Wednesday, August 10, 2016

2500 ரூ கொடுப்பனவு- தொழிலாளர்கள் தெளிவற்ற நிலை

தோட்டத் தொழிலாளர்களுக்டகு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டு கம்பனி நிர்வாகங்களால் 26-07-2016 தொடக்கம் வழங்கப்பட்டு வரும் 2500 ரூபா கொடுப்பனவு தொடர்பாக தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் தெளிவற்ற நிலையில் உள்ளதாக விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

அவர் இந்த விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில் அரசாங்கத்துடன் இடம்பெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் முதலாளிமார் சம்மேளனம் இக்கொடுப்பனவை இரண்டு மாதத்திற்கு மாத்திரம் வழங்குவதாக ஒப்புக்கொண்டு ஜூன், ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகளை வழங்கி வருகின்றது. கடந்த வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்க ஊழியர்களுக்கு 10,000 ரூபா, தனியார் ஊழியர்களுக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டுமென அறிவித்திருந்தது. 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு அரசாங்கத்துறையில் அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்கப்பட்டு வருகின்றது.  

எனினும் தனியார் துறையில் மாதம் 10,000 ரூபாவிற்குள் சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என அரசாங்கம் வரையறை செய்துள்ளது. தனியார்துறையில் சேலை செய்பவர்கள் இன்று 10 ஆயிரம் ரூபாவிற்கு அதிக சம்பளம் பெறுகின்றனர் என்பதை அரசாங்கம் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. இக்கொடுப்பனவு வாழ்க்கைச்செலவு என்ற அடிப்படையில் வழங்கப்படுகின்றது. வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் கொடுப்பனவு வழங்கப்படுவது அவசியமாகும். 

தோட்டக்கம்பனிகள் நட்டத்தில் இயங்குவதாக அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. எதிர்காலத்தில் சம்பள அதிகரிப்பைக் கோரும்போது இதன் காரணமாக பாரிய சிக்கல்கள் தோன்றலாம். கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி 15 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்னமும் இழுபறி நிலையிலேயே உள்ளது. 
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற 2,500 ரூபா வங்கிகளிலிருந்து கடனாக பெற்று வழங்கப்படுகின்றது. இதற்கான வட்டியை தொழிலாளர்களின் சம்பளத்தில் அறவிடவுள்ளனர். இந்த நடைமுறை தொழிலாளர்களின் இடைக்கால கொடுப்பனவில் மட்டுமே உள்ளது. 
கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள நிலையில் தோட்டங்கள் உப குத்தகைக்கு விற்கப்பட்டு வருகின்றன. இது இவ்வொப்பந்தத்துக்கு எதிரான செயற்பாடாகும். நிலவிவரும் வரட்சியினுடனான காலநிலையினால் அதிகமான தோட்டங்களில் பறிக்கப்படும் பச்சைக்கொழுந்து கிலோ 25 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுகின்றது. ஆனாதல் தனியார் துறையினரின் பச்சைச்கொழுந்து கிலோ 65 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுகின்றது.  இது தொடர்பாகவும் அரசாங்கம் அறிந்திருக்கின்றது. 

தொழிலாளர்களுக்கு 07 பேர்ச் காணியில் வீட்டுரிமை பெற்றுக்கொடுப்பதிலும் இழுபறி நிலையே இருந்து வருகிறது 07 பேர்ச் காணியில் வீட்டுரை கொண்டவர்களுக்கு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படுவது அவசியமாகும். இவ்விடயங்களில் தொழிற்சங்கங்கள் பேதங்களை மறந்து செயற்பட்டால் மாத்திரமே தொழிலாளர்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்றாhர் கிருஷ்ணசாமி.