மலையக அரசியல் தலைமைகள் கடந்த பொதுத் தேர்தலில் கற்ற பாடம்
எதிரும் புதிருமாக நவக்கிரகங் களைப் போல் ஒருவரையொருவர் விலக்கி நின்று பார்த்திருந்த தமிழ் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட நிகழ்வொன்று அண்மையில் பதுளையில் நடைபெற்றது. த. பவர் பவுண்டேசன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் அரசியல் தொழிற் சங்கப் பிரமுகர்களஇ கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர் தலில் பதுளை மாவட்ட தமிழ் பிரநிதித் துவ இழப்பிற்கான காரணங்களை ஆராய்வதே ச்செயலமர்வின் பிரதான நோக்கமாக இருந்தது. முழக்கம் வானொலி யின் நித்தியானந்தனின் அறிமுகவுரையோடு ஆரம்பமான இந்நிகழ்விற்கு பசறை தமிழ் தேசியக் கல்லூரியின் அதிபர் பி. ஆறுமுகம் நெறிப்படுத்து னராக செயற்பட்டார்.
இச்செயலமர்வில் முன்னாள் பிரதியமைச்சர்களான வடிவேல் சுரேஷ் எம். சச்சிதானந்தன் ஊவா மாகாண சபை உறுப்பினர்களான க. வேலாயுதம் அ. அரவிந்தகுமார் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பெ. பூமிநாதன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.
பவர் நிறுவன நிறைவேற்றதிகாரி உப சேன நாணயக்கார செல்விகள் சைலஜா சாஹிரா ஆகியோருடன் ஆசிரியர்கள் கே. பத்மநாதன் எஸ். இராஜ்குமார் ஆகியோர் முன்னின்றனர். சட்டத்தரணிகளான எஸ். சத்தியமூர்த்தி கே. ரமேஷ் குமார் தொழிற்சங்க பிரமுகர் ஆ. முத்துலிங்கம் ஆகியோர் கருத்துக்களை முன்வைத்தனர்.
அன்று பிரஜாவுரிமை இல்லாதிருந்தோம். இன்று பிரதிநிதித்துவம் இல்லாதிருக்கின் றோம். அன்று சட்டம் தடுத்த பிரதிநிதித்துவத்தை இன்று சமூகமே தடுத்து விட்டது. ரோட்டு போட்டவர்களுக்கு வோர்டு போடவில்லை. தோற்கடிக்கப்பட்டு பிரதிநிதித்துவ இழப்பு இந்த இழப்பு போகப் போகத்தான் மக்களுக்குத் தெரி யும் என்கிறார் நிகழ்ச்சி ஏற்பட்டாளரும் த. பவர் நிறுவன உப தலைவருமான வே. உருத்திரதீபன்.
அதிபர் பெ. ஆறுமுகம் உரையாற்று கையில் 1952ம் ஆண்டு முதல் பிரதிநிதித்துவத்தை இழந்திருந்தோம். பின்னர் நியமன எம். பி. பதவி 1990களில் பிரதிநிதித்துவம் என கிடைக்கலாயிற்று. ஒரு சமூகம் தனது கெளரவத்தை நிலைநாட்ட பிரதிநிதித்துவம் அவசியமாகும். நாம் ஏனைய சமூகங்களோடு வாழ பல்வேறு தடைகள் உள்ளன. தடைகளை தகர்ந்த்தெறிந்து தமிழர்களின் பாதுகாப்பு க்கு தமிழ் பிரதிநிதித்துவம் அவசிய மென்பதை சிந்திக்க வேண்டும்.
கல்வி சுகாதாரம் போன்ற பிரச்சினை களுக்கு தீர்வுகாணவே மக்கள் பிரதிநிதி களை அனுப்புகின்றனர். கடந்த காலத்தில் அவர்களினது உள்ளுடுகள் குறைவானதா என்பதை பிரதிநிதித்துவ இழப்பு யோசிக்க வைத்துள்ளது. மத்திய அரசாங்கத்தினது செயற்பாடு போலவே அதிகார பரவலாக்கலின்படி மாகாண சபை இயங்குகிறது. ஆனால் அண்மைய காலங்களில் மாகாண சபை பிரதிநிதித்துவம் படிப்படியாக குறைந்து வருகிறது என்றார்.
வடிவேல் சுரேஷ்இ ‘தமிழ் பேசும் பிரதிநிதித்துவம் என்பது வானத்திலிருந்து கிடைப்பதில்லை. முன்னாள் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷ்இ மக்கள் விரும்பாதவர்களை நிராகரித்திருக்கலாம். ஆனால் முழுப் பிரதிநிதித்துவமும் இல்லாமல் போக என்ன காரணமென சிந்திக்கவில்லை. புத்திஜீவிகள்இ வர்த்த கர்கள் என பலரிருந்தும் நம் பங்குதாரராக இல்லை. தேர்தலில் பதுளை மாவட்ட தமிழ் மக்களே தோல்வியடைந்துள்ளனர். மாகாண சபையில் ஏற்பட்ட தோல்வியும் இதற்கு காரணமாகிறது. வேட்பாளர் தோல்வியடையவில்லை. சமூகமே தோல்வி கண்டுள்ளது’.
ஒரு இலட்சத்து 16 ஆயிரம் தமிழரும் 40 ஆயிரம் முஸ்லிம்களும் இருந்தும் நாம் சிந்திக்க தவறிவிட்டோம். ஒருவரை ஒருவர் குரோத மனப்பான்மையோடு பார்க்கின்ற நாம் தெரிவாகக் கூடியவர் என்று பெருமைக்காக சொல்லவில்லை. போர் நடந்த வடக்கு கிழக்கு பகுதிகளில் கூட பிரதிநிதிகளாக 15 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றார் முன்னாள் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷ்.
கே. வேலாயுதம் இந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதித் தேர்தலில் காணப்பட்ட நிலை இப்போது முற்றிலுமாக மாறியிருக்கிறது. ஊவா மாகாண இளைஞர் யுவதிகள் கொழும்பிலேயே பெரும்பாலும் கடமை புரிகின்றனர். சுமார் 30 ஆயிரம் பேர் வெளியில் மாவட்டங்களில் உள்ளனர். பதுளை பசறைபண்டாரவளை அப்புத்தளை வர்த்தக நிலையங்களில் கடமை புரிந்த கடைச்சிப்பந்திகள் கூட வாக்களிக்கச் செல்லவில்லை.
ஜனாதிபதித் தேர்தலின் போது பொன் சேகாவுக்கு 23 ஆயிரம் வாக்குகளும்பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு பதினெட்டாயிரம் வாக்குகளுமே பசறையில் கிடைத்தன. இம்முறை 11 ஆயிரத்தால் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அரசு செய்த சூழ்ச்சிதான் இந்த காலத்தில் அதுவும் தமிழ் சிங்கள புதுவருட தினத்தை அண்மித்த காலத்தில் தேர்தல் நடாத்தியமையும் பின்னடைவுக்கு காரணமாகும். ஒரு இலட்சத்து 16 ஆயிரம் விருப்பு வாக்குகளை இல்லாமற் செய்து விட்டது.
தொழிற்சங்கத்தின் ஊடாகத்தான் தொழிலாளர்கள் உரிமைகளை பெற்று வருகின்றனர். 167 தொழிற்சங்கங்கள் இன்று மலையகத்தில் உள்ளன. இத்தொகை மேலும் அதிகரிக்கலாம். இந்த தொழிற்சங்கங்களும் மக்களை பலவாறு திசை திருப்பி விடுகின்றன. இது வரையிலும் பொது அமைப்பிலான வேலைத் திட்டம் எதுவுமில்லை.
வாக்குகளும் வாக்குச் சீட்டு விற்பனை யும் தொடருகின்றன. அரசியல் ரீதியான கல்விஇ வாக்குகள் தொடர்பான உன்ன தம் அரசியல் ரீதியான தெரிவு அவசியம். இத் தேர்தல் மக்களை சிந்திக்க சந்தர்ப் பம் அளித்துள்ளது. மலையக மக்கள் மத்தியில் தொழிற்சங்கங்களுக்கு அப்பால் பொதுவான அரசியற் செயற்பாடு அவ சியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சிறுபான்மை மக்க ளுக்கு இருந்த உரிமை சிறிது சிறிதாக அருகி போயுள்ளது. தோட்ட உட்கட்ட மைப்பு அமைச்சு அருகிப் போய் திணைக்களமாக மாறியுள்ளது. டில்லி இதற்கு அழுத்தம் கொடுத்தும் கூட நடைமுறைக்கு வரவில்லை. எங்களை நாமே விமர்சனம் செய்து கொண்டு பாதிக்கப்பட்டுள்ளோம்.
முன்னாள் கல்வி பிரதி அமைச்சர் எம். சச்சிதானந்தன்இ ஊவா மாகாண சபையில் முதலில் போட்டியிட்ட போது 62 ஆயிரம் வாக்குகளே இருந்தன. இணைந்து போட்டியிட்டதால் எம்.சுப்பையாஇ சிவம் லோகநாதன்இ சச்சிதானந்தன் என மூவர் தெரிவானோம். இந்த இணைப்பும்இ மாகாண சபை பிரதிநிதித்துவமுமே கால போக்கில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு அடித்தள மிட்டது. வர்த்தகர்கள்இ சிப்பந்திகள் வாக்களிப்பதில் சிரத்தை காட்டாததும்இ அடையாள அட்டையில்லாத காரணத் தினாலும்இ அதில் காணப்பட்ட பெயர் குழப்படியாலும் கூட பலருக்கு வாக்களிக்க முடியாத நிலை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்டதெனலாம். பிரதிநிதிகள் எதுவும் செய்யவில்லை என எவரும் குறை கூற முடியாது.
பெருந்தோட்ட ஆசிரியர்கள் பதவிக்கு 30 ஆயிரம் விண்ணப்பங்கள் கிடைத் தன. அதில் நிராகரிக்கப்பட்டவர்கள் குற்றம் கூறமுடியும். கேள்விக்கேற்ற வகையிலேயே ஆசிரியர் உள்வாங்கப்பட்டனர். அதில் ஊழல் நடந்தது என் சுயலாபம் கருதி பேசாது நிருபண உண்மைகள் இருந்தால் நீதிமன்றம் செல்ல முடியும். மாகாண சபைகளினது சட்டவாக்கத்திற்கு செயற்படும் போதும்இ நாடாளுமன்றத்தின் செயற்பாடுகளுக்கும் வித்தியாசங்களும் தோட்டப்புறங்கள் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைக்குள் உள்வாங்கப்படல் வேண்டும். பிர தேச சபையில் அதிக நிதியை எடுக்க முடியாது. அது 8 1/2 லட்சம் 12 1/2 2 லட்சம் என படிப்படியாக மாறி இன்று 25 லட்சமாக உள்ளது. 25 இலட்சமாக இருந்த
நாடாளுமன்ற நிதி 25 இலிரு ந்து 50 இலட்சமாக மாறியுள்ளது.
பதுளை மாவட்டத்தில் 68 தோட்டங் களும் 325 டிவிசன்களும் உள்ளன. இதன் அபிவிருத்திக்கு 38 மில்லியன்இ மூன்று கோடி 80 இலட்சம் தேவை. நமக்கென ஒரு சக்தி தேவை. பிரதி நிதிகளும் கட்டாயம் அவசியம். பிரதிநிதித்துவ இழப்பு மேற்கண்ட நிதி ஒதுக்கீடுகளை கேள்விக்குறியாக்கியுள்ளது. 1948க்கு பிறகு 1977ல் அமரர் செளமிய மூர்த்தி தொண்டமான் புதிய அரசியல் கலாசாரத்திற்கு வித்திட்டார் என்றார் சச்சி.
அ. அரவிந்தகுமார் கருத்து தெரிவிக்கையில் ஆளுங் கட்சியோடு இருந்திருந்தால் ஒரு பிரதிநிதித்துவமாவது கிடைத் திருக்கும் இன்று அரசியற் கொள்கையோடு பலரும் உள்ளனர். கடந்த காலத்தில் பல வேலைத் திட்டங் கள்
முன்னெடுக்கப்பட அரசியலே காரணமாயிற்று. ஆதலால்தான் பிரநிதித் துவம் அவசியமாகிறது. வடக்கு கிழக்கு மக்களுக்காகவே மாகாண சபை திட்டம் வந்தது. ஆனால் மாகாண சபை அமைப்பு கூட பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்தவில்லை. ஒன்று சேர்ந்து உறுதிபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தேசிய அடையாள அட்டை இல்லாத குறைக்கு மக்கள் விடுதலை முன்னணியும் ஒரு வகையில் பதில் சொல்ல வேண்டும்.நடந்துபோன பிழைகளை ஆராயும் நடவடிக்கைகள் ஒரு புறமிருக்க நடக்கப் போகும் தேர்தல்களிலாவது நமக்கு கவனமும் ஐக்கியமும் எதிர்வு கூறலாகட்டும்.
பதுளை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவம் நிச்சயமாக உண்டு. இம்மாவட்டத் தைச் சேர்ந்த பெரும்பான்மை இன பிரதிநிதிகளை தெரிவு செய்து அனுப்பி யுள்ளனர். ஹரீன் பெர்னாண்டோ 50மூ தமிழ் வாக்குகளை பெற்றுள்ளார். உதித்த லொக்கு பண்டாரவும் தமிழ் வாக்குகளை அதிகம் பெற்றுள்ளார். அமைச்சர்களாக உள்ள சிலர் 20மூ அதிகமான தமிழ் வாக்குகளை பெற்றுள்ளனர்.போட்டியென வந்தால் வெற்றி இலக்கை நோக்கியே போட்டியிட வேண்டும். பொதுஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிட்ட இரண்டு தமிழர் தமிழ் பிரதிநிதிகளை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே போட்டியிட்டனர். வடிவேல் சுரேஷிற்கு கணிசமான வாக்குகளை சிங்கள மக்களும் வழங்கியிருந்தனர். பதுளை மாவட்டத்தில் கனிசமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் தமிழ் மக்களுடையதாகும். வியாபாரம் சேர்ந்த பலருக்கு விடுமுறை கிடைக்கவில்லை. சுயேச்சை குழுக்க ளுக்கு அ ஆ இ என்று குறிப்பிடாது குழப்பியடிதமையும் தேர்தலை பற்றிய சரியான தெளிவின்மையும்இ மூக்குக் கண்ணாடி இல்லாது வந்த முதியவர்கள்இ சரியான சின்னத்தை அடையாளங் கண்டு கொள்ளாமை போன்றவையும்இ ஐ. தே. க. இரண்டே தமிழர் என்ற காரணிகளும் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்தது எனலாம்.
வேலாயுதம் தேசிய பட்டியலுக்குள் உள் வாங்கப்பட்டிருக்கலாம். மாகாண சபைக்கு கே.விஸ்வநாதன் வந்து சேர வில்லை. எமக்குள் ஏற்பட்டுள்ள பொறாமையே அதனையும் தடுத்துள்ளது. சமூக அபிவிருத்தி அமைச்சினூடாக பல அபிவிருத்தி வேலைகளைச் செய்துள்ளேன் என்றார்.
பொ. பூமிநாதன் கருத்து தெரிவிக்கை யில் பொதுமக்களை குறை கூறிப் பயனில்லை பிரதிநிதிகள் மக்கள் தெரிவின் உரிமை சலுகை தொடர்பாக குரல் எழுப்பினரா? நாடாளுமன்றம் சென்று என்ன செய்தார்கள்? தோட்ட வாரியாக தொழிற்சங்கம் வளர்க்க சாராயம் வழங்கினார்கள். மக்களுக்கு அரசியற் தொழிற் சங்க கல்வி ஊட்டப்படல் வேண்டும். நாங்கள் தமிழர்கள் ஜாதி சார்ந்தவர்கள் மாத்திரம் கூறிக் கொண்டு இருந்த நம் மவரிடையேஇ மாகாண சபைத் தேர்தலில் ஒற்றுமை இருந்ததா? தேர்தலுக்கு முன்னரேயே தோல்வி வருமென நினைத்தோம். ஹிந்தகல எஸ்டேட்டில் கள்ளுத் தவறணை அமைக்க காணித்துண்டு கேட்ட கதையும் உண்டு. அரசியல்வாதிகளே சாராய கலாசாரத்தை உருவாக்கி னர். ஜே.வி.பி. ஒரு போதும் சாராயம் வழங்காது. பதுளை மாவட்ட மக்கள் தமிழர்களுக்கு தகுந்ததோர் பாடத்தை புகட்டியுள்ளனர். எத்தனை பிரதிநிதிகள் மாகாண நாடாளுமன்ற சபைகளுக்கு வந்துள்ளனர்.ஜெனரேட்டர்கள் தலைவர்மாரின் வீடுகளிலேயே உள்ளது. கோவில்களுக்கு வழங்கப்பட்ட ஒலி பெருக்கிகளும் அப்படியே. அடிக்கல் நாட்டுவதில் இருந்த ஆர்வம் செயலுரு பெறவில்லை.எனவேஇ இவற்றை மனதிற் கொண்டு எதிர்காலத்தில் உணர்வு பூர்வ மாக செயற்பட வேண்டும்.தகுதியான பிரதிநிதிகளை தெரிவு செய்ய அடித் தளமிடுவோம் என்றார்.
சட்டத்தரணி எஸ். சத்தியமூர்த்தி:
இன்று கடந்த கால தேர்தலில் வேண்டும் கடந்த காலத்தில் மூன்று பிரதிநிதித்துவம் இருந்தது.தமிழ் பிரதிநிதித்துவத்தின் போட்டியும் தோல்விக்கு காரணமாயின. வாக்களிப்பு பற்றிய அர சியல் அறிவு ஊட்டப்படுதல் வேண்டும். புதிய தேர்தல் முறை பெரும் பாதிப்பை உண்டு பண்ணப் போகிறது. கடந்த கால கசப்பை மாற்ற இனியாவது உறுதி பூணுவோம். பதுளைஇ கண்டிஇ இரத்தினபுரி சிக்கல் நிறைந்த மாவட்டங்களும் இங்கு விகிதாசார பிரதிநிதித்துவ முறையே சிறுபான்மையினருக்கு சந்தர்ப்பமளிக்கும்.
சட்டத்தரணி கே. ரமேஷ்குமார்
காலம் கடந்து ஞானம் பிறந்த கதை யாகி விட்டது. தேர்தலுக்கு முன்பதாக இப்படி கலந்துரையாடல் நடைபெற்றி ருந்தால் இத்தகு நிலை ஏற்பட்டிருக் காது. 100க்கு 65மூ குறைபாடுகள் போட்டி யிட்டவர்களிடையே காணப்பட்டன. ஒரு வாக்கை எனக்குத் தாருங்கள்.மற்றத்தை ஏனையோருக்கு என பெரும்பான்மை யினரை காட்டிய நிலையிருந்தது. அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் இறப் புக்கு பின் இ.தொ.கா.வின் நிலைப்பாடும் மாறியுள்ளது.கடந்த கால அனுபவங்க ளாவது புதிய முன்னெடுப்புக்கு அடி கோலட்டும்.
ஆ. முத்துலிங்கம் மலையக மக்களி டையே குறை கூறும் பழக்கமுள்ளது. தீர்வு கூறும் பழக்கமில்லை. யாப்பு திருத்தம் ஊடாக தேர்தல் முறை மாற் றங்கள் தொடரவுள்ளன.தற்போதைய முறை செலவினங்க ளுக்கும் போட்டித் தன்மைக்கும் வழிகோலுகிறது. ரட்னபுர வில் தந்தையும் மகனும் கூட போட்டி யிட்டனர். வெற்றி பெறும் நோக்கில் வாக்குறுதிகளை அள்ளி வழங்குகின்றனர். பிரசாவுரிமையை தொழிற்சங்கங்களே பெற்று கொடுத்தன. அதனூடாகவே வாக்களிக்கும் உரிமை கிட்டியது. அன்று பிரசாவுரிமை இல்லாத எமக்கு இன்று பிரதிநிதிகளும் இல்லாது போடியுள்ளனர். கிராமிய அமைப்பு நமக்குத் தேவை எதிர்காலத்தை எண்ணி சிந்தித்து செயற் படுவது அவசியமாகும். இனப் பிரநிதித் துவம் இல்லாதது பெருங் குறைபாடாகும். சமூகம் தோற்கவில்லை. தோற்கடிக்கப் பட்டுள்ளது. வேட்பாளர்களால் சமூகம் பிளவுபட்டுள்ளது. ஒற்றுமையின்மையே தோல்விக்குக் காரணம். சுயஆய்வுக்கு உட்படுத்துங்கள் என்றார்.
ஆசிரியர் எஸ். ராஜ்குமார் கருத்து தெரிவிக்கையில் வாக்காளர் மீது குறை வேண்டாம். பிரிந்து போட்டியிட்டதும் பதவிக்கு வந்த பின் தொழிற்சங்கத்தை முன்னிலை படுத்தியதுமே தோல்விக்கு காரணம். இடைக்கிடை ஆசிரியர் சிவ குருநாதனின் தேர்தல் பாடலும் ஒலித்தது. பல விடயங்களின் பகிர்வோடு இச் செயலமலர்வு புதுக்கேள்விகளை முன் வைத்து நிறைவுற்றது.
பசறையூர் க. வேலாயுதம்