திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை
மேபீல்ட் தோட்டத்தில் அண்மையில் தேயிலை தொழிற்சாலையிலிருந்து கழிவு
தூள்களுடன் நல்ல தேயிலைதூள்களையும் தனியார் வர்த்தகர் ஒருவர் இரவு
வேளையில் கொண்டு செல்ல முற்படுகையில் அத் தோட்டத்தொழிலாளர்களால் தடுத்து
நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக திம்புள பத்தனை பொலிஸில் முறைப்பாடு
பதியப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு
பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட வர்த்தகர்
அத்தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்துள்ளார்.
இம்முறைப்பாட்டில் பொதுமக்கள் சிலர் தம்மை தாக்கியதாகவும் கொலை
முயற்சியில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தோட்ட நிர்வாகமும்
பொலிஸ் நிலையமும் பொதுமக்களின் முறைப்பாட்டிற்கு சரியான தீர்வினை எடுக்காத
பட்சத்தில் இதுவரை 13 தொழிலாளர்கள் இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ்
விசாரனைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைஆட்சேபித்து மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் இன்று குறித்த தோட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எமது தோட்டத்தில் தோட்ட நிர்வாகம் ஒழுங்கற்ற ரீதியில் வர்த்தகருக்கு
தேயிலை தூளை வழங்கியமை அச்சத்தை தருவதாக நாம் பொலிஸாரின் கவனத்திற்கு
கொண்டு வந்தோம்.
ஆனால் இதற்கு நடவடிக்கை எடுக்காமல் தொழிலாளர்கள் மீது தோட்ட நிர்வாகமும்
பொலிஸாரும் நடவடிக்கை எடுப்பது வேடிக்கையான விடயமாகும் என போராட்டத்தில்
கலந்து கொண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment