Wednesday, October 28, 2015

வெகுவிரைவில் வீடுகளை அமைத்துக் கொடுப்பேன்

மீரி­ய­பெத்தவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான வீட­மைப்­புத்­ திட்டம் முற்­று­மு­ழு­தாக மந்­த­க­தி­யிலே இடம்பெற்று ­வ­ரு­கின்­றது. இதனைத் துரி­தப்­ப­டுத்தி வெகு­வி­ரைவில் அம் மக்­க­ளுக்­கான வீடு­களை கைய­ளிப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்பேன் என ஊவா மாகாண, தோட்ட உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி அமைச்சர் செந்தில் தொண்­டமான் குறிப்­பிட்டார்.

மாகாண அமைச்­சுக்­களைப் பொறுப்­பேற்ற அமைச்சர் செந்தில் தொண்­டமான் மீரி­ய­பெத்த மண்­ச­ரிவில் பாதிக்­கப்­பட்ட மக்­களை சந்­திக்கும் பொருட்டு அவர்­கள் தங்­கி­யி­ருக்கும் மாக்­கந்தை தேயிலைத் தொழிற்­சா­லைக்கு விஜயம் செய்து அவர்களைச் சந்­தித்து  உரை­யாற்­று­கையில், நாட்டில் ஏற்­பட்­டி­ருந்த அர­சியல் மாற்றத்தினால் எம்மால் சமூக அபி­வி­ருத்திப் பணி­களை முன்­னெ­டுக்க முடி­யாமல் போய்­விட்­டது. அக்­காலம் இருள் சூழ்ந்த கால­மா­கவே காணப்­பட்­டது. ஊவா மாகாண சபை­யிலும் இது­போன்ற நிலை­மையே காணப்­பட்­டது.

மத்­திய அரசில் எமக்கு அர­சியல் பலம் இல்­லாமல் இருந்தால் கூட ஊவா மாகாண சபை எனது பொறுப்பில் இருக்கும் அமைச்­சுக்­களைப் பயன்­ப­டுத்தி தடைப்­பட்­டி­ருந்த சமூகப் பணி­க­ளையும் வீட­மைப்­பி­லி­ருந்து வந்த மந்த கதி­யையும் நிவர்த்தி செய்ய முடியும். எனது முதற் பணி மீரி­ய­பெத்­தவில் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் மக்­க­ளுக்­கான வீட­மைப்புத் திட்­டத்­தினை துரி­த­மாக நிறைவு செய்­வ­தாகும். வெகு­வி­ரைவில் அவ்­வீ­டு­களை எமது மக்­க­ளுக்கு கைய­ளிக்கும் வேலைத்­திட்­டத்­தினை முன்­னெ­டுப்பேன். ஆகவே மக்கள் சோர்ந்து போகாமல் உற்­சா­க­மாக இருக்­கும்­படி கேட்டுக் கொள்­கின்றேன்.

ஊவா மாகா­ணத்தின் பாட­சா­லைகள், தோட்ட வைத்­தி­ய­சா­லைகள் ஆகி­ய­வற்­றுக்­கான பாதை­களை அமைக்கும் வேலைத்­திட்­டத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­வதைப் போன்று ஆகக் கூடிய முன்­னு­ரி­மையை மீரி­யாபெத்த வீட­மைப்புத் திட்டத்திற்கு வழங்குவேன்.

அரசியல் மாற்றங்கள் எதுவும் இடம்பெறாமல் இருந்திருக்குமேயானால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் புதிய வீடுகளை நாம் கையளித்திருப்போம் என்றார்.

மீரியபெத்த அனர்த்தம்-ஒரு வருட காலம் கடந்தும் மனதை விட்டகலாத துயரம்


மீரியபெத்தை பெருந்தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பலியான 37 பேரது ஒரு வருட பூர்த்தி “திவசம்” பூஜை வழிபாடுகள் இன்று 29ம் திகதி பூனாகலை தமிழ் மகா வித்தியாலய ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெறவுள் ளது.

பூனாகலை தமிழ் மகா வித்தியாலய அதிபர் ரெங்கராஜ் மோகனின் ஏற்பாட்டில் இடம் பெறும் ஒருவருட பூர்த்தி சமயக் கிரியை களை, அல்துமுல்லை கருவேற்காடுபதி ஸ்ரீதேவி கருமாரியம்மன் தேவஸ்தான பிரதம குரு பிரம்மஸ்ரீ பாலமூர்த்திஸ்வரக் குருக்கள் ஆகம விதிப்படி நடத்தி வைக்கவுள்ளார்.

அத்துடன் மண்சரிவில் பலியான 37 பேருக்குமான மலர் அஞ்சலி மற்றும் சுடர் ஒளியேற்றல், நெய் விளக்கேற்றல் ஆகியனவும் இடம்பெற்று பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்படும். அதையடுத்து, பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களைக் கொண்ட 349 பேருக்கும், அன்னதானம் வழங்கப்படும்.

மேலும் அல்துமுல்லை பிரதேச செயலாளர் வை.கே. சிரோமி ஜீவமாலா தலைமையில் ‘பௌத்த பிக்குகளை உள்ளடக்கிய வகையில், பலியான 37 பேருக்கான ஆத்ம சாந்தியை வேண்டி பௌத்த சமய நிகழ்வுகளும், அன்றைய தினம் இடம்பெறவுள்ளன.

பெற்றோர் இருவரும் பலியான நிலையில் கஜனி, சுரேஷ், சந்திரன் உள்ளிட்ட தாய் அல்லது, தகப்பன் இல்லாமலும் மொத்தமாக 97 சிறார்கள் இருந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் மாணவர்களாவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் மக்கள் வங்கி வைப்பீட்டு சேமிப்பு புத்தகங்கள் உள்ளன.

ஐம்பதாயிரம் ரூபா முதல் பல இலட்சம் ரூபா வரையில் வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டிருக்கின்றது. இன்று 29ம் திகதி மக்கள் வங்கி கொஸ்லந்தை கிளையினர் மேற்குறிப்பிட்ட 97 மாணவர்களுக்கும், கற்கை உபகரணங்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கவுள்ளனர்.

இம் மாணவர்களின் 53 பேர் பூனாகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் 10 பேர் கொஸ்லந்த ஸ்ரீ கணேஷா தமிழ் வித்தியாலயத்திலும் 18 பேர் அம்பிட்டிகந்த தமிழ் வித்தியாலயத்திலும், 16 பேர் பூனாகலை முன்பள்ளியிலும் கல்வி கற்று வருகின்றனர்.

பெற்றோர் இருவரையும் இழந்த கஜனி ஆண்டு 8லும், சுரேஷ் ஆண்டு 6லும், சந்திரன் ஆண்டு 7 லும் கல்வி கற்று வருகின்ற போதிலும் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மேல் வைப்பிலிடப்பட்டுள்ளது. ஏனைய 94 பேருக்கும் குறைந்த பட்சம் ஐம்பதாயிரம் ரூபாவுக்கு மேல் வங்கியில் வைப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ் வைப்பீடுகள் அனைத்தும் வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தோர், கிறிஸ்தவ ஸ்தாபனத்தினர், மலையகத்திலிருந்து தென் கொரியா நாட்டில் தொழில் செய்பவர்கள். புலம் பெயர்ந்தவர்கள் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

மேலும் மாக்கந்தை தோட்ட தொழிற்சாலை நலன்புரி நிலையத்தில் இருந்து வரும் 349 பேருக்கும் ஒரு வாரத்திற்கு ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்து அறுநூறு ரூபாவுக்கான உலர்

உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக அல்துமுல்லை பிரதேச செயலாளர் வை.கே. சிரோமி ஜீவமாலா தெரிவித்தார். தனி ஒரு நபர் இருக்கும் பட்சத்தில் அக் குடும்பத்திற்கு 700 ரூபா, இருவர் உள்ள குடும்பத்திற்கு 900 ரூபா, மூன்று பேர் உள்ள குடும்பத்திற்கு 1100 ரூபா, நான்கு பேர் எள்ள குடும் பத்திற்கு 1300 ரூபா, ஐந்து பேருள்ள குடும்ப த்திற்கு 1500 ரூபா என்ற வகையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் இதுவரையில் வழங்கப்படும் உணவுப் பொரு ட்கள் போதுமானதல்லவென்று எவரும் எனக்கு புகார் தெரிவிக்க வில்லை.

இன்னும் 3 மாதங்களில் இவர் களுக்கான தனி வீடுகள் 75 நிறைவு செய்யப்பட்டு வழங் கப்பட்டு விடு மென்று பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் தெனிய என்ற இடத்தில் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரையில் நான்கு வீடுகள் மட்டுமே நிறைடையும் தறுவாயிலுள்ளன. இவ்வீடமைப்பு நிர்மாணிப்பு பணிகளில் ஆயிரம் இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இப்பணிகள் இராணுவ கெப்டன் எம்.எஸ். குமார தலைமையில் இடம்பெற்று வருகின்றன.

அவரிடம் வினவிய போது, “இன்னும் 3, 4 மாதங்களில் 57 வீடுகள் மட்டும் பூர்த்தி செய்யப்படும். கட்டடப் பொருட்கள் கிடைக்க ஏற்படும் தாமதங்களே வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டதற்கான காரணமாகும். ஒதுக்கப்பட்டிருக்கும் இடம் 57 வீடுகளுக்கு மட்டுமே போதுமானதாகும். மேலும் 18 வீடுகள் நிர்மாணிப்பதற்கு, அயலிலுள்ள பிறிதொரு இடம் ஒதுக்கப்பட்டு எம்மிடம் ஒப்படைத்தால் மட்டுமே, ஏனைய வீடுகளை நிர்மாணிக்க முடியும் என்றார்”. புதிதாக வீடுகள் கட்டப்படும் இடமும் காட்டு யானைகள் வரக்கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதால் வீடமைப்பு காணியைச் சுற்றி வர மின்சார வேலிகளை அமைக்கவும், பிரதேச செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

ஆமை வேகத்திலேயே, வீடுகள் நிர்மாணிப்பு பணிகள் இடம்பெறுவதினால் இன்னும் ஒரு வருடமாவது செல்லுமென்ற நிலை உருவாகியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சினாலேயே, மேற்படி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
மண்சரிவு ஏற்பட்டு 37 மனித உயிர்கள் பலியாகி ஒருவருடம் பூர்த்தியாகியும் பாதிக்கப்பட்டிருக்கும் 75 குடும்பங்களுக்கும் இன்னும் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படாமையினால் அம்மக்கள் தொடர்ந்தும் நலன்புரி நிலையத்திலேயே அவல நிலையில் இருந்து வருகின்றனர்.

பூனாகலைப் பகுதியின் மாகந்தையில் கைவிடப்பட்டிருந்த தேயிலைத் தொழிற்சாலையில், மேற்படி 75 குடும்பத்தினரைக் கொண்ட 349 பேர் வாழ்ந்து வருகின்றனர். இத்தேயிலைத் தொழிற்சாலைக்குள் 12ஒ8 அடி பரப்பளவான சிறு அறைகள் 55 அமைக்கப்பட்டு, மேற்படி 349 பேரும், பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கிய நிலையில் தத்தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

அண்மைக்காலத்தில் இவர்களில் பலர் நோய்வாய்ப்பட்டிருந்தனர். இம்மக்களின் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகள் எதுவுமின்றி கல்வியைத் தொடரும் மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாமலும் பெரும் அவதியுறுவதை நேரடியாகவே காணக்கூடியதாக இருந்தது.

மலையக தமிழ் மக்கள் சிங்களவர்களாக மாற வேண்டும்!

மலையக தமிழ் மக்கள் தொடர்ந்தும் மலையகப் பகுதிகளில் வாழ வேண்டுமாயின் சிங்களவர்களாக மாற வேண்டுமென சிங்ஹலே மாஜன பெரமுன என்ற அமைப்பு கோரியுள்ளது.

இலங்கையில் இதுவரையில் இல்லாத ஒர் அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு என்ற பெயரில் அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் ஆட்சியாளர்களினால் விரட்டியடிக்கப்பட்ட மலையக சிங்கள மக்களின் கிராமங்கள் இந்த புதிய அமைச்சின் ஊடாக சிங்கள மக்களுக்கு இல்லாமல் போய்விடும். மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் அரச மற்றும் தனியார் தோட்டங்களுக்காக சிங்கள மக்களின் பாராம்பரிய காணிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன. அங்கு பாரம்பரியமாக கிராமங்களில் வாழ்ந்து வந்த சிங்கள மக்களை கூட்டாக கொலை செய்தும், விரட்டியடித்துமே, பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டன.

சிங்கள கிராமங்களில் பிரிட்டன் ஆட்சியாளர்கள் செய்த அழிவுகள் குறித்து 1817ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதி இங்கிலாந்து அரசாங்கத்திற்கு, அப்போதைய ஆளுனர் ரொபர்ட் பிரவுன்ரீக் அனுப்பி வைத்த இரகசிய ஆணவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் 1848ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி டொரிங்டன் ஆளுனரினால் இங்கிலாந்து அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்த இரகசிய ஆவணத்தில் சிங்களவர்கள் மற்றும் சிங்கள கிராமங்களுக்கு செய்த அழிவுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

மலையக புதிய கிராமங்கள் அமைச்சு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். சிங்களவர்களின் மலையகப் பாரம்பரிய கிராமங்கள் சிங்களவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். சிங்கள இனத்தை ஒடுக்க ஆங்கிலேயரினால் அழைத்து வரப்பட்ட தமிழர்கள் தொடர்ந்தும் அந்தப் பகுதிகளில் வாழ விரும்பினால், அவர்கள் சிங்களவர்களாக மாற வேண்டும் என சிங்ஹரே மாஜன பெரமுன அமைப்பு விடுத்துள்ள கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கள பௌத்த மாநாயக்கர்களிடம் இந்த கோரிக்கை எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தலைவராக பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திலன்த விதானகே கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பில் பல பௌத்த பிக்குகளும் முக்கிய பதவிகளை வகித்து வருகின்றனர்.

தோட்­டத்­ தொ­ழி­லா­ளரின் சம்­பள உயர்வு கேள்விக் குறி­யா­கி­யுள்­ளது

இ.தொ.கா. விடம் அதி­காரம் இருந்­தி­ருந்தால் தீர்வு கிடைத்­தி­ருக்கும் 

ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை இலங்கைத் தொழி­லாளர் காங்­கிரஸ் அன்­றைய வாழ்க்கைச் செலவின் நிலை­மையை கருத்­திற்­கொண்டே முன்­வைத்­தது. இன்­றைய நிலையில் 1500 ரூபா பெற்­றுக்­கொ­டுத்­தாலும் போது­மா­ன­தாக இருக்­காது. இ.தொ.கா. விடம் போதிய அர­சியல் அதி­கா­ர­பலம் இருந்­தி­ருக்­கு­மே­யானால் தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வுப் பிரச்­சி­னைக்கு தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டி­ருக்கும். சம்­பள உயர்­வு­களும் சாத்­தி­ய­மா­கி­யி­ருக்கும். கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­வதும் தாம­த­மா­கி­யி­ருக்­காது என்று ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்­டமான் தெரி­வித்­துள்ளார்.
 
ஊவா மாகாண அமைச்சர் பொறுப்­புக்­களை ஏற்­ற­பின்னர் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போது, தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தாமதம் குறித்து விளக்­கு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
 
தொடர்ந்து அவர் பேசு­கையில்,  தற்­போது மலை­ய­கத்தின் அமைச்­சர்­க­ளாக இருப்­ப­வர்கள் இலங்கைத் தொழி­லா ளர் காங்­கி­ரஸை விமர்­சிப்­ப­தி­லேயே கால த்தை கடத்­திக்­கொண்­டி­ருக்­கின்­றனர். அவ் அமைச்­சர்­க­ளினால் ஏன் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வைப் பெற்­றுக் ­கொ­டுக்க முடி­ய­வில்லை என்று நாம் மட்­டு­மல்ல இன்று மக்­களும் கேள்வி கேட்கத் தொடங்­கி­விட்­டனர். அப்­ப­டி­யானால் விமர்­ச­னங்­களை மட்­டுமே முன்­வைத்­து­வரும் அவர்­களின் செயற்­பா­டுகள் கையா­லாகாத் தன்­மை­யையே காட்­டு­கின்­றன.
 
இ.தொ.கா. முன்­வைக்கும் சம்­பள அதி­க­ரிப்புத் தொகை­யை­விட அதி­க­ரித்த தொகை­ யையே ஏனைய தொழிற்­சங்­கங்கள் முன்­வைப்­பது வழக்­க­மாக இருந்து வந்­தது. எனினும் நாம் முன்­வைத்த 1000 ரூபா கோரிக்­கை­யை­விட அதி­க­ரித்த தொகையை கோராது அதிலும் குறை­வான தொகையே கோரப்­பட்­டது.
 
அன்­றைய வாழ்க்­கைச்­செ­லவின் நிலை­மையை கருத்­திற்­கொண்டே ஆயிரம் ரூபா உயர்­வினை கோரி­யி­ருந்தோம். இது தொழி­லா­ளர்கள் மட்டில் நியா­ய­மான கோரிக்­கை­யாகும். இதனை அவர்­களும் ஏற்­றுள்­ளனர். இ.தொ.கா. முன்­வைக்கும் சம்­பள உயர்­வுக்கு மேலா­கவே ஏனைய தொழிற்­சங்­கங்கள் கேட்­பது வழ­மை­யாகும். ஆனால், இ.தொ.கா.வின் ஆயிரம் ரூபா சம்­பள உயர்வு கோரிக்­கைக்கு அனைத்து தொழிற்­சங்­கங்­களும் இணங்­கி­யது புது­மை­யே­யாகும். சில தொழிற்­சங்­கங்கள் 1000 த்திலும் குறை­வான தொகையையும் முன்­வைத்து வந்­தன.
 
இன்­றைய வாழ்­க­்கைச்­செ­லவு உயர்­வுக் ­கேற்ப இந்தத் தொகையும் போது­மா­ன­தன்று. அனைத்து அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலை­களும் அதி­க­ரித்­துள்­ளன. நாம் அதி­கா­ரத்தில் இருந்­தி­ருந்தால் இவற்றை முறை­யாக நிர்­வ­கித்­தி­ருப்போம். இன்றைய நிலையில் 1500 ரூபா பெற் றுக்கொடுத்தாலும் போதுமானதாக இருக்காது. இதுவிடயத்தில் ஏனைய தொழிற்சங்கங்கள் இ.தொ.கா.வை விமர்சிப்பதை விடுத்து தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கைச்செலவை ஈடு செய்யும் வகையில் சம்பள உயர்வினைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும் என்று கூறி னார்.

கூட்டு ஒப்­பந்­தத்தின் ஊடாக நியா­ய­மான சம்­பள அதி­க­ரிப்பு என்­பது கேள்­விக்­குறியே 
 
கூட்டு ஒப்­பந்­தத்தின் மூல­மாக நியா­ய­மான சம்­பள உயர்­வினை பெற்­றுக்­கொள்ள முடி­யுமா என்­பது தற்­போது கேள்­விக்­கு­றி­யாகி உள்­ளது. எனவே இது குறித்து ஆழ­மாக சிந்­தித்து உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தோடு மாற்றுத் தொழில்­துறை தொடர்­பிலும் மலை­யக மக்கள் ஆர் வம் செலுத்த வேண்டும் என்று திறந்த பல்­க­லைக்­க­ழக சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி எ.எஸ்.சந்­தி­ரபோஸ் தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், 1992 ஆம் ஆண்டு முதல் கூட்டு ஒப்­பந்தம் நடை­மு­றையில் உள்­ளது. கூட்டு ஒப்­பந்த நட­வ­டிக்­கை­களின் போது தொழிற்­சங்­கங்கள் தொழி­லாளர் நலன்­க­ருதி பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைக்­கின்­றன. எனினும் இக்­கோ­ரிக்­கைகள் அனைத்தும் நிறை­வேற்­றப்­ப­டு­வ­தில்லை. தொழிற்­சங்­கங்கள் கோரு­கின்ற சம்­பள உயர்வும் உரி­ய­வாறு தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வ­தில்லை. தொழி­லா­ளர்­களின் வரு­மான மட்­டத்தில் பாரி­ய­ளவு மாற்­றத்­தினை கூட்டு ஒப்­பந்­தத்­தினால் கொண்­டு­வர முடி­யாமல் போயுள்­ளது. கூட்டு ஒப்­பந்­தத்தில் ஏற்­க­னவே ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­வாறு வரு­டத்தில் 300 நாள் வேலை அல்­லது மாதத்தில் 25 நாள் வேலை வழங்­கு­வ­தற்கு கம்­ப­னிகள் தயா­ராக இல்லை.
 
வேலை நாட்­க­ளுக்­கேற்ப தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பளம் வழங்­கு­கின்ற நடை­மு­றை­க­ளுக்கும் கம்­ப­னிகள் இன்று ஒத்­து­வ­ரு­வ­தாக இல்லை அர­சாங்­கத்தின் அழுத்­தத்­திற்­கேற்ப கம்­ப­னி­யினர் சிறிய தொகை சம்­பள உயர்­வினை தொழி­லா­ளர்­க­ளுக்கு இம்­மு­றையும் பெற்­றுக்­கொ­டுப்­பார்கள் என்ற போது கூட்டு ஒப்­பந்­தத்தின் ஊடாக நமக்கு நியா­ய­மான சம்­பள உயர்வு கிடைக்கும் என்று தொழி­லா­ளர்கள் இனியும் எதிர்­பார்த்­தி­ருக்க முடி­யாது. கூட்டு ஒப்­பந்தம் எதிர்­கா­லத்தில் தொழி­லா­ளர்­களின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்த எந்­த­ள­விற்கு கைகொ­டுக்கப் போகின்­றது என்­பது இப்­போது கேள்விக் குறி­யா­கி­யுள்­ளது.
 
இந்த நிலையில் பெருந்­தோட்ட மக்­களின் வாழ்­வா­தா­ரத்­திற்கு மாற்று வழி­களை காண வேண்­டிய தேவை இப்­போது மேலெ­ழுந்­துள்­ளது. தோட்டத் தொழில்­து­றையைக் காட்­டிலும் வேறு எத்­த­கைய தொழில் முயற்­சிகள் தம்­மிடம் இருக்­கின்­றன என்­ப­தனை தொழி­லா­ளர்கள் அடை­யாளம் காணுதல் வேண்டும். இளை­ஞர்கள் பலர் தோட்­டத்­துறை வரு­மா­னத்தில் அதி­ருப்தி கொண்டு தோட்­டத்­தினை விட்டும் வெளி­யேறி நகர்ப்­பு­றங்­களில் பணி­பு­ரிய சென்­றுள்­ளனர். சில இளை­ஞர்கள் வெளி­நா­டு­க­ளுக்கும் தொழில் நிமித்தம் சென்­றுள்­ளனர். இவர்­க­ளு­டைய வரு­மா­னத்தை நம்­பியே இன்று இவ்­வி­ளை­ஞர்­களின் பெற்­றோர்கள் தோட்­டத்தில் இருக்­கின்­றனர். தோட்டத் தொழில் தவிர்ந்த ஏனைய வரு­மா­னங்கள் தான் இன்று தொழி­லா­ளர்­களின் வாழ்­வா­தா­ரத்­திற்கு கைகொ­டுக்­கின்­றன.
 
கூட்டு ஒப்­பந்தம் தொடர்பில் அதி­ருப்­திகள் மேலோங்கி வருகின்றன. இதன் மீதான நம்பிக்கைத்தன்மை வலுவிழந்து வருகின்றது. இந்நிலையில் மாற்றுத் தொழில்களை இனங்கண்டு அறிமுகம் செய்வதோடு அதற்குரிய திறன்களையும் எம்மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தை இனியும் நம்பி இருப்பது சாத்தியமானதில்லை. விவேகமா னதும் இல்லை என்றார்.

பிர­தமர் தலை­மையில் நாளை சம்­பளப் பேச்­சு­
 
தோட்­டத்­தொ­ழி­லா­ளரின் சம்­பள அதி­க­ரிப்பை உறு­திப்­ப­டுத்தும் கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யாகி 7 மாதம் கடந்­து­விட்ட நிலையில் நாளை வியா­ழக்­கி­ழமை பிர­தமர் தலை­மையில் முத­லா­ளிமார் சம்­மே­ளனம் மற்றும் தொழிற்­சங்க பிர­தி­நி­திகள் ஆகி ­யோ­ருக்கு இடை­யி­லான பேச்­சு­வார்த்தை ஒன்று இடம்­பெ­ற­வுள்­ளது.
 
இந்தப் பேச்­சு­வார்த்­தையின் போது கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழி ற்­சங்­கங்­க­ளுடன் கைச்­சாத்­தி­டாத தொழிற்­சங்கத் தலை­வர்­க­ளு­டனும் பிரதிநிதி­களும் கலந்­து­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இதன்போது அமைச்­சர்­க­ளான பழனி திகாம்­பரம், மனோ ­க­ணேசன் மற்றும் வி.இரா­தா­கி­ருஷ்ணன் ஆகி­யோரும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். இவர்­க­ளுடன் தொழி­லு ­றவு அமைச்சர் ஜோன் சென­வி­ரட்னவும் இணைந்­தி­ருப்பார்.
 
மார்ச் மாதம் 31ஆம் திக­தி­யுடன் நிறை­வு க்கு வந்­துள்ள கூட்டு ஒப்­பந்­தத்தை புதுப்­பித்­துக்­கொள்ளும் பொருட்டு இடம்­பெற்­று­வந்த 6 சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களும் தோல்வி கண்­டுள்­ளன. தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் நாளொன்­றுக்­கான சம்­ப­ளத்தை ஆயிரம் ரூபா­வாக நிர்­ண­யிக்க வேண்­டு­மென்­பதே இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் கோரிக்­கை­யாகும்.
 
இதனை முன்­வைத்த பேச்­சுக்­களே தோல்வி கண்­டுள்­ளன. 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை பெற்­றுக்­கொள்­வ­தற்­கென பொதுத்­தேர்தல் பிர­சாரக் காலப்­ப­கு­தியில் போராட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. முத­லா­ளிமார் சம்­மே­ள­னமும் கம்­ப ­னி­களும் 1000 ரூபா சம்­பளம் வழங்­கு­வ­தற்கு முடி­யா­தென திட்­ட­வட்­ட­மாக அறி­வித்து வந்­த­துடன் அதே நிலைப்­பாட்­டி­லேயே இருந்து வரு­கின்­றன.
 
மேலும் 770 ரூபாவை அதி­க­ரித்த சம்­ப­ள­மாக வழங்­க­மு­டியும் என்­பதே கம்­ப­னி­களின் இறுதி முடி­வாக உள்­ளது. தேயி லை விலை வீழ்ச்சி, சந்தை வாய்ப்பு வீழ்ச்சி ஆகி­ய­வற்றைக் காரணம் காட்­டியே இவ்­வாறு சம்­பள அதி­க­ரிப்­புக்கு முட்­டுக்­கட்டை இடப்­பட்டு வரு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது. 

இந்­நி­லை­யி­லேயே தேர்தல் காலங்­களில் வாக்­கு­று­தி­ய­ளித்­ததன் பிர­கா ரம் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு அதி­க­ரித்த சம்­ப­ளத்தைப் பெற்றுத் தரு­வ­தற்­கான பேச்­சு­வார்த்தை ஒன்று பிர­தமர் தலை­மையில் இடம்­பெ­ற­வுள்­ளது. இதன்­போது கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், கம்பனிகளின் பிரதானிகள், முதலாளி மார் சம்மேளத்தின் பிரதானிகள் மற்றும் மலையக அமைச்சர்கள் என பல தரப்பினரும் இணைந்து கொள்ளவுள்ளனர். இதன்போது இடம்பெறும் பேச்சுவார்தையில் இறுதி முடிவு எட்டப்படும் என்று நம் பப்படுகிறது.