தீவிரவாத இஸ்லாத்தின் தமிழ் முகம் அவருடையது. மௌலவி பி ஜெய்னுல் ஆப்தீன்,
பிஜே, என்று பிரபலமாக அறியப்படுபவர், மற்றும் அடிப்படைவாதிகளான தமிழ்நாடு
தௌகீத் ஜமாத்தினது (ரிஎன்ரிஜே) நட்சத்திரப் பேச்சாளர், ஸ்ரீலங்காவில் கடந்த
வாரம் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய மாநாட்டில் “உண்மையான இஸ்லாம்” என்ற
தலைப்பில் அவர் போதிப்பதாக இருந்த பேச்சை நடத்துவதற்காக அவருக்கு
ஸ்ரீலங்காவுக்கு வருவதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில்
உள்ள முஸ்லிம் சமூகம், பௌத்த கடும்போக்காளர்கள் மற்றும் தமிழ் புலிகள்
ஆகிய இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட அநேக கலவரங்கள் மற்றும்
தாக்குதல்களினாலும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைத் தாங்கியுள்ளது,
இல்லையெனில் அதைப்பற்றி சிந்தித்தும் உள்ளது. பிஜே யினை ஸ்ரீலங்கா தொளவீத்
ஜமாத் (எஸ்எல்ரிஜே) நவம்பர் 8ல் குரானின் சிங்கள மொழிபெயர்ப்பை
வெளியிடுவதற்காக ஸ்ரீலங்காவுக்கு அழைத்திருந்தது.
அகில
இலங்கை ஜமய்த்து உலாம மற்றும் ஏனைய மிதவாத முஸ்லிம் அமைப்புக்கள் இந்த
வரவை எதிர்த்திருந்தன, மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அதற்கு
இணங்கவேண்டியதாயிற்று. இஸ்லாம் பற்றிய பிஜே யின் வகாபி கருத்துக்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தலாம் என இந்த மிதவாத
முஸ்லிம் குழுக்கள் உணர்ந்தன. முன்னர் 2005லும் பிஜே இதே காரணங்களுக்காக
இங்கிருந்து வெளியேற்றப்பட்டார். தான் இஸ்லாம் அல்லாதது எனக் கருதும்
பிரபலமான இல்லாமிய நடவடிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதற்கும்
மக்களின் மத நம்பிக்கைகளை மாற்றுவதற்கும் ஏற்ற இடமாக ஸ்ரீலங்காவை அவர்
இலக்கு வைத்துள்ளார்.
பி.ஜே .யிற்கு மிதமான நிலைப்பாடு கிடையாது
தமிழ்
நாட்டை சேர்ந்த தீவிரமான அடிப்படைவாதியான ஒரு மௌலவி, குரான் மற்றும்
சுன்னாவினை அடிப்படையாகக் கொண்ட தூய இஸ்லாத்தை கூட்டலோ அல்லது குறைத்தலோ
இன்றி பரப்பும் பணியினை மேற்கொள்வதற்காக தன்னை ஒப்படைத்துள்ளார், என்பதை
அவரது இணையத்தளம் தெரிவிக்கிறது. ஜெய்னுல் ஆப்தீன் தனது அரசியல்
செயற்பாட்டை தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை (ரிஎன்எம்எம்கே) 1995
ல் நிறுவியதன் மூலம் ஆரம்பித்தார். எனினும் 2004ல் தமிழ் நாடு முஸ்லிம்
முன்னேற்றக் கழகத்தில் ஒரு பிளவு உருவானதால் பிஜே தமிழ்நாடு தௌகீத்
ஜமாத்தினை, மதம் மற்றும் அரசியல் கலந்த ஒரு அமைப்பாக உருவாக்கினார்.
.
நீதிபதி
ரங்கநாதன் மிஸ்ரா ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி முஸ்லிம்களின் இட
ஒதுக்கீட்டுக்காக போராடுவதைக் காட்டிலும், இஸ்லாம் ஒரு அமைதியான மதம் அதன்
கலாச்சாரம் இன நல்லிணக்கம் என்பதையே, அந்த அமைப்பு சித்தரித்து வந்தது. இது
ஒரு சாமர்த்தியமான உத்தி, ஏனென்றால் உள் வகுப்புவாத நல்லிணக்கத்தை
பரப்பும் அதேவேளை, அவர் வெளிப்படையாகவே சிகாக்கள், போராக்கள் மற்றும்
அகமதியாக்கள் அல்லது காடிவானிகள் போன்ற பல்வேறு அடிப்படைவாதமற்ற இஸ்லாமிய
அமைப்புக்களின் இருப்பினை எதிர்த்து வந்தார்.
பின்னணி
ஸ்ரீலங்காவில்
உள்ள முஸ்லிம்கள் இப்போது 21 மில்லியனான தீவின் மொத்த சனத்தொகையில் 9.5
விகிதமாவார்கள், கிமு 7ம் நூற்றாணடில் ஏற்பட்ட அவர்களது வருகையிலிருந்து
சமாதானத்தை நேசிக்கும் ஒரு சமூகமாகவே அவர்கள் இருந்து வருகிறார்கள்.
எனினும் அவர்களது தொழில் முனைப்பும் மற்றும் அமைதியான இருப்பும்
காலத்துக்கு காலம் பயங்கரமான சவால்களை எதிர்கொள்ளவேண்டியதாக உள்ளது. 1980
களில் தமிழர்கள் சுதந்திரத் தமிழீழத்தை அடைவதற்காக ஆயுதப் போராட்டத்தை
அணுகியபோதும், முஸ்லிம்கள் தங்களை அதில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.
வியாபாரிகள் என்கிற வகையில் அவர்கள் சமாதானத்தையே விரும்பினார்கள் மற்றும்
இதனால் எரிச்சலடைந்த புலிகள் 75,000 முஸ்லிம்களை அவர்களின்
இருப்பிடத்திலிருந்து துரத்தியடித்தார்கள்.
பின்னர்
சிங்கள குடிமக்களும் கூட அவ்வப்போது முஸ்லிம்கள்மீது தாக்குதலை
மேற்கொண்டார்கள். மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் (2005 – 2014) புதிய அமைப்பான
பொதுபலசேன, ஹிஜாப் மற்றும் ஹலால் சான்றிதழ்களுக்கு தடை ஏற்படுத்தவேண்டும்
என்று அழைப்பு விடுத்ததுக்கும் மற்றும் மசூதிகளைத் தாக்குவதற்கும் ஊக்கம்
வழங்கியது.
ஜூன்
2014ல் பொதுபலசேனாவினால் ஏவப்பட்ட சிங்களவர்களால் ஒரு கலகம்
தொடங்கப்பட்டது. முஸ்லிம்களின் பொருளாதார பின்புலத்தை தகர்ப்பதற்கு
மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியினால் அந்தச் சமூகம் ராஜபக்ஸ தலைமையிலான
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிராக பாராளுமன்றத் தேர்தலில்
வாக்களிப்பதற்கு வழிசெய்தது, அதன் காரணமாக அவரது வெளியேற்றத்தையும்
காணமுடிந்தது. கடந்த பல வருடங்களாக வகாபிக்கள், சுபிக்கள், சுன்னிகள்,
ஷிகாக்கள், போராக்கள், மலேயர்கள், இந்திய மற்றும் இலங்கை வம்சாவழியை
சேர்ந்த முஸ்லிம்கள் ஆகிய அனைவரும் ஒன்றுசேர்ந்து குறைந்தது சமூக மற்றும்
அரசியல் நலன்களுக்காக ஒரு ஒற்றை முஸ்லிம் சமூகமாக மாறியுள்ளார்கள்.
நிலவரம்
1.2012
குடிசன மதிப்பீட்டின்படி ஸ்ரீலங்கா கொண்டுள்ள முஸ்லிம் சனத்தொகையானது
1,967,227 ஆகும், அது மொத்த சனத்தொகையின் 9.5 விகிதமாகும்.
2.நாட்டிலுள்ள
முஸ்லிம் சனத்தொகையில் அதிகளவு எண்ணிக்கையானவர்கள் வர்த்தகர்கள். அவர்கள்
நாட்டுக்கு வந்தது முதல் இதையே செய்து வருகிறார்கள்.
1990 படுகொலைகள்
தமிழ்
புலிகள், ஓகஸ்ட் 3,1990ல் காத்தான்குடி ஜூம்மா பள்ளிவாசலில் பிரார்த்தனைக்
கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த முஸ்லிம்களை படுகொலை செய்தார்கள். அடுத்த
சில மாதங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள், வட மாகாணத்தை சேர்ந்த
முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு உளவு பார்ப்பதாக குற்றம் சுமத்தி
கிட்டத்தட்ட 75,000 முஸ்லிம்களை அங்கிருந்து விரட்டியடித்தார்கள்.
2009ல் ஏற்பட்ட குழப்பங்கள்
சிங்களவர்களுக்கும்
மற்றும் முஸ்லிம்களுக்கும் இடையிலான ஒற்றுமை, எல்.ரீ.ரீ.ஈயின் அழிவு
மற்றும் 2006 – 2009ல் நடந்த ஈழப்போர் 4 ன் போது தமிழர்கள் அவமானப்
படுத்தப் பட்டதின் பின்னர் தளர்வடைய ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து சிங்கள
வர்க்கம் முஸ்லிம்களை அடக்கியாள தொடங்கியது. மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம்
ஒரு புதிய அமைப்பான பொது பல சேனா என்கிற அமைப்பு ஹிஜாப், மற்றும் ஹலால்
சான்றிதழ்களுக்கு தடை ஏற்படுத்த வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கும்
மற்றும் பள்ளிவாசல்களைத் தாக்கும் செயல்களுக்கும் கூட ஊக்கம் அளித்தது.
2014 கலவரங்கள்
ஜூன்
2014ல், நாட்டின் தென் மேற்கு பகுதிகளில் மத மற்றும் இன கலவரங்கள்
ஏற்படுவதற்கு ஸ்ரீலங்கா சாட்சியானது. முஸ்லிம்கள் மற்றும் அவர்களின்
சொத்துக்கள் என்பன களுத்துறை மாவட்டத்தின் மூன்று நகரங்களில் சிங்கள
பௌத்தர்களால் தாக்குதலுக்கு உள்ளாகின. அவர்கள் குறைந்தது மூன்று பேரைக்
கொன்றதுடன் 80 பேருக்கு காயம் விளைவித்தார்கள். 8,000 முஸ்லிம்கள் மற்றும்
2,000 சிங்களவர்கள் இந்தக் கலவரத்தால் இடம்பெயர்ந்தார்கள், வீடுகள், வாத்தக
நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள்
நடத்தப்பட்டதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் வீடற்றவர்களானார்கள்.
கடும்போக்கு பௌத்த குழுவான பொது பல சேனா ஊhவலம் நடத்தியதின் விளைவாகவே
கலவரங்கள் ஏற்பட்டதாக கருதப்படுகிறது, ஆனால் அந்தக் குழுவினர் அதற்கான
பொறுப்பை நிராகரிக்கின்றனர்.
தீவிரவாதிகளின் தாக்குதல்
2013ல்
பௌத்த கடும்போக்காளர்களினால் முஸ்லிம்கள்மீது ஒரு சில தாக்குதல்கள்
மேற்கொள்ளப் பட்டன. அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொழும்புக்கு அருகில்
உள்ள முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
ஒரு முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான ஆடைக் களஞ்சியத்தை அவர்கள்
தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
பி.கே. பாலச்சந்திரன்
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
(நன்றி: நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்)