புரூக் நகரத்தில் ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அருகாமையில் பாரிய மண்மேடுகள் சரிந்த வண்ணம் இருப்பதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
 
தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதனால் மேலும் அனர்த்தங்கள் நிகழக்கூடும் என மக்கள் கருதுகின்றனர். கடும் மழை காரணமாக பெருமளவு பயிர்ச்செய்கை நிலங்களும் நீரில் மூழ்கி உள்ளன.

மேலும் அக்கரபத்தனை ஆகுரோவா தோட்டத்தில் மண்மேடு சரிந்துள்ளது. இதன்காரணமாக மூன்று வீடுகள் சேதமாகியுள்ளது. அத்தோடு அதே தோட்டத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் பின் பகுதியில் பாரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அக்கரபத்தனை  நல்லதண்ணி தோட்டத்தில் மண்சரிவால் 3 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது.

அத்தோடு லக்ஸபான பிரதேசத்தில் நேற் முதல் பெய்து கடும் மழை காரணமாக லக்ஸபான நீர்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் இரண்டு அங்குலத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும், நோட்டன் பகுதியில் பெய்த கடும் மழையினால் விமல சுரேந்திர நீர்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு மேலாக வெள்ளம் பெருகெடுத்துள்ளதாகவும், அத்துடன் காசல்ரீ நீர்தேக்கத்தில் அணைக்கட்டுக்கு மேலாக நீர் பெருக்கெடுத்துள்ளது. 

மவுஸாக்கலை நீர்தேக்கத்தில் நீர் நிரம்புவதற்கு இன்னும் ஐந்து அடி மாத்திரமே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சிய மழை பெய்யும் பட்சத்தில் மலையகத்தில் உள்ள ஏனைய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறந்துவிட வேண்டிய நிலை காணப்படுவதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ்பகுதியில் ஆற்றுக்கு அருகாமையில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மரக்கறி மற்றும் தேயிலை உற்பத்திகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

மழை காரணமாக பல இடங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்புக்களும் பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன.

 நன்றி- வீரகேசரி

கறுப்பு தீபாவளி திருநாளா தொழிலாளர்களுக்கு.... ?

பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க  வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய 1000 ருபா சம்பள உயர்வு எமக்கு வேண்டும். இல்லாவிடின் தோட்ட தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் மாதம் தோறும் வழங்கி வரும் தொழிற்சங்க சந்தா பணத்தினை நிறுத்தி விடுவோம்.

அத்தோடு எதிர்வரும் தீபாவளி திருநாளை கறுப்பு கொடி ஏந்தி தான் கொண்டாடுவோம் என டிக்கோயா சாஞ்சிமலை டிலரி தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இன்று காலை நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் . 
சுமார்  150ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக 7 தடவை நடைபெற்ற பேச்சுவார்தையின் உண்மையான வெளிபாடு என்ன என தொழிலாளர்கள் சந்தேகம் கொள்கின்றனர். எமக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஆறுமுகன் தொண்டமான், திகாம்பரம், இராதாகிருஸ்ணன் மனோகனேசன் இன்னும் பல தலைவர்கள் பேசுகின்றார்களே தவிர 1000 ருபா சம்பள உயர்வு எந்தவகையில் பெற போகின்றார்கள் என்ற உண்மையை எமக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

 ஆனால் வாக்களியுங்கள் 1000 ருபா சம்பள உயர்வை பெற்று தருகின்றோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நம்பியே வாக்களித்தோம் ஆகையால் ஜனாதிபதியும், பிரதமரும் இந்த சம்பள விடயத்தில் தலையிடவேண்டுமென வழியுறுத்துகின்றோம். சீரற்ற காலநிலையிலும் அட்டை கடியை பொருட்படுத்தாமல் 08 மணிநேரம் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களை ஏமாற்றவேண்டாம்.

தொழிலாளர்களை பகடகாய்களாக்கி துரோகம் நினைக்க இனிமேலும் இடம் கொடுக்க போவதில்லை என தெரிவிக்கும் தொழிலாளர்கள் நாங்கள விழித்துகொண்டே இருக்கின்றோம்.எங்களுடைய பண்டிகை காலத்தில் மாத்திரம் ஏன் இந்த நிலை ஏற்படுகின்றது என தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.

அத்தோடு 10000 மற்றும் 15000 ரூபா பெற்றுத்தருகின்றோம் என கூறிய தொழிற்சங்கவாதிகள் தற்போது எங்கே இருக்கின்றார்கள் என 

கேள்விகளையும் தொழிலாளர்கள் எழுப்பினர். எனவே இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tuesday, November 3, 2015

சிறு தோட்ட தேயிலை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

தெனி்யாய நகரில் சிறுத்தோட்ட தேயிலை உரிமையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடு்த்திருந்தனர்.

தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கும் கொழுந்திற்கு நியாயமான விலையை பெற்றுத் தருமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தெனியாய வைத்தியசாலையிலிருந்து பேரணியாக வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தெனியாய பஸ் தரிப்பிடம் வரை சென்று தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

சிறுதோட்ட தேயிலை உரிமையாளர்கள் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், சுமார் ஒன்றரை மணித்தியாலம் வரை தொடர்ந்துள்ளதுடன், இதில் 300க்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர்

இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில்,  கொழும்பில் எதிர்வரும் 6ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

நிலைமை எப்போது மாறும்

நுவரெலியா மாவட்டத்தில் இறம்பொடை கெமினிதன் தோட்டத்தில் இருந்து இறம்பொடை இந்துக் கல்லூரிக்கு 05 கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது.

கெமினிதன் தோட்டத்திற்கும் பாடசாலைக்கும் இடையில் போக்குவரத்து செய்வதற்கான வசதிகள் இல்லாததால் மாணவர்கள் நடந்தே பாடசாலைக்கு செல்ல வேண்டும்.

அண்மையில் வெதமுல்லையில் ஏற்பட்ட மண்சரிவின் போது இந்த தோட்டத்திற்கு செல்லும் பாதையும் சேதமாகியுள்ள நிலையில், மாணவர்கள் மட்டுமல்லாமல் பிரதேச மக்களும் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்கள் 05 கிலோ மீற்றர் தூரம் நடந்து நாளாந்தம் பாடசாலைக்கு செல்கின்றனர்.

இவ்வாறு பாடசாலைக்குச் சென்று திரும்பும் மாணவர்கள் இடையில் வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்றினை மறித்து ஏறிச் சென்ற காட்சி எமது செய்தியாளரின் கெமராவில் பதிவாகியுள்ளது.
பல கனவுகளை சுமந்து கொண்டு நாளாந்தம் பாடசாலை செல்லும் இம்மாணவர்கள் பாடசாலை முடிந்த பின்னும் 5 கிலோ மீற்றர் தூரம் நடந்து வர வேண்டியுள்ளது. மலையக்தில் நாளாந்தம் இவ்வாறு பாடசாலை மாணவர்கள் பல கஸ்டங்களை எதிநோக்கி வருகின்றனர்.

இந்த நிலமை இவ்வாறு தொடராத வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் அண்மையில் தேயிலை தொழிற்சாலையிலிருந்து கழிவு தூள்களுடன் நல்ல தேயிலைதூள்களையும் தனியார் வர்த்தகர் ஒருவர் இரவு  வேளையில் கொண்டு செல்ல முற்படுகையில் அத் தோட்டத்தொழிலாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக திம்புள பத்தனை பொலிஸில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட வர்த்தகர் அத்தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இம்முறைப்பாட்டில் பொதுமக்கள் சிலர் தம்மை தாக்கியதாகவும் கொலை முயற்சியில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தோட்ட நிர்வாகமும் பொலிஸ் நிலையமும் பொதுமக்களின் முறைப்பாட்டிற்கு சரியான தீர்வினை எடுக்காத பட்சத்தில் இதுவரை 13 தொழிலாளர்கள் இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரனைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைஆட்சேபித்து மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் இன்று குறித்த தோட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எமது தோட்டத்தில் தோட்ட நிர்வாகம் ஒழுங்கற்ற ரீதியில் வர்த்தகருக்கு தேயிலை தூளை வழங்கியமை அச்சத்தை தருவதாக நாம் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
ஆனால் இதற்கு நடவடிக்கை எடுக்காமல் தொழிலாளர்கள் மீது தோட்ட நிர்வாகமும் பொலிஸாரும் நடவடிக்கை எடுப்பது வேடிக்கையான விடயமாகும் என போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Monday, November 2, 2015

சம்பள உயர்வு கோரி போராட்டம்

இம்மாத இறுதிக்குள் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதுடன் தீபாவளி முற்பணமாக 15,000 ரூபாயை பெற்றத்தர வேண்டுமென கோரி,  ஹட்டன், எபோட்சிலி ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தினர். இன்று 02-11-2015 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தோட்ட தொழிலாளர்கள் தொடர்பாக கண்துடைப்பு வேலைகளை கைவிட்டு மலையக அரசியல்வாதிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். இன்று தொழிலாளர்கள் விழித்துக் கொண்டிருக்கின்றார்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றும் முயற்சியை கைவிரித்துவிட்டு தொழிலாளர்களின் உணர்வை மதித்து அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் கோஷம் எழுப்பினர்.
தொழிலாளர்களின் உணர்வை மதிக்காமல் தொழிற்சங்கவாதிகள், அரசியல்வாதிகள் இழுபறி நிலையில் ஒவ்வொரு சம்பள பேச்சுவார்த்யையும் முன்னெடுத்து செல்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்ற செயல்பட வேண்டும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய 1000 ரூபாய் சம்பள உயர்வு எமக்கு வேண்டும். இம்மாத இறுதிக்குள் சம்பள உயர்வை பெற்றுத்தராத பட்சத்தில் தொழிலாளர்களாகிய நாம் தொழிற்சங்கங்களுக்கு வழங்கி வரும் “சந்தாப் பணத்தையும் நிறுத்துவோம்” என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, தீபாவளியை முன்னிட்டு 15000 ரூபாயை முற்பணமாக தரவேண்டும்.  தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக இதுவரை 7 பேச்சுக்கள் நடைபெற்றுவிட்டன. வாக்களியுங்கள் 1000 ரூபாய் சம்பள உயர்வை பெற்று தருகின்றோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நம்பியே வாக்களித்தோம். ஆனால், இதுவரை சம்பள உயர்வு பெற்றுகொடுக்கப்படவில்லை.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இவ்விடயத்தில் தலையிட்டு சம்பள உயர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாங்கள் வலியுறுத்துகிறோம். சீரற்ற காலநிலையிலும் அட்டை கடியை பொருட்படுத்தாமல்  8 மணிநேரம் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களை ஏமாற்றவேண்டாம் என தொழிலாளர்கள் இதன்போது கோஷமெழுப்பினர்.

 தீபாவளியை முன்னிட்டு சம்பளத்தை முன்கூட்டி வழங்கவும்  
எதிர்வரும் 10ஆம் திகதி தீபாவளி என்பதால் பாடசாலை மாணவர்களுக்கு 9ஆம் திகதி விடுமுறை வழங்குமாறும் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை முன்கூட்டியே வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் கணபதி இராமச்சந்திரன் இது குறித்து தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பானுமுனிப்பிரிய மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய ஆகியோரின் கவனத்துக்குக் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.
 
இதேவேளை, அரச உத்தியோகத்தர்களுக்குச் சம்பளத்தை முன்கூட்டி பெற்றுக்கொடுக்குமாறு, இரத்தினபுரி தமிழ் ஆசிரியர்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.  
சித்திரைத் திருநாளையொட்டி அரசாங்க சேவையாளர்களுக்கு மாதாந்த சம்பளம் முன்கூட்டியே வழங்கப்படுவது போன்று, தமிழர்களின் முக்கிய திருநாளான தீபாவளி திருநாளை முன்னிட்டும் அரசாங்க சேவையாளர்களுக்கு முன்கூட்டி சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றார் கணபதி இராமச்சந்திரன்  




சம்பள உயர்வை பெற்றுகொடுக்க அரசியல் பலம் தேவையில்லை

பெருந்தோட்ட மக்களது சம்பள உயர்வை பெற்றுகொடுக்க அரசியல் பலம் தேவையில்லை.  தொழிற்சங்க பலமும் பேரம்பேசும் சக்தியுமே தேவை. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் இதனையே கையாண்டு சாதனை படைத்தார் என  சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில் 1970 முதல் 1977 வரையிலான காலகட்டத்தில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் எவ்வித அரசில் பலமோ அந்தஸ்தோ இன்றி பல்வேறு தொழிற்சங்க போராட்டங்களை நடத்தினார். இக்காலக் கட்டத்தில்தான் அவரது வெவண்டன் தோட்ட சொத்துக்களும்  உடைமைகளும் அரசுடைமை என்ற பெயரில் பறிக்கப்பட்டது. இருந்தபோதும்  துன்ப துயரங்களை  தனதாக்கிக் கொண்டு துணிவுடன் செயற்பட்டார். 1970முதல் 1977 வரையிலான காலங்களில் பெருந்தோட்ட மக்கள் பஞ்சம், பசி, பட்டினி, வறுமைகளுக்கு முகம்கொடுத்து சொல்லொன்னா கொடுமைகளை அனுபவித்த நேரத்திலும் முழு மலையகமும் ஸ்தம்பிதமாகும் வகையில்  பாரிய வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினார்.
 
அனைத்து தொழிலாளர்களும் பங்கெடுத்த இப்போராட்டத்துக்கு  இலங்கையில் அனைத்து ஊடகங்களும்-சர்வதேச தொழிற்சங்க சம்மேளனம, ஆசிய பசுபிக் பிராந்திய அமைப்புகளும் கை கொடுக்க முன் வந்தன.
 
வெற்றி அல்லது வீர மரணம் என்ற தொனியை தனதாக்கிகொண்ட போஸ்டர்கள் முழு மலையகத்திழும் தலைநகர் கொழும்பிலும் ஒட்டப்பட்டன.அமைச்சர் என்ற பதவியை வைத்துக்கொண்டு அவர் நடத்திய பிரார்த்தனை, தொழிற்சங்க போராட்டமே பெருந்தோட்ட மக்களது பிராஜா உரிமைக்கும் சம்பள உயர்வு-சமசம்பளத்துக்கும்  வித்திட்டது.
 
தோட்டங்களை நடத்துவற்கு திரைசேரி ஊடாக பல கோடி ரூபாய்களை  சிலவழிக்க முடியாது என்பதால்தான் 22 தனியார் கம்பனிகளுக்கு தோட்டங்கள் கையளிக்கப்பட்டன.
 
தோட்டங்களை ஆதாயம் தரக்கூடிய வகையில் நிர்வகித்துக்கொள்ள தோட்ட கம்பணிகள் வழிசமைத்துக்கொள்ள வேண்டும் என்பற்காகவே இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுகின்றன

கிளிநொச்சி பரந்தனில் மலையக மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

இலங்கையின் மலையகத்தில் மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட மலையக மக்களுக்கான வீடுகள், காணி உரிமைகள் மற்றும் உழைப்புக்கேற்ற ஊதியம் ஆகியவற்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வடக்கு மாகாணத்தின் பரந்தன் நகரில் எழுப்பப்பட்டிருக்கின்றது.
 
இலங்கை மெதடிஸ்த சபையின் பெருந்தோட்ட சமூக மேம்பாட்டுத் திருப்பணி என்ற அமைப்பின் ஏற்பாட்டில் மீரியபெத்தை மண்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு ஞாயிறன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
 
மீரியபெத்தையில் பாதிக்கப்பட்டு இன்னும் தற்காலிக முகாமில் வசிக்கின்ற மக்களுக்கு உடனடியாக நிரந்தர வீடுகள் வழங்கப்படுவதுடன் மலையக மக்களின் லயன்- குடியிருப்பு வாழ்க்கை முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அந்தத் தொழிலாளர்களின் நாள் சம்பளம் ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது.
 
இந்த விடயங்களைச் செயற்படுத்துவதற்கு தோட்டக் கம்பனிகளுக்கு அரசாங்கம் நிபந்தனை யுடன் கூடிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மலையகத் தொழிற்சங்கங்கள் அந்த மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஒன்றிணைந்து இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும் அல்லது தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் மற்றும் மலையக மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக வடக்கு கிழக்கு பிரதேச மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையொன்று இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டிருக்கின்றது.
 
மெதடிஸ்த சபையின் பெருந்தோட்ட சமூக மேம்பாட்டுத் திருப்பணி திட்டத்தின் இணைப்பாளரும்  பரந்தன் தேவாலயத்திற்குப் பொறுப்பானவருமான அருட்தந்தை செங்கன் தேவதாசனின் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் அவர் இந்த கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார்.

வார்வீக் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் - மேலும் 30 குடும்பங்களை வெளியேற உத்தரவு

பதுளை மாவட்டம் வார்வீக் பெருந் தோட்டத்தில் தொடர்ந்தும் மண்சரிவு மற்றும் நிலம் தாழிறக்கம் ஏற்படும் அபாயம் எதிர்நோக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் 30 தொழிலாளர் குடும்பங்களை உடன் வெளியேறுமாறு பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஏ.எல்.எம். உதயகுமாரவும், வெளிமடை பிரதேச செயலாளரும் இணைந்து மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளனர்.
 
உடன் தோட்டத்தை விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறுமாறு உத்தரவிட்டால் எம்மால் எங்கு போக முடியும். பாதுகாப்பான இடங்களில் அரச அதிரகாரிகளே எங்களை குடியமர்த்த வேண்டும். அவர்கள் மறுப்பார்க்கள யானால் இத்தோட்டத்திலேயே செத்துமடிவோம். வேறு எங்கும் எங்களால் போக முடியாதென்று” அபாயத்தை எதிர்நோக்கியுள்ள மக்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர்.
 
வார்வீக் தமிழ் வித்தியாலயத்திலும் 19 குடும்பங்களைக் கொண்ட 98 பேர் தஞ்சம் அடைந்துள்ளவர்களுக்கு போதிய இடவசதிகள் இல்லாத நிலையே காணப்படுகின்றது. தொடர்ந்தும் மண்சரிவு மற்றும் நிலம் தாழிறங்கல் ஏற்படும் அபாயம் எதிர்நோக்கப்படுவதால் மேலும் 80 குடும்பங்களைக் கொண்ட முன்னூற்று நாற்பது பேரை உடன் வெளியேற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இம்மக்களை மாற்று இடங்களில் உடனடியாக குடியமர்த்தும் வகையிலான செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கான விசேட பேச்சுவார்த்தைகள் இன்று 02.11.2015 இல் பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.