இலங்கையில் பல பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றன. எனினும் மலையக மாணவர்களுக்கென்று தனியான ஒரு பல்கலைகழகம் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இக்குறை உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் அ. லோறன்ஸ் தெரிவித்துள்ளாhர்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமைகள் மிகவும் முக்கியமானவையாகும். ஒருவரின் அல்லது ஒரு சமூகத்த்pன் உரிமைகள் உரியவாறு வழங்கப்படாது புறந்தள்ளப்படுவதன் காரணமாக முரண்பாட்டுச் சூழ்நிலைகள் மேலோங்குகின்றன. இதன் பாதக விளைவுகள் பல்வேறு மட்டங்களிலும் எதிரொலிக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த வகையில் மலையக மக்களின் பல்வேறு உரிமைகள் ஏட்டளவிலேயே முற்றுப் பெற்றுள்ளமையை அவதானிக்கக் சுடியதாக உள்ளது.
மொழியுரிமை குறித்து நோக்குகையில்இலங்கையில் தமிழி; மொழி அரச கரும மொழியாக உள்ளது எனினும் தமிழுக்கு உரிய இடம் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டியுள்ளது.
அரச திணைக்களங்கள் மற்றும் கூட்டுத் தாபனங்களில் இருந்து வரும் சுற்று நிருபங்கள் மற்றும் கடிதங்கள் என்பன பெரும்பாலும் தனிச்சிங்கள மொழியிலேயே அனுப்பட்டு வருகின்றமை புதிய விடயமல்ல. பல அரச அலுவலகங்களில் தொடர்பாடல் உத்தியோகத்தர் இல்லாதுள்ளனர். இதனால் பொதுமக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் கருமமாற்றுவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். பல இடங்களில் பெயர் பலகைகள் தனிச்சிங்கள மொழியிலேயே காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் தமிழ் அரச கரும மொழிதானா? ஏன்ற சந்தேகம் எழுகிறது. மலையக மக்களின் கல்வி உரிமைகள் கூட எந்தளவுக்கு நியாயமாக கிடைக்கின்றது என்பதில் ஐயப்பாடுககள் மேலெழுந்து வருகின்றன.
வளங்கள் பங்கீடு மற்றும் நிதிப்பங்கீடு தொடர்பில் பாரபட்சம் காட்டப்பட்டு வருகின்றமையை அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. வள மற்றும் நிதி பங்கீடுகளின் நியாயமற்ற பகிர்வு முறை காரணமாக மலையக தமிழ் பாடசாலைகள் பின்னடைவு காணும் அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றன. இந் நிலைமை தொடருமாமனால் மலையக கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மலையக அரசியல் தொழிற்சங்கங்கள் மலையகத்தின் கல்வி உரிமைகள் மீறப்படுவது குறித்து தெரிந்திருந்தும் வாய்மூடி மௌனியாக இருப்பது வருந்தத்தக்க விடயமாகும். இதனை கருத்திற் கொண்டு மலையக கல்வி அபிவிருத்திக்கு காத்திரமான பங்களிப்பை வழங்க அரசியல் தொழிற்சங்கவாதிகள் முன்வர வேண்டும் உரிமைகள் பறிபோகும் போது தட்டிக்கேட்காமல் வெறுமனே இருந்து விட்டு பின்னர் வருந்துவதால் பயனில்லை என்றார்.