Friday, July 17, 2015

சம்பள விவகாரத்தில் இழுத்தடிப்பு வேண்டாம்

பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்­கான சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்­கான கூட்டு ஒப்­பந்தம் காலா­வதி­யாகி நான்கு மாதங்கள் நிறை­வ­டை­யப்­போ­கின்ற நிலை­யிலும் புதிய கூட்டு உடன்­ப­டிக்­கையை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் தொடர்ச்­சி­யாக தோல்­வி­யையே சந்­தித்து வரு­கின்­றன. பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் தமக்கு நாட் சம்­ப­ள­மாக 1000 ரூபாவை வழங்­கக்­கோரி நிற்­கின்ற நிலையில் முத­லா­ளிமார் சம்­மே­ளனம் அதனை நிரா­க­ரித்­து­வ­ரு­கின்­றது. கூட்டு ஒப்­பந்த விவ­காரம் தொடர்பில் இது­வரை ஆறு சுற்று பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்­று­விட்­ட­போதும் அவை தோல்­வி­யி­லேயே முடி­வ­டைந்­தன.
முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் இடையில் இது­வரை நடை­பெற்ற நான்கு சுற்று பேச்­சு­வார்த்­தை­களும் தோல்­வி­யி­லேயே முடி­வ­டைந்­துள்­ளன. அதன்­ பின்னர் தொழில் அமைச்­சுக்கும் முத­லாளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் இடையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களும் தோல்­வியில் முடி­வ­டைந்­தன. அந்­த­வ­கையில் நடை­பெற்ற அனைத்து பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் சார்பில் 1000 ரூபா நாட் சம்­பளம் கோரப்­பட்­டு­வ­ரு­கின்ற போதும் தோட்ட கம்­பனி நிர்­வா­கங்கள் அந்த கோரிக்­கையை நிரா­க­ரித்­து­வ­ரு­கின்­றன.
முத­லாளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் தொழில் அமைச்­சுக்கும் இடையில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற ஆறா­வது சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­யின்­போது பெருந்­தோட்­டத்­துறை தொழி­லா­ளர்­க­ளுக்கு நாளொன்­றுக்கு மொத்த சம்­ப­ள­மாக 700 ரூபாவை வழங்க முன்­வந்­தன. எனினும் தொழி­லா­ளர்கள் சார்பில் பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­கொண்ட தொழிற்­சங்­கங்கள் கம்­ப­னி­களின் இந்த அறி­விப்பை நிரா­க­ரித்­துள்­ளன.
தொழிற்­சங்­கங்கள் சம்­பள உயர்­வாக 1000 ரூபா­வையே பெற்­றுத்­தர வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிலும் 700 ரூபா­வை­விட அதி­க­ரிக்க முடி­யாது என்ற ரீதியில் முத­லா­ளிமார் சம்­மே­ள­னமும் பிடி­வாதப் போக்கை கடைப்­பி­டித்­ததால் நான்கு மணி நேரம் நீடித்­தி­ருந்த ஆறா­வது சுற்றுப் பேச்­சு­வார்த்தை இணக்­கப்­பா­டுகள் இன்றி முடி­வுக்கு வந்­தது.
எனினும் எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்தல் நிறை­வ­டைந்­ததும் மீண்டும் பேசித் தீர்­மானம் ஒன்­றுக்கு வரு­வ­தென முடி­வெ­டுப்­ப­தற்கு இந்த ஆறா­வது சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­யின்­போது இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.
தொழில் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தலை­மையில் தொழில் அமைச்சில் இடம்­பெற்ற இப்­பேச்­சு­வார்த்­தையில் பெருந்­தோட்ட கைத்­தொழில் இரா­ஜாங்க அமைச்சர் கே.வேலா­யுதம் உள்­ளிட்ட பிர­தி­நி­திகள், இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் பிர­தி­நி­திகள், பெருந்­தோட்ட தொழிற்­சங்க கூட்­ட­மைப்பின் பிர­தி­நிதி, முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தின் அதி­கா­ரிகள், தோட்ட முகா­மைத்­துவ கம்­ப­னி­களின் நிறை­வேற்று அதி­கா­ரிகள் ஆகியோர் கலந்துகொண்­டி­ருந்­தனர்.
அதா­வது தற்­போ­தைய சூழ்­நி­லையில் சர்­வ­தேச சந்­தையில் தேயி­லையின் விலையில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளதன் கார­ண­மாக கம்­ப­னி­க­ளுக்கு நஷ்டம் ஏற்­ப­டு­வ­தா­கவும் ஆயிரம் ரூபா சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வது இன்­றைய நிலையில் சாத்­தி­ய­மில்லை எனவும் 700 ரூபா­வையே மொத்த சம்­ப­ள­மாக வழங்­க­மு­டியும் என கம்­ப­னிகள் தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
எனினும் கம்­ப­னி­களின் இந்­நி­லைப்­பாட்டை நிரா­க­ரித்­துள்ள பெருந்­தோட்டத் தொழில் இரா­ஜாங்க அமைச்சர் கே.வேலா­யுதம், கம்­ப­னிகள் கொடுக்­கின்ற பணி­களை தொழி­லா­ளர்கள் மிகுந்த அர்ப்­ப­ணிப்­புடன் முழு­மை­யாக நிறை­வேற்­று­கின்­றனர். எனவே அவர்­க­ளுக்கு நியா­ய­மான சம்­பள அதி­க­ரிப்பு வழங்க வேண்டும் என வலி­யு­றுத்­தி­ய­துடன் தோட்­டங்­களை இலா­ப­மீட்டும் வகையில் நிர்­வ­கிக்க வேண்­டி­யதும் அபி­வி­ருத்தி செய்­ய­வேண்­டி­யதும் தோட்டக் கம்­ப­னி­களின் பொறுப்­பாகும். அதற்கு தொழி­லா­ளர்கள் பொறுப்புக் கூற­மு­டி­யாது எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
கூட்டு ஒப்­பந்த காலம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திக­தி­யுடன் முடி­வுக்கு வந்த நிலையில் இலங்கைத் தொழி­லாளர் காங்­கி­ர­ஸினால் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பொன்றை முத­லா­ளிமார் சம்­மே­ளனம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. அந்தக் கோரிக்­கையை பெருந்­தோட்டத்­து­றையின் ஏனைய தொழிற்­சங்­கங்களும் வலி­யு­றுத்­தி­ய­துடன் போராட்­டங்­களும் நடத்­தப்­பட்டு வந்­தன. ஆனால் இது­வரை விமோ­சனம் கிடைக்­காமல் உள்­ளது.

இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை தமது உடலை வருத்தி மேற்­கொள்­கின்ற உழைப்­புக்கு ஏற்ற நியா­ய­மான ஊதி­யத்தை பெறு­வதில் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் பாரிய போராட்­டத்­தையே நடத்­த­வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை காணப்­ப­டு­கின்­றது. நாட்டின் பொரு­ளா­தா­ரத்தின் முது­கெலும்­பாக இருக்கும் தோட்ட தொழி­லா­ளர்­களின் உழைப்­புக்கு நியா­ய­மான சம்­பளம் கிடைக்­காமல் இருப்­ப­தா­னது பெரும் வேத­னைக்­கு­ரிய நிலை­யாகும்.

நாட்டின் பொரு­ளா­தாரக் கட்­ட­மைப்பில் குறிப்­பி­டத்­தக்­க­ளவு முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டுள்ள நிலை­யிலும் மக்­களின் சமூக வாழ்க்கை நிலையில் முன்­னேற்­றங்கள் வந்­து­கொண்­டி­ருக்­கின்ற சூழ­லிலும் பெருந்­தொட்ட தொழி­லா­ளர்­களின் வாழ்க்கை நிலையும் அவர்­களின் பொரு­ளா­தாரக் கட்­ட­மைப்பும் தொடர்ந்தும் வீழ்ச்சிப்பாதையில் பய­ணிப்­ப­தா­னது மிகவும் கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

அந்த மக்­களின் வரு­மான கட்­ட­மைப்­பா­னது தொடர்ந்தும் பரி­தா­ப­க­ர­மான நிலை­யி­லேயே இருந்துவரு­கின்­றது. இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்­கான கூட்டு ஒப்­பந்­தங்கள் கைச்­சாத்­தி­டப்­பட்­டு­வ­ரு­கின்ற போதிலும் அந்த மக்கள் கோரு­கின்ற நியா­ய­மான சம்­பள உயர்வு அவற்றின் ஊடாக வழங்­கப்­பட்­ட­தில்லை. இதனால் பெருந்­தோட்ட மக்கள் மிகவும் பரி­தா­ப­க­ர­மான வாழ்க்­கை­யையே நடத்­த­வேண்­டிய துர்ப்­பாக்­கிய சூழல் நில­வி­வ­ரு­கின்­றது.

பெருந்­தோட்ட மக்கள் வறுமை நிலை­யி­லேயே தமது வாழ்க்கைப் பய­ணத்தைக் கொண்டு நடத்­த­வேண்­டி­யுள்ளதால் பாரிய பொரு­ளா­தார பிரச்­சி­னை­களை சந்­தித்­து­வ­ரு­கின்­றனர். தமது பிள்­ளை­க­ளுக்கு சிறந்த கல்­வியை வழங்கி அவர்­களை சமூ­கத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்­டு­வ­ரு­வதில் அந்த மக்கள் பாரிய பிரச்­சி­னை­க­ளையும் சிக்­கல்­க­ளையும் எதிர்­நோக்­கி­வ­ரு­கின்­றனர்.

கல்விப் பிரச்­சினை, சுகா­தாரப் பிரச்­சினை, போக்­கு­வ­ரத்து மற்றும் சமூக வச­தி­யின்மை உள்­ளிட்ட பல சிக்­கல்­க­ளுக்கு பெருந்­தோட்ட மக்கள் முகம்­கொ­டுத்­து­வ­ரு­கின்­­றனர். தமது அன்­றாட வாழ்க்­கையை கொண்டு நடத்­து­வ­தற்கு பாரிய திண்­டாட்­டங்­க­ளையே தோட்டத் தொழி­லா­ளர்கள் எதிர்­நோக்­கி­வ­ரு­கின்­றனர். எனவே தோட்டத்தொழி­லா­ளர்­களின் இந்தப் பிரச்­சி­னையை தொடர்ந்து இழுத்­த­டிப்­ப­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. 1000 ரூபா சம்­ப­ளத்தை பெற்­றுக்­கொ­டுப்­பதில் மலையக தொழிற்­சங்க மற்றும் அர­சியல் தலை­மைகள் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். எக்­கா­ரணம் கொண்டும் தோட்டத் தொழி­லா­ளர்­களின் நியா­ய­மான சம்­பள கோரிக்­கை­யான 1000 ரூபா விட­யத்தை தொழிற்­சங்க மற்றும் அர­சியல் தலை­மைகள் கைவிட்­டு­வி­டக்­கூ­டாது.

அத்­துடன் இது தோட்டத்தொழி­லா­ளர்­க­ளுக்கும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் இடை­யி­லான பிரச்­சினை என்று கருதி அர­சா­ங்கம் இந்த விட­யத்தில் மௌனப் போக்கை கடை­ப்பி­டிக்­கக்­கூ­டாது. தொழில் அமைச்சு இந்த விட­யத்தில் ஆக்­க­பூர்­வ­மான பங்­க­ளிப்பை செய்ய முன்­வ­ர­வேண்டும்.

ஏற்­க­னவே தொழில் அமைச்சு முதலா­ளிமார் சம்­மே­ள­னத்­துடன் இந்த விவ­காரம் தொடர்பில் இரண்டு சுற்று பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி ஒரு ஆரோக்­கி­ய­மான தலை­யீட்டை மேற்­கொண்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். ஆனால் இத்துடன் நிறுத்திவிடாமல் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் வரை அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிடவேண்டியது அவசியமாகும்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் காணப்படுகின்ற துயர்மிக்க வரலாற்றுக்கு முடிவு கட்டவேண்டியது அவசியமாகும். அந்த மக்களின் நியாயமான சம்பள அதிகரிப்புக்கு வழிவகுக்கவேண்டியது கட்டாயம். தொடர்ந்து அந்த மக்கள் வேதனையுடன் வாழும் நிலைக்கு இட்டுச்செல்லக்கூடாது. தோட்டக் கம்பனிகள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று கூறி மக்களின் நியாயமான சம்பள உயர்வை வழங்காமல் விட்டுவிடக்கூடாது. நடைமுறையில் இருந்த கூட்டு உடன்படிக்கை காலாவதியாகி நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அதனை தொடர்ந்தும் இழுத்தடித்துக்கொண்டிருக்காமல் இந்த விடயத்துக்கு உடனடியாக தீர்வைக்காண அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் தமது பங்களிப்பை செய்ய முன்வரவேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம்.


நன்றி- வீரகேசரி

தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான  பேச்சுவர்த்தை கடந்த புதன் கிழமை 15-07-2015 கொழும்பு தொழில் அமைச்சில் தொழில் அமைச்சர் நாவின்ன தலைமையில் இடம்பெற்றது. 

பேச்சுவார்த்தையின்போது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் பங்குபற்றியிருந்தனர். 

பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 450 ரூபாயிலிருந்து 510 ரூபாயாக அதிகரிக்க முடியுமென முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்ததற்கமைய தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 510 ரூபாவாகவும்,; ஊக்குவிப்புத் தொகையாக 40 ரூபாயும் வரவுத்தொகையாக 140 ரூபாயும் ஊழியர் சேமலாப நிதியுடன் சேர்த்து மொத்தமாக 766 ரூபா வழங்குவதாக தெரிவித்துள்ளமையை இ.தொ.கா மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள்  ஏற்றுக்கொள்ளவில்லை என தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் எஸ் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ளப்படும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டொப்பந்த பேச்சுவார்த்தை, கடந்த 2013 ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்றது.   இப்பேச்சுவார்த்தையின் உடன்படிக்கை 2015 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை  ஏப்ரல் 24ஆம் திகதியும் இரண்டாவது பேச்சுவார்த்தை  மே 18, மூன்றாவது பேச்சுவார்த்தை ஜூன் 22,  நான்காம்கட்ட பேச்சுவார்த்தை ஜூலை 2ம்  நடைபெற்றது. இம்முறை நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் அவை எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் தோல்வியில் முடிவடைந்தன. 

இதனையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த 06-07-2015 முதல் 1000 ரூபா வை வலியுறுத்தி மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தை தொடர்ந்ததையடுத்து தோட்ட நிர்வாகங்களும் பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.

இறுதிநாள் பேச்சுவார்த்தையின் போது இ.தொ.கா கடந்த ஒருவார காலமாக தொழிலாளர்களின் மெதுவாக வேலை செய்த நாட்களுக்கான சம்பளத்தை வழங்குமாறு கோரியதுடன். சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை தேர்தல் முடிந்த பிறகு மேற்கொள்ள கோரியுள்ளனர். முதலாளிமார் சம்மேளனம் இதற்கும் இணங்காததால் மீண்டும் பேச்சுவார்த்தை திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.