Thursday, December 31, 2015

கலப்புத் தேர்தல் முறை - சிறுபான்மை பிரதிநிதித்துவங்களுக்கு ஆபத்து!

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நடத்தும்படி கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போதைய நிலைவரத்தின்படி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதமே நடத்தப்படுமென அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது நடைபெற்றாலும் தேர்தல் முறைக்கு கொண்டு வரப்படவுள்ள விகிதாசார, தொகுதி வாரி என்பன கலந்த திருத்தத்திற்கு அதாவது உத்தேச அரசியலமைப்பிற்கான 20வது திருத்தச் சட்டத்தின் படியே நடத்தப்படும் என்று அமைச்சரவையின் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் உள்ளூராட்சி சபை தேர்தல் விசேடமாக வட்டார (வார்ட்) முறையின் அடிப்படையிலேயே நடைபெறும்.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பற்றி பேசப்படும் சூழ்நிலையில் இரண்டு பிரதான விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியுள்ளது. ஒன்று ஒரு உள்ளூராட்சி சபை பிரதேச எல்லைக்குள் வாழும் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை ஒப்பீட்டு ரீதியில் உறுதி செய்து வருவது விகிதாசார பிரதிநிதித்துவ முறை ஆகும்.

விகிதாசார முறையும் தொகுதிவாரி முறையும் கலந்த தேர்தல் முறை அறிமுகம் செய்யப்படும்போது எண்ணிக்கையில் சிறுபான்மையான சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறைவடைய அல்லது இல்லாமல் போகக்கூடும். அதிலும் உள்ளூராட்சி சபை தேர்தலில் வட்டாரங்களிலிருந்து உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படும் முறை அறிமுகம் செய்யப்படின் சிறுபான்மை சமூகத்தினர் அந்த வட்டாரத்தில் செறிவாக வாழாத விடத்து அவர்களின் பிரதிநித்துவம் இல்லாமல் போகும் நிலைமை ஏற்படும்.

இரண்டாவது பிரச்சினையாவது உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்திற்குரிய புவியியல் பிரதேச எல்லைக்குள் பெருந்தோட்டக் குடியிருப்புகள் அடக்கப்படாதபடியால் அவை அமைந்துள்ள பிரதேசங்களில் அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுவதற்கு தடைகள் இருக்கின்றன.

பிரதேச சபைகள் என்ற உள்ளூராட்சி அமைப்பிற்குள்ளேயே பெருந்தோட்டப் பகுதிகள் உள்ளடங்குகின்றன. அதற்கான தேர்தலில் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளடங்கலான மலையக மக்கள் வாக்களிப்பதை மட்டுமே உரிமையாக கொண்டுள்ளனர்.

பிரதேச சபைகள் சட்டத்தின் பிரிவு 33 பிரதானமாக தோட்டக் குடியிருப்புகளை பிரதேச சபைகளின் அபிவிருத்தி வேலைகளை உட்கிடையாக தடுக்கிறது. இச்சட்டம் பாராளுமன்றில் விவாதிக்கப்பட்ட போது (1987 இல்) அப்போது பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்த மலையகத்தவர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அவர்கள் அப்பிரிவினூடாக தோட்டப் பிரதேச அபிவிருத்திகளுக்கு போடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகள் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இது அவர்களின் அறியாமையின் வெளிப்பாடு மட்டுமன்றி அடுத்தவர்களின் அபிப்பிராயங்களுக்கு செவிசாய்க்காமை பண்பாட்டின் வெளிப்பாடுமாகும்.

அடுத்தவர்கள் சரியான கருத்துக்களை முன்வைத்தாலும் அதனை பொது மக்கள் நன்மை கருதி கூட ஏற்காத தான்தோன்றித்தனமே அவர்களிடம் காணப்பட்டது. அந்த மலையக எம்.பிக்களிடம் 1986, 1989 ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட பிரசாவுரிமை சட்டத்திருத்தங்கள் பற்றிக்கூட தெரிவிக்கவில்லை.

மலையகப் பகுதிகளில் மூன்று அல்லது நான்கு பிரதேச சபைகள் மலையகத்தில் உறுப்பினர்களை பெரும்பான்மையாக கொண்டுள்ளது. தலைவர்கள், பிரதித் தலைவர்களாக மலையகத் தமிழர்கள் இருக்கிறார்கள். இருப்பினும் தோட்டப் பகுதிகளில் அபிவிருத்திகளை மேற்கொள்ள அவர்களுக்கு பிரதேச சபைகளின் கீழ் அதிகாரமோ ஆணையோ கிடையாது.

தோட்டப் பகுதிகளின் சில இடங்களில் பாதைகளும், பாலங்களதும் பிரதேச சபைகளுக்கூடாக அமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றுக்காக செலவழிக்கப்பட்ட நிதி அவற்றுக்கென ஒதுக்கப்பட்டதல்ல. மாறாக வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டதிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாகும்.

இந்த நிலைமை மாற வேண்டுமெனின் பிரதேச சபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். அதாவது தோட்டப் பகுதிகளை பிரதேச சபை அபிவிருத்தி திட்டங்களிலிருந்து உட்கிடையான ஒதுக்க வைத்திருக்கும் பிரிவு 33 ஐயும் அதனோடு தொடர்புடைய பிரிவுகளையும் திருத்த வேண்டும். தோட்டப் பகுதிகளிலும் அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம் என்றும் தோட்டக் குடியிருப்புகளை சட்டபூர்வமான மக்கள் குடியிருப்புகளில் ஒன்றான அங்கீகரிப்பதாகவும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

தோட்டக் குடியிருப்புகளை இலங்கையின் குடியிருப்புகளில் ஒன்றாக அங்கீகரித்தால் அபிவிருத்திகளை ஈர்த்துக் கொள்ளும் தகுதி மலையகத் தமிழ் மக்களுக்கு கிடைக்கும். இல்லாவிட்டால் மலையகத் தமிழ், மக்கள் ஏனைய பிரஜைகளுக்கு அல்லது சமூகங்களுக்கு சமமாக நடத்தப்படுபவர்களாக இருக்கமாட்டார்கள்.

வாக்களித்து தாங்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் ஆளும் பிரதேச சபைகளின் பயனாளிகளாக தாங்கள் அங்கீகரிக்கப்படாவிட்டால் தங்களது வாக்குரிமையால் என்ன என்பதுடன் வாக்குரிமை இருந்தும் இல்லாத நிலையில் இருப்பதாக மலையகத் தமிழ் மக்கள் விசனமடைந்துள்ளனர்.
இலங்கையின் அரசியல் பிரதிநிதித்துவ முறையில் உள்ளூராட்சி சபைகளை மக்களுடன் நேரடி தொடர்புடைய மக்கள் நாளாந்த தேவைகளுக்கான நாளாந்த அலுவல்களுக்கான சபையாக இருக்கின்றன.

தோட்டக் குடியிருப்புகள் கிராமக் குடியிருப்புகளாக அங்கீகரிக்கப்படவில்லை. (அவை நகரக் குடியிருப்புகளாக இருக்க முடியாது) அவ்வாறு கிராமக் குடியிருப்புகளாக அங்கீகரிக்கப்படாவிட்டாலும் வேறு விசேடமான இன்னொரு குடியிடிருப்பாகவாவது அங்கீகரிக்கப்பட வேண்டும்.

மலையகத் தமிழ் மக்களுக்கென தோட்ட உட்கட்டமைப்பு என்ற அமைச்சொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் இல்லாமலாக்கப்பட்டது. தற்போது புதிய கிராமங்கள் உருவாக்குதல் அமைச்சு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் அதன் மூலம் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திணைக்களங்கள் எதுவும் இல்லை. அவ்வமைச்சு காணி, வீடமைப்பு போன்ற அமைச்சுகளில் தங்கி இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. மலையகத் தமிழ் மக்கள் இந்நாட்டின் ஏனைய மக்களை ஏறக்குறைய நூறாண்டு காலத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இதனால் இச்சமூகத்திற்கு விசேட ஏற்பாடுகள் அவசியமாகிறது.

அந்த அடிப்படையில் புதிய கிராமங்கள் உருவாக்கும் அமைச்சு சுதந்திரமாக செயற்படுவதற்கு அதிகாரங்களும், திணைக்களங்களும், நிதியும் ஒதுக்கப்பட வேண்டும்.
அதனூடாக மலையகத் தமிழ் மக்களுக்கு சொந்த வீடுகள், காணிகள் கிடைப்பதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டு உட்கட்டமைப்புகளுடன் பிரத்தியேக குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பெருந்தோட்டங்களின் பெரும்பாலானவை தனியார் கம்பெனிகளால் முகாமை செயற்படுகின்றன. இதனால் தோட்ட எல்லைக்குள் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுவதை கம்பெனிகள் நிர்வாகங்கள் அதிகமாக விரும்பவில்லை. அவை தோட்ட குடியிருப்புகள், தோட்ட உட்கட்டமைப்பு போன்றன அவற்றின் பிரத்தியேக கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென விரும்புகின்றன.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் யாதெனில் தோட்டக்காணிகளின் பூரணமான சொந்தம் அல்லது உரித்து தோட்டக் கம்பெனிகளிடமே இருக்கின்றன. நீண்டகால குத்தகைக்கு அல்லது முகாமை செய்வதற்கு தோட்டங்களை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்டுள்ள கம்பெனிகள் இந்நாட்டின் இன்னொரு மக்கள் பிரிவினரான மலையகத்தில் மக்களுக்கு பிரதேச சபைகளினூடான அபிவிருத்திகள் சென்றடைவதற்கு தடையாக இருக்கக்கூடாது.

பெருந்தோட்டக் கம்பனிகள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் முரண்டு பிடித்துக் கொண்டிருப்பதைப் போன்று மலையகத் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபைகளின் அபிவிருத்திகள் தோட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடையாக இருக்கக்கூடாது.

ஆகவே பிரதேச சபை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு உரிய திருத்தங்களை செய்து மலையகத் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவ, பொருளாதார சமூக உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

நன்றி- தினகரன்

Tuesday, December 22, 2015

சம்பள உயர்வு வழங்காவிடின் தோட்டங்களை கையளியுங்கள்

தோட்டங்களின் மூலம் வருமானம் இல்லாவிட்டாலோ, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாவிட்டாலோ அவற்றை அரசாங்கத்திடம் கையளிக்குமாறு சபை முதல்வரும் அமைச்சருமான லக்க்ஷ்மன் கிரியெல்ல தோட்ட கம்பனிகளை வலியுறுத்தியுள்ளார்.
பெருமளவான உள்ளூர் முதலீட்டாளர்கள் தோட்டங்களை பொறுப்பேற்று தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் அமைச்சர் லக்க்ஷ்மன் கிரியெல்லவின் தலைமையில் நடைபெற்றது. இங்கு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக குறிப்பிட்ட அமைச்சர், சிலர் தோட்டங்களினூடாக கிடைக்கும் வருமானம் போதாது என்று கூறிக்கொண்டு லாபத்தை மறைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
புதிய அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்கமைய அரசாங்க ஊழியர்களுக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கியிருக்கிறோம்.இவர்களுக்கு மட்டுமன்று நாட்டிற்கு அமைதியாக சேவையாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு துரிதமாக  சம்பள உயர்வு வழங்குமாறு தோட்ட கம்பனிகளிடம் வலியுறுத்துகிறேன். இல்லாவிட்டால் சகல தோட்டங்களையும் அரசாங்கத்திடம் கையளிக்குமாறு தெரிவிக்கிறேன். நாம் எந்த சவாலையும் எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
சில தோட்ட உரிமையாளர்கள் தோட்டங்களை நிர்வகிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.வெள்ளைளைக்காரர்களின் காலத்தில் ஒவ்வொரு கம்பனிக்கும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் வீதமே தோட்டங்களுக்குக்கு இருந்தன.ஆனால் இன்று நிலைமை முற்றாக மாறியிருக்கிறது.
 சில தோட்ட உரிமையாளர்களுக்கு 20 ஆயிரத்திற்கும் அதிக ஏக்கர் காணியிருக்கிறது. சிலர் தோட்டங்களினூடாக கிடைக்கும் வருமானம் போதாது என்று கூறிக்கொண்டு லாபத்தை மறைக்கின்றனர்.தோட்டங்களினூடாக வருமானம் கிடைக்காவிட்டாலோ தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாவிட்டாலோ சகல தோட்டங்களையும் அரசாங்கத்திடம் கையளியுங்கள்.
 பெருமளவான உள்ளூர் முதலீட்டாளர்கள் தோட்டங்களை பொறுப் பேற்க தயாராாக உள்ளனர். அவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் தயாராக இருக்கிறார்கள். பெருந்தோட்டங்களை அபிவிருத்தி செய்யவும் முன்னேற்றவும் அரசாங்கம் தயாராக இருக்கிறது.
தோட்டங்களின் மூலம் வருமானம் இல்லாவிட்டாலோ தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாவிட்டாலோ அவற்றை அரசாங்கத்திடம் கையளிக்குமாறு தோட்ட கம்பனிகளிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டிருப்பதன் ஊடாக மக்கள் ஆணை குறித்து தெளிவாகிறது.குரோத அரசியலை கைவிட்டு நாட்டை முன்னேற்ற ஒத்துழைக்குமாறு சகல அரசியல்வாதிகளிடமும் கேட்டுக் கொள்கிறேன் எனவும் அவர் கூறினார்.

Tuesday, December 15, 2015

தொழிற்சாலையை திறக்கக்கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நானு­ஓயா எடின்­புரோ தோட்­டத்தில் 300 இற்கு மேற்­பட்ட தொழி­லா­ளர்கள் நேற்றுக் காலை 08 மணி­முதல் 10 மணி வரை தேயிலை தொழிற்­சா­லைக்கு முன்­பாக ஆர்­ப்பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். தோட்­டத்தில் இயங்­கி­வந்த தேயிலைத் தொழிற்­சாலை 03 மாதங்­க­ளுக்கு முன்பு தோட்ட நிர்­வா­கத்தால் இயந்­தி­ரங்­களை திருத்­து­வ­தாக கூறி தற்­கா­லி­க­மாக மூடப்­படும் என தொழி­லா­ளர்­க­ளுக்கு தெரி­விக்கப்பட்டுள்­ளது. ஆனால் 03 மாதங்கள் கடந்த போதி­லும்  ­இ­து­வரை எவ்­வித நட­வ­டிக்கையை எடுக்­க­ப்ப­ட­வில்லை எனவும் தற்­போது தோட்ட நிர்­வாக அதி­கா­ரி­க­ளிடம் தொழி­லா­ளர்கள் கேட்­ட­போது அதற்கு பணம் இல்­லை­யென தெரி­விப்­ப­தாக ஆர்­ப்பாட்­டத்தில் ஈடு­பட்ட தொழி­லா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். 
 
தோட்­டத்தில் நல்ல வரு­மா­னத்­தினை தரக்­கூ­டிய தேயிலை மலைகள் தோட்ட நிர்­வா­கத்தால் முறை­யாக பரா­ம­ரிக்­கப்­ப­டாமல் கைவிடப்­பட்டுள்­ள­தா­கவும் இத்­தே­யிலை மலை­களை துப்­பு­ரவு செய்­வ­தற்கு கம்­ப­னி­யிடம் பணம் இல்லை. இதன் கார­ண­மா­கவே துப்­பு­ரவு செய்­ய­மு­டி­யாத நிலை இருப்­ப­தாக தோட்ட நிர்­வாகம் தெரி­விப்­ப­தாக தொழி­லா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். தோட்ட நிர்­வா­கத்தால் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்க வேண்­டிய சலு­கை வழங்­க­ப்ப­டு­வ­தில்லை. தோட்­டத்தில் உள்ள பொது­மக்­களின் சுகா­தார விட­யங்­களை முறை­யாக செய்து கொடுப்­ப­தில்­லை­யென தெரி­வித்தே இவர்கள் ஆர்­ப்பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கின்­றனர். தொழிற்­சா­லை ­உ­ட­ன­டி­யாக திறக்­கப்­ப­டா­விட்டால் தொடர்ச்­சி­யாக போராட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் தொழி­லா­ளர்கள் தெரி­வித்­தனர். இவ் ஆர்ப்­பாட்­டத்தில் அதி­க­மான பெண்கள் கலந்­து­கொண்­டமை ொண்டமை குறிப்பிடத்தக்கது.

சம்பள பேச்சுவார்த்தை எதிர்வரும் 18ம் திகதி வரை ஒத்திவைப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை  தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தலைமையில் கொழும்பிலுள்ள தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று காலை(15) நடைபெற்றது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சனைக்கு இறுதித்தீர்வு பெற்றுகொடுக்கும் நோக்கில் இன்று காலை ஆரம்பமான ஒன்பதாம் கட்டப் பேச்சுவார்த்தை எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படாமல் எதிர்வரும் 18ம் திகதி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சுமார் 3 மணி நேரமாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்கங்களினால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் முதலாளிமார் சம்மேளனத்தின் தரப்பினர்கள் எவ்வித பதில்களும் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், தலைவர் முத்து சிவலிங்கம், உபதலைவர் மாரிமுத்து, ஜோதிகண்ணன், மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பாக விஜயகுமார், உரூத்திரதீபன், தொழிற்சங்க கூட்டு கமிட்டி சார்பாக இராமநாதன், முருகையா மற்றும் பொருந்தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகள் சார்பாக 22 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Monday, December 14, 2015

தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி

நுவரெலியா, வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட மத்துரட்ட பெருந்தோட்ட கம்பனியின்  கீழ் இயங்கும் அல்மா  கிரேமன்ட் தோட்டத்தில் அமைந்துள்ள தேயிலைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளமைக்கும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் இயந்திரங்களை அகற்றுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து தொழிலாளர்களினால் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி ஹைபொரஸ்ட், சில்வர்கண்டி புறுக்சைட் சந்தி, சென்ஜோன்ஸ், கந்தப்பளை ஊடக நுவரெலியா தொழிற்திணைக்களம் வரை சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தொழிற்சாலையை மீளத்திறந்து, உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் தொழிலாளர்களின் வேலையை உறுதிப்படுத்துமாறும் பேரணியில் ஈடுபட்டவர்கள் தொழிற் திணைக்களத்திடம் மனு ஒன்றையும் கையளித்துள்ளனர். 

கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டிருக்கும் குறித்த தொழிற்சாலையை மீள இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தோட்ட நிர்வாகம் வாக்குறுதி அளித்திருந்ததாக தெரியவருகிறது. எனினும் நேற்று (13) தொழிற்சாலையில் பொருத்தப்பட்டிருக்கும் இயந்திரங்களை அகற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தொழிலாளர்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டுள்ளது. 

குறித்த தொழிற்சாலையை நம்பியே தினமும் சுமார் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் கிலோ தேயிலை பறிக்கப்படுவதாகவும், எனினும் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் பறித்த தேயிலையை  வேறு தொழிற்சாலைக்கு அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலையிழப்பதோடு, அவர்களது மாத வருமானம் 50 வீதமானக குறைந்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். 


தொழிற்சாலையை நம்பியிருந்த சுமார் 50 தொழிலாளர்கள் முற்றாக தொழிலை இழந்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொழிற்சாலையை மீளத் திறக்கும் பட்சத்தில் ஏற்கனவே மூடப்பட்டுள்ள பிரம்லி,  குருந்துஓயா மற்றும் கோணப்பிட்டிய ஆகிய தொழிற்சாலைகளை நம்பி பறிக்கப்படும் தேயிலையையும்  இந்த தொழிற்சாலைக்கு கொண்டு வந்து உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

Sunday, December 13, 2015

நிலைமாற்றுகால நீதி: மலையக மக்கள் சார்பில் பாதிக்கப்பட்டோர் ஆலோசனை செயன்முறைக்கான பரிந்துரைகள்

நிலைமாற்று கால நீதி தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்தாலோசிக்கும் செயன்முறையில் மலையக மக்களும் உள்வாங்கப்பட்டு அவர்களது விடயங்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்று மலையக சமூக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மலையக சமூக ஆய்வு மையம் வௌியிட்டுள்ள ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் கீழே காணலாம்.

நிலைமாற்று கால நீதி தொடர்பில் பாதிக்கப்பட்டோரை கலந்தாலோசிக்கும் செயன்முறையை எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இன, மத, மொழி, பால்நிலை, பிரதேசம் கடந்து ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தது. பாதிக்கப்பட்டோர் கலந்தாலோசனை செயற்பாடுகளை முன்னெடுக்கும் இணைப்புக் குழுவின் செயல் வடிவம் வெவ்வேறானதாக இருக்க வேண்டும் என்ற விடயம் தொடர்பில் மலையக மக்கள் சார்பில் மலையக சமூக ஆய்வு மையத்தின் பரிந்துரைகள் இதுவாகும்.

இலங்கையில் நிலைமாற்று கால நீதியை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்காக பாதிக்கப்பட்டோர் கலந்தாலோசனை செயன்முறையின்போது (Victim Consultation Process) இந்நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் மலையகத் தமிழ் மக்கள் சார்பாக பின்வரும் விடயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.
  1. பிரதிநிதித்துவம்
I பாதிக்கப்பட்டோர் கலந்தாலோசனை செயல்முறையினை முன்னெடுக்கும் இணைப்புக் குழுவில் மலையக சிவில் சமூக பிரதிநிதி ஒருவரும் உள்வாங்கப்படல் வேண்டும்.
II இக்குழுவில் 50% பிரதிநிதித்துவம் பெண்களைக் கொண்டதாக உறுதி செய்யப்படல் வேண்டும்.
  1. சாட்சிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படல் வேண்டும்.
  2. இணைப்புக் குழுவின் விடய பரப்புக்குள் மலையகத் தமிழர்களின் பின்வரும் விடயங்கள் உள்வாங்கப்பட வேண்டும்.
I 1947ஆம் ஆண்டு இடம்பெற்ற மலையகத் தமிழரின் குடியுரிமை பறிப்பு.

II 1948ஆம் ஆண்டு இடம்பெற்ற மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிப்பு.

III 1964ஆம் ஆண்டு சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலமும், 1974ஆம் ஆண்டு சிறிமா – இந்திரா ஒப்பந்தம் மூலமும் இம்மக்களின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயத்தின் பேரில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட விவகாரம்.

IV 1958ஆம் ஆண்டிலிருந்து 1983ஆம் ஆண்டு வரை மலையகப் பிரதேசங்களில் இடம்பெற்ற இன வன்முறைகளினால் ஏற்பட்ட பாதிப்புகள் (உயிர் மற்றும் சொத்துடமை) மற்றும் அதன் விளைவாக வட கிழக்குப் பிரதேசங்களில் குடியேறிய மலையகத் தமிழ் மக்களினுடைய உரிமைகள்.

V வடக்கு கிழக்கில் உள்நாட்டுப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அந்தப் போரின் விளைவாக மலையகத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள். குறிப்பாக சந்தேகத்தின் பேரில் மலையகத் தமிழர்கள் கைதுசெய்யப்படல், தடுத்து வைத்தல், மனோ நீதியாக அவர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள்/ வடுக்கள் போன்றவை.

VI 200 வருடகால வரலாற்றை இந்த நாட்டில் கொண்டுள்ள மலையகத் தமிழரின் காணியுரிமை அற்ற நிலையும், அவர்களின் வீட்டுரிமைப் பிரச்சினையும்.

VII அரசியல் யாப்பில் சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள தமிழ்மொழி மலையகப் பிரதேசங்களில் முறையாக அமுல்படுத்தப்படாமை.

VIII அன்று முதல் இன்று வரை மலையகத் தமிழர்கள் ஐதாக வாழும் மாவட்டங்களில்/ பிரதேசங்களில் மலையகத் தமிழரின் இனத்துவ அடையாளங்களுக்கு விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தல்கள் அல்லது இனத்துவ அடையாளங்களை அழித்தல் என்ற விவகாரம்.

IX மலையகத் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில், குறிப்பாக பெருந்தோட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டாய கருத்தடைகள்.

X திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் பொருளாதார வளங்களை சூறையாடுதல் போன்ற வழிமுறை ஊடாக மலையகத் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கியமை.
  1. இடம்
சாட்சியங்களை பதிவுசெய்வதற்கும், உண்மைகளை வெளிப்படுத்துவதற்குமான வாய்ப்பு இந்நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு வழங்கப்படுவது போன்று சமவாய்ப்பு மலையகத் தமிழருக்கும் வழங்கப்பட வேண்டும். இதற்காக இந்த இணைப்புக் குழுவின் (Coordinating Committee) விசாரணைகள் மலையகத்தில், குறிப்பாக நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, தெனியாய போன்ற நகரங்களிலும் மீரியாபெத்தை பிரதேசத்திலும் இடம்பெறல் வேண்டும்.
  1. காலமும் அவதானிப்பும்
மக்களுக்கு உண்மைகளையும், சாட்சியங்களையும் வழங்குவதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் செயற்பாடுகளை நிறைவுசெய்ய முடியாத பட்சத்தில் கால எல்லை நீடிக்கப்பட வேண்டும். குறுகிய கால எல்லைக்குள் நிறைவுசெய்ய வேண்டுமாயின் இணைப்புக் குழுவின் ஆளணி வலுவை அதற்கேற்ப அதிகரிக்கப்படல் வேண்டும்.

மக்களின் உண்மைகளையும், சாட்சியங்களையும் பதிவுசெய்யும் இடங்களுக்கு சர்வதேச அவதானிப்பாளர்களுக்கும், உள்நாட்டு அவதானிப்பாளர்களுக்கும் எவ்வித தடையுமின்றி அவதானிப்புகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
  1. மொழி
உண்மைகளை கண்டறியும் போதும், சாட்சியங்களைப் பதிவு செய்யும்போதும் எந்தவொரு தனிநபரும் இன ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ, பால்நிலை அடிப்படையிலோ, மத ரீதியாகவோ வேறுபாடுகளுக்கு உட்படுத்தப்படக்கூடாது. பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் தமது தாய் மொழியினை பயன்படுத்தி கருமங்களை ஆற்றுவதற்கு வசதி செய்து கொடுக்கப்படல் வேண்டும்.

மலையக சமூக ஆய்வு மையம்

நன்றி- மாற்றம் இணையம்

மலையகத் தமிழர்கள்; தொடர்ந்துவரும் மனித உரிமை மீறல்கள்

இலங்கையின் மலையகத் தமிழருக்கெதிரான மனித உரிமை மீறல்கள் இரண்டு நூற்றாண்டுகளாக இடம் பெற்றுவருகின்றன. இரண்டாம் உலகப் போரின் பின்னர் தோற்றுவிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச மனித உரிமைகள் சமவாயம் பிரகடனப்படுத்தப்படும் முன்னரே மனித இனத்தின் பிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட மக்களினங்களில் ஒன்றாக மலையகத் தமிழர்கள் காணப்பட்டார்கள்.

இலங்கையின் சுதந்திரம் நோக்கிய பயணத்தில் ஆங்கில கல்விகற்ற மத்தியதர வர்க்கங்களும், தமிழ் சிங்கள பிரபுத்துவ வர்க்கங்களும் தமது அமைக்குடிகளாக மலையகத் தமிழர்களை கருதினார்களேயன்றி அம்மக்களினத்தின் அடிப்படை உரிமைகள், மனிதஉரிமைகள், ஜனநாயக உரிமைகள் பற்றி எண்ணிப்பார்க்கவும் தயங்கினர்.

1833களில் ஆரம்பமான காலனித்துவ கால அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகள் படிப்படியாக முன்னோக்கிச் சென்று, 1947ஆம் ஆண்டில் சேர் வில்லியம் சோல்பரி யாப்பாக பரிணமித்ததுடன் தொடர்ந்த மலையகத் தமிழருக்கெதிரான நிகழ்வுப்போக்குகள், இன்றைவரை வெவ்வேறுபட்டு பரிமாணங்களை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

மலையகத் தமிழர்களின் மனித உரிமைகளை மீறுவதில் சகல ஆளும் குழுமங்களும், வர்க்கங்களும், இனப்பிரிவுகளும், பிரபுத்துவ, முதலாளி சக்திகளும், வலதுசாரிகள், இடதுசாரிகள், சந்தர்ப்பவாதிகள், தமிழ் தேசியவாதிகள் அனைவரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்ற விசித்திரத்தை இலங்கை தீவில் மட்டும் காணமுடிகின்றது.

1931ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் மலையகத் தமிழர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது. இன்றுவரையும் உள்ளூராட்சி மன்றங்கள், மலையகத் தமிழருக்கு தோட்டத் தொழிலாளருக்கு எத்தகைய சேவையும் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. அதனை மீறி சேவை செய்த மத்திய மாகாணத்தின், கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள உடப்பளாத்தை பிரதேசசபை, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்கவால் கலைக்கப்பட்டது.

இலங்கைத்தீவின் 275,000 மக்கள் தொகை கொண்ட நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகமே இலங்கையில் ஆகப்பெரியதாகும். இது மஹரகம பிரதேச செயலகத்தோடு ஒப்பிடுகையில் 30 பிரதேச செயலகங்களை கொண்டிருக்க வேண்டிய பிரதேசமாகும். அதேபோல இலங்கையில் 425 பேருக்கு ஒரு கிராம சேவையாளர் பிரிவு காணப்படும் போது நுவரெலியா மாவட்டத்தில் 9500 பேர் வசிக்கும் கெர்க்கஸ்வோல்ட் பகுதியில் ஒரு கிராம சேவகர் பிரிவே காணப்படுகின்றது. இது பாரதூரமான அரசியல், உரிமை மீறலாகும்.

மேலும், 1948ஆம் ஆண்டு பிராஜா உரிமை பறிப்பு, 1949ஆம் ஆண்டின் தேர்தல் திருத்தச் சட்டம், 1958ஆம் ஆண்டின் சிங்கள மொழிச் சட்டம், 1952ஆம் ஆண்டின் நேரு – கொத்தலாவலை உடன்படிக்கை, 1964ஆம் ஆண்டின் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம், 1974ஆம் ஆண்டு சிறிமா – இந்திரா ஒப்பந்தம், 1987ஆம் ஆண்டின் ஜே.ஆர் – ரஜீவ் உடன்படிக்கை என்பனவும் பல இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்களின் அரசியல், குடியியல் உரிமைகளை மீறிய செயற்பாடுகளாகும்.
மலையகத் தமிழர்களின் காணியுரிமை, வீட்டுரிமை என்பன இன்றுவரை அங்கீகரிக்கப்படாமை, தொழில் உரிமைகள், பெண் தொழிலாளர் உரிமைகள், அவர்களின் பாதுகாப்பு, தொழில்சார் நலன்களின் பாதுகாப்பு என்பன மீறப்படுவதன் மூலம் அவர்களின் குடியியில் உரிமைகள் மீறப்படுகின்றன. ஏழு தலைமுறையாக நிரந்தர சம்பளம் ஒன்றைத் தீர்மானிக்கப்படாமை பாரதூரமான பொருளாதார உரிமை மீறலாகும்.

1958ஆம் ஆண் இனவெறி தாக்குதல், 1972 காணிச்சீர்திருத்தச் சட்டம், மலையக மக்களின் வாழ்வாதரம் அழிக்கப்பட்டமை, 1977, 1981, 1983, 1984, 1988ஆம் ஆண்டுகளில் மலையகத் தமிழருக்கெதிராக நிகழ்த்தப்பட்ட அரச ஆதரவுடன் கூடிய இனவெறி தாக்குதல்கள் கொலைகள், பாலியல் வல்லுறவுகள், சொத்து அபகரிப்புகள் மூலமாகவும் பாரிய மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன.

கல்வி வாய்ப்புகளில் காட்டப்படும் பாரபட்சம், உயர்கல்வி மறுப்பு, சிறுவர்களை வேலைக்கமர்த்தல், சிறுவர் பாதுகாப்பின்மை, போசாக்கின்மை, வறுமை, என்பன மலையகத் தமிழருக்கெதிராக இன்று நிகழ்காலத்தில் நிலவும் மனித உரிமை மீறல்களாகும்.

சுகாதார, மருத்துவ நலன்களை வழங்குவதில் காட்டப்படும் பாரபட்சம், தாய் சேய் பாதுகாப்பு, பாராமரிப்பு, பாலியல் சுரண்டல்கள், குடும்ப சமூக அமைப்புசார் ஒடுக்கு முறைகள் என்பன 21ஆம் நூற்றாண்டின் அடிமைக்குழுமம் ஒன்றையே பிரதிபலிக்கின்றன எனலாம். இலங்கை மலையகத் தமிழரை பொறுத்தவரை அவர்களின் அரசியல் உரிமைகள், குடியியல் உரிமைகள், சிறுவர் உரிமைகள், பெண்கள் உரிமைகள், பொருளியல் உரிமைகள் என எந்நிலை நின்று நோக்கினாலும் அவையனைத்தும் வரலாறு பூராவும் மீறப்பட்டு வந்திருப்பதனையும், மீறப்பட்டு வருவதையும் காண முடிகின்றது.

இந்நிலைமை மேம்படுத்தும் எத்தகைய ஆக்கபூர்வமான பிரயத்தனமும் மேற்கொள்ளப்பட வில்லையென்பது வெட்கக்கேடான உண்மையாகும்.

பொன். பிரபாகரன்

நன்றி- மாற்றம் இணையம்

Friday, December 11, 2015

மாமழை மீட்டெடுத்த மனித நேயம்!

சென்னையில் குடியிருப்பவருக்குப் பக்கத்து வீட்டில் இருப்பவர்களைக் கூடத் தெரியாது. வெளியூர்க்காரர்கள் இதனை கிண்டலுக்காக சொன்னாலும், பெரும்பான்மையான இடங்களில் உண்மை இதுதான்.

 வணக்கம் வைத்தாலோ, புன்முறுவல் பூத்தாலோகூட பதிலுக்கு அப்படி செய்வதையே விரும்பாத அடுக்குமாடி குடியிருப்புவாசிகளும் உண்டு. அவர்களிலும் சிலர் சொத்து எழுதிக் கேட்ட பங்காளியைப்போல முறைத்து விட்டோ, முகத்தைத் திருப்பிக் கொண்டோ போவார்கள். மொத்தமும் ஒரே நாளில் தலைகீழானது.

 திரைப்படங்களில் பார்த்த, திகில் கதைகளில் படித்த காட்சிகள் கண்ணெதிரே நடந்தன. கொஞ்சமும் இரக்கமற்ற அரக்கனைப் போல கொட்டித்தீர்த்தது மழை. இதைப் பேய் மழை என்று சொல்வதெல்லாம் மிகச் சாதாரண வார்த்தை. நேற்றுவரை சாக்கடைகளாக மட்டுமே இருந்த ஆறுகள் எல்லாம் பழிதீர்க்கும் வேகத்தில் பாலங்களை மீறி சென்னைக்குள் பாய்ந்தன. சுற்றிலும் தண்ணீர்க்காடு. எனினும், குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை.

 ஒரு பாக்கெட் அல்லது ஒரு பாட்டில் தண்ணீர் கிடைக்காதா என கண்கள் ஏங்கின. பாலுக்காக அழுத பிள்ளைகளின் கண்ணீர் வற்றிப்போனது. இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் நகர முடியவில்லை. பேருந்துகள் இல்லை. பிதுங்கி வழியும் மின்சார ரயில்கள் செல்வதற்குத் தண்டவாளங்களே தெரியவில்லை. சென்னையின் இருபெரும் ரயில் நிலையங்களான சென்ட்ரலும், எழும்பூரும் மொத்தமாக இயக்கத்தை நிறுத்திக் கொண்டன.

 மீனம்பாக்கத்தில் நின்றிருந்த விமானங்கள் பொம்மைகளைப் போல மிதந்தன. ஏற்கெனவே புறநகர்வாசிகளுக்கு மட்டும் பழக்கமாயிருந்த படகுகளும், பரிசல்களும் பெருநகரத்திற்கான ஏக போக போக்குவரத்து சாதனங்களாயின. பார்த்து, பார்த்து வாங்கிய வீடுகளில் இருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஒரு தாதாவைப் போல புகுந்த தண்ணீர் பலரையும் வெளியேற்றியது. மாதத் தவணையிலும், கடன் அட்டையிலும் வாங்கிய பொருள்கள் எல்லாம் கண் முன்னே மிதந்து சென்றன.

 படகில் தப்பிபோகும் போதே கீழே மூழ்கிக் கிடக்கும் கார்களை ஏக்கத்தோடு பார்த்துச் செல்வது தவிர, வேறெதுவும் செய்ய முடியவில்லை. கையில் பணம் வைத்துக்கொண்டு பொருள்கள் வாங்குவதைக் கெளரவக் குறைச்சலாக மாற்றியதன் இன்னொரு முகத்தை ஏ.டி.எம். மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தவர்கள் உணர்ந்தார்கள்.

 மணிக்கணக்கில் நின்ற பிறகும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க முடியவில்லை. அதுவும் கிடைக்காமல் அல்லாடியவர்களும் உண்டு. வீட்டில் ஆயிரம் ரூபாய்கூட வைத்திருக்க வேண்டியதில்லை, எல்லாவற்றுக்கும் அட்டை போதும் என்ற தாராளமயமாக்கலின் வரம் பல் இளித்து நின்றது.

 மின்சாரம் தொலைந்த கணங்கள் உயிர் இருக்கும்போதே நரகத்தில் தூக்கிப்போட்டன. உயிரைப்போல இறுக்கிப் பிடித்து வைத்திருந்த செல்லிடப்பேசிகள் செயலிழந்தது இதன் உச்சம். செல்லிடப்பேசி இன்றி எங்கும் செல்ல முடியாது, எதுவும் செய்ய முடியாது என்பதும் பொய்த்துப்போனது.

 செல்லிடப்பேசிக்கு மின்னூட்டம் (சார்ஜ்) ஏற்ற மின்சாரம் இல்லை. மாற்று வழிகளில் சார்ஜ் ஏற்றினாலும் பேசுவதற்கு சமிக்ஞை (சிக்னல்) கிடையாது. கைவிடப்பட்ட குழந்தைகளைப்போலக் கிடந்த பழைய தொலைபேசிகள் இருக்கிற இடங்களைத் தேடி ஓடினார்கள். வெளியூர்களில் இருந்து தவித்த உறவுகள் ஒருபக்கம் என்றால், சென்னைக்குள்ளேயே வெவ்வேறு பகுதிகளில் இருந்த சொந்தங்களையும் நட்பையும் தொடர்பு கொள்ள முடியாமல் மிரண்டு கிடந்தனர்.

 இருமல், தும்மல் என ஒன்று விடாமல் பதிவேற்றும் முகநூல் பக்கம் போக முடியாதது பலருக்கு சோகத்திலும் ஆகப்பெரும் சோகம்.

சுற்றி என்ன நடக்கிறது என்று உணர முடியாத பயங்கரத்தில் பக்கத்து வீட்டுக்காரனைக்கூடத் தெரியாத சென்னையின் இன்னொரு முகம் வெளிப்பட்டது. மாமழை மீட்டெடுத்த அந்த மனித நேயத்தின் வடிவங்கள் உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தன.

 உணவு, உறைவிடம், உடை, தண்ணீர் என தத்தளித்தவர்களுக்கு வாரிக்கொடுத்த பலர், நேற்று வரை யாரென்றே தெரியாதவர்கள். அரசுகளுக்கோ, அதிகாரிகளுக்கோ அவர்கள் யாரும் காத்திருக்கவில்லை. இயன்றவர்கள் முடிந்ததை எல்லாம் செய்து கொடுத்தார்கள். இவர்களில் பலர் பெரிய கோடீஸ்வரர்கள் இல்லை. பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தவர்கள்.

 அங்கங்கே குழுக்களாகச் சேர்ந்தார்கள். போக்குவரத்து வழிகாட்டுதலில் தொடங்கி, நீச்சலடித்து காப்பாற்றியது வரை அவரவர் சக்திக்கு ஏற்ப, எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஆளுக்கு ஒரு வேலை செய்தார்கள். பேரிடர் துயரத்திலும் பெரும் ஆறுதல் தந்தது இந்த மனிதம்தான். இதுபோக, இனம், மதம், மொழி, சாதி, பாலினம் எல்லாவற்றையும் ராட்தச மழை ஒரே அடியில் சமமாக்கியது. எஞ்சியது இரண்டே பிரிவு. மிதந்தவர்கள். மிதக்காதவர்கள். அவ்வளவுதான்.

 அதேநேரத்தில், வானம் நிகழ்த்திய துயரம், நமக்கு சிலவற்றைப் பாடமாக சொல்லி இருக்கிறது. அவற்றை, இப்போதே அழுத்தந்திருத்தமாக மனதில் பதியவைக்கவில்லை என்றால், வெள்ள நீரோடு சேர்ந்து அதன் வேகமும் வடிந்து போய்விடும். முதலில் இது ஒன்றும் வரலாறு காணாத மழை இல்லை.
 சமீபத்திய ஆண்டுகளில் நாம் பார்த்ததில்லையேத் தவிர பாட்டன், பூட்டன் காலத்திலேயே இப்படியான மழை இருந்திருக்கிறது. அப்போதெல்லாம் கணக்கீட்டு அளவுகளும், முன்னெச்சரிக்கை ரமணன்களும் இவ்வளவு நவீனமாக இல்லை. இருந்தாலும் அவற்றை எல்லாம் சமாளிக்க ஏற்ற வகையில், தமிழர்களின் வாழ்க்கை முறை இயற்கையோடு இயைந்திருந்தது.

 ஒவ்வோர் ஆண்டும் கோடைக் காலத்தில் கூரை வீட்டை கீற்றோ, பனை ஓலையோ வேய்ந்து செப்பனிடுவார்கள். அதற்கு மேல் வைக்கோல் போட்டு, அம்மிக்கல்லைத் தூக்கும் ஆடி மாத காற்றடித்தாலும் பறக்காத அளவுக்கு பக்குவப்படுத்துவார்கள்.

 ஐப்பசி மாத அடைமழைக்கு முன்பாக அரிசி உள்ளிட்ட தானியங்கள் சேகரமாகிவிடும். புரட்டாசியில் மழைத் தொடங்கி, கார்த்திகை கடைசியில் ஓய்ந்து, பனி ஆரம்பிக்கும் வரையில் தேவையான எரிபொருள்கள் வீட்டுப் பரணில் பத்திரமாக இருக்கும். மழை நேரத்தில் காய்கறிகள் கிடைப்பது கடினம் என்பதால், அப்போது குழம்பு வைப்பதற்குத் தேவையான மாங்காய், கத்திரிக்காய், கொத்தவரங்காய் என வித விதமான வற்றல் வகையறாக்கள் சித்திரை வெயிலில் சரடாக காய்ந்து பானைகளில் காத்திருக்கும்.
 இத்தகைய, திட்டமிட்ட வாழ்வியல் முறையால்தான் ஒரு நாள்கூட விடாமல் மாதம் முழுக்க கொட்டிய மழையிலும் கச்சிதமாக வாழ்ந்திருக்கிறார்கள். கோணிப்பையை மழைக் கோட்டாக மாற்றி சுற்றிச் சுழன்றுள்ளார்கள். இன்றைக்கு லட்சங்களில் சம்பளம் வாங்குபவர்களின் வீடுகளிலும் மாதத்தின் முதல் நாளில் சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லாமல் தத்தளித்த காட்சிகளை என்னவென்று சொல்வது.. அடச்சே - என்ன வாழ்க்கை வாழ்கிறார்கள் இவர்கள் - எவ்வளவு சம்பாதித்து என்ன செய்ய - அன்றாடங்காய்ச்சிகளான ஏழை - பாழைகளே தேவலாம் போலிருக்கிறதே.

 தனி மனிதர்கள் மட்டுமல்ல, தன்னை நம்பியிருக்கும் கால்நடைகளுக்கான வைக்கோல் படப்பு போடுவதையும்கூட நுணுக்கமாக செய்தார்கள். அதன் மேலடுக்கு தாண்டி சொட்டுத்தண்ணீர் உள்ளே இறங்காது. எல்லாவற்றுக்கும் மேலாக நீர்நிலைகளை நம்முடைய தாத்தாக்கள் கையாண்ட விதமே தனி. குளம், ஏரி, ஊருணி எல்லாம் அந்தந்த ஊர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. விவசாய வேலைகள் முடிந்த காலத்தில் அவற்றை எல்லாம் தூர் எடுத்தார்கள். வீட்டுக்கு ஓர் ஆள் இந்தப் பணியில் ஈடுபட வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம். முடியாதவர்கள் அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். இதற்கென குடி மராமத்து வரி போடுவார்கள். ஆறுகள், வாய்க்கால்களும் செடி, கொடிகள் அகற்றப்பட்டு தண்ணீர் வரும் பாதை தரமாக தயாராகிவிடும். வயல் வெளிகளுக்கு, ஏரி - குளங்களுக்கு நீர் வருவதை உறுதி செய்வது போல, எல்லா ஊர்களிலும் வடிகால்களும் வெள்ளம் வந்தால் தண்ணீரை வடித்தெடுக்கும் வகையில் தூர் வாரப்படும்.

 சென்னையில் ஓடும் ஆறுகளின் பெயர்கள்கூடத் தெரியாமல் எல்லாவற்றையும் கூவம் என்று சொல்வதைப்போல, கிராமங்களிலும் பாசன வாய்க்காலுக்கும், வடிகாலுக்கும் வித்தியாசம் தெரியாத தலைமுறை வளர்ந்து நிற்கிறது. அதன் விளைவைத்தான் இப்போது எதிர்கொண்டிருக்கிறோம்.

 ஆமாம், கனவு போல நடந்து முடிந்திருக்கிற கோரத்தாண்டவம் சென்னைக்கு மட்டுமானதல்ல. ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான ஆகப் பெரிய எச்சரிக்கை மணி. இதன்பிறகும் சுதாரித்துக் கொள்ளாவிட்டால் - அனுபவத்திலிருந்து பாடம் கற்காவிட்டால்...?

மீனம்பாக்கத்தில் நின்றிருந்த விமானங்கள் பொம்மைகளைப் போல மிதந்தன. ஏற்கெனவே புறநகர்வாசிகளுக்கு மட்டும் பழக்கமாயிருந்த படகுகளும், பரிசல்களும் பெருநகரத்திற்கான ஏக போக போக்குவரத்து சாதனங்களாயின.பார்த்து, பார்த்து வாங்கிய வீடுகளில் இருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ஒரு தாதாவை போல புகுந்த தண்ணீர் பலரையும் வெளியேற்றியது.

-கோமல் அன்பரசன்-

நன்றி- தினமணி

தேவைகளை நிறைவேற்ற முடியாவிடின் தோட்ட மக்களிடம் ஏன் வாக்கு கேட்கின்றீர்கள்

மலையக தோட்டத் தொழிலாளர்களின் தேவைகளை கம்பனிகளே நிறைவேற்ற வேண்டும் என்றால் ஏன் தேர்தலில் அம்மக்களிடம் வாக்கு கேட்கின்றீர்கள்? அம்மக்களை கம்பனிகளுக்கு வாக்களிக்க சொல்லுங்கள் என நேற்று சபையில் ஜே.வி.பி. எம்.பி. அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மலையக தோட்டத்தொழிலாளர்கள் இன்றும் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். எனவே அவர்களையும் மனிதர்களாக மதிக்கும் நிலைமையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற சுகாதார அமைச்சு மற்றும் தொழில் மற்றும் தொழிலாளர் உறவுகள் தொடர்பான அமைச்சுக்களின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அநுர குமார திஸாநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் மலையக தோட்டத் தொழிலாளர்களும் இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரை சேர்ந்தவர்களே என்பதனை புரிந்துகொள்ளுங்கள். ஆனால் அவர்கள் தொடர்பில் எந்த விதமான அக்கறையும் காட்டப்படுவதில்லை.

இன்றும் அவர்களது நாள் சம்பளம் ரூபா 450 ரூபா. அத்தோடு கொடுப்பனவுகள் இணைந்தாலும் ரூபா 620 கிடைக்கின்றது. இத்தொகையை கொடுப்பனவாக பெற்றுக் கொண்டு வாழ்க்கையை நடத்த முடியுமா? ஏன் அம்மக்களுக்கு மட்டும் அநீதி இழைக்கப்படுகிறது.

மலையக தோட்டத் தொழிலாளர்கள் இன்று வறுமைக் கோட்டில் வாழும் சுகாதார உரிமைகள் மறுக்கப்பட்ட வாழ்வாதார உரிமைகள் மறுக்கப்பட்டஇ இந்நாட்டின் அடிமைப்படுத்தப்பட்டஇ ஓரங்கட்டப்பட்ட மக்களாக வாழ்கின்றனர்.

இம்மக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றுமாறு அரசை கேட்டால் தோட்ட கம்பனிக்காரர்களே அதற்கு பொறுப்புஇ அவர்களிடம் கேளுங்கள் என்கிறீர்கள். அப்படியென்றால் தேர்தலில் அம் மக்களின் வாக்குகளை ஏன் கேட்கின்றீர்கள்.

அம் மக்களது வாக்குகளையும் கம்பனிக்காரர்களுக்கே கொடுங்கள் என்று சொல் லலாமே. மலையகத் தோட்டத் தொழி லாளர்கள் அடிமைகள் என்ற நிலைப் பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். ஏனைய உழைக்கும் வர்க்கத்தினர் அனு பவிக்கும் உரிமைகள் அவர்களுக்கும் வழங் கப்பட வேண்டும் என்றார்.

Sunday, December 6, 2015

தொழிற்சங்க போராட்டத்திற்கு முஸ்தீபு

கடந்த ஒன்பது (9) மாதங்களுக்கும் மேலாக இழுபறி நிலையில் காணப்பட்டு வரும் பெருந்தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு தொடர்பாக தோட்டக் கம்பனிகளும், முதலாளிமார் சம்மேளனமும் கடைப்பிடித்து வரும் உதாசீனப் போக்கைக் கண்டித்து, தொழிலாளர்களைத் தொழிற்சங்கப் போராட்டத்தில் இறக்கும் முஸ்தீபில் அனைத்து பெருந்தோட்ட தொழிற் சங்கங்களும் இறங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பெருந்தோட்டத் தொழிற் சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ். இராமநாதன் தெரிவித்தார்.நேற்று முன்தினம் (6ம் திகதி) காலை 9.30 மணியளவில் மாத்தளை தொழிற்சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள இலங்கைத் தோட்ட சேவையாளர் சங்க அலுவலகத்தில் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் பி.ஜி. சந்திரசேனவின் தலைமையில் நடைபெற்ற பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் விசேட செயற் குழுக் கூட்டத்தில் தொழிற் சங்கப் போராட்டத்தில் இறங்குவது தொடர்பாகத் தீவிரமாக ஆராயப்பட்டதாகவும், எஸ். இராமநாதன் மேலும் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கூறியதாவது,

தோட்டத் தொழிலாளரின் சம்பள உயர்வு விடயத்தில் தலையிட்டு மூன்று வாரங்களுக்குள் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறும், தவறும் பட்சத்தில் மலையகத்தின் ஒட்டுமொத்த தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி தொழிற்சங்கப் போராட்டமொன்றில் ஈடுபடுத்த நேரிடும் எனவும் கடிதங்கள் மூலம் ஜனாதிபதி, பிரதமர், தொழிலாளர்கள், முதலாளிமார் சம்மேளனம், தோட்டக் கம்பனிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவிப்பதென இக்கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இதன்போது என்னுடன் எஸ். முத்தையா, ஐயாத்துரை, பி. தேவகுமார், என்.எம்.ஆர். சிறில், எஸ். கந்தையா, போரசிரியர் விஜேகுமார், நாத் அரமசிங்ஹ, மேனகா கந்தசாமி, மற்றும் ஏ. முத்துலிங்கம் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர் எனத் தெரிவித்த எஸ். இராமநாதன் மேலும் கூறுகையில், தோட்டத் தொழிலாளர்களது கூட்டு ஒப்பந்தம் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவுற்ற பின்னர் தோட்டக் கம்பனிகள் தொழிற் திணைக்களம், மற்றும் தொழில் அமைச்சு என்பவற்றுடன் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தியும் தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பளத்தை உயர்த்தித் தராது பிடிவாதமாக இருந்து வருகின்றன.

இது தொடர்பாக தொழிலாளர்கள் ஆங்காங்கே எதிர்ப்புப் போராட்டங்களிலும் மெதுவாகப் பணி செய்யும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளமை தொடர்பிலும் கொழும்பில் 4 ஆம் திகதி இக்கூட்டத்தில் முகவும் உன்னிப்பாக ஆராயப்பட்டது.

இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை ஒன்றைத் தோட்டக் கம்பனிகளுடனும் தொழிற்சங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுத் தருமாறு விடுத்த கோரிக்கைக்கும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறித்தும் ஆராயப்பட்டது.

தொழிலாளர்களைத் தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபடுத்தும் பட்சத்தில் அதற்கு முன்னதாக சகல அரசியல் சமூக தொழிற்சங்க அமைப்புகளுடனும் கலந்து பேசி அவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ். இ¡மநாதன் மேலும் தெரிவித்தார்.

-தினகரன் -

மலையகத் தலைமைகளின் முரண்பாடுகள் சம்பள உயர்வுக்கு பெரும் தடைக்கல்.

தோட்டத் தொழிலாளர்க ளின் சம்பள உயர்வுப் பிரச்சினை முடி வின்றி தொடர்கின்றது. சம்பளப் பேச்சுவார்த்தையில் பிரதான பங்கை வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தாம் முன்வைத்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு கோரிக்கையிலிருந்து கீழிறங்காது அதனையே முன்னிறுத்தி வந்ததுடன், அதனை ஏனைய இரு தொழிற்சங்கங்களான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் தொழிற்சங்க கூட்டுக் கமிட்டியும் வலியுறுத்தி வந்தன. மறுபுறம் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினை வழங்க முடியாது என ஆரம்பம் முதலே முதலாளிமார் சம்மேளனம் கூறிவருகின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை தவிர்த்து வருகிறது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களான அமைச்சர்கள் மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் பிதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி தீர்வொன்றினைப் பெற்றுக் கொடுக்க முனைந்தபோதிலும் அதுவும் முடங்கியுள்ளது. அமைச்சர்கள் இருவரும் பிரதமருடன் பேசித் தீர்வுக்கு வந்தாலும் அதனை இ.தொ.கா ஏற்காவிட்டால் கூட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது.

இதேவேளை, அரசாங்கத்துடன் இல்லாத ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, அமைச்சர்களாக இருக்கும் பழனி திகாம்பரம் மற்றும் மனோ கணேசன் பெற்றுத்தரும் தீர்வை ஏற்றுக்கொள்வார் என்பது சந்தேகமே. தோட்டக் கம்பனிகளின் பிரச்சினை ஒருபுறமிருக்க மலையகத் தலைமைகளின் முரண்நிலைகளும் சம்பள உயர்வுக்கு இன்னுமொரு பாரிய தடைக்கல்லாக எழுந்துள்ளது. இதனால் இன்றைய சம்பளப் பிரச்சினை இன்னும் சில காலங்களுக்குத் தொடரலாம் என்பது கண்கூடு.

இந்நிலையில் நாட்டில் அதிகரித்துச் செல்லும் விலைவாசிக்கேற்ப வாழ்வதற்கான சம்பளமே தோட்டத் தொழிலாளர்களுக்குத் தேவைப்படுகின்றது. ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தற்போதைய நிலையில் நியாயமான கோரிக்கையாக காணப்பட்டாலும் அது அடுத்த வருடத்தில் அதிகரிக்கும் விலைவாசிக்கு நிகரானதாக அமையாது.

 எனவே, ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் ஒரு முறை பெரும் போராட்டத்திற்கு மத்தியில் அதிகரிக்கப்படும் சிறிய சம்பள அதிகரிப்பானது ஒருபோதும் தோட்டத்தொழிலாளர்களின் குடும்பங்களின் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்வதற்கு போதியதானதாக அமையாது.
எனவே இவ் யதார்த்தத்தைக் கருத்திற் கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைக்கு மாற்று உபாயங்களை இப்போதே அடையாளம் கண்டு அமுல்படுத்த முனைவது காலத்தின் தேவையாகத் தோன்றியுள்ளது.

இன்றைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு அரசாஙகம் நிவாரணமாக தோட்டக்கம்பனிகளுக்கு கடன் உதவியை வழங்கினாலும் முதலாளிமார் சம்மேளனம் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முன்வராது. எனவே, ஆயிரம் ரூபாவிற்கும் குறைந்த சம்பள அதிகரிப்பிற்கே தோட்டக் கம்பனிகள் இணங்கும். இதனை தோட்டத் தொழிலாளர்களும் நன்கு புரிந்துள்ளனர்.

காலத்திற்கு காலம் தேயிலைத் தொழிற்றுறையில் ஏற்படும் நெருக்கடியானது இலங்கைக்கு மட்டும் உரியதல்ல. மாறாக, தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கென்யா, இந்தியா, இந்தோனேஷியா, வியட்னாம், சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் பொதுமையானதாகக் காணப்படுகின்றது. தேயிலை தொழிற்றுறை முழுமையாக சந்தை கேள்வியுடன் தொடர்புள்ளதாக இருக்கின்றது.

 தேயிலைப் பண்டமானது மனித தேவைக்கு அத்தியாவசியமான பண்டமல்ல. மாறாக உதிரிப் பானமாகும். இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படுகையில் மக்கள் தேயிலைப் பானத்தை பருகாமல் இருக்கலாம் அல்லது குறைவாகப் பருகலாம். இதேவேளை, நாடுகளில் காணப்படும் பணவீக்கம், உள்ளூர் மற்றும் நாடுகளுக்கிடையிலான யுத்தங்கள் என்பனவும் தேயிலையின் விலையை தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன.

 உதாரணத்திற்கு எமது நாட்டினை விட அதிகமாக தேயிலை உற்பத்தி செய்யும் நாடான இந்தியா, தமது தேயிலைக்கான சந்தையை உள்ளூரிலேயே கொண்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியாவின் தேயிலை உற்பத்தி இந்தியாவின் சந்தைக் கேள்விக்கு போதுமானதல்ல.

ஆயினும் இந்திய சந்தையில் தேயிலையின் விலை கடந்த பல மாதங்களாகக் குறைந்துள்ளது. அந்நாட்டின் பணவீக்கம் தேயிலையின் விலையை தீர்மானிக்கின்றது. இதனால் தேயிலையின் விலை இந்தியாவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களும் சம்பள அதிகரிப்பைக் கோரி பல போராட்டங்களை ஆங்காங்கே மேற்கொண்டு வந்தனர். கடந்த ஒக்டோபர் மாதம் முதல் கேரள மாநிலத்தின் மூனார் பகுதியின் “கண்ணன் தேவன்” தோட்டத்தைச் சேர்ந்த தோட்டப் பெண்கள் ஒன்றுகூடி 231 ரூபாவாக உள்ள நாட்சம்பளத்தை 500ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி தன்னிச்சையான போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இப்போராட்டத்தை அவர்களது நான்கு தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததுடன் போராட்டத்தைக் கைவிடுமாறு கோரின. ஆனால் தொழிற்சங்கங்களின் மறுப்பை எதிர்த்து 7000 பெண்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இவர்களில் 85 சதவீதமானோர் தமிழ் பெண் தொழிலாளர்களாவர். ஒரு மாதம் தொடர்ந்த போராட்டத்தில் ஈற்றில் எதிர்க்கட்சியும் அரசாங்கமும் தலையிட்டு 100 ரூபா சம்பள அதிகரிப்பை ஏற்குமாறு கோரினர். அதாவது 331 சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முன்வந்தனர். ஆனால் பெண் தொழிலாளர்கள் இதனை ஏற்க மறுத்தனர்.

இப்பிரச்சினை இதுவரை தீர்க்கப்படவில்லை.

எனவே, தேயிலைத் தொழிற்றுறை இலாபகரமான தொழிற்றுறையாகவும் மற்றும் தேயிலைக்கான கேள்வி பரவலாகக் காணப்பட்டாலும் உள்ளக வெளியாக பொருளாதார தாக்கங்களுக்கு உட்பட்டதாகவே இத்தொழிற்றுறை காணப்படுகின்றது. இதனால் ஆரம்பம் முதலே தோட்டத் தொழிலில் தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்பட்டதுடன் அவர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்பட்டதுடன் மானிய அடிப்படையில் உணவுப் பொருட்கள், ஆரம்ப மருத்துவ வசதி மற்றும் வீடு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

ஆனால், இன்று ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாறாக சுதந்திரத் தொழிலாளர்களாக தோட்டத் தொழிலாளர்கள் நிலைமாற்றம் அடைந்துள்ளதுடன், அவர்களது அடிப்படை தேவைகள் மற்றும் வாழ்க்கை சுற்றோட்டத்தில் பாரிய மாற்றம் அடைந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் வாழ்க்கைச் சுற்றோட்டமும் அடிப்படைத் தேவைகளும் மாறுபட்டுள்ளதால் அவர்களது வருமானமும் அதிகரிக்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. வெறுமனே தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை தொழிலிலிருந்து மட்டும் பெறும் சம்பளத்தின் மூலம் தமது குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே ஒட்டுமொத்தமாக வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் நிலைக்குத் தோட்டத் தொழிலாளர் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தோட்டத்தில் வாழும் மலையக மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க சமூக அசைவியக்கம் ஏற்பட்டுள்ளது. முழுமையாக தோட்டத்தொழிலாளரை மட்டும் கொண்டிருந்த தோட்ட வாழ் மலையக சமூகம் இன்று பல வர்க்கத் தட்டுக்களை கொண்டமைந்துள்ளது. இவ்வளர்ச்சி மேலும் முன்னோக்கி நகருமே தவிர பின்னோக்கி நகராது.
அதாவது தோட்டத் தொழிலை மட்டும் நம்பியிருக்கும் பட்டாளம் உருவாகாது, மாறாக தோட்டத்தை விட்டகன்று தொழில் தேடிச் செல்லும் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும்.

 எனவே மாற்று வருமான வழிகளைத் தேடி செல்ல வேண்டிய நிலைக்கு புதியத் தொழிலாளர்கள் சமூகம் ஆளாகியுள்ளது. மறுபுறம் முதலாளித்துவ கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக தோட்டக் கம்பனிகளும் நிரந்தரத் தொழிலாளர் பட்டாளத்தை வைத்திருப்பதை தவிர்க்க ஆரம்பித்துள்ளது.

இதன் வெளிப்பாடாக குத்தகைத் தொழிலாளர்கள், நாட் சம்பளம் பெறும் தொழிலாளர்கள், அளவுத் தொழிலாளர்கள் என பலதரப்பட்ட நிரந்தரமற்ற தொழிலாளர்கள் இன்று தோட்டத்திற்குள்ளேயே உருவாக்கப்பட்டுள்ளனர்.

இப்பின்புலத்தில் சில தோட்டக்கம்பனிகள் தேயிலைக்காணிகளை பல்வேறு திட்டங்களின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்றன. மதுரட்ட தோட்டக் கம்பனி தமது தோட்டத் தொழிலாளருக்கு சேவைக்கால கொடுப்பனவை வழங்கி அவர்களை தோட்டத் தொழிலிலிருந்து முழுமையாக நீக்கி விட்டு அவர்களுக்கு இருவருட குத்தகையின் அடிப்படையில் தலா 2 ஏக்கர் தேயிலைக் காணியை வழங்கியிருகின்றது. குறிப்பிட்ட தோட்டத் தொழிலாளர்கள் தமது சொந்த பணத்தை தேயிலை உற்பத்தியில் முதலீடு செய்து அதிலிருந்து பெறும் தேயிலைக் கொழுந்தினை தோட்டத் தொழிற்சாலைக்கு வழங்க முடியும். அதேபோல் ஏனைய சிறுதோட்ட தேயிலை உரிமையாளர்கள் போல் சுந்திரமாக எந்தவொரு தொழிற்சாலைக்கும் அவர்களது கொழுந்தை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தோட்ட நிர்வாகம் கண்காணிப்பு வேலையை மட்டும் மேற்கொள்ளும்.

இதேவேளை எல்பிடிய கம்பனி தோட்டத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்திக்கொண்டே அதிக விளைச்சல் தராத தேயிலைக் காணிகளில் காணப்படும் தேயிலைச் செடிகளில் தலா 3000 தேயிலைச் செடிகளை ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கியுள்ளது. அத்தேயிலை மரங்களை பராமரிப்பதற்கான உரம் மற்றும் தேவையான மருந்துவகைகளை கம்பனி வழங்கி கண்காணிக்கும்.
தேயிலை மரங்களைப் பெற்ற குத்தகையாளர் கொழுந்தினை அத் தோட்டத்திற்கே வழங்க வேண்டும். தேயிலைக் கொழுந்து கிலோ ஒன்றிற்கான விலைய தோட்ட நிர்வாகமே நிர்ணயிக்கும். இவ்வாறு கம்பனிக்கு கம்பனி மாறுபட்ட குத்தகைத் திட்டங்களை கம்பனிகள் அமுல்படுத்தி வருகின்றன.

இன்றைய முதலாளித்துவம் தொழிலாளியை எட்டு மணிநேர கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதை இலாபத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கின்றது. அதாவது எட்டு மணித்தியாலய வேலையிலமர்த்துவது நட்டமாகின் அதனை தவிர்த்து குத்தகை முறைக்கு செல்லும், சில சமயம் எட்டு மணித்தியாலய வேலையிலமர்த்துவது இலாபமாகின் குத்தகையை முறையை கைவிட்டு எட்டு மணித்தியால வேலைநேரத்தை அறிமுகப்படுத்தும்.

இன்றை சூழலில் குத்தகையாளர் முறையையே தோட்டக் கம்பனிகள் பின்பற்ற முனைந்துள்ளன. தோட்டக் கம்பனிகள் அறிமுகப்படுத்தும் குத்தகை முறை தோட்டத் தொழிலாளர்களது வருமானத்தை அதிகரிக்குமா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாக இருந்தபோதிலும் தற்போதைய நிலையில் தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் உடனடி வருமானத்தைக் கருத்திற்கொண்டு குத்தகை முறையை ஏற்றுக்கொள்கின்றனர்.
இம்முறை மூலம் தொழிலாளர்கள் என்ற நிலையிலிருந்து விடுபட்டு நில உரிமையற்ற சிறு உற்பத்தியாளர்களாக மாறுகின்றனர்.

சில திட்டத்தின்படி தொழிலாளர்களாகவும் குத்தகையாளர்கள் என்ற இரண்டு பாத்திரத்தையும் வகிக்கின்றனர். இதன் சாதக பாதகத் தன்மையை சிலகாலம் கழித்தே அடையாளம் காணமுடியும்.

 இன்றைய நிலையில் தொழிற்சங்கங்கள் இத்திட்டத்தை தடுத்து நிறுத்தக்கூடிய நிலையில் இல்லை. ஆகையால் அமுல்படுத்தப்படும் குத்தகை முறை திட்டங்களை ஒரு பொதுத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தும்படி மலையக தொழிற்சங்க அரசியற் தலைமைகள் கம்பனிகளுக்கும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதாவது தோட்டக்காணிகளை பகிர்ந்தளிக்கும் போது குறைந்த பயன் தரும் காணிகளை மட்டும் பகிர்ந்தளிக்காது அதிக விளைச்சல் தரும் காணிகளையும் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதுடன் ஆகக்குறைந்தது நான்கு ஏக்கர் தேயிலை காணிகளை ஒரு குடும்பத்திற்கு வழங்க கோரவேண்டும்.

மேலும் குத்தகைக் காலம் குறைந்தபட்சம் 20 முதல் 30 வருட குத்தகை காலத்தை கொண்டதாக இருத்தல் வேண்டும். இதேவேளை அரசாங்க சிறு தேயிலை உடைமையாளருக்கு வழங்கும் மானியங்கள் மற்றும் சேவைகளை இவர்களுக்கு வழங்கும்படி கோர வேண்டும். அத்துடன் அவர்களது விருப்பின் பேரில் அதிக விலைதரும் தேயிலை தொழிற்சாலைக்கு கொழுந்தை வழங்கும் உரிமையை வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் மட்டுமே தோட்டத்தொழிலாளர்கள் வாழ்வதற்கான வருமானத்தைப் பெறமுடியும்.

அவ்வாறு செய்ய முடியாவிடின் அனைத்து தோட்டங்களையும் அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும்படி கோரி தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக ஒரு நாளைக்கு ரூபா 1500 வழங்கி அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் சம்பள உயர்வு பொறிமுறையை உருவாக்கிக் கொள்ளும் முறைமையை அறிமுகப்படுத்தும்படி கோர வேண்டும்.

இவ்விரண்டு மாற்று உபாயங்களில் ஏதாவது ஒன்றினை அமுல்படுத்தும்படி மலையகத் தலைமைகள் அரசாங்கத்தை கோராவிடில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் பிரச்சினை என்றும் தொடரும் நெருக்கடியாக அமைவதுடன் தொழிலாளர் ஒருபோதும் வாழ்வதற்கான வருமானத்தைப் பெறமுடியாது.

இந்நெருக்கடியை தொழிற்சங்கங்கள் கருத்திற் கொண்டு செயற்படாவிடின் எதிர்வரும் காலத்தில் மூனார் தொழிலாளர்கள் போல் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களை நிராகரிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர்.

நன்றி- தினகரன்

சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன?

சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்துள்ளது என செண்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில்

இயற்கையான நீர்நிலைகளை பராமரிப்பது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாதது, தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முக்கியமான காரணம்

சென்னை மட்டுமல்லாமல் டில்லி,கொல்கத்தா, மும்பை, ஸ்ரீநகர் ஆகிய நகரங்களும் இத்தகைய நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இயற்கை நீர்நிலைகளும், வடிகால்களும் முறையாக பராமரிக்கப்பட்டிந்ருதால், சென்னை இப்படியான வரலாறு காணாத நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம் என அந்த மையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சென்னை,மும்பை போன்ற பெரு நகரங்களில் போதுமான வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல், திட்டமிடாத வகையில் நகரம் வளர்ந்து கட்டிடங்கள் கட்டப்படுவதால், வெள்ளம் ஏற்பட்டதும் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுகிறது என தெரிவித்துள்ளார் சுனிதா நரெயன்.

இப்படியான அதிவேக நகரமயமாக்கல்கள், இயற்கை வடிகால்களை அழித்துள்ளன என்றும், சென்னை போன்ற நகரங்கள் இதன் தாக்கத்தை இப்போது உணர்ந்துள்ளன என தெரிவித்து;ள்ள அந்த அமைப்பு சென்னை தனது இயற்கை வடிகால் வசதிகளை பராமரிக்கத் தவறியுள்ளது எனவும் சி எஸ் இ அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 1980களில் சென்னையில் 600 நீர் நிலைகள் இருந்தன, ஆனால் இப்போது அதில் மிகச் சொற்பமானவையே எஞ்சியுள்ளன

நீர்நிலைகள் மற்றும் வடிகால் அமைப்புகளை பேணிப் பராமரிக்காத நிலையில் பருவநிலை மாற்றத்தால் அசாதாரணமான அளவுக்கு மழை பெய்யும்போது, நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது

பாரிஸில் பருவநிலை மாற்றம் குறித்த உச்சிமாநாடு நடைபெற்று வரும் வேளையில், இப்படியான விஷயங்கள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
நீர்நிலைகள் எப்படி சீரழிந்து போயுள்ளன என்பதற்கு போரூர் ஏரி ஒரு உதாரணம் எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நீர்நிலைகள், நிலத்தடி நீர் மீண்டும் ஊறுவதற்கும், வெள்ளம் ஏற்படும் போது அதை சமாளிப்பதற்கும் பெரும் உதவியாக இருந்திருக்கும எனத் தெரிவித்துள்ள அறிக்கையில் மேலும்  ஈரநிலப்பகுதியில் எப்படி கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றன எனும் கேள்விக்கு ஒருநாளும் பதில் கிடைத்தது இல்லை எனக் கூறும் அந்த அறிக்கை, அப்படியான நிலங்கள் நகர நிலச் சட்டங்களின் கீழ் மிகவும் அரிதாகவே பதியப்படுகின்றன எனவும், அதன் காரணமாக பலருக்கு அது தெரியவருவதில்லை என்கிறார் சுனிதா நரெயின்.

அனுமதி கோரி மனுக்கள் வரும்போது மேலோட்டமாக நிலங்களை மட்டுமே அதிகாரிகள் பார்க்கிறார்கள், அதிலுள்ள நீராதாரங்களைப் பார்ப்பதில்லை, எனவே பேராசை பிடித்த கட்டுமான நிறுவனங்கள் அதை தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றன எனவும் சி எஸ் இயின் அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழக அரசின் ஆவணங்களின்படி கடந்த 1980களில் 19 பெரிய ஏரிகளின் பரப்பளவு 1,130ஹெக்டேர்களாக இருந்தது, 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் 645 ஹெக்டேர்களாக சுருங்கியுள்ளன, அதன் காரணமாக அந்த ஏரிகளின் கொள்ளளவு குறைந்து போயின என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளதோடு சென்னையின் பல இடங்களில் மழைநீர் கால்வாய்களில் குப்பைக் கூளங்களால் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன, அவை உடனடியாக தூர்வாரி சரிசெய்யப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

சென்னை மாநகரில் 2,847 கிமீ நீளத்துக்கு சாலைகள் உள்ள நிலையில், மழைநீர் கால்வாய்கள் 855கிமீ மட்டுமே உள்ளன என்றும், இதுவே பெருமழையின் போது, சாலைகளில் நீர் ஓடுவதற்கும் தேங்கி நிற்பதற்கும் காரணமாகின்றன.

மனிதர்களால் உருவாக்கப்படும் வடிகால் அமைப்புகள், ஒருநாளும் இயற்கை வடிகால் அமைப்புகளுக்கு மாற்றாக இருக்க முடியாது எனவும் வலியுறுத்தியுள்ள அவ்வறிக்கையில்  சென்னையில் கூவம், அடையாறு போன்ற நதிகளை இணைக்கும் இயற்கை கால்வாய்களும், வடிகால்களும் இருப்பதை தமது ஆய்வுகள் காட்டுகின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

உதாரணமாக, நகரின் 75 குளங்களில் நீரின் அளவு உயர்ந்து கொள்ளளவைக் கடக்கும்போது, அந்த நீர் கூவத்தில் கலக்கவும், அதேபோல் 450 குளங்களில் உள்ள உபரி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு உயரும்போது அதிலுள்ள உபரி நீரும் அடையாற்றில் கலப்பதற்கு வசதிகள் இருந்தன என்று அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
 
கடந்த நூறாண்டுகளில் இல்லாத வகையில் சென்னையில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் மட்டும் 1,218 மிமீ மழை பெய்துள்ளது. இது சராசரியாக ஆண்டொன்றுக்கு கிடைக்கும் மழையின் அளவைவிட மூன்று மடங்கானது.
 
நன்றி- பி.பி.சி

Saturday, December 5, 2015

இரண்டு மாடி குடியிருப்பில் வெடிப்பு

கடும் மழை காரணமாக, லிந்துலை திஸ்பனை தோட்டத்தின் குடியிருப்புப் பகுதியிலுள்ள பாரிய மண்மேடுகள், லயன் குடியிருப்புக்கள் மீது  சரிந்து விழுந்துள்ளதாகவும் அதனை அப்புறப்படுத்துவதற்கு எந்தவொரு அதிகாரியும் முன்வரவில்லை என்றும் குடியிருப்பிலுள்ள மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
 
இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மாடி வீடமைப்புத் திட்டம், 2004ஆம் ஆண்டின் போது, லிந்துலை திஸ்பனை தோட்டத்திலுள்ள சுமார் 197 பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
 
இவ்வாறு அமைக்கப்பட்ட மாடி வீட்டு லயன்கள் அனைத்தும், மண்மேடுகள் உள்ள பிரதேசத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 8ஆம் திகதி பெய்த மழையின் போது, 07 வீடுகளைக் கொண்ட இரண்டு லயன் தொகுதி மேல் மண்மேடு விழுந்து, குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன. 
 
மேலும், அதே பகுதியில், 14 வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டு, அவை உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளன.  இதேவேளை, கடந்த 05ஆம் திகதி பெய்த கடும் மழையினால்,   இக்குடியிருப்புக்கள் மீது பாரிய மண்மேடுகள் விழுந்ததில், 05 லயன் தொகுதிகள் சேதமடைந்துள்ளன. இதனால் 84 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
மண்மேடுகள், குடியிருப்புகளின் சமையல் அறைகளிலும் விழுந்துள்ளதனால், மக்கள் தங்களது அன்றாட சமையல் நடவடிக்கைகளில் கூட ஈடுபட முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
 
இது தொடர்பாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய தொழிற்சங்க அதிகாரிகளுக்கும் நுவரெலியா மாவட்டப் பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் இப்பகுதி கிராம அதிகாரிக்கும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாக வந்து பார்வையிட்ட பின்னர், இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்ட போதும், அனைத்தும் பொய்யாகிவிட்டதென மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இனியாவது தங்களது குடியிருப்புக்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் மக்கள் கோரி நிற்கின்றனர்.
மலையகத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்டித்தும் மக்களுக்கு தெளிவுறுத்தும் வகையில்  பொகவந்தலாவ கெம்பியன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது.

மலையகத்தில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தக்கூடாது  எனவும் சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறு கோறியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் கோஷம் வெளியிட்டனர்.

இதேவேளை மக்களிடம் வாக்குகளை  பெற்று பாராளுமன்றம் செல்லும் அரசியல்வாதிகள் பாரளுமன்றத்திற்கு சென்று மௌனம் காக்காமல் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கான கடுமையான சட்டதிட்டங்களை  அமுல்படுத்துமாறு பாராளுமன்றத்தில் அழுத்தத்தை தெரிவிக்கபட வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் மேலும் தெறிவித்தனர்.

இந்த தெளிவூட்டும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம்   பொகவந்தலாவ கெம்பியன் தோட்ட வைத்தியசாலையில் இருந்து கெம்பியன் நகர்வரை பாதாகைகளை  ஏந்தி பேரணியாக சென்றமை குறிப்பிடதக்கது.

இதேவேளை கெம்பியன் தோட்ட வைத்தியசாலையில்  சிறுவர்கள் எதிர்நோக்கும் துஷ்பிரயோகங்கள் குறித்து சிறுவர்களை தெளிவூட்டும் செயலமர்வு ஒன்று பொகவந்தலாவ பொலிஸாரால் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, November 17, 2015

தொழிற்­சங்க பலமும் பேரம் பேசும் சக்­தி­யுமே போதுமானது

பெருந்­தோட்ட மக்­க­ளுக்கு உரிய சம்­பள உயர்­வினை பெற்றுக் கொடுப்­ப­தற்கு அர­சியல் பலம் அவ­சி­ய­மில்லை. தொழிற்­சங்க பலமும் பேரம் பேசும் சக்­தி­யுமே தேவை. அமரர் சௌமிய மூர்த்தி தொண்­டமான் இத­னையே கையாண்டு சாதனை படைத்தார் என்று சௌமிய இளைஞர் நிதி­யத்தின் தலைவர் எஸ்.பி. அந்­தோ­னி­முத்து தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், கூட்டு ஒப்­பந்த நவ­டிக்­கைகள் தற்­போது இழு­ப­றி­யான தன்­மை­யினை அடைந்­தி­ருக்­கின்­றன. தொழி­லா­ளர்கள் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு முகம் கொடுத்து வரு­கின்ற நிலையில் உட­ன­டி­யாக சம்­பள உயர்­வினை பெற்றுக் கொடுக்க வேண்­டிய தேவை மேலெ­ழுந்­துள்­ளது. எனினும் இது சாத்­தி­யப்­ப­டாமல் போயி­ருக்­கி­றது. 1970 முதல் 77 வரை­யான கால­கட்­டத்தில் அமரர் தொண்­டமான் எவ்­வி­த­மான அர­சியல் பலமோ அந்­தஸ்தோ இல்­லாது பல்­வேறு தொழிற்­சங்க போராட்­டங்­க­ளையும் நடத்தி மலை­யக மக்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுத்தார். துன்ப துய­ரங்­களை தன­தாக்கிக் கொண்டு துணி­வுடன் செயற்­பட்டார். அக்­கா­லப்­ப­கு­தியில் பெருந்­தோட்ட மக்கள் சொல்­லொணா துன்­பங்­களை அனு­ப­வித்துக் கொண்­டி­ருந்த நிலையில் முழு மலை­ய­கமும் ஸ்தம்­பிக்கும் வகையில் ஒரு பாரிய வேலை நிறுத்தப் போராட்­டத்தை தலை­மை­யேற்று நடத்­தினார்.
 
சாத்­வீக போராட்­டங்­களை நடத்­திய அவ­ருக்கு 1977இல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராகும் வாய்ப்பு கிடைத்­தது. அமரர் தொண்­டமான் அர­சி­யலில் கிங் மேற்­க­ராக திகழ்ந்தார். அவர் நடத்­திய பிரார்த்­தனை ரீதி­யி­லான தொழிற்­சங்க போராட்­டமே பெருந்­தோட்ட மக்­க­ளது பிரஜா உரி­மைக்கும் சம்­பள உயர்வு மற்றும் சம­சம்­ப­ளத்­திற்கும் வித்­திட்­டது எனலாம்.
 
உரிமை இல்­லா­தி­ருந்த மலை­யக சமூ­கத்­திற்கு உரி­மை­க­ளையும், முக­வ­ரி­யையும் தொண்­ட­மானே பெற்றுக் கொடுத்தார் என்றால் மிகையா­காது. மலை­யக மக்கள் தலை­நி­மிர்ந்து வாழ்­வ­தற்கு அவரே உந்து சக்­தி­யாக இருந்தார் என்­பதே உண்­மை­யாகும்.
 
அர­சியல் பலம் இல்­லாத போதும் தொழிற்­சங்க பலம், பேரம் பேசும் சக்தி என்­பன மலை­யக மக்கள் பல்­வேறு உரி­மை­க­ளையும் பெற்றுக் கொள்ள வழி­வ­குத்­தது. இத்­த­கைய செயற்­பா­டுகள் ஒரு முன்­னு­தா­ர­ண­மா­கவும் அமைந்­தது. தொழி­லாளர் சம்­பள உயர்வு விட­யத்­திலும் அமரர் தொண்­ட­மானின் காய் நகர்த்­தல்­களை முன்­னி­றுத்தி செயற்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்டும்.
 
இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு தடவை கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் கம்­ப­னிகள் நட்டம் ஏற்­பட்டு விட்டதாக கூக்குரல் இடுவதனை விடுத்து இலாபம் தரும் நோக்கில் கம்பனிகளின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மேல்மட்ட செலவுகளை கட்டுப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினை பெற்றுக்கொடுப்பது ஒன்றும் கம்பனிகளுக்கு கடினமான விடயமல்ல என்றார்.

இ.தொ.கா வை விமர்சிப்பதிலேயே காலம் கழிகிறது

அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரா­கிய பின்னர் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு அதிக சம்­ப­ளத்தை பெற்­றுத்­த­ரு­வ­தாக சிலர் கூறினர். அவ்­வாறு கூறி­ய­வர்­களே தற்­போது காணாமல் போயுள்­ள­தாக ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் தெரி­வித்­துள்ளார். அமைச்சு அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு பேசு­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்து பேசு­கையில்.
 
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு நாட்­சம்­ப­ளத்தை ஆயிரம் ரூபா­வாக அதி­க­ரித்துக் கேட்­ட­வர்கள் நாமே­. நாம் மக்­க­ளுடன் தான் இருக்­கின்­றோ­மே­யன்றி எங்கும் காணாமல் போய்­வி­ட­வில்லை. ஆனால் தேர்தல் காலத்தில் தனக்கு வாக்­க­ளித்து வெற்றி பெற­வைத்து தான் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரானால் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளி­னது நாட்­சம்­ப­ளத்­தை அதி­க­ரித்து பெற்­றுக்­கொ­டுப்­பே­னென்று மலை­யக அமைச்சர் ஒருவர் கூறி­யி­ருந்தார்.
 
அவர் பொய்­யான வாக்­கு­று­தி­களை வழங்கி மக்­களை ஏமாற்­றி­யுள்ளார். அவர் அமைச்­ச­ரா­கிய பின்னர். தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள அதி­க­ரிப்பு குறித்து பேசு­வதே கிடை­யாது. அவர் தான் தற்­போது காணாமல் போயுள்ளார். தோட்டத் தொழி­லா­ளர்க­ளுக்கு எவ்­வ­ளவு, சம்­பள உயர்­வென்­றா­வது குறிப்­பிட்ட அமைச்­ச­ருக்கு அறி­விக்க முடி­கின்­றதா?
 
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­பள உயர்வு கேட்­டது இ.தொ.கா. வேயாகும். ற்­போ­தைய வாழ்­க்கைச்­செ­லவு உயர்­வுக்கு அமைய கோரப்­பட்ட ஆயிரம் ரூபா சம்­பள உயர்வும் போதாத நிலையே காணப்­ப­டு­கின்­றது. மா மற்றும் பருப்பு உள்­ளிட்ட பொருட்­களின் விலை உயர்­வையும் இங்கு குறிப்­பி­டலாம்.
 
அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ரா­கி­யதும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாகக் கூறிய கூற்று தற்­போது என்­ன­வா­யிற்று? ஒரு வரு­டத்தில் இரு­பது வீடு­களை மட்டும் கட்­டி­விட்டு, இரு­பத்து மூவா­யிரம் வீடு­களை, மலை­ய­கத்தில் நிரு­மா­ணித்த இ.தொ.கா. வை குறை­கூறி விமர்­சிப்­ப­தற்கு எவ­ருக்கும் அரு­கதை கிடை­யாது.
 
மலை­ய­கத்தில் அமைச்­சர்­க­ளா­கியும் கூட, மலை­யக மக்­களின் மேம்­பா­டுகள் குறித்து செயற்­ப­டாமல், எதற்­கெ­டுத்­தாலும் இ.தொ.கா. வை விமர்­சிப்­ப­தி­லேயே அவர்கள் காலத்தை கழித்து வரு­கின்­றனர்.
 
இ.தொ.கா. சார்பில் மத்­திய அரசில் அமைச்­சர்­க­ளாக இல்­லாத போதிலும் தோட்டத் தொழி­லா­ளர்களின் மேம்­பாடு விட­யத்தில், இயன்­ற­வ­ரை­யி­லான சேவை­களை மேற்­கொண்டு வரு­கி­ன­்றது. இந்­நி­லையில் மலை­ய­கத்தில் அமைச்­சர்­க­ளாக இருப்­ப­வர்கள் தமது இய­லா­மையை உணர்ந்து வெட்­கப்­படல் வேண்டும்.
 
மலை­யக அமைச்­சர்­க­ளாக இருக்கும் இவர்கள் தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்­கான சம்­பள உயர்வு தொடர்­பாக எத்­தனை போராட்­டங்­களை நடத்­தி­னார்கள் என்­பது கேள்வி குறி­ய­தாகும். இத்தகைய நிலையை கைவிட்டு தோட்டத்தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை அவர்கள் முன்னெடுக்க பழகிக்கொள்ளல் வேண்டும்.
 
மக்களுக்கு சேவை செய்ய இந்த அமைச்சர்களுக்கு திராணியில்லாவிட்டால் அந்த அமைச்சர் பதவியினால் எத்தகைய பயனும் கிடையாது என்பதனையும் உணர வேண்டும் என்றார்.

நேபாளத்தைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்துக

மோடி அரசாங்கம், நேபாளத்துடன் மேற்கொண்டுள்ள மோதல் போக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய - நேபாள உறவில் விரிசலை ஏற் படுத்தி இருக்கிறது. பாஜக அரசாங்கம், செப்டம்பர் 20ஆம் தேதி, நேபாளத்தில் பிரகடனம் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத் திற்கு எதிர்மறையான அணுகுமுறையைப் பின்பற்றத் தொடங்கியபின், மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது அதிகரித்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக, இந்தியாவிலிருந்து நேபாளம் செல்லும் அனைத்துப் பாதைகளும் அடைக்கப்பட்டிருக் கின்றன. நேபாளம், தன்னுடைய அனைத்து அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் வர்த்தகத்தையும் இந்தியா வழியாகத்தான் செய்து வந்தது. மோடி அரசாங்கத்தால் தூக்கிப்பிடிக்கப்பட்டுள்ள மாதேசி கிளர்ச்சி காரணமாக, ராக்சால் - பிர்குஞ்ச் குறுக்குச்சாலையும் மற்றும் பல பாதைகளும் அடைக்கப்பட்டுவிட்டன. இது அத்தியாவசியப் பொருள்கள் மற் றும் எரிபொருள் பற்றாக்குறையை கடுமையாக ஏற்படுத்தி இருக்கிறது.

நேபா ளம் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபின், அப்பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் புனர்நிர் மாண வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். சாலைகள் அடைக்கப்பட்டதால் புனர்நிர் மாண வேலைகளில் ஈடுபட்ட மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குளிர்காலம் வருவதற்குள்ளாகவே ரெடிமேட் வீடுகளைக் கட்டிட வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மலைப்பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்துவந்த ஹெலிகாப்டர் களுக்குப் போதிய எரிபொருள் கிடைக்காத தால் அவற்றின் இயக்கமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் சமையலுக்கான எரிபொருள் கிடைக் காததால், காட்டு மரங்களை வெட்டி விறகுகளாகப் பயன்படுத்துகிறார்கள். இது வனத்தையே அழிக்கக்கூடிய அளவிற்கு இட்டுச்சென்று கொண்டிருக்கிறது. மாதேசி கிளர்ச்சியால்தான் சாலைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன என்றும், அவ்வாறு சாலைகள் அடைக்கப் பட்டிருப்பதற்கும், இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கிற இந்திய அரசாங்கத்தின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே யான எல்லைப் பகுதிகளில் போக்கு வரத்து இயல்பாக நடந்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று இந்திய அரசின் சார்பில் இதுவரை ஓர் அறிக்கை கூட வெளியிடப்படவில்லை. இருநாடுகளுக்கும் இடையே போக்கு வரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளப்பட்டதாகவும் தெரியவில்லை. உண்மையில், கிளர்ச்சிகள் எதுவும் நடைபெறாத கிழக்கு நேபாள எல்லையில்கூட சாலைகளை அடைத்திட இந்திய அரசுஅதிகாரப்பூர்வமற்ற முறையில் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்ப தாகக் கூறப்படுகிறது.நேபாளத்தில் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததற்குப்பின்னர், கே. பி. சர்மா ஒலி பிரதமராகப் பொறுப்பேற்றதை அடுத்து, புதிய அரசாங்கம் நேபாளத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, நேபாளத் துணைப் பிரதமர்தில்லிக்கு விஜயம் செய்தார். இந்திய அயல்விவகாரங்கள் துறை அமைச்சருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, கிழக்குப் பகுதியில் சில குறுக்குச் சாலை கள் போக்குவரத்திற்காக, திறந்துவிடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் இவரது வேண்டுகோளுக்கு இந்தியாவின் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித பதிலும் இல்லை. மாதேசி கிளர்ச்சியை ஆதரிப்பதில் இந்திய அரசாங்கம் எவ்விதத் தயக்கமும் காட்டவில்லை. மாதேசி கிளர்ச்சிக் குழுவினர் நரேந்திர மோடி மற்றும் இந்தியஅரசாங்கத்தின் ஆதரவினை வெளிப் படையாகவே கோரி வருகின்றனர்.

அக்டோபரின் கடைசி வாரத்தில், மாதேசி தலைவர்களின் தூதுக்குழுவினர் தில் லிக்கு விஜயம் செய்திருந்தனர். இது, நேபாளத்தின் உள் விவகாரங்களில் பகிரங்க மாகவே தலையிடும் விஷயமாகும். பிர்குஞ்ச் பகுதியிலிருந்து கிளர்ச்சியா ளர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று நேபாள அதிகாரிகள் கோரியபோது, .இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, போலீஸ் துப்பாக்கிச்சூடு நடைபெறுவதற்கு இட்டுச்சென்றது. இதில்இந்திய சிறுவன் ஒருவன் இறந்தான். கிளர்ச்சியில் ஈடுபட்ட சில இந்தியர்களைக் கைது செய்திருப்பதாக, நேபாள அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இந்திய அரசாங்கத்தின் மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை இந்திய அயல்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கைஅம்பலப் படுத்திவிட்டது. அவர் அந்தஅறிக்கையில், “நேபாளத்தை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் அரசியல் முக்கியத்துவம் உடையவைகளாகும். அவற்றை வலுக்கட்டாயமாகத் தீர்த்திட முடியாது. தற்போதைய மோதலுக்குக் கார ணங்களாக அமைந்துள்ளவை குறித்து, நேபாள அர சாங்கம் உண்மையாகவும், வலுவாகவும் தீர்மானிக்க வேண்டியது அவசியமாகும்.’’ இந்தியா ஆதரிக்கும் மாதேசிகளின் கோரிக்கையை நேபாளம் அங்கீகரிக்க வேண்டியது அவசியம் என்று இந்தியா நேபாளத்தின் நெற்றியில் துப்பாக் கியை வைத்து மிரட்டும் செயலே இது வன்றி வேறல்ல. இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அனைத்து சாலைகளையும் அடைத்து வைத்திருப்பது, நேபாள மக்களின் மத்தியில் கடும் எரிச்சலை ஏற் படுத்தி இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராகமக்களில் பெரும்பான்மையோர் ஆத்திரப் படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேபாள அரசாங்கத்தையும் அதன் அரசி யல் நிறுவனத்தையும் மிரட்டி அடக்க மோடி அரசாங்கம் முரட்டுத்தனமாக மேற் கொண்டுள்ள முயற்சிகளுக்கு எதிராக நேபாளத்தில் இயங்கும் அனைத்துக் கட்சிகளும் கட்சி வித்தியாசமின்றி ஒன்று பட்டுள்ளன. இதனால் நேபாளம் சீனாவைஅணுக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி யுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஓர்ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, திபெத்திலிருந்து தரைமார்க்கம் வழியாக சீனா 1000 மெட்ரிக் டன் பெட்ரோல் வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்தியாஅனைத்து சாலைகளையும் அடைத்து வைத்திருப்பது குறித்து, நேபாள அயல்துறை அமைச்சர் ஐ.நா.அமைப்பிடம் முறையிட்டிருக்கிறார். நேபாள மக்கள் சாலைகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதன் காரண மாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து சார்க் நாடுகள் அனைத்தும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன. நேபாளம் குறித்த மோடி அரசாங்கத்தின் அணுகுமுறை ஓர் அரைவேக்காட் டுத் தனமான ஒன்று என்று சொல்வதற் கில்லை. இந்தப் பிராந்தியத்தில் தான் ஒரு தேசிய வெறி கொண்ட பெரிய வல்லரசு நாடு என்று காட்டிக்கொள்வதற்காக, மோடி அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள் கிறது. மேலும் நேபாள அரசியல் நிர்ணயசபை, நேபாளத்தை ஓர் மதச்சார்பற்ற குடியரசு என்று பிரகடனம் செய்ததற் காக, ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்கள் நேபாள அரசை பகிரங்கமாகவே அவமதித்துக் கொண்டிருக்கின்றன. நரேந்திர மோடி யும், பாஜக அரசாங்கமும் மாதேசிகளின் ஆதரவினைப் பெறுவதற்காக நேபாள அர சைப் பகைத்துக்கொள்ளவும் தயாராகவே இருக்கின்றன. இதன்மூலம் பீகாரில் வாழும் மாதேசிகளின் ஆதரவினைப் பெற்று தேர்தலில் வென்றுவிடலாம் என் பது பாஜகவின் எண்ணம். ஆனால் அது நடக்கவில்லை.தெற்கு ஆசியாவில் மோடி அரசாங்கத்தின் அயல்துறைக் கொள்கையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித்ஜோவல், வடிவமைத்துக் கொண்டிருக் கிறார். இவரது நடவடிக்கைகளின் காரண மாக பாகிஸ்தானுடனான உறவுகள் ஏற்க னவே சிதிலமடைந்துவிட்டன. இப்போது, மிக நீண்ட காலம் கலாச்சார ரீதியாகவும், நாகரிக உறவுகளிலும் மிகவும் நெருக்க மாக இருந்த நேபாளத்தையும் எதிரி நாடாகமாற்றிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, நேபாளம் பாதுகாப்புக் கோரி, சர்வ தேச அமைப்புகளை அணுக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறது. இதனால்சர்வதேச அளவில் இந்தியாவின் சித்திரம்மிகவேகமாக சிதைந்து கொண்டிருக்கிறது.நேபாளத்தைக் கொடுமைப்படுத்தும் இக்கொடூரமான கொள்கையை மோடி அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண் டும். நேபாள அரசாங்கத்துடன் கலந்துபேசி எல்லையில் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடைகளை அகற்றிட வேண் டும். மாதேசிகள் மற்றும் ஜன்ஜாதிகள் பிரச்சனைகள் நேபாளத்திற்குள் அரசியல் நடவடிக்கைகள் மூலமாக சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இந்தத் திசை வழியில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு மாதேசி குழுக்களிடம் இந்திய அரசு தன் செல்வாக்கினைப் பயன்படுத்திட வேண்டும்.

(தமிழில்: ச. வீரமணி)

நன்றி- தேனீ இணையம்