நானுஓயா எடின்புரோ தோட்டத்தில் 300 இற்கு மேற்பட்ட
தொழிலாளர்கள் நேற்றுக் காலை 08 மணிமுதல் 10 மணி வரை தேயிலை
தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்டத்தில்
இயங்கிவந்த தேயிலைத் தொழிற்சாலை 03 மாதங்களுக்கு முன்பு தோட்ட
நிர்வாகத்தால் இயந்திரங்களை திருத்துவதாக கூறி தற்காலிகமாக
மூடப்படும் என தொழிலாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 03
மாதங்கள் கடந்த போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையை
எடுக்கப்படவில்லை எனவும் தற்போது தோட்ட நிர்வாக அதிகாரிகளிடம்
தொழிலாளர்கள் கேட்டபோது அதற்கு பணம் இல்லையென தெரிவிப்பதாக
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்டத்தில் நல்ல வருமானத்தினை தரக்கூடிய தேயிலை
மலைகள் தோட்ட நிர்வாகத்தால் முறையாக பராமரிக்கப்படாமல்
கைவிடப்பட்டுள்ளதாகவும் இத்தேயிலை மலைகளை துப்புரவு செய்வதற்கு
கம்பனியிடம் பணம் இல்லை. இதன் காரணமாகவே துப்புரவு
செய்யமுடியாத நிலை இருப்பதாக தோட்ட நிர்வாகம் தெரிவிப்பதாக
தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். தோட்ட நிர்வாகத்தால்
தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகை வழங்கப்படுவதில்லை.
தோட்டத்தில் உள்ள பொதுமக்களின் சுகாதார விடயங்களை முறையாக செய்து
கொடுப்பதில்லையென தெரிவித்தே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். தொழிற்சாலை உடனடியாக
திறக்கப்படாவிட்டால் தொடர்ச்சியாக போராட்டங்களை
முன்னெடுக்கவுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இவ்
ஆர்ப்பாட்டத்தில் அதிகமான பெண்கள் கலந்துகொண்டமை ொண்டமை
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment