மலையக ரயில் மார்க்கத்தில் ஹட்டன் ரொசல்ல பகுதியில் ரயில் தடம்புரண்டதில் கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தாமதமாகியுள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவுநேர தபால் ரயிலே தாமதமாகியுள்ளதாக ரயில்வே கட்டப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த ரயில் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் பயண இலக்கான கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்திருக்க வேண்டும்.
இருப்பினும், ரயில் தடம்புரண்டமை காரணமாக இதுவரையில் பயண இலக்கை வந்தடையவில்லை.
தடம்புரண்ட ரயில் இன்று அதிகாலை நான்கு 4.00 அளவில் மீள பயணத்தை ஆரம்பித்தது.
எவ்வாறாயினும், கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி இன்று காலை பயணத்தை ஆரம்பிக்க இருந்த ரயில் உரிய நேரத்தில் பயணத்தை ஆரம்பித்ததாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.