Wednesday, November 11, 2015

335 உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­களில் 30 உள்­ளூராட்சி நிறு­வ­னங்­க­ளா­வது இருக்க வேண்டும்

மலை­ய­கத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தொகையை அதி­க­ரிக்க வேண்­டுமே தவிர வட்­டா­ரங்­களை விஸ்த­ரிப்­பதால் உரிய பயன் விளையப் போவ­தில்லை என்று மலை­யக மக்கள் முன்­ன­ணியின் ஏ.லோரன்ஸ் தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், உள்­ளூ­ராட்சி விட­யங்கள் தொடர்பில் தற்­போது அதி­க­மாக பேசப்­ப­டு­கின்­றது. உள்­ளூ­ராட்சி முறை­மையை சாத­க­மாக்கிக் கொள்ள ஒவ்­வொரு சமூ­கத்­தி­னரும் முயன்று வரு­கின்­றனர். இந்­நி­லையில் மலை­ய­கத்­த­வர்­க­ளுக்கு உள்­ளூ­ராட்சி முறையை சாத­க­மாக்கிக் கொடுக்க மலை­யக அர­சி­யல்­வா­திகள் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்டும். மலை­யக மக்கள் மலை­ய­கத்தின் பல பகு­தி­களில் செறி­வாக வாழ்­கின்­றார்கள். எனினும் சனத்­தொ­கைக்­கேற்ப உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­களின் எண்­ணிக்கை போதா­துள்­ளது. மலை­யக அர­சியல்வாதிகள் இவ்­வி­ட­யத்தில் கரி­ச­னை­யுடன் செயற்­பட வேண்­டிய தேவை இருக்­கின்­றது.
 
மலை­யக மக்கள் சுமார் 15 இலட்சம் பேர் உள்­ளனர். எனவே மொத்­த­மாக உள்ள 335 உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­களில் எம்­ம­வர்­க­ளுக்கு 30 உள்­ளூராட்சி நிறு­வ­னங்­க­ளா­வது இருக்க வேண்டும். எனினும் இப்­போது இரண்டு பிர­தேச சபை­களும் இரண்டு நகர சபை­க­ளுமே எம்­வ­ச­மாக உள்­ளன. வட்­டார முறை இப்­போது இடம்­பெற்று வரு­கின்­றது. வட்­டா­ரங்­களை 35 இற்கு மேற்­ப­டக்­கூ­டாது என்று மேல் எல்­லையும் வகுத்­துள்­ளார்கள். மேல் எல்லை வகுக்­கப்­ப­டாது இருந்­தி­ருந்தால் மலை­யகப் பகு­தி­களில் வட்­டா­ரங்­களின் தொகை அதி­க­ரித்­தி­ருக்கும். குறிப்­பாக அம்­ப­கல பகு­தியில் நாற்­பது அல்­லது ஐம்­பது வட்­டா­ரங்­களும் நுவ­ரெ­லியா பகு­தியில் பல வட்­டா­ரங்­களும் ஏற்­ப­டுத்­தப்­படும் வாய்ப்­புள்­ளது. எனினும் மேல் எல்லை எமக்கு மிகவும் பாத­க­மா­கி­யுள்­ளது.
 
இரண்டு இலட்சம் பேருக்கு உள்ள வட்­டா­ரங்­களின் தொகையும் 60 ஆயிரம் பேருக்கு உள்ள வட்­டா­ரங்­களின் தொகையும் ஒரே­ய­ளவில் இருப்­ப­தனை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது.
 
இதில் என்ன நியாயம் இருக்­கின்­றது? தல­வாக்­கலை நகர சபைக்கு ஒன்­பது வட்­டா­ரங்­களும், நுவ­ரெ­லியா மாந­கர சபைக்கு 12 வட்­டா­ரங்­க­ளு­மா­கவே ஏற்­பா­டுகள் இடம் பெற்­றுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. வட்­டார ஏற்­பா­டு­களில் நாம் பின்­தள்­ளப்­பட்­டி­ருக்­கிறோம் என்­பது புல­னா­கின்­றது. இதுவும் ஒரு மோச­மான நிலை­மை­யையே வெளிப்­ப­டுத்­து­கின்­றது.
 
நாட்டில் அநே­க­மான கிராம சபைகள் காணப்­ப­டு­கின்­றன. வாக்­கு­ரிமை பறிக்­கப்­பட்ட நிலையில் கிரா­ம­சபை வாய்ப்­புக்கள் கூட எமக்கு கைந­ழுவிப் போய் உள்­ளமை வருத்­தத்­தக்க விட­ய­மாகும். 1987ஆம் ஆண்டு 15ஆவது இலக்க பிர­தே­ச­சபைச் சட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு உட்­பட்ட பிர­தேச சபைகள் உரு­வாக்­கப்­பட்­டன. இந்த நிலையில் மலை­யக மக்­க­ளுக்கு பிர­தேச செய­ல­கங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் பிர­தேச சபை­களும் ஏற்­ப­டுத்த முடி­யாமல் போய்­விட்­டது. பிர­தேச செய­ல­கங்­களை உரு­வாக்­காமல் பிர­தேச சபை­களை பற்றி யோசிக்க முடி­யாது. நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 12 பிர­தேச செய­ல­கங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென மலை­யக கட்­சிகள் அனைத்தும் ஒன்­றி­ணைந்து கோரிக்கை விடுத்­தி­ருந்­தன. இப்­போது 5 பிர­தேச செய­ல­கங்கள் மட்­டுமே காணப்­ப­டு­கின்­றன. எனினும் இது சாத்­தி­யப்­ப­ட­வில்லை. இவ்­வாறு சாத்­தி­யப்­ப­டு­மி­டத்து தமிழ் மக்கள் வாழும் பகு­தி­களில் 7 பிர­தேச சபை­களும் சிங்­கள மக்கள் வாழும் பகு­தி­களில் 5 பிர­தேச சபை­க­ளு­மாக மொத்­த­மாக 12 பிர­தேச சபைகள் உரு­வாகும். மலை­ய­கத்தில் அதி­க­மான நக­ர­ச­பை­களை ஏற்­ப­டுத்தும் வாய்ப்­புள்­ளது. கொட்­ட­கலை, பொக­வந்­த­லாவை, மஸ்­கெ­லியா, அக்­க­ரப்­பத்­தனை, கந்­தப்­பளை, இரா­கலை, உட­பு­சல்­லாவ, புசல்­லாவ, பூண்­டு­லோயா போன்ற இடங்­களை தர­மு­யர்த்­து­வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
 
உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­களின் ஊடாக எமது மக்­க­ளுக்கு உரிய சேவை கிடைப்­ப­தில்லை என்­பது உண்­மைதான். எனினும் நுவ­ரெ­லியா, தம்­ப­க­முவ போன்ற பகு­தி­களில் மாகாண மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் உத­வி­யுடன் உள்­ளூ­ராட்சி உறுப்­பி­னர்கள் பல வேலைத்­திட்­டங்­க­ளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். கீழ் மட்ட குடியரசாகிய உள்ளூராட்சி மன்றங்களில் எமது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு அதிகரித்துக் கொண்டதன் பின்னர் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்தி உள்ளூராட்சி மன்ற நிதியினை எமது சமூகத்துக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதைவிடுத்து உள்ளூராட்சி நிதி எமக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக உள்ளூராட்சி தேர்தலில் நாம் போட்டியிடாமல் இருந்துவிட முடியாது. எமது பிரதிநிதித்துவம் மிகவும் அவசியமாகும் என்றார்.

No comments: