Thursday, September 29, 2016

சம்பள உயர்வுகோரி மலையகமெங்கும் போராட்டம்


சம்­பள அதி­க­ரிப்பை வலி­யு­றுத்தி தோட் டத் தொழி­லா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற எதிர்ப்புப் போராட்டம் மற்றும் ஆர்ப்­பாட்­டங்­களின் தொடர்ச்­சி­யாக நேற்று புதன்­கி­ழமை மூன்­றா­வது நாளாகவும் வீதி­களை மறித்தும் டயர்­களை எரித் தும் ஒப்­பாரி ஓல­மிட்டும் பேர­ணி­களை நடத்­தியும் தமது எதிர்ப்­பி­னையும் ஆதங்­கத்­தி­னையும் கவ­லை­யையும் தோட்டத் தொழிலாளர்கள் வெளிப்­ப­டுத்­தினர்.  
நுவ­ரெ­லியா மாவட்­டத்தின் அட்டன் நக­ரத்திற்­குட்­பட்ட தோட்­டங்கள், கொத்­மலை நானு­ஓயா, கண்டி மாவட்­டத்தில் பு­ஸல்­லாவை பிர­தேச பெருந்­தோட்­டங்­களைச் சேர்ந்த தொழி­லா­ளர்­களே இவ்­வாறு எதிர்ப் புப் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்.  
தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வாக  தோட்டத் தொழிலில் ஈடு­ப­டாத பொது­மக்­களும் முச்­சக்­க­ர­வண்டி சார­தி­களும் மற்றும் சமூக நலன் விரும்­பி­களும் இணைந்து கொண்டு கடு­மை­யான எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தினர். இந்த சந்­தர்ப்­பத்தில் வீதி­  
களை மறித்து ஆர்ப்­பாட்டம் நடத்­திய அதே­வேளை டயர்­க­ளையும் எரித்து தமது எதிர்ப்­பினை வெளிக்­காட்­டினர்.  
இதே­வேளை தமது கவ­லையை வெளிப்­ப­டுத்தும் முக­மாக தொழிலாளர்கள் ஒப்­பாரி வைத்து ஓல­மிட்­ட­துடன் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­திற்கு கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைத்­தனர். அத்­துடன் தோட்ட முகா­மை­யா­ளர்­க­ளிடம் மக­ஜர்­க­ளையும் கைய­ளித்­தி­ருந்­தனர்.
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திக­தி­யுடன் காலா­வ­தி­யான கூட்டு ஒப்­பந்தம் 17 மாதங்கள் கடந்தும் புதுப்­பிக்­கப்­ப­டாமை, சம்­பள அதி­க­ரிப்­புக்கு முத­லா­ளிமார் சம்­மே­ளனம் தொடர்ச்­சி­யாக மறுப்பு தெரி­வித்து வரு­கின்­றமை மற்றும் பேச்­சு­வார்த்­தை­களில் எந்­த­வி­த­மான முன்­னேற்­றங்­களும் காணப்­ப­டாமை, அதி­கா­ரி­க­ளி­னதும் சம்­பந்­தப்­பட்­டோ­ரி­னதும் அச­மந்தப் போக்கு ஆகி­ய­வற்­றிற்கு எதிர்ப்புத் தெரி­வித்தே இவ்­வாறு தொடர்சசி­யான ஆர்ப்­பாட்­டங்­களை தொழி­லா­ளர்கள் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.
அந்த வகையில் புஸல்­லாவை பிர­தே­சத்தில் கட்­டு­கித்­துல, ஹெல்­பொட, பெரட்­டாசி, மெல்போர்ட், சோகம, சங்­கு­வாரி, பிளக்­போரஸ்ட், டெல்டா ஆகிய தோட்­டங்­களில் போராட்­டங்­க­ளையும் பேர­ணி­க­ளையும் நடத்­திய தோட்டத் தொழி­லா­ளர்கள் 1000 ரூபா சம்­ப­ளத்தை வழங்­கு­மாறும் கம்­ப­னியின் ஒடுக்­கு­முறை ஒழிக்­கப்­பட வேண்டும் என்றும் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு வாக்­க­ளித்­தது சம்­பளம் கேட்டு போரா­டு­வ­தற்கா? என்றும் கோஷங்­களை எழுப்­பினர். ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் கூறிய உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­ற வேண்டுமென்றும் தமக்கு நியா­ய­மான சம்­பளம் கிடைக்கும் வரையில் தமது போராட்­டத்தை கைவிடப்போவ­தில்லை என்றும் தொழிலாளர்கள் தெரி­வித்­தனர்.
ஒப்­பாரி
இது இவ்­வா­றி­ருக்க ஹட்டன் - பொக­வந்­த­லாவை வீதியை மறித்து தமது எதிர்ப்­பினை வெளியிட்ட பொக­வந்­த­லாவை, நோர்வூட் சென்ஜோன் டிலரி, வென்சர், டிக்­கோயா பிர­தேச தொழி­லா­ளர்­களும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர். டின்சின் தோட்டத் தொழி­லா­ளர்கள் தமது எதிர்ப்­பி­னையும் கவ­லை­யையும் வெளிப்­ப­டுத்தும் முக­மாக ஒப்­பாரி வைத்­த­தையும் அவ­தா­னிக்க முடிந்­தது.
இதே­வேளை வன­ராஜா தோட்டத் தொழி­லா­ளர்கள் பிர­தான வீதியில் சுலோ­கங்­களை ஏந்தி கோஷங்­களை எழுப்பி பேர­ணி­யாக சென்று தமது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தினர். அத்­துடன் தமது கோரிக்­கை­களை நிறை­வேற்­று­மாறும் வலி­யு­றுத்தி வன­ராஜா தோட்ட முகா­மை­யா­ள­ரிடம் மகஜர் ஒன்­றையும் கைய­ளித்­தனர்.
மேலும் செஞ்ஜோன் டிலரி மேற்­பி­ரிவு, கியூ தோட்ட மக்கள் தமது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்தி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­போது அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக முச்­சக்­கர வண்டி சார­தி­களும் இணைந்து கொண்டு ஆர்ப்­பாட்­டத்தை முன்­னெ­டுத்­தனர்.
மலை­யக மக்­க­ளுக்கு பொய்­யான வாக்­கு­று­தி­களை அளித்து தொழி­லா­ளர்­களை ஏமாற்­று­வ­தாக தெரி­வித்த முச்­சக்­க­ர­வண்டி சார­திகள் பொக­வந்­த­லா­வை­யி­லி­ருந்து கியூ தோட்­டத்­திற்கு செல்லும் 4 கிலோ மீற்றர் வீதி நீண்­ட­கா­ல­மாக செப்­ப­னி­டாது குன்றும் குழி­யு­மாக காணப்­ப­டு­வ­தா­கவும் கோசம் எழுப்பி, டயர்­களை எரித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.
இதே­வேளை நல்­ல­தண்ணி பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட எமில்டன், லக் ஷ்­பான, சென்­அன்றூஸ், வாழை­மலை உள்­ளிட்ட தோட்­டங்­களைச் சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்­பட்ட தொழி­லா­ளர்கள் லக்ஷ்­பான தோட்ட தொழிற்­சா­லைக்கு முன்­பாக திரண்டு பதா­கை­களை ஏந்தி கோஷம் எழுப்பி தமது எதிர்ப்­பினை வெளியிட்­டனர். சம்­பள உயர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் சூளு­ரைத்­தனர்.
மேலும் நேற்று காலை 8.00 மணி­முதல் 10.00 மணி­வ­ரை­யான சுமார் இரண்டு மணி­நேர காலத்­திற்கு றதல்ல பிர­தான வீதியை மறித்து தோட்டத் தொழி­லா­ளர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இதனால் அங்கு பாரிய போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. இதன்போது கார்லபேக், லேங்டல், ஈஸ்டல், தம்பகஸ்தலாவ, சமர்செட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் இணைந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தமது வாழ்வாதார நிலைமைகளை வெ ளிப்படுத்தியதுடன் சம்பள அதிகரிப்பை உடனடியாக வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அத்துடன் தாம் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டால் போராட்டம் பாரியதாக அமையும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
நன்றி- வீரகேசரி