நுவரெலியா மாவட்டத்தில் இறம்பொடை கெமினிதன் தோட்டத்தில்
இருந்து இறம்பொடை இந்துக் கல்லூரிக்கு 05 கிலோ மீற்றர் தூரம் செல்ல
வேண்டியுள்ளது.
கெமினிதன் தோட்டத்திற்கும் பாடசாலைக்கும்
இடையில் போக்குவரத்து செய்வதற்கான வசதிகள் இல்லாததால் மாணவர்கள் நடந்தே
பாடசாலைக்கு செல்ல வேண்டும்.
அண்மையில் வெதமுல்லையில் ஏற்பட்ட மண்சரிவின் போது இந்த தோட்டத்திற்கு
செல்லும் பாதையும் சேதமாகியுள்ள நிலையில், மாணவர்கள் மட்டுமல்லாமல் பிரதேச
மக்களும் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்கள் 05 கிலோ மீற்றர் தூரம் நடந்து நாளாந்தம் பாடசாலைக்கு செல்கின்றனர்.
இவ்வாறு பாடசாலைக்குச் சென்று திரும்பும் மாணவர்கள் இடையில் வந்த
டிப்பர் ரக வாகனம் ஒன்றினை மறித்து ஏறிச் சென்ற காட்சி எமது செய்தியாளரின்
கெமராவில் பதிவாகியுள்ளது.
பல கனவுகளை சுமந்து கொண்டு நாளாந்தம் பாடசாலை செல்லும் இம்மாணவர்கள்
பாடசாலை முடிந்த பின்னும் 5 கிலோ மீற்றர் தூரம் நடந்து வர வேண்டியுள்ளது.
மலையக்தில் நாளாந்தம் இவ்வாறு பாடசாலை மாணவர்கள் பல கஸ்டங்களை எதிநோக்கி
வருகின்றனர்.
இந்த நிலமை இவ்வாறு தொடராத வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.
No comments:
Post a Comment