ஹட்டன் - டிக்கோயா தரவலை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் இருவர் மீது மின்னல் தாக்கியதில் குறித்த இருவரும் படுகாயமடைந்துள்ளனர்
26-04-2018 மதியம் 3.00 மணியளவில் பெய்த இடியுடன் கூடிய மழையின் மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட இருவருக்கு டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவாலை மேற்பிரிவு தோட்டத்தில் 25-04-2018 புதன் கிழமை இரவு பெய்த கடும் மழையின் காரணமாக 24 வீடுகள் கொண்ட லயன் குடியிருப்பு இடிந்து விழுந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .
குறித்த தோட்டத்தில் லயன் குடியிருப்பு இதற்கு முன்பு இடிந்து விழும் அபாயத்தில் காணபட்டதால் தோட்ட நிர்வாகத்திடம் பலமுறை அறிவித்துள்ள போதிலும் தோட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
டிக்கோயா தரவாலை மேற்பிரிவு தோட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள லயன் குடியிருப்பின் இரண்டு பக்கங்களிலும் வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் இடிபாடுகளுக்கு உள்ளாகியது.
ஒரு வீட்டில் உறங்கி கொண்டிருந்த ஒருவரின் மீது சுவர்கள் இடிந்து விழுந்ததில் அவர் காயங்களுக்குள்ளாகி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் அதே குடியிருப்பில் தற்காலிகமாக தங்கியிருப்பதுடன் பாதிக்கபட்ட மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கையை ஹட்டன் பொலிஸார் மற்றும் பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்