Wednesday, July 8, 2009

14 தோட்டக் கம்பனிகள் அரசுக்கு செலுத்த வேண்டிய 17 கோடி ரூபா

குத்தகைக்கு விடப்பட்டுள்ள அரச தோட்டங்களை நிர்வகித்த 14 கம்பனிகள் இதுவரை 17 கோடி ரூபா வரை அரசுக்கு வரி செலுத்தவில்லையென பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றில் எனவே நாம் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதன் மூலமே எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றார். குருநாகல் தோட்டக் கம்பனி மூன்றரை கோடி ரூபாவை திறைசேரிக்கு செலுத்த வேண்டியுள்ளது. இவ்வரி ஜூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்பு செலுத்தப்பட வேண்டுமென தோட்டத்துறை அமைச்சு அரச மற்றும் தனியார் தோட்டக் கம்பனிகளுக்கு அறிவித்துள்ளது. வரி செலுத்தத் தவறியுள்ள 14 கம்பனிகளில் 3 அரச தோட்டங்களும் 11 தனியார் கம்பனித் தோட்டங்களும் அடங்கும். பெருந்தோட்டத்துறை அரசின் நிர்வாகத்தில் இயங்கும் தோட்டக் கம்பனிகள் அரசுக்கு வரியாக 7 கோடி ரூபாவை செலுத்தியுள்ளன. தோட்டக் கம்பனிகள் வரிப்பணத்தை அரசுக்கு செலுத்தவில்லையெனின் அந் நிர்வாகங்களுக்கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு 600 ரூபா கிடைக்க வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு நியாயமான சம்பளமாக 600 ரூபாய் கிடைக்க வேண்டுமென்பதே கோரிக்கையாகும் பிரதியமைச்சர் பி.இராதாகிருஷ்ணன் பெல்மதுளை, உனுவல தோட்டத்தில் அமைச்சர் பி.சந்திரசேகரனின் 2,82,000 ரூபா நிதியில் கட்டப்பட்ட நீர்;ப்பம்பியுடன் கூடிய குடிநீர்;த்திட்டத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார். மேலும் தாம் கூட்டு ஒப்பந்தத்தில் பங்காளிகள் அல்ல. என்று குறிப்பிட்ட அமைச்சர் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதில் தாம் ஆணித்தரமாக இருப்பதாக குறிப்பிட்டார். தாம் ஒரு மனிதனுக்குரிய அடிப்படை தேவைகளான சுகாதாரம், வீடு, குடிநீர் மின்சார வசதி போன்றவற்றை பெற்றுக் கொடுப்பதில் முன்முரமாக செயற்படுவதாக தெரிவித்தார். இதனை எனவே நாம் அரசாங்கத்துடன் இணைந்திருப்பதன் மூலமே எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றார்