Thursday, October 29, 2015

மீரியபெத்தையில் மண்சரிவு ஏற்பட்டு இன்றுடன் ஒருவருடம் நிறைவு


அன்று காலை 7.35 மணி­யி­ருக்கும். ஹல்­த­முல்ல பிர­தேச செய­ல­கத்­துக்குட்­பட்ட மீரி­ய­பெத்த தோட்டம் காலை நேரத்­துக்கே  உரிய பர­ப­ரப்பில் இருந்­தது. பிள்­ளைகள் பாட­சாலை சென்று இருந்­தனர். பெரி­ய­வர்கள் பணிக்கு செல்ல ஆயத்­த­மாக இருந்­தனர். அந்தோ  பரி­தாபம். பாரிய மண்­ச­ரிவு ஒன்று திடீ­ரென ஏற்­பட்டு மீரி­ய­பெத்த என்ற கிரா­மத்­தையே அழித்­தது. பிள்­ளைகள் கதறி அழு­து­கொண்டு ஓடினர். எங்­குமே மரண ஓலங்கள் கேட்­டன.  பலர் மண்ணில் புதை­யுண்­டனர்.   சிலர் கழுத்­து­வரை மண்ணில் புதை­யுண்டு மீட்­கப்­பட்­டனர்.   ஆம் 37 உயிர்­களை இந்த மண்­ச­ரிவு காவு கொண்­ட­துடன் 75 வீடு­களும் கால்­ந­டை­களும் மண்­ணோடு புதைந்து போயின. முழு உல­கத்­தையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கிய அந்த சம்­பவம்  மீரி­ய­பெத்த மண்­ச­ரிவு என்று பதி­வா­கி­யது.  2014 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 29 ஆம் திகதி இடம்­பெற்­றது இந்த அனர்த்தம். அர­சியல் பிர­மு­கர்கள், ஏனைய தலை­வர்கள் என பலர் சொகுசு வாக­னங்­களில் தொட­ர­ணி­யாக அவ்­வி­டத்­திற்கு சென்று பார்­வை­யிட்­டனர். பரி­தாபப் பட்­டனர். நலன் விசா­ரித்­தனர். ஆறுதல் கூறினர். ஆணித்­த­ர­மாக வாக்­கு­று­தி­களை அள்ளி வழங்­கினர். ஏட்­டிக்குப் போட்­டி­யாக அடிக்கல் நாட்­டி­னார்கள். ஆனால் அவ்­வி­டத்தில் இருந்து சென்­ற­வர்கள் தான்...  இது­வரை அங்கு மீண்டும் செல்­லவும் இல்லை. கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றவும் இல்லை. ஒன்­றுமே நடந்­தே­றவும் இல்லை. அன்­றைய சோகம் இன்­னமும் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.
 
அனர்த்தம் இடம்­பெற்று ஒரு வரு­ட­மா­வ­தற்கு இன்னும் ஐந்து நாட்­களே உள்­ளன. முழு உல­கை­யுமே திரும்­பிப்­பார்க்க வைத்த அந்த இயற்­கையின் பேர­னர்த்தம் பல விட­யங்­களை வெளியில்  கொண்டு வந்­தது.  பதுளை மாவட்­டத்­தி­லுள்ள கொஸ்­லந்தை, ஹல்­தும்­முல்லை, மீரி­ய­பெத்த தேயிலைத் தோட்டத் தொழி­லா­ளர்கள் வசித்து வந்த முழுக் கிரா­மமே  மண்­ணுக்குள் புதை­யுண்டு போனது. 

மீரி­ய­பெத்தை என்ற பெயர் மாத்­தி­ரமே எஞ்­சி­யி­ருக்க அந்த இடமே இருந்­ததற்­கான அறி­கு­றியும் மண்­ச­ரிவு ஏற்­பட்­ட­தற்­கான தன்­மையும் இல்­லாமல் போயுள்­ளது.

ஆனால் மண்­ச­ரிவில் தனது உடன்­பி­றப்­புகள், உட­மைகள், சொந்­தங்­களை இழந்த அந்த உற­வு­களின் சோக வாழ்க்கை,  'முகாம்' என்ற பெயரில் உள்ள 200 வருட பழை­மை­யான நான்கு மாடி­களைக் கொண்ட காற்று உட்­பு­காத பல ஓட்­டை­களைக் கொண்ட தேயிலை தொழிற்­சா­லையில், எட்டு தர பத்­தடி ( 8 X10) அறைக்குள் ஏமாற்றம், துன்­பங்கள், துய­ரங்கள் நிறைந்த  சோகம் நிறைந்­த­தாக    தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

2004 ஆம் ஆண்டில் ஏற்­பட்ட சுனாமி அனர்த்­தத்­திற்குப் பின்னர், இலங்­கையில் பல  உயிர்­களைக் காவு­கொண்டு பாரிய அழி­வு­களை ஏற்­ப­டுத்­தி­யது இந்த இயற்கை அனர்த்தம். இரத்­தத்தை வியர்­வை­யாக சிந்தி அவர்கள் நேசித்த மண்ணே 37 பேரை உயி­ருடன் விழுங்­கிக்கொண்­டது. 
சிலர் சட­லங்­க­ளா­கவும்   சிலர் சிதைந்த மனித உறுப்­புக்­க­ளா­கவும் மீட்­கப்­பட்­டனர்.  மரண ஓலம் மாத்­தி­ரமே மிஞ்­சி­யது. மீரி­ய­பெத்த மக்­களின் வாழ்வில் விடியல் ஏற்­பட வேண்டும் என்­ப­தற்­காக, குழந்­தைகள், இளை­ஞர்கள், யுவ­திகள் தாய் தந்­தை­யர்கள் என பலரின் ஆத்­மாக்கள் இன்­னமும் மண்­ணுக்குள் புலம்­பி­கொண்­டி­ருக்­கின்ற போதிலும்   இன்­னமும் அவர்­களின் விடிவு கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது.

காலம் மாறி­விட்­டது. ஆனால் அன்று   மீரி­ய­பெத்த மக்­க­ளுக்கு ஏற்­பட்ட துன்ப துயரத்­துக்கு இன்னும் மாற்றம் ஏற்­ப­ட­வில்லை. இந்த உலகம் விசித்­தி­ர­மா­னது.  உலகில் அடிக்­கடி இடம்­பெறும் நிகழ்­வு­களும் விசித்­தி­ர­மா­ன­தா­கவே அமைந்து விடு­கின்­றன. இதுதான் நிய­திபோல் தெரி­கின்­றது. அது­போ­லவே  ஒரு வரு­ட­மா­கியும் இந்த மக்­களின் அடிப்­படை தேவை இன்னும் நிறை­வேற்­றப்­ப­டாமல் உள்­ளது.  மீரி­ய­பெத்த மண்­ச­ரி­வினால் பாதிக்­கப்­பட்ட சுமார் 75 குடும்­பங்­க­ளுக்கும் இது­வரை வீடுகள் நிர்­மா­ணித்து கொடுக்­க­வில்லை என்­பதே இங்கு மிக முக்­கி­ய­மான விட­ய­மாக காணப்­ப­டு­கின்­றது. யாரையும் குறை கூறு­வ­தற்கு நாம் விழைய­வில்லை. ஆனால் அந்த மக்­க­ளுக்கு ஒரு வரு­ட­கா­லத்தில் 75 வீடு­களை நிர்­மா­ணித்து கொடுக்­க­வில்­லையா என்ற கேள்­வியை மட்டும் எழுப்­பு­கின்றோம்.         (முகாமில் 93 குடும்­பங்கள் இருப்­ப­தாக அங்­குள்ள மக்கள் கூறு­கின்­றனர்) 

வீடு­களை இழந்த சுமார் 93 குடும்­பங்கள் 3 மாத­கால பாட­சாலை முகாம் வாழ்க்­கைக்கு பின்னர் மாகந்த தேயிலை தொழிற்­சா­லையில் 53 அறை­களில்  தங்க வைக்­கப்­பட்­டனர்... இன்னும் அங்­கேயே உள்­ளனர். இந்­நி­லையில் அவர்­கள் எதிர்­கொள்­கின்ற துய­ரங்கள் குறித்து ஆராய்­வ­தற்கு நாம் நேர­டி­யா­கவே அந்த தொழிற்­சா­லைக்கு சென்றோம்.


தொழிற்­சா­லைக்கு உட்­பி­ர­வே­சிக்­கும்­போதே  எமக்கு அதிர்ச்­சி­தரும் பல நிகழ்­வு­களை எதிர்­கொண்டோம். தொழிற்­சா­லையின் கீழ் தளத்தில் 53 அறைகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. 10X8 அடி பரப்­ப­ளவு கொண்ட ஒரு அறையில் எட்டு பேர், ஏழு பேர், ஐந்து பேர் என சொல்­லொணா துய­ரங்­க­ளுடன் வாழ்ந்து வரு­கின்­றனர். ஒரு அறையில் ஒன்­றுக்கு மேற்­பட்ட குடும்­பங்­களும் வாழ்­கின்­றன. முகா­முக்குள் பிர­வே­சித்­ததும் மின்­சார  வெளிச்­சத்­திலும் முகாம் இரு­ளாக காட்­சி­ய­ளித்­ததை உணர்ந்தோம். ஒரு­வேளை அங்கு தங்­கி­யுள்ள மக்­களின் மன வேத­னையால் அந்த மக்­களின் முகங்­களில் காணப்­பட்ட சோக உணர்வு எமக்கு இந்த இருள் மய­மான தோற்­றத்தை காட்­டி­யி­ருக்­கலாம். (10X8)  அறையில் எட்டு பேர் சமைத்து சாப்­பிட்டு படுத்­து­றங்­கு­வது என்­பது சாத்­தி­யமா? 

 

இளைஞர் யுவ­தி­க­ளுடன்  பிள்­ளை­க­ளுடன் புதி­தாக திரு­மணம் முடித்த தம்­ப­தி­க­ளையும் வைத்­து­கொண்டு ஒரு­சில குடும்­பங்கள் எதிர்­கொள்ளும் அசௌ­க­ரி­யங்கள் மிகவும் பரி­தா­ப­மாக இருந்­தன. எங்­க­ளு­டைய வேத­னையும் பிரச்­சி­னையும் எவ­ருக்கும் புரி­ய­வில்­லையே என்ற அந்த மக்கள் ஏக்­கத்­துடன் எம்மை பார்க்­கின்­றனர்.
 
நீங்­க­ளா­வது நாம் படும் வேத­னையை எடுத்து கூறி எமக்கு வீடு கிடைக்க ஆவன செய்­வீர்­களா என அந்த மக்கள் ஒரு­வித எதிர்­பார்ப்பு கலந்த ஏக்­கத்­துடன் எம்­முடன் கருத்து பகி­ரு­கின்­றனர்.
ஒரு இளம் பெண் எட்டு குடும்ப உறுப்­பி­னர்­க­ளுடன் (10X8) அடி பரப்­ப­ளவை கொண்ட அறையில் வாழும் போது எவ்­வாறு அசௌ­­க­ரி­யங்­களை எதிர்­கொள்வார் என்­பது நாம் இந்த கட்­டு­ரையில் எழுதி புரி­ய­வைக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. அவர்கள் என்ன கூறு­கி­றார்கள் என்று பார்ப்போம். 
 
பெற்­றோரை இழந்த கஜினி 

 

மீரி­ய­பெத்த அனர்த்­தத்தில் தனது தந்­தையும் தாயையும் இழந்த கஜினி தனது உணர்­வு­களை பகிர்­கையில், 
நான் ஒன்­பதாம் வகுப்பு படிக்­கிறேன். மீரி­ய­பெத்த மண்­ச­ரி­வுல அம்மா அப்பா ரெண்டு பேரும் இறந்து போய்ட்­டாங்க. இப்ப நான் தாத்தா பாட்டி கூட தான் இருக்­கிறேன். தம்­பியும் என்­னோட இருக்­கிறான். மாகந்த தெழிற்­சா­லை­யில தான் இருக்­கிறோம். எங்­க­ளுக்கு இன்னும் வீடு கட்டி கொடுக்­கல. வீட்­டுல கஷ்டம்.   அது­னால ஒழுங்கா படிக்க முடி­யல. தாத்தா பாட்­டிக்கு அடிக்­கடி வருத்தம் வரும். நான் தான் சமைக்­கனும். காலை­யில நாலரை  மணிக்கு எழும்பி சமைச்­சிட்டு தான் பாட­சா­லைக்கு போவேன். புது உடுப்­புகள் வாங்­கவும் வழி இல்ல. ஆரம்­பத்­தில நிறைய பேர் உதவி செய்­தாங்க. ஆனால் இப்ப நாங்க ரொம்ப கஷ்டப் படுறோம். எங்­கள வந்து பாக்­கு­ற­வங்க புத்­த­கங்­கள வாங்கி தரு­வாங்க. அர­சாங்கம் கொடுக்கிற கூப்­பன்ல தான் நாங்க வீட்­டுக்கு தேவை­யான பொருட்­கள வாங்­குறோம். சாப்­பாட்­டுக்கும் கஷ்டப்படுறோம். மாதம் ஐயா­யி­ரத்து இரு­நூறு ரூபா­வுக்கு தான் பொருட்கள் கிடைக்கும். அதுல நாங்க நாலு பேரும் சாப்­பு­டனும். நான் என்னா கேக்­கு­றனா எங்­க­ளுக்கு முதல்ல வீடு கட்டி தாங்க. படிக்­கு­ற­துக்கு உதவி செய்­யுங்க. சாப்­பாட்­டுக்கு உதவி செய்­யுங்க என்­கிறார் ஏக்­கங்­க­ளுடன்.. 

அத்­துடன் மீரி­ய­பெத்த அனர்த்தம் ஏற்­பட்­டதை விப­ரித்த கஜினி

மண்­ச­ரிவு நடந்த அன்­னைக்கு நான் வீட்­டுல இருந்தேன். அம்மா அப்­பாவும் வேலைக்கு போக தயா­ரா­னாங்க. தம்­பியும் நானும் அன்­னைக்கு பாட­சாலை போகல. அப்ப மண்­ச­ரிவு வரு­துனு சத்தம் கேட்­டுச்சு. நான் வெளி­யில போய் என்­னானு பாத்தேன். அப்­பறம் வெளியில் இருந்த அம்­மாவ பார்த்து, அம்மா சிலிப்பு வருது வேலைக்கு போகா­திங்­கனு சொன்னேன். அப்ப நான் வெளியில் இருந்த அம்­மாவ கூப்­புட்டேன். . எங்­கட  பிறப்பு சான்­றி­தழை  அம்மா எடுத்­து­கிட்டு இருந்த நேரத்­துல அம்­மாவும் அப்­பாவும் மண்­ணுக்­குள்ள போயிட்­டாங்க. நாங்க ரோட்­டுல இருந்து கத்­துனோம். உடனே   மண்ண தோண்­டி­யி­ருந்தா அப்பா மீட்டு இருக்­கலாம். அப்­பறம் ஏழு நாளைக்கு பிறகு இறந்து போன அப்­பாட முகத்த பார்த்தோம். அப்­புறம் அம்­மாட உடம்ப எடுக்க வேணாம்னு சொல்­லிட்டோம் என்றார் கண்ணீர் மல்க..  
 
கஜி­னியின் சகோ­தரன் 
 
கஜி­னியிள் சகோ­தரன் சுரேஸ் குமார் எம்­முடன் பேசு­கையில் எங்­க­ளுக்கு எந்த உத­வியும் இல்ல. உதவி செய்­யுறம்ணு சொன்­னாங்க. ஆனால் செய்­யல. கஷ்டப்படுறோம் என்று உருக்­க­மாக கூறினார். 

காம­தேவன் என்­பவர் குறிப்­பி­டு­கையில் 
 
இந்த முகாம்ல 93 குடும்­பங்கள் உள்­ளன .  ஆனால் 53  அறை­­களே உள்­ளன.  அவற்றை பிரித்­துக்­கொ­டுத்­துள்­ளனர். அனர்த்தம் ஏற்­பட்ட பின்னர் ஆரம்­பத்­துல  இரா­ணுவம்  சாப்­பாடு சமைச்சு கொடுத்­தார்கள். இப்ப கூப்பன் கிடைக்­கிது.   கூட்­டு­றவு நிலை­யத்­துக்கு  சென்று  பொருட்­கள வாங்­கிறோம். நானும் என்­னோட மனை­வியும் அம்­மாவும்; வீட்­டுல இருக்­கிறோம். மலை­ய­கத்தில் எத்­த­னையோ அர­சி­யல்­வா­திகள் இருக்­காங்க. கொழும்­பி­லி­ருந்து ஊவா வரை  அர­சி­யல்­வா­திகள் இருக்­காங்க. யுத்­தத்தில்   பாதிக்­கப்­பட்ட  மக்­க­ளுக்கும்  அனர்த்­தங்­களில் பாதிக்­கப்­பட்ட  மக்­க­ளுக்கும்  உத­விகள் செய்­யலாம். ஆனால் எங்­களை பொறுத்­த­வரை  மீரி­ய­பெத்த  கிரா­மமே  அழிந்­து­போ­னது. எங்­கள அநா­த­ரவா விட்­டு­விட்­டார்கள்.  எங்­கள மறந்­து­டாங்க. அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எங்கள் மீது கரி­சனை ஏற்­ப­ட­வில்லை.  இதுவே  சகோ­தர இனத்­துக்கு ஏற்­பட்­டி­ருந்தால் இந்த நிலை வந்­தி­ருக்­குமா?  37 உயிர்­களை காவு­கொ­டுத்து இந்த முகாமில் தங்­கி­யி­ருக்­கின்றோம்.  வல்­ல­ரசு நாடு­க­ளினால் வழங்­கப்­பட்ட நிதியில் எங்­க­ளுக்கு  வீடு­களை கட்­டிக்­கொ­டுத்­தி­ருக்­கலாம்.  ஆனால் எங்­களின் பிர­தி­நி­தி­களின் கண்­டு­கொள்­ளாத தன்­மை­யினால் எங்­க­ளுக்கு இன்னும் வீடு கிடைக்­க­வில்லை. உடமை உயிர்­களை  இழந்த குடும்­பங்கள் உள்­ளன.  எங்­க­ளுக்கு 125 அளவில் வீடுகள் தேவை­யாகும். இப்ப  மகல்­தெ­னி­யவில் வீடு கட்­டு­ராங்க.  ஆனால் ஒரு வரு­ட­மா­கியும் வீடு கிடைக்­கல.  கேட்டா  பொருட்கள் வர­லனு சொல்­ராங்க. அண்­மையில் தோட்­டங்­களில் சில புதிய வீடுகள்  நிர்­மா­ணிக்­கப்­பட்டு வழங்­கப்­பட்­டதை கண்டோம்.  பாரா­ளு­மன்றத் தேர்தல் காலத்தில் அர­சி­யல்­வா­திகள்  வந்து பார்த்­தாங்க.   தேர்­த­லுக்கு பின்னர்  எவரும் வர­வில்லை. வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. மலை­யக அர­சி­யல்­வா­திகள் தமி­ழி­னத்­துக்­காக சேவை­யாற்­ற­வேண்டும். பனை மரத்­தி­லி­ருந்து விழுந்­த­வனை மாடு முட்­டி­ய­தைப்­போன்று  அனர்த்தத்­துக்கு உட்­பட்ட எம்மை எல்லா அர­சி­யல்­வா­திகளும் கைவிட்­டுட்­டாங்க என்றார். 
 
வயோ­திபர் வயோ­திபர் ஒருவர் எம்­மிடம் கருத்துப் பகிர்­கையில் 
 
எங்­கட உற­வி­னர்கள் எட்டுப் பேர் மீரி­ய­பெத்த மண்­ச­ரிவில் இறந்­து­பொ­யிட்­டாங்க.   இப்ப நாங்க கஷ்­டப்­ப­டுறோம்.  அர­சாங்கம்  எங்­கள மறந்­தி­ருச்சு.    வீடு  கிடைக்­கா­த­துக்கு காரணம் அர­சாங்­கம்தான்.    900  ரூபா­வுக்கு கூப்பன் தரப்­ப­டு­கின்­றது. 900  ரூபா­வுல  என்ன வாங்­கலாம். இங்க வய­சு­போ­ன­வர்­க­ளுக்கு ரொம்ப கஷ்­டமா இருக்கு. மீன் இறைச்சி சாப்­பிட வழி இல்ல என்றார். 

சரோ­ஜினி என்ற பெண் கருத்து வெளி­யி­டு­கையில் 
 
மண்­ச­ரி­வுல பாதிக்­கப்­பட்டு   ஒரு வரு­ட­மாக இங்க இருக்­கிறோம்.  ஒரு அறையில்  ஆறு பேர் இருக்­கின்றோம்.  கணவர் இல்லை. இங்க ரொம்ப கஷ்­டமா இருக்கு. மழை பெய்­யும்­போது   தண்ணி வரும். பூனா­கல பாட­சா­லையில் 3 மாதங்கள் இருந்தோம். வீடு கட்டி தாறெனு சொன்­னாங்க. ஆனால் இன்னும்  தர­வில்லை.  இப்ப  ஒரு வரு­ட­மா­கப்­போ­குது. இன்னும் முடிவு கிடைக்­கல.  40 வீடு 50 வீடுனு    பல­வாறா  சொல்­ராங்க. எங்­களை  போட்டு வதைக்­கி­றாங்க. நாங்க எங்­கப்போய் நிக்­கி­றது?  55  அறை­களில் 93 குடும்­பங்கள் இருக்­காங்க. ஆனால் இப்ப ஏதொ 75 வீடு கட்­டு­றாங்­களாம்.  சிறிய  அறையில்  பலர் இருக்கோம். 20 வயது   மகன் உள்ளார். மரு­மகள் இருக்­காங்க.  இங்­கேயே  சமைத்து சாப்­பிட்டு  இங்­கேயே தூங்­கிறோம். இந்த மழை­யில  சமைக்க முடி­யுமா?  (எம்மை பார்த்து கேள்­வி­யெ­ழுப்­பு­கிறார்)  இன்னும் வீடு  இல்லை.  வார­வுங்க எல்லாம்  எங்­கள கொழப்­பி­வி­டு­றாங்க.  பைத்­தியம் பிடிச்சி  நோயும் வருது.  யோசிச்சு  நோய் வருது. அர­சாங்கம்  உடனே வீடு கட்டி தரனும். எல்லா அர­சாங்­கமும்  இத சொன்­னாங்க. ஆனால் வீடு கிடைக்­கல.    தய­வு­செய்து வீட்ட தாங்க  என்றார். 

வயோ­திப தாய் ஒருவர் கருத்து பகி­ரு­கையில் 
 
இங்க இந்த முகாம்ல ஒரு அறை­யில எட்டு பேர் தங்­கி­யி­ருக்­குறோம். ஒரு சின்ன ரூம்ல எட்டு பேர் சமைச்சி சாப்­புட்டு வாழ முடி­யுமா. நீங்­களே யோசித்து பாருங்க. எங்க அம்­மா­வுக்கு கண்ணு தெரி­யாது. எங்­க­ளுக்கு உள்ள பிர­தான பிரச்­சின வீடுதான். அத முதல்ல நிறை­வேற்றி தாங்க. வீட்ட கட்டி கொடுத்தா நாங்க மரக்­கறி உண்­டாக்­கி­யா­வது பொழச்­சிக்­குவோம். எங்­க­கிட்ட ஆடு மாடு எல்லாம் அதி­க­மாக இருந்­துச்சு. எல்­லாத்­தையும் இழந்­துட்டோம். எங்­க­ளுக்கு பொருள் காசு என ஒன்றும் வேணாம். வீட்ட மட்டும் கட்டி தாங்க. இப்ப நாங்க எட்டு பேர் ஒரு ரூம்ல வாழ்றோம்.  எட்டு பேருக்கும் கிழ­மைக்கு 1500 ரூபா கூப்பன் கிடைக்­குது. 1500 ரூபா­வுல வாழ முடி­யுமா. சரி­யான மாதிரி கஷ்டம் படுறோம். தம்பி ஒரு ஆள் மட்டும் தான் வேலைக்கு போறாரு. என்னா பண்­ணு­ற­துனு எங்­க­ளுக்கு புரி­யல்ல. வீட கட்டி கொடுத்­து­திட்­டிங்­கனா நாங்க எங்­க­யா­வது போயிட்டு புழச்­சிக்­குவோம் என்­கிறார் சற்று கோபத்­துடன்... 

மாரி­யாத்தா மாரி­யாத்தா என்ற பெண் தனது உள்ள குமுறலை வெளிப்­ப­டுத்­து­கையில், 
 
நாங்க எட்டு பேர் ஒரு ரூம்ல இருக்­குறோம். நான் என்ட மகன் பேர பிள்­ளைக எல்லாம் ஒன்னா தான் இருக்­கிறோம். 1500 ரூபா கூப்பன் கிடைக்­குது. அது எங்­க­ளுக்கு போதாது. சாப்­பாட்­டுக்கு கஸ்டம் படுறோம்.என்­னோட கணவர் மண்­ச­ரி­வுல இறந்­துட்­டாரு. நாங்க எல்­லாரும் கஷ்டம் படுறோம். எப்­ப­டி­யா­வது எங்­க­ளுக்கு வீட்ட தரனும் என்றார்.
 
கோகிலா கோகிலா என்ற பெண் கருத்து வெளி­யி­டு­கையில்,
 
மண்­ச­ரிவு வந்­தப்­பபோ நாங்க எல்லாம் மண்­ணுள்ள இறு­கிட்டோம். கழுத்து வரைக்கும் மண்­ணுக்­குள்ள போயிட்டோம். அப்­புறம் எங்­கள மீட்டு எடுத்து வைத்­தி­ய­சா­லையில் சேத்­தாங்க. நான் உயி­ரோட இருந்­தது அன்­டைக்கு பின்­னேரம் தான் எல்­லாத்­துக்கும் தெரியும். இப்ப நாங்க வீடு இல்­லாம இந்த முகாம்ல இருக்கோம். நாங்க ஒரு அறை­யில  ஐந்து பேர் இருக்­கிறோம். சமைக்­கு­றது சாப்­பு­டு­றது தூங்­கு­றது எல்­லாமே ஒரு ரூம்ல தான் என்றார்.
 
விஜ­ய­கு­மாரி விஜ­ய­கு­மாரி என்ற பெண் குறிப்­பி­டு­கையில், 
 
நாங்க ஏழு பேர் இந்த ரூம்ல இருக்­கிறோம். ஒரு ரூம்ல இருந்து சொல்­லொணா துன்­பங்­கள அனு­ப­விக்­கின்றோம். மழை பெய்தா உள்­ளுக்கு தண்ணி வந்­துரும். இர­வைக்கு தூங்­கவும் முடி­யாது. ரோட்­டுல போற தண்ணி எங்க ரூம்­குள்ள வந்­துரும். என்­னோட கணவர் வேலை செய்­யு­றாரு. நாங்க கூப்பன் நிவா­ர­ணத்­துல தான் வாழுறோம். மண்­ச­ரிவு வந்து ஒரு வரு­ச­மாச்சி. இன்னும் வீடு கிடைக்­கல. என்­னோட கோரிக்கை என்­ன­வென்றால் வீடு இல்­லாம நாங்க படுற கஷ்ட்­டத்த புரிஞ்­சு­கிங்க. எங்­க­ளுக்கு சீக்­கிரம் வீட்ட கட்டி தாங்க. மூன்று புள்­ளைக படிக்­கி­றாங்க. அவர்கள் சுதந்­தி­ர­மாக படிப்­ப­தற்கு வீடு ரொம்ப முக்­கியம். இந்த முகாம் 55 அறைகள் தான்  இருக்­குது. ஆனால் 93 குடும்­பங்கள் உள்­ளன என்றார்  பாரிய எதிர்­பார்ப்­புடன்... 


சாந்தி சாந்தி என்ற யுவதி கருத்து வெளி­யி­டு­கையில், 
 
இங்க ஒரு அறையில் நானும் என்­னோட அம்­மாவும் இருக்­கிறோம்;. எங்க தாத்தா பாட்டி அப்­பாவின் சகோ­தரி மண்­ச­ரி­வுல இறந்து போயிட்­டாங்க. இந்த ஒரு வரு­சமா இப்­படி நாதி­யற்ற வாழ்க்கை வாழ்­கின்றோம். மூன்று மாதத்தில் வீடு கட்டி தாரம் என்று சொன்­னாங்க. ஆனால் இன்னும் கட்டி தரல. உரிய பதிலும் கிடைக்­காம இருக்­குது. இந்த முகாம்ல அதிக நாளா இருக்­கிறோம். ஒவ்­வொரு நாளும் ஒவ்­வொரு வித­மான பிரச்­சி­னைக்கு முகம் கொடுக்­கின்றோம். இப்­படி பல்­வேறு துன்பத் துய­ரங்­களை எதிர்­கொள்­கின்ற போது அந்த மண்­ச­ரி­வுல சிக்கி செத்து போயி­ருக்­க­லா­முனு தோனுது. நாங்க அந்த மண்­ச­ரி­வுல இருந்து மீண்டு வந்­தத நினைச்சு சந்­தோசம் பட முடி­யாம இருக்கு. மண்­ணோட மண்ணா போயி­ருக்­க­லாம்னு தோனுது. காரணம் அந்­த­ள­வுக்கு நாங்க இங்க பிரச்­சி­னை­கள எதிர்­கொள்­கின்றோம்.   எனவே தயவு செய்து பாது­காப்­பான இடத்தில் வீடு­களை கட்டி தாங்க. 
 
சுபாஷினி சுபாஷினி என்ற பெண் கருத்து வெளி­யி­டு­கையில்.
 
நாங்க இங்க ஒரு ரூம்ல என்­னோட மாப்­புள கொழுந்­தனார் நாத்­தனார் மாமியார் என 7 பேர் இருக்­கின்றோம். அதுக்­குள்­ளயே சமைச்சி சாப்­புட்டு தூங்­குறோம். ஒரு அறைக்குள் இருக்கும் போது சரி­யான அசெ­ள­க­ரி­ய­மாக இருக்­குது. தூங்­கு­ற­துக்கு கூட இடம் இல்லை. சில நேரங்­களில் வேறு குடும்­பங்­களின் அறை­களில் போய் தூங்­குவோம். அர­சி­யல்­வா­திகள் வந்­தாங்க போனாங்க ஆனால் ஒன்­றுமே நடக்­கல. கூரையில் ஓட்டை. மழை பெய்யும் போது தண்ணி வருது. தயவு செய்து இங்க நாங்க படுற கஷ்­டத்த அதி­கா­ரிகள் நேர்ல வந்து பாருங்க. அர­சாங்­கத்­துல கிடைக்­கிற கூப்பன் மக­னுக்கு பால்மா வாங்­கு­ற­துக்கே போதாது. அர­சாங்­கத்­து­கிட்ட வீட்ட தான் கேக்­குறோம். மாப்­பிளை வீட்­டுக்கு வந்தா எனக்கு அவ­ருக்கு பக்­கத்­துல போய் கதைக்க கூச்­ச­மாக இருக்­கின்­றது. அந்­த­ள­வுக்கு ஒரு ரூம்­குள்ள நாங்க கஷ்டம் படுறோம். 

இத­னை­ய­டுத்து நாங்கள் மீரி­ய­பெத்­தையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதி­தாக வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­படும் மக்­கள்­தெ­னிய என்ற இடத்­திற்கு சென்றோம். அந்த இடத்தில் 57 வீடுகள் கட்­டு­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. அதில் நான்கு வீடுகள் மாத்­திரம் கிட்­ட­தட்ட முழு­மை­யாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருந்­தன. மேலும் நான்கு வீடுகள் பகு­தி­ய­ளவில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டி­ருந்தன. எப்­போது தான் வீடு­களை கட்டி இந்த மக்­க­ளுக்கு வழங்­கப்­போ­கின்­றார்கள் என்ற சிந்­த­னை­யுடன் நாங்கள் அங்கு நின்று கொண்­டி­ருந்த போது, வீட்டு திட்­டத்தை நிர்­மா­ணிக்கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு பொறுப்­பான அதி­காரி கெப்டன் குமார எம்­மிடம் வந்தார்.
 
அவ­ரிடம் பேச்சு கொடுத்தோம்.  கெப்டன் குமார பேசு­கின்றார். 
 
இங்கு 57 வீடு­களை நிர்­மா­ணிக்க திட்­ட­மிட்­டுள்ளோம். வீடு­களை கட்­டு­வ­தற்கு மூலப் பொருட்கள் வந்­து­சேறும் அடிப்­ப­டை­யி­லேயே  நிர்­மாணப் பணி­களை முன்­னெ­டுக்­கின்றோம். நிர்­மாணப் பணியில் 100க்கும்  அதி­க­மான இரா­ணுவ வீரர்கள் ஈடு­பட்­டுள்­ளனர். எமக்கு மூலப்­பொ­ருட்கள் கிடைப்­பதில் தான் தாமதம் ஏற்­பட்­டது. சில மாதங்­களில் 57 வீடு­க­ளையும் நிர்­மா­ணித்து முடிக்­கவே முயற்­சிக்­கிறோம். தற்­போது பொருட்கள் வேக­மாக வந்து கொண்­டி­ருக்­கின்­றன. எனவே விரை­வாக வீடு­களை கட்­டி­கொ­டுக்க முயற்சி செய்­கின்றோம். தற்­போது மூலப்­பொ­ருட்கள் வரு­வதில் தடை இல்லை. தொடர்ச்­சி­யாக மழை பெய்­கி­றது.  அடுத்த மாதத்தில் இதை­விட மழை பெய்ய கூடும் என்­ப­தாலும் வீடு கட்டும் பணியில் தாமதம் ஏற்­ப­டலாம்.   ஆனால் வீடு­களை விரை­வாக  நிர்­மா­ணித்து கொடுப்­பதே எமது நோக்­க­மாகும் என்றார்.  
 
ரெங்­கராஜ் மோகன்  பூனா­கலை பாட­சாலை அதிபர் ரெங்­கராஜ் மோகன் எம்­மிடம் தகவல் வெளி­யி­டு­கையில், 

மீரி­ய­பெத்தயில் பாதிக்­கப்­பட்ட சுமார் 350 பேர் மாகந்த தேயிலை தொழிற்­சா­லையில் கடந்த ஒரு வருட கால­மாக தங்­கி­யுள்­ளனர். அவர்­களில் 53 மாண­வர்கள் எமது பூனா­கலை பாட­சா­லையில் கல்வி கற்­கின்­றனர். குறிப்­பாக மீரி­ய­பெத்த மண்­ச­ரிவு அனர்த்­தத்தில் தாய் தந்தை என இரு­வ­ரையும் இழந்த மூன்று பிள்­ளைகள் எமது பாட­சா­லையில் கல்வி கற்­கின்­றனர். கஜனி, சுரேஸ் குமார், சந்­திரன் ஆகி­யோரே பெற்­றோரை இழந்த நிலையில் தற்­போது மாகந்த தொழிற்­சா­லையில் தனது தாத்தா பாட்­டி­யுடன் வாழ்­கின்­றனர்.

மேலும் பாதிக்­கப்­பட்ட 26 மாண­வர்கள் கொஸ்­லந்த கணேசா தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்­திலும் அம்­பிட்டி கந்த வித்­தி­யா­ல­யத்­திலும் கல்வி பயில்­கின்­றனர். இந்த மாண­வர்­க­ளுக்கு காலை உணவும் மதிய உணவும் பாட­சாலை நிர்­வா­கத்தால் வழங்­கப்­ப­டு­கின்­றது.

இந்த அனைத்து மாண­வர்­க­ளுக்கும் வங்கி கணக்­குகள் ஆரம்­பிக்­கப்­பட்டு அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் மற்றும் நன்­கொ­டை­யா­ளர்­களின் உத­வி­யுடன் கிடைக்­கின்ற நிதி வைப்­பி­லி­டப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக பெற்­றோரை இழந்த பிள்­ளை­களின் வங்கி கணக்­கு­களில் கணி­ச­மான அளவு பணம் வைப்பு செய்­ய­ப்பட்­டுள்­ளது. வடக்கு மற்­றும கிழக்கில் இருந்து வந்த அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் மீரி­ய­பெத்த அனர்த்­தத்தால் பாதிக்­கப்பட் பிள்­ளை­களின் வங்கி கணக்­கு­களில் பணத்தை வைப்பிலிட்டிருந்தன.

அன்று மீரி­ய­பெத்த அனர்த்தம் ஏற்­பட்ட போது அனைத்து மக்­களும் எமது பூனா­கலை பாட­சா­லைக்கு தான் ஓடி வந்­தனர். உண்­மையில் பூனா­கலை மக்கள் அன்று பாரிய உத­வியை மீரி­ய­பெத்த மக்­க­ளுக்கு வழங்­கினர். நான்கு மாதங்கள் நாங்கள் அந்த மக்­களை எமது பாட­சா­லையில் வைத்து காத்தோம் என்றார்.
 
பிர­தேச செய­லா­ளரின் விளக்கம் 
 
மக்­களிள் உள்ள குமு­றல்­களை துன்­ப துய­ரங்­களை ஆதங்­க­ங்க­ளையும் செவி­மெ­டுத்த நாம் இறு­தியில் மீரி­ய­பெத்த கிராம உள் வரு­கின்ற ஹல்­த­முல்ல பிர­தேச செய­லாளர் சிரோமி ஜீவ­மா­லாவை சந்­தித்தோம். மிகவும் சுமூ­க­மான முறையில் அலு­வ­ல­கத்­திற்கு வர­வேற்று எம்­முடன் மீரி­ய­பெத்த வீட்டு திட்டம் தொடர்­பான தற்­போ­தைய நிலை­மையை விப­ரித்தார் சிரோமி ஜீவ­மாலா. 

" மீரி­ய­பெத்த மண்­ச­ரிவு அனர்த்­தத்தில் 63 லயன் அறைகள் 6 தனி வீடுகள், 5 அலு­வ­லக வீடுகள் மற்றும் 5 வர்த்­தக நிலை­யங்கள் என 75 வீடுகள் அழிந்து போயின. இந்த மக்­க­ளுக்கு முதலில் வேறு ஒரு இடத்தில் வீடுகள் நிர்­மா­ணிக்க தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது. ஆனால் மக்­க­ளுக்கு அந்த இடத்தில் விருப்பம் இருக்­க­வில்லை.. தற்­போது மகள்­தெ­னிய என்ற இடத்தில் வீடுகள் கட்­டப்­ப­டு­கின்­றன. இரா­ணு­வத்­தினர் நிர்­மாணப் பணி­களை மேற்­கொள்­கின்­றனர். விரைவில் வீடு­களை நிர்­மா­ணித்து கொடுக்­கலாம் என நம்­பு­கின்றோம். இந்த விட­யத்தில் எங்­க­ளது பணி­களை உரிய முறையில் செய்தோம். பொது­வாக இவ்­வாறு அனர்த்­தங்கள் ஏற்­படும் போது அனைத்து தரப்­பி­னரும் எம்மை குறை கூறு­கின்றனர். ஆனால் மீரி­ய­பெத்த கிரா­மத்தை பொறுத்­தவரையில் எனக்கு முன்னர் இருந்த பிர­தேச செய­லாளர்   பல அறி­வு­றுத்­தல்­களை வழங்கி இருந்தார். அதா­வது அந்த மக்­களை அந்த இடங்­களில் இருந்து வெளி­யே­று­மாறும் மாற்று இடங்­களை வழங்கி வீடு­களை நிர்­மா­ணித்­து­கொள்ள கடன் வச­தியும் செய்து கொடுக்­கப்­பட்­டது. ஆனால் துர­திர்ஷ்ட வச­மாக இந்த சம்­பவம் நடந்து விட்­டது.

கேள்வி:  இத்­தனை மாதங்கள் கடந்தும் 75 வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வில்­லையே? "
 
பதில்: அதனை ஏற்­றுக்­கொள்­கின்றோம் என்றார்.
 
தென்­னிந்­தி­யாவில் இருந்து ஏமாற்றி அழைத்து வரப்­பட்ட இந்த அப்­பாவி மக்கள் ஒரு பக்கம் இயற்­கையின் கோரப்­பி­டிக்­குள்ளும் மறு­பக்கம் அதி­க­ரித்த வாழ்க்கை சுமை, குறைந்த வருமானம், வறுமை, நோய்நொடிகள், பாதுகாப்பாற்ற குடியிருப்பு, சொந்த முகவரியற்ற வாழ்க்கை என பேராட்டத்தையே வாழ்க்கையாக கொண்டுள்ளனர்.
அடிமைகளாக அழைத்து வரப்பட்ட இம் மக்கள் பல நூற்றாண்டுகளாக இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திக்காகவும் இவர்களை கண்டுகொள்ளாத அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பதற்காகவும் மாத்திரம் பயன்படுத்தப்படுகின்றார்கள். 
 
இங்கு பல கேள்வி எழுகின்றன? 
 
மிதக்கும் நகரம், அதிவேக பாதை, விமான நிலையம் என  இலங்கையை அலங்கரிப்பதற்கான  வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்   அரசாங்கம் ஓடாய் தேய்ந்து உரமாக்கி தன்னையே அர்ப்பணிக்கும் இம் மக்கள் மீது இன்னமும் கரிசனை கொள்ளாதது ஏன்?  ஒவ்வொரு முறையும் கரிசனை கொள்வதாக  கூறிவிட்டு பின்னர் மறந்துவிடுவது ஏன்?
 
தொழிற்சாலைக்குள் முகாம் என்ற பெயரில் பத்தடி அறைக்குள் இம் மக்கள் அனுபவிக்கும் குறைகள் ஏன் இவர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் இராஜபோக வாழ்க்கை வாழும் அரசியல் வாதிகளுக்கு தென்படவில்லை?.
 
அரசாங்கம் வழங்கும் கூப்பன்களில்  சதொச நிறுவனங்களில் விற்கப்படும் பொருட்கள் ஏனைய கடைகளில் விற்கப்படும் பொருட்களின் சாதாரண விலைகளை  அதிக விலையில் விற்கப்படுவது ஏன்?
 
இவர்கள் வாங்கும் அரிசியில் புழுக்கள் காணப்படுகின்றன. பொருட்கள் தரம் குறைவாக இருக்கின்றன. ஏன்? மண்சரிவு இடம்பெற்று ஒரு வருடம் முடிவடைய உள்ள நிலையில் நான்கு வீடுகள் மாத்திரமே கட்டப்பட்டுள்ளன. இது அரசியல் தலைமைகளுக்கு தெரியுமா? தாமதம் ஏன்?
மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என கூறப்பட்டது. அமைக்கப்படவில்லை ஏன்? பாதுகாப்பான இடங்களை வழங்காமல்,  மண்சரிவு அபாய பகுதியில் இருந்து மக்களை எவ்வாறு வெளியேற்ற முடியும்? அவர்கள் எங்கு போய் தங்குவார்கள்?மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யாதவர்களுக்கு புதிதாக நிர்மாணிக்கும் வீடுகள் வழங்க மாட்டார்களாம். ஏன்? இவற்றை நாம் கேள்வி களாக கேட்டாலும் இவையனைத்தும் எமது கேள்விகள் அல்ல. பாதிக்கப்பட்ட அம் மக்க ளின் கேள்விகளே. இதற்கு யார் பதில் சொல்வார்கள். 

ஒருவேளை இவர்கள் வந்தேறிய குடிகள். பூர்வீக நாடற்றவர்கள். மலையகக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்மொழி பேசும் ஏழைகள். என்பதாலோ ஒரு வருடமாகியும் யாருக்கும் இவர்கள் மீது பரிதாபம் ஏற்படவில்லை என எண்ணத் தோன்றுகின்றது.  எது எவ்வாறு இருப்பினும் விரைவில் இந்த மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுங்கள் என்று நாங்களும்  சம்மந்தப்பட்ட தரப்பினரை கோருகின்றோம். விரைவில் மாற்றத்தைக்கொண்டுவாருங்கள்...  கொண்டுவருவீர்களா? பார்த்துக்கொண்டிருக்கின்றோம்....
 
இந்த முகாமில அதிக நாளா இருக் கிறோம். ஒவ்­வொரு நாளும் ஒவ்­வொரு வித­மான பிரச்­சினைக்கு முகம் கொடுக்­கின்றோம்.இப்படி பல்­வேறு துன்ப துய­ரங்­களை எதிர்­ கொள்­கின்ற போது அந்த மண்­ச­ரி­வுலசிக்கி செத்து போயி­ருக்­க­லா­முனு தோனுது.

பாரா­ளு­மன்றத் தேர்தல் காலத்தில் அர­சி­யல்­வாதிகள் வந்து பார்த்­தாங்க. தேர்­தலுக்கு பின்னர் எவரும் வர­வில்லை. வழங்­கப்பட்டவாக்­கு­று­தி­களும் நிறை­ வேற்­றப்­ப­ட­வில்லை. மலை­யக அர­சி­யல்­வா­திகள் தமிழி­னத்­துக்­காக சேவை ­யாற்­ற­வேண்டும். பனை மரத்­தி­லி­ருந்து விழுந்­த­வனை மாடுமுட்டி­ய­தைப்­ போன்று  அனர்த்தத்­துக்கு உட்­பட்ட எம்மை   எல்லா அர­சியல் ­வா­திகளும் கைவிட்­டுட்டாங்கநன்றி- வீரகேசரி