இந்நிலையில், கடந்த 8ஆம் திகதி பெய்த மழையின் போது, 07 வீடுகளைக் கொண்ட இரண்டு லயன் தொகுதி மேல் மண்மேடு விழுந்து, குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.
Saturday, December 5, 2015
இரண்டு மாடி குடியிருப்பில் வெடிப்பு
கடும் மழை காரணமாக, லிந்துலை திஸ்பனை தோட்டத்தின் குடியிருப்புப்
பகுதியிலுள்ள பாரிய மண்மேடுகள், லயன் குடியிருப்புக்கள் மீது சரிந்து
விழுந்துள்ளதாகவும் அதனை அப்புறப்படுத்துவதற்கு எந்தவொரு அதிகாரியும்
முன்வரவில்லை என்றும் குடியிருப்பிலுள்ள மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட
மாடி வீடமைப்புத் திட்டம், 2004ஆம் ஆண்டின் போது, லிந்துலை திஸ்பனை
தோட்டத்திலுள்ள சுமார் 197 பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
இவ்வாறு அமைக்கப்பட்ட மாடி வீட்டு லயன்கள் அனைத்தும், மண்மேடுகள் உள்ள பிரதேசத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 8ஆம் திகதி பெய்த மழையின் போது, 07 வீடுகளைக் கொண்ட இரண்டு லயன் தொகுதி மேல் மண்மேடு விழுந்து, குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.
மேலும், அதே பகுதியில், 14 வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டு, அவை உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளன. இதேவேளை, கடந்த 05ஆம் திகதி பெய்த கடும் மழையினால், இக்குடியிருப்புக்கள்
மீது பாரிய மண்மேடுகள் விழுந்ததில், 05 லயன் தொகுதிகள் சேதமடைந்துள்ளன.
இதனால் 84 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும்
தெரிவிக்கப்படுகின்றது.
மண்மேடுகள், குடியிருப்புகளின் சமையல் அறைகளிலும் விழுந்துள்ளதனால்,
மக்கள் தங்களது அன்றாட சமையல் நடவடிக்கைகளில் கூட ஈடுபட முடியாத நிலையில்
இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர்
சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய தொழிற்சங்க அதிகாரிகளுக்கும்
நுவரெலியா மாவட்டப் பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் இப்பகுதி கிராம
அதிகாரிக்கும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாக
வந்து பார்வையிட்ட பின்னர், இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக
உறுதியளிக்கப்பட்ட போதும், அனைத்தும் பொய்யாகிவிட்டதென மக்கள்
தெரிவிக்கின்றனர். எனவே, இனியாவது தங்களது குடியிருப்புக்களைப்
பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் மக்கள் கோரி
நிற்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 8ஆம் திகதி பெய்த மழையின் போது, 07 வீடுகளைக் கொண்ட இரண்டு லயன் தொகுதி மேல் மண்மேடு விழுந்து, குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment