Tuesday, October 14, 2014

ஹட்டன் விபத்தில் தந்தையும் மகனும் காயம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன், குயில்வத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் காயமடைந்து வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் களுத்துறை ஹொரனை பகுதியை சேர்ந்தவர்களே காயமடைந்துள்ளனர் என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனிலிருந்து கினிகத்ஹேனை நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனம் ஒன்றுடன் கினிகத்ஹேனையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தகப்பனும், மகனுமே படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

53 வீத­மா­ன மலை­யக தமி­ழர்கள் வாழு­கின்­ற நுவ­ரெ­லி­யாவில் பல்­க­லைக்­கழகம் அமைவது சாத்தியமானது.

எமது சமூ­கத்­தினர் தம்மை இந்­திய வம்­சா­வளி தமி­ழர்கள் மற்றும் மலை­யக தமி­ழர்கள் என்று அடை­யா­ளப்­ப­டுத்த தவ­று­வதன் விளைவே மலை­ய­கத்தில் பல்­க­லைக்­க­ழகம் ஒன்­றினை பெற்றுக் கொள்­வ­தற்கு தடை­யாக உள்­ள­து.

இந்­திய தமிழர், மலை­யக தமிழர் என்று எமது இன அடை­யா­ளத்­தினை வெளிப்­படுத்த வெட்­கப்­பட்டுக் கொண்டு இலங்கை தமிழர் என்று பலரும் தம்மை பதிந்து கொள்­ளு­கின்­றனர். இதன் விளைவு இன புள்ளி விப­ர­வி­யலில் மலை­யக இந்­திய வம்­சா­வளி­யி­னரின் இனப்­ப­ரம்பல் குறை­வ­தோடு அது நாம் உரி­மை­க­ளையும் சலு­கை­க­ளையும் பெற்­றுக்­கொள்­வ­தற்கு பெருந்­த­டை­யாக உள்­ளது. இந்த விளைவே மலை­யக பல்­க­லைக்­க­ழகம் ஒன்­றினை பெற்­றுக்­கொள்­வ­தற்கும் தடை­யாகவுள்ளது.

மலை­ய­கத்தில் பல்­க­லைக்­க­ழகம் ஒன்று அமை­வதன் அவ­சி­யப்­பாடு தொடர்பில் 15 வரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்தே நாம் பேசி வரு­கின்றோம். அம­ரர்­க­ளான சௌமி­ய­மூர்த்தி தொண்­டமான் மற்றும் சந்­திர சேகரன் ஆகியோர் இது தொடர்பில் அதி­க­மான அக்­கறை செலுத்­தி­னார்கள். அமரர் சந்­தி­ர­சே­கரன் இது தொடர்பில் எம்­முடன் அதி­க­ளவில் கலந்­து­ரை­யா­டினார். அவ­ரது காலத்தில் எப்­ப­டி­யா­வது ஒரு பல்­க­லையை பெற்று விடலாம் என்ற எமது எண்ணம் அவ­ரது மர­ணத்­தோடு நின்று போனது.

ஆயினும் தொடர்ந்து இது தொடர்பில் பல முயற்­சி­களை நாம் முன்­னெ­டுத்தோம். இதற்கு பல்­வேறு விமர்­ச­னங்­களை நாம் சந்­திக்க வேண்­டி­யி­ருந்­தது.

நாம் இன்று மீண்டும் இவ்­வி­டயத்தில் பல்­வேறு விமர்­ச­னங்­களை தாண்டி மலை­ய­கத்தில் பல்­க­லைக்­க­ழகம் ஒன்றின் தேவை தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­கின்றோம். எமக்கு பல்­க­லைக்­க­ழகம் ஒன்று தேவை என்று மட்டும் தான் தற்­போது கேட்­கின்றோம்.

இன்று இலங்­கையில் மாகாண, பிராந்­தி­யத்­திலும் உத்­தி­யோ­க­பூர்வம் இன்றி இன அடை­யா­ளத்­தோடும் பல பல்­க­லைக்­க­ழ­கங்கள் இயங்­கு­கின்­றன. ஆனால் மலை­ய­கத்­தினை இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ரினை பிர­தி­ப­லிக்கும் அவர்­க­ளது கலை கலா­சா­ரங்­களை உள்­ள­டக்­கு­கின்ற எந்த பல்­க­லைக்­க­ழ­கமும் இல்லை.

யாழ். பல்­க­லைக்­க­ழகம், கிழக்கு பல்­க­லைக்­க­ழகம், தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழகம் என்று அனைத்தும் அப் பிராந்­தி­யத்­தி­னையும் உத்­தி­யோ­க­பூர்­வ­மின்றி ஓர் இனத்­தி­னையும் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்­து­வ­தா­கவே உள்­ளன. ஆனால், மலை­ய­கத்தில் உள்ள பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் எமது இன ரீதி­யான அடை­யா­ளத்­தினை வெளிப்­ப­டுத்­து­வ­தாக இல்லை. அத்­தோடு இலங்­கையில் எந்த பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் மலை­ய­கத்தின் கலை கலா­சா­ரங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற எந்த துறையோ பிரிவோ இல்லை. இது வேத­னை­யான விடயம்.

15 இலட்சம் சனத்­தொ­கை­யினை கொண்ட மலை­யக தமி­ழர்­க­ளுக்கு ஒரு பல்­க­லைக்­க­ழகம் பெற்­றுக்­கொள்ள கூடிய தகு­தி­யுள்­ளது. நாம் எம்மை இந்­திய வம்­சா­வளி தமிழர், மலை­யக தமிழர் என்று பதிந்து கொண்­டோ­மானால் எமது சனத்­தொகை பரம்பல் புள்ளி விப­ர­வி­யலில் அதி­க­ரிக்கும். இல்­லை­யென்றால் நாம் இலங்கை தமி­ழர்கள் என்ற பிரி­விற்குள் உள்­ள­டங்கி விடுவோம். இவ்­வா­றான நிலை உரு­வாகும் பட்­சத்தில் ஏற்­க­னவே இலங்­கையில் இலங்கை தமி­ழ­ருக்கு என்று யாழ். பல்­க­லைக்­க­ழகம், கிழக்கு பல்­க­லைக்­க­ழகம் என்­பன உள்­ளன. எனவே, இன்­னொன்று தேவை இல்லை என்று எமக்­கான பல்­க­லைக்­க­ழ­கத்­தினை பெற்­றுக்­கொள்ள முடி­யாது போகும் நிலை உரு­வாகும்.

எனவே, இலங்கை தமிழர் என்று பதி­யாமல் இந்­திய மலை­யக தமிழர் என்று பதிந்து கொள்­ளுங்கள். இதன் மூலமே பல்­வேறு உரி­மை­க­ளையும் சலு­கை­க­ளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

பல்­க­லைக்­க­ழகம் ஒன்று அமையும் பட்­சத்தில் அதற்கு என்று 100 கோடி ரூபா நிதி ஒதுக்­கப்­படும். இதன் மூலம் பல்­வேறு அபி­வி­ருத்­திகள் இடம்­பெறும். அத்­தோடு வேலை வாய்ப்­புகள் கிடைக்கும். ஆனால், மலை­ய­கத்தில் மலை­யக பல்­க­லைக்­க­ழகம் இல்­லா­மை­யினால் எமக்கு இந்த நிதி கிடைப்­ப­தில்லை.

உயர்­கல்வி அமைச்­சினால் 4000 கோடி ரூபா ஒதுக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால், இதி­லி­ருந்து ஒரு சதத்­தினை கூட எமது சமூ­கத்­தினால் அனு­ப­விக்க முடி­யாமல் உள்­ளது. இதற்கு காரணம் பல்­க­லைக்­க­ழகம் ஒன்று எமக்­கென்று இல்­லா­மையே. சிலர் மலை­ய­கத்தில் சப்­ர­க­முவ, பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கங்கள் உள்­ள­தென கூறு­கின்­றனர். ஆனால், அவற்றில் எம்மால் ஒரு தமிழ் நூலினையேனும் வெளி­யிட முடி­யுமா? அங்கு எமது அடை­யாளம் இல்லை. இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்­துடன் இணைந்து இரா­ம­நாதன் இசை கல்­லூரி உள்­ளது. அது போலவே விபு­லா­னந்த இசை கல்­லூரி என்று கலைப்­பி­ரிவு கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் உள்­ளது. இதனை போல கொழும்பில் நாம் எமது இன கலை கலா­சார அடை­யா­ளத்­தினை வெளிப்­ப­டுத்­து­கின்ற ஒரு பிரிவை உரு­வாக்க முடி­யுமா? முடி­யாது. அதற்கு அனு­மதி கிடைக்­காது. விட­மாட்­டார்கள்.
தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்­தினை அமரர் அஷ்ரப் உரு­வாக்­கினார். அதன் மூலமே முஸ்­லிம்­களின் வர­லாற்றின் மைல்­கல்­லான ஒலுவில் பிர­க­டனம் முன்­வைக்­கப்­பட்­டது. அதேபோல் தமிழர் விடு­தலை போராட்­டத்தில் வட­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கங்­களின் பங்கு அளப்­ப­ரி­யது. ஆனால், இது போன்ற ஓர் இன உறு­திப்­பாட்­டுக்கு அடை­யா­ளத்­தினை, சமூக உணர்­வு­களை சமூ­கத்­தினை மலை­ய­கத்தில் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு இய­லாமல் உள்­ளது. பல்­க­லைக்­க­ழகம் ஒன்று அங்கு அமைக்­கப்­படும் போது அது தேசிய ரீதி­யிலும் எமது இனத்­திற்கு உறு­து­ணை­யாக அமையும்.

பல்­க­லைக்­க­ழகம் ஓர் இனத்தின் பிர­தே­சத்தின் கலை கலா­சார வளர்ச்­சிக்கு உத­வு­கின்­றது. இஸ்­லா­மிய கற்­கைக்­கான போதனா பீடம் ஒலுவில் பல்­க­லைக்­க­ழ­கத்தில் உள்­ளது. அங்கு ஒரு தமிழர் உப­வேந்­த­ராக முடி­யாது. அதேபோல் யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு சிங்­க­ளவர் ஒருவர் பீடா­தி­ப­தி­யாக முடி­யாது. இதன் மூலம் இனப்­பி­ர­தேசம் என்­பதில் பல்­க­லைக்­க­ழ­கத்தின் செல்­வாக்கு புரி­கி­றது.

15 இலட்சம் இந்­திய வம்­சா­வளி தமி­ழர்கள் உள்ள இந்த நாட்டில் அவர்­க­ளது இன, பிர­தேச அடை­யா­ள­மாக ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்­தினை பெற்­றுக்­கொள்­வது நியா­ய­மா­னது. இது தொடர்பில் அமைச்சர் டிலான் பெரே­ரா­விடம் ஏற்­க­னவே ஒரு முறை பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். அவர் இதற்கு உதவி அளிப்­ப­தா­கவும் தெரி­வித்தார். ஆனால் அதுவும் சாத்தியப்படவில்லை.

இந்த நாட்­டிற்கு 1830 இல் வந்த இந்­திய வம்­சா­வளி தமி­ழர்கள் இந்த நாட்டின் பொரு­ளா­தா­ரத்­தினை உயர்த்­து­வ­தற்­காக தம்மை அர்ப்­ப­ணித்து அழிந்து போயுள்­ளனர். அதற்கு சன்­மா­ன­மாக ஒன்­றரை நூற்­றாண்­டாக இந்த நாட்­டிற்கு செய்த சேவைக்­காக 15 கோடி ரூபா­யினை நாட்­டிற்கு வரு­மா­ன­மாக பெற்றுக் கொடுக்­கின்­றனர். இதற்கு வெகு­ம­தி­யாக ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்தை தாருங்கள் என்றே கேட்­கின்றோம்.

 இந்த பல்­க­லைக்­க­ழ­கத்தில் தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கும் ஒரு பயிற்சி நெறியை உரு­வாக்க வேண்டும். அவர்­க­ளுக்கு ஒரு டிப்­ளோமோ நெறி உரு­வாக்கி கல்வி பயிற்­று­விக்க வேண்டும். தொழிற் பயிற்சி வழங்க வேண்டும் என்­பது எனது குறிக்­கோளில் ஒன்­றாக உள்­ளது. இது நிச்­சயம் நிறை­வேற வேண்டும்.

எங்­களால் இப்­படி ஒரு பல்­க­லைக்­க­ழகம் எமது சமூ­கத்­திற்கு வேண்டும் என்று குரல் கொடுக்க முடி­யுமே ஒழிய அதனை நேர­டி­யாக பெற்­றுக்­கொ­டுக்க கூடிய இய­லுமை எம்­மிடம் இல்லை. அது அர­சியல் தலை­மை­க­ளுக்கே உள்­ளது. இலங்கை வர­லாற்றில் பல பல்­க­லைக்­க­ழ­கங்கள் குறித்த பிர­தே­சத்தின் அர­சியல் தலை­மை­களின் அழுத்­தங்கள் கார­ண­மாக பெற்றுக் கொள்­ளப்­பட்­ட­மையை நாம் அவ­தா­னிக்க முடி­கி­றது. அது போன்ற ஒரு நட­வ­டிக்­கையை மலை­ய­கத்­திலும் எடுக்க வேண்டும்.

அமரர் தொண்­டமான் இது தொடர்பில் ஆர்­வ­மாக இருந்­த­தோடு அமரர் சந்­தி­ர­சே­கரன் ஹட்டன் நகரில் இவ்­வா­றான ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்தை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை துடிப்­புடன் எம்­முடன் இணைந்து முன்­னெ­டுத்தார். ஆனால் தற்­போது அதற்­கான எந்த நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுக்­கப்படாமல் உள்­ளது.

1942 இல் இலங்­கையில் ஒரே ஒரு பல்­க­லைக்­க­ழகம் தான் முதல் முதலில் உரு­வாக்­கப்­பட்­டது. இன்று 15 பல்­க­லைக்­க­ழ­கங்கள் உள்­ளன. அவற்றில் ஒன்று கூட எமக்­கான தனித்­துவ பண்­பு­களை உள்­ள­டக்­கி­ய­தாக இல்லை. ஆரம்­பத்தில் பொன்­னம்­பலம் இரா­ம­நாதன் போன்ற தலை­வர்கள் வெள்­ளை­க்கா­ரர்­க­ளிடம் எமக்­கொரு பல்­க­லைக்­கழகம் வேண்டும் என்று கேட்ட போது அது உங்­க­ளுக்கு எதற்கு தேவை­யற்­ற­தென்ற ஒரு கருத்­தையே அவர்கள் கொண்­டி­ருந்­தனர். அதுபோன்ற கருத்தே இன்றும் அர­சியல் தலை­மை­க­ளிடம் நில­வு­கின்­றது.

நாம் பல்­க­லைக்­க­ழகம் ஒன்­றினை கேட்­ப­தற்­கான தகுதி அற்­ற­வர்­க­ளாக 19, 20 ஆம் நூற்­றாண்டில் இருந்­தி­ருக்­கலாம். இது 21 ஆம் நூற்­றாண்டு இப்­போது இதனை கேட்கும் தகுதி எம்­மிடம் உள்­ளது. மலை­ய­கத்தில் படிப்­பது குறைவு. படிப்­ப­றிவு இல்லை. படிக்­கா­த­வர்கள் எதற்கு பல்­க­லைக்­க­ழகம் என்று இவர்கள் கேட்­கின்­றனர். உண்­மையில் இதற்­கொரு உதா­ரணம் கூறு­கின்றேன். KFC உரு­வாக்­கும்­போது இப்­படி சன கூட்டம் நிறைந்து வழியும் என்று எதிர்பார்த்தா உரு­வாக்­கி­யி­ருப்­பார்கள்.

இல்­லையே கட்­டடம் உரு­வாக்­கப்­பட்­டது. சனம் நிறைந்­தது. அது போல பல்­க­லைக்­க­ழகம் ஒன்று உரு­வாக்­கப்­பட்டால் அந்த கட்­ட­டத்தை பார்த்­தா­லா­வது இதில் நாமும் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்­வத்தில் படிக்­கா­த­வனும் கூட படிக்க ஆரம்­பிக்­கலாம்.

முதலில் ஒரு கட்­டடம் இடம் அமைந்­தாலே போது­மா­னது. யாழ். பல்­க­லைக்­கழகம் ஆரம்­பத்தில் இத்­தனை கட்­ட­டங்­க­ளோடு உரு­வா­க­வில்லை. யாழ். பர­மேஸ்­வரா கல்­லூ­ரிதான் பெயர்­பலகை மாற்­றப்­பட்­டதும் யாழ். பல்­க­லைக்­க­ழ­க­மாக மாறி­யது. அது போலவே வந்­தாறுமூலை மத்­திய பாட­சாலையே கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கமாக மாறி­யது. இது போல ஒரு பழைய தேயிலை தொழிற்­சா­லை­யை­யேனும் பல்­க­லைக்­க­ழ­க­மாக மாற்­றலாம். முதலில் பெயர்­ப­லகை ஒன்று மாட்­டி­னா­லேயே போதும். ஏனை­யவை தானாக அமையும்.

யார் பீடா­தி­பதி? யார் உப­வேந்தர்? என்­றெல்லாம் பேசா­தீர்கள். முதலில் இடம் கட்­டடம் என்ற ஒன்றே தேவை. அதனை அர­சியல் தலை­மைகள் பெற்றுக் கொடுத்தால் போதும் பல்­க­லைக்­க­ழகம் எவ்­வாறு அமைய வேண்டும், அங்கு இருக்க வேண்­டிய கற்கை நெறிகள் எவை, பாட­வி­தா­னங்கள், துறைசார் கல்வி என்று அனைத்தும் பற்­றிய செயற்­றிட்ட கோப்­புகள் என்­னிடம் உள்­ளன. 15 கோப்­புகள் இது தொடர்பில் தயா­ரித்து வைத்­துள்ளேன். பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கா­வி­டினும் கூட எமது கனவு பல்­க­லைக்­க­ழ­கத்தின் செயற்­றிட்ட கோப்பு புதிய நூற்­றாண்டில் ஒரு பல்­க­லைக்­க­ழகம் என்ற பெயரில் நூல்­வ­டி­வ­மாக விரைவில் வெளி வரும். நிச்­ச­ய­மாக இதனை வெளி­யி­டுவேன். நூல் வடி­வி­லேனும் அது என்னால் வெளி­வ­ரட்டும்.

மலை­ய­கத்தில் 15 இலட்சம் மலை­யக தமி­ழர்கள் வாழு­கின்­றனர். இவர்­களில் 53 வீத­மா­ன­வர்கள் நுவ­ரெ­லியா மாவட்­டத்­தி­லேயே வாழு­கின்­றனர். அவ்­வா­றெனில் நுவ­ரெ­லி­யாவில் பெரும்­பான்மை சமூ­க­மாக தமி­ழர்­களே உள்­ளனர். தமி­ழர்கள் அதி­க­மாக பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழும் நுவ­ரெ­லி­யாவில் இவ்­வா­றான பல்­க­லைக்­கழகம் அமைவது மிகவும் சாத்தியமானது.
மலேசியாவில் கூட 7–-8 வீதமாக வாழும் தமிழர்கள். அங்கு உயர் கல்வியை தமிழில் கற்க முடியாது. அங்கு இந்திய ஆய்வு என்ற ஒரு கற்கை பிரிவு உள்ளது. ஆனால் உலகில் அதிகமாக உயர்கல்வியை தமிழில் கற்கின்ற நாடு இலங்கைதான். கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் இலங்கையில் தமிழ் மொழியிலே உயர்கல்வியை கற்கின்றனர். இந்த நிலை இந்தியாவில் கூட இல்லை. ஆனால் தகுதிகள் இல்லாமல் போய்விடும் என்று பல்கலைக்கழகம் அமைவதற்கு சிலர் தடைக்கற்களை போடுகின்றனர். ஆனால், இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் காரணங்கள் அல்ல.

மலையக சமூகமும் ஒரு தேசிய இனமே. நாம் எமக்கான கலை கலாசார விழுமியங்களை வெளிப்படுத்துகின்ற ஒரு பல்கலைக்கழகத்தினை எமது பிரதேசத்தில் உருவாக்குவதற்கான பெற்றுக்கொள்ளுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டவர்களே. இதில் எமது அரசியல் தலைமைகள் பிடிப்பாக இருந்தால் அமரர் அஷ்ரப் ஒலுவில் பல்கலைக்கழகத்தினை தன் சமூகத்திற்கு பெற்றுக்கொடுத்தது போல எமது அரசியல் தலைமைகளும் ஒரு பல்கலைக்கழகத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.

அதற்கு எமது அரசியல் தலைமைகள் முயற்சி எடுப்பார்கள் ஆயின் அதற்கு தேவையான துறைசார் ஆலோசனைகள் அனைத்தினையும் வழங்குவதற்கு நான் தயாராக உள்ளேன் என்று பேராசிரியர் சோ. சந்திரசேகரன் மேலும் தெரிவித்தார்.