Monday, June 13, 2016

அரநாயக்க மண்சரிவால் பலர் தொழிலின்றி நிர்க்கதி

அரநாயக்க மண்சரிவு காரணமாக 1,000இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தமது தொழிலை இழந்து நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளதாக சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து தெரிவித்ததுடன் இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டுச் சென்றுள்ளதாகவும் கூறினார். 

அரநாயக்க சமாரச மலை சரிந்து எதிர்வரும் 17ஆம் திகதியுடன் ஒரு மாதமாகின்ற நிலையில், இம்மண்சரிவினால் உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும் பாதிக்கப்பட்ட  மக்களது மறுவாழ்வுக்காகவும் இறைஆசி வேண்டி விசேட சர்வ மத பிரார்;த்தனைகள் நடைபெறவுள்ளன. அரநாயக்க, புஸ்ஸப்பிட்டிய தியான மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைதங்கள் முகாமில் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள இந்நிகழ்வில், கண்டி- இந்திய உதவித்தூதுவர் ராதா வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர். 

சர்வமத சமாதான நிதியம் மற்றும் சௌமிய இளைஞர்  நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு தொடர்பில் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 'அரநாயக்க மண்சரிவினால் பிரதான பாதைகளில் மண்மேடுகள் குவிந்து கிடப்பதனால்,   டோட்டுலோய, மொரட்டிய, அம்பதெனிய, எலங்கபிட்டிய போன்ற தோட்டங்களில் வசிக்கும் ஆயிரகணக்கான தோட்டத் தொழிலாளரகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தொழிலுக்குச் செல்வதும் தடைப்பட்டுள்ளது. தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால் வருமானமின்றி பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்' என்றார். 

நன்றி- தமிழ் மிரர்

100.ரூ இடைக்கால நிவாரணக் கொடுப்பனவும் கானல் நீராகிவிட்டது

தனியார்துறை ஊழியர்களுக்கான 2,500ரூபாய்  சம்பள அதிகரிப்பு, தோட்டத் தொழிலாளருக்கு மறுக்கப்பட்டுவிட்டது. அதேபோல ஏப்ரல், மே மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்ட நாளொன்றுக்கு 100 ரூபாய் இடைக்கால நிவாரணக் கொடுப்பனவும் கானல் நீராகிவிட்டது' இவையிரண்டும் மண்ணெண்ணெய் நாடகமாகும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், '2,500 ரூபாயை பெற்றுக்கொடுப்போம் எனவும், முதன்முதலில்  அரசாங்கம் முன்மொழிந்த சம்பள அதிகரிப்பு தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைக்கப்போகிறது எனவும்  தம்பட்டம் அடித்தவர்கள், அது கைக்கூடாது என்ற நிலை வந்தவுடன்; தற்போது இடைக்கால நிவாரணம் என்ற கூத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த இடைக்கால கொடுப்பனவு இரண்டு மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுமாம். புதிய கூட்டுஒப்பந்தம் கையெழுத்திட்டவுடன் இவ்வாறு வழங்கப்படுகின்ற தொகையை தொழிலாளர் சம்பளத்திலிருந்து கழித்துக்கொள்வார்களாம். 

அரசாங்கத்திடமிருந்து பெருந்தோட்ட கம்பனிகளுக்கு கடன் வழங்கப்பட்டால் மட்டுமே இந்த இடைக்கால நிவாரண கொடுப்பனவை தோட்டக் கம்பனிகள் வழங்குமாம். இந்த நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் தோட்டத் தொழிலாளர்கள் நிவாரண கடனுக்காக கையேந்தும் நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது' என்றார். 'கடந்த ஒன்றரை வருடத்தில் மலையக மக்கள் பல பொய்களையும் பித்தலாட்டங்களையும் மண்ணெண்ணை நாடகங்களையும் நன்கு புரிந்து வைத்துள்ளனர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், பொருத்தமான நேரத்தில் சம்பள உயர்வுக் கோரிக்கையை முன்வைத்து காய்நகர்ததல்களை ஆரம்பித்தார். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அனுபவமில்லாமல் தலையிட்டு, இன்று மூக்குடைப்பட்டு நிற்பவர்கள் அன்று அமைதியாக இருந்திருந்தால் கடந்த ஒரு வருடகாலத்துக்கு முன்பே சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்திருக்கும்' என அவர் மேலும் கூறினார். '

கடந்த பொதுத் தேர்தலில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்வதற்காக   பெருந்தோட்ட கம்பனிகளுடன் மறைமுகமாக கூட்டுச்சேர்ந்து ஒரு சமூகத்தின் வாழ்வாதாரத்தை அரசியலாக்கி கெடுத்த வரலாற்று சம்பவமாக இது அமைந்துவிட்டது. எனினும்,   தொடர்ச்சியாக பெருந்தோட்ட கம்பனிகளுடன் புதிய கூட்டு ஒப்பந்தத்தை செய்து கொள்வது குறித்த பேச்சுவார்தைகளில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகின்றது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சில சாதகமான நகர்வுகள் தென்பட்டன. ஆனால், கடந்த ஒன்றரை வருட கால நிலுவை தொடர்பில் காங்கிரஸ் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறது. எனினும் தொண்டமான், நாடு திரும்பியவுடன் தோட்டக் கம்பனிகளுடனான பேச்சுவார்த்தை தொடரவுள்ளதுடன், வெகு விரைவில் புதிய கூட்டுஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் ' என்றார். 

Tuesday, May 31, 2016

அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து சம்­ப­ளத்தை பெறுவது சாத்­தி­ய­மற்­றது



கடந்த 18 வரு­டங்­க­ளாக கூட்டு ஒப்­பந்தம் மூலமே தோட்டத் தொழி­லா­ளரின் சம்­பளம் அதி­க­ரிக்­கப்­பட்டு வந்­துள்­ளது. தொழி­லா­ளரின் சம்­ப­ளத்தை அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து சுல­ப­மாகப் பெற்றுக் கொள்­ளலாம் என்றும் கூட்டு ஒப்­பந்த முறை­மையை மிக மோச­மாக விமர்­சனம் செய்தும் வந்­த­வர்கள், தற்­போது அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து சம்­பள உயர்வைப் பெற்றுக் கொள்­வது எந்­த­ளவு கடி­ன­மா­னது என்­ப­தையும் சாத்­தி­ய­மற்­றது என்­ப­தையும் அனு­பவ ரீதி­யாக உணர்ந்­தி­ருப்­பார்கள் என்று பெருந்­தோட்டத் தொழிற்­சங்க கூட்டுக் கமிட்­டியின் செய­லாளர் நாய­கமும் லங்கா தோட்டத் தொழி­லாளர் யூனியன் பொதுச்­செ­ய­லா­ள­ரு­மான எஸ். இரா­ம­நாதன் தெரி­வித்தார்.

கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் தொழிற்­சங்­கங்கள், தோட்டக் கம்ப­னி­களின் பிர­தி­நி­திகள் அர­சாங்­கத்தின் அமைச்­சர்கள், ஆகி­யோ­ருக்கு இடையே இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் விப­ரங்­களை கூட்டுக் கமிட்­டியின் தோழமைச் சங்க தலை­வர்­க­ளுக்கு விளக்­கு­வ­தற்­காக கண்டி இலங்கை தொழி­லாளர் செங்­கொடிச் சங்கக் காரி­யா­ல­யத்தில் நடத்­தப்­பட்ட கூட்­டத்தில் பேசி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். செங்­கோடிச் சங்­கத்தின் தலைவி மேனகா கந்­த­சாமி தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் கே.எம். கிருஷ்­ண­மூர்த்தி, எஸ். முரு­கையா, ஏ. முத்­து­லிங்கம், எஸ். ஆனந்தி, எஸ். கந்­தையா, ஆர். சிரில் ஆகிய முக்­கி­யஸ்­தர்கள் கலந்து கொண்­டி­ருந்த இக்­கூட்­டத்தில் திரு இரா­ம­நாதன் தொடர்ந்து கருத்து தெரி­வித்­த­போது;

கூட்டு ஒப்­பந்­தத்தில் யார் கையொப்­ப­மி­டு­வது என்­பது முக்­கி­ய­மல்ல. யார் கையொப்­ப­மிட்­டாலும் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்கு கூட்டு ஒப்­பந்த முறை­மையே சிறந்­த­தாகும் என்­பதும் தொழி­லா­ளர்­களின் பலத்தின் மூலம் பேரம்­பேசி சம்­பள உயர்­வையும் ஏனைய உரி­மை­க­ளையும் பெற்றுக் கொள்ள முடி­யுமே தவிர சந்­தர்ப்­ப­வாத அர­சி­யல்­வா­தி­களை நம்பி தொழி­லா­ளரின் உரி­மை­களை வென்­றெ­டுக்க முடி­யாது.

இன்று முத­லா­ளித்­துவ தோட்டக் கம்­ப­னி­களும் முத­லா­ளித்­துவ அர­சி­யல்­வா­தி­களும் ஒன்­று­பட்டு செயற்­ப­டு­கின்­றனர். தொழி­லா­ளரின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டாமல் இழுத்­த­டிக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ணம் அர­சி­லுள்ள பெரும் புள்­ளி­களின் ஆத­ரவும் அனு­ச­ர­ணையும் தோட்டக் கம்ப­னி­க­ளுக்கு இருக்­கின்றமையே­யா­கும். இதனால் தான் என்­று­மில்­லா­த­வாறு தோட்டக் கம்­ப­னிகள் முரட்டுப் பிடி­வா­த­மாக நடந்து கொள்­கின்­றன. தோட்டக் கம்­ப­னிகள் தமது இறு­மாப்பைக் கைவிட்டு தொழி­லா­ளரின் சம்­பள உயர்வுக் கோரிக்­கையில் நியா­ய­மான தீர்­வினை மேற்­கொள்ள முன்­வர வேண்டும். தொழி­லா­ளர்­க­ளது அடிப்­படை சம்­பள உயர்வு, வரவு போனஸ், விலை­யேற்ற அல வன்ஸ், மேல­திக தேயிலை இறப்­ப­ருக்­கான கொடுப்­ப­ன­வு­களின் அதிகரிப்பையே நாம் முன்வைத்துள்ளோம்.

இக் கோரிக்கையினையே நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறோம். இக் கோரிக்கையினை வென்றெடுப்பதற்காக எதிர்வரும் நாட்களில் தோட்டக் கம்பனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் அழுத் தங்களைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானிக்கப் பட்டிருப்பதாக வும் கூறினார்.

Monday, May 30, 2016

மலையக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு இல்லை - அங்கலாய்க்கும் மக்கள்

மலையக பகுதியில் உள்ள தோட்டங்களில் தேயிலை செடிகளின் கொழுந்து விளைச்சல் அதிகமாக காணப்படுகின்றது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தேயிலை மலைகளில் கொழுந்தின் விளைச்சல் குறைந்து வரட்சியான நிலைமை காணப்பட்டதால் தோட்ட தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் கஷ்டத்தை எதிர்நோக்கியதோடு வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் மாத்திரமே தோட்ட நிர்வாகத்தினால் தொழில் வழங்கப்பட்டது.
இதன் காரணமாக தொழிலாளர்கள் பொருளதார ரீதியில் பாரிய கஷ்டங்களை எதிர்நோக்கி வந்ததோடு குடும்பத்தில் ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கடன் சுமைக்கு தள்ளப்பட்டார்கள்.
தற்போது கொழுந்து விளைச்சலின் காரணமாக தொழிலாளர்கள் குடும்ப வருமானத்தை கருத்தில் கொண்டு நாளுக்கு அதிகமான கிலோ கிராம் கொழுந்தினை பறித்து வருவதோடு அதிகாலை 6 மணிக்கு தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்கள் மாலை 6 மணி வரை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலநிலை சீர்கேட்டினால் இத் தொழிலாளர்கள் தங்களுடைய தொழிலை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்பட்ட போதிலும் ஏதோ ஒரு வகையில் குடும்ப வருமானத்தை கருத்தில் கொண்டு மழை, குளிர் பாராமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருமானத்திற்காக போராடுகின்றனர்.
இத் தோட்ட தொழிலாளர்கள் படும் கஷ்டங்களையும், வேதனைகளையும் அறிந்த தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு பகல் உணவு வழங்குவதோடு மாலை நேரத்தில் கொழுந்து மடுவங்களில் வைத்து கோப்பி தேநீர் வழங்கி வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் மாலை நேரத்தில் அதிக நேரம் வேலை செய்வதாக தோட்ட அதிகாரிகளால் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சில தோட்டங்களில் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தில் தண்ணீர் இருப்பதற்காகவும், கொமிஷன் என்ற அடிப்படையில் ஒரு நேர நிறுவைக்கு 3 கிலோ தொடக்கம் 5 கிலோ வரை தங்களுடைய கொழுந்து இறாத்தலில் கழிக்கப்படுவதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இன்னும் சில தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு எவ்வித வசதிகளும் செய்து கொடுக்காமல் வருமானத்தை நோக்கி நிர்வாகம் கெடுபிடியாக நடந்து கொள்வதாகவும், கடுமையான மழை நேரத்தின் போது விடுமுறை கூட தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான கடும் கஷ்டத்தில் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் தொழிலாளர்களுக்கு இன்னும் சம்பள உயர்வு கிடைக்கப்படவில்லை என தொழிலாளர்கள் அரசியல்வாதிகள் மீது குற்றம் சுமத்துகின்றனர்.
கூட்டு ஒப்பந்தம் முடிவுவடைந்து ஒரு வருடமும் 2 மாதங்களும் கடந்த போதிலும் சம்பள உயர்வை பெற்று தருவதாக கோரிய மலையக அரசியல்வாதிகள் போராட்டங்களை மேற்கொண்டு விட்டு அமைதியாக மௌனம் சாதியப்பதாக தொழிலாளர்கள் அங்கலாயிகின்றனர்.
கடந்த வருடங்கள் பல போராட்டங்களை சம்பள உயர்வுக்காக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்ததாகவும், தொடர்ச்சியாக செய்யப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்னும் சில மாதங்களுக்கு மாத்திரமே தேயிலை செடிகளில் கொழுந்து விளைச்சல் இருக்கும் எனவும், அதன்பின் கொழுந்து விளைச்சல் படிப்படியாக குறையும் என தொழிலாளர்கள் தெரிவிப்பதோடு மீண்டும் வரட்சி ஏற்படும். அப்போது மீண்டும் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படுவதாகவும், இதனை கருத்தில் கொண்டு சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் தொழிற்சங்கங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்று தருமாறு தோட்ட தொழிலாளர்கள் அரசியல்வாதிகளிடம் ஞாபகப்படுத்துகின்றனர்.

Saturday, May 28, 2016

ஹட்டனில் மண்சரிவு- சாமிமலையில் 200 பேர் இடம்பெயர்வு

ஹட்டனில் மண்சரிவு

ஹட்டன், சமலனகம பகுதியில் ஏற்பட்ட மன்சரிவினால் மூன்று குடும்பங்களை சேர்ந்த 15 பேர்   இடம்பெயர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை ஹட்டன் பொலிஸாரும் நகரசபையினரும் இணைந்து பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்துள்ளனர். மேலும் மண்சரிவு பாதிப்புக்குள்ளான குடியிருப்புகளின்  வெடிப்புகள் எற்பட்டுள்ளதுடன் கீழ் பகுதியில் வர்த்தக நிலைய கட்டிடமொன்று நிர்மாண பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடதக்கது.

சாமிமலையில் 200 பேர் இடம்பெயர்வு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்ட சாமிமலையில்  இன்று (28) காலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, 41 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர்  இடம்பெயர்ந்துள்ளனர். மேற்படி பகுதிகளிலுள்ள வீடுகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இடம்பெயர்ந்த 200 பேரும் தோட்ட ஆலயம் மற்றும் சிறுவர் நிலையத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கக்கலையில் மண்சரிவு

லிந்துலை, தங்கக்கலை தோட்டம் கிம்ரு மேற் பிரிவில் இன்று (28-05-2016) காலை ஏற்பட்ட மண்சரிவினால் 2 வீடுகள் சேதமடைந்துள்ளன. இம்மண்சரிவினால் 2 வீடுகளில் வசித்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த லயன் தொகுதியில் 20 வீடுகள் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ளதாகவும் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் 100 பேர் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.


கினிகத்தேனை பிரதான வீதியில் வெடிப்புகள்

ஹட்டன், கினிகத்தேனை நகரின் பிரதான வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், இவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். இவ்வீதியூடான போக்குவரத்து வியாழக்கிழமை (26) முதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதெனவும் கடந்த இரண்டு தினங்களாக கினிகத்தேனை நகரின் பிரதான வீதியில் பாரிய நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதெனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில் கினிகத்தேனை பொலிஸாரினால் கட்டட ஆராய்ச்சி திணைக்களத்துக்கு அறிவித்ததையடுத்து, வெடிப்பு ஏற்பட்ட இடத்தை   வியாழக்கிழமை பார்வையிட்ட அதிகாரிகள் குறித்த வீதியினை பயன்படுத்துவதை தடைசெய்யமாறு உத்தரவிட்டுள்ளனர். வீதியில் ஏற்பட்டுள்ள வெடிப்பு அனர்த்ததிற்குள்ளாகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் மேலதிக நில ஆய்வு சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தனர். மேலும், இப்பகுதியில் உள்ள சில கடைகளிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மஸ்கெலியாவில் மண்சரிவு - 200 பேர் பாதிப்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டம் புரோக்மோர் பிரிவில்  28.05.2016 அன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் 200 பேர் இடபெயர்ந்துள்ளனர். 

குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் குடியிருப்பு சுவர்களிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 

மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியிலுள்ள 41 குடும்பங்களை சேர்ந்த 200 பேரை உடனடியாக வெளியேற்றி தோட்ட ஆலயம் மற்றும் சிறுவர் நிலையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். 

லிந்துலை மவுசல்ல தோட்டங்களில் மண்சரிவு அபாயம்

நுவரெலியா பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட லிந்துலை மவுசல்ல கீழ்ப்பிரிவு, கொணன் ஆகிய தோட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மவுசல்ல கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள இரண்டு லயன் குடியிருப்பு பகுதிகளில் நிலம் தாழ்ந்துள்ளதால் இந்தக் குடியிருப்புக்களைச் சேர்ந்த தொழிலாளர்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தோட்ட நிருவாகத்தினரும் பிரதேச கிராம சேவகர்களும் அறிவித்துள்ளனர். 

இதே வேளை கொணன் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்புப் பகுதியிலும் நிலம் தாழ் இறங்கியுள்ளதோடு சுவர்களில் வெடிப்புக்களும் ஏற்பட்டுள்ளன. 

இதேவேளை நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 03 ஹோல்புறூக் நு.ஹோம்மூட் தமிழ் வித்தியால கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் வெளிபுர பகுதிகள் பாரிய அளவில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. 

தற்போது இப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதால் எந்த நேரத்திலும் கட்டிடம் சரிந்து விழ கூடிய ஆபாத்தான நிலை காணப்படுகின்றது. 


மரம் முறிந்து விழுந்தில் 07 வீடுகள் சேதம் 35 போ் இடம்பெயர்வு

தெல்தோட்டை நாரங்கன் தோட்டப் பகுதியில் இன்று விடியற்காலை 07.00 மணி அளவில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 07வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெல்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்த விபத்தில் 07 குடும்பங்களை சோ்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டு இடம்பெயா்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த சம்பவத்தின் போது 03 வீடுகள் முழுமையாகவும் ஏனைய 04 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. 

இது குறித்து கிராம உத்தியோகத்தர் ஊடாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனா். 




Friday, May 27, 2016

அணுகுமுறைகள் முரண்பட்டு காணப்படுவதாலேயே பேச்சுக்கள், போராட்டங்கள் தோல்வியடைகின்றன

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வைப் பெற்­றுக் ­கொ­டுக்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டி­லேயே தொழிற்­சங்­கங்கள் இருந்து வரு­கின்­றன. ஆனாலும் தொழிற்­சங்­கங்­களின் அணு­கு­மு­றைகள் முரண்­பட்­ட­தாகக் காணப்­ப­டு­கின்­றன. அதி­கா­ரப்­போட்டி, மாறு­பட்ட கொள்கைத் திட்டம், மலை­யகத் தலை­மை­க­ளி­டத்தில் இருந்­து ­வ­ரு­கின்ற வரட்டு கௌர­வங்கள் ஆகி­ய­வற்றின் கார­ண­மாக பேச்­சு­வார்த்­தைகள், போராட்­டங்கள் மாத்­தி­ர­மின்றி அப்­பாவித் தொழி­லா­ளர்­களும் ஏமாற்­றப்­பட்டு, தோல்­வி­ய­டைந்து, சோர்ந்து போகின்­றனர் என்று ஐக்­கிய தோட்டத் தொழி­லாளர் சங்கப் பொதுச்­செ­ய­லாளர் முத்­து­லிங்கம் தெரி­வித்­துள்ளார்.
பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு விட­ய­மாக அவர் கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் கூறு­கையில், தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வைப் பெற்­றுக் ­கொ­டுக்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டி­லேயே, தொழிற்­சங்­கங்கள் இருந்து வரு­கின்­றன. ஆனாலும் அத் தொழிற்­சங்­கங்­களின் அணு­கு­மு­றைகள் முரண்­பட்ட வகை­யி­லேயே அமைந்­துள்­ளன. தமக்கே அனைத்து ஆக்கற் சக்­தி­களும் இருப்­ப­தாக நி­னைத்தே தற்­போது மலை­யகத் தலை­மைகள் செயற்­பட்டு வரு­வதைக் காண முடி­கி­றது. அதி­கா­ரப்­போட்டி, மாறு­பட்ட கொள்கைத் திட்டம், மலை­யகத் தலை­மை­க­ளி­டத்தில் இருந்­து­வ­ரு­கின்ற வரட்டு கௌர­வங்கள் ஆகி­ய­வற்றின் கார­ண­மாக பேச்­சு­வார்த்­தைகள், போராட்­டங்கள் மாத்­தி­ர­மின்றி அப்­பாவித் தொழி­லா­ளர்­களும் ஏமாற்­றப்­பட்டு, தோல்­வி­ய­டைந்து, சோர்ந்து போகின்­றனர்.
தோட்டத் தொழி­லாளர் சமூகம் என்ற ரீதியில் முரண்­பா­டு­களை ஒதுக்கி வைத்து அனைத்து மலை­யக சிறிய, பெரிய தொழிற்­சங்­கங்­களும் ஒன்­றி­ணைந்து தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்­வினை முன்­னி­லைப்­ப­டுத்தி ஒன்­றி­ணைந்த போராட்­டங்­க­ளையும் ஒன்­றி­ணைந்த ஆக்கற் காரி­யங்­க­ளையும் முன்­னெ­டுக்க வேண்டும். இப்­போ­ராட்­டங்கள் அர­சையும், தோட்­டங்­களை பொறுப்­பேற்­றி­ருக்கும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­தையும் வலி­யு­றுத்தி, அழுத்­தங்­களைக் கொடுக்­கக்­கூ­டி­ய­தா­கவே அமைய வேண்டும். அவ்­வாறு அமைந்தால் மாத்­தி­ரமே பிர­தி­ப­லனைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்கும்.
மலை­யக தொழிற்­சங்­கங்கள் தனித்­த­னி­யாக பிரிந்து நின்று போராட்­டங்­களை மேற்­கொள்­வதன் மூலம் போராட்டம் பல­வீ­ன­ம­டை­யவே செய்யும். அனைத்து தொழிற்­சங்­கங்­களின் இலக்கு சம்­பள உயர்வு விட­யத்தில் ஒன்­றா­ன­தாக இருக்கும் போது அத்­தொ­ழிற்­சங்­கங்கள் ஒன்­றி­ணைந்து போராட்­ட­மாக முன்­னெ­டுக்­கப்­படும் பட்­சத்தில் அதன் பயனை தோட்டத் தொழி­லா­ளர்கள் அனு­ப­விக்க கூடி­ய­தாக இருக்கும். அர­சாங்­கத்­தினால் தனியார் துறை­யி­ன­ருக்கும் வரவு செலவுத் திட்­டத்தின் மூலம் அறி­விக்­கப்­பட்ட 2500 ரூபா சம்­பள உயர்வு தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு மட்டும் கிடைக்­காமை அடிப்­படை உரிமை மீற­லாகும். இதனை அனை­வரும் புரிந்­து­கொண்டு செயற்­படல் வேண்டும். முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷ தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வு வழங்­கப்­படல் வேண்­டு­மென்று அடிக்­கடி கூறி வந்த போதிலும் அக்­கூற்று இது­வ­ரையில் போலித்­த­ன­மா­ன­தான அமைந்து விட்­டமை வேத­னைக்­கு­ரி­ய­தாகும்.
தற்­போ­தைய வாழ்க்கைச் செலவு உயர்­வினை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளினால் எதிர்­கொள்ள முடி­யாது அவர்கள் சொல்­லொணாத் துய­ரங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர். வாழ்க்கைச் செல­வினை ஈடு­செய்ய முடி­யா­மை­யினால் அவர்கள் தோட்டத் தொழில் துறை­யி­லி­ருந்து வில­கிச்­சென்று கொண்­டி­ருக்­கின்­றனர். இந்­நிலை தொடரும் பட்­சத்தில் தொழி­லா­ளர்கள் இன்றி தோட்டத் தொழில் துறை­யி­னையே மூட­வேண்­டிய அவலம் ஏற்படும். உழைப்பிற்கேற்ற சம்பளமின்மை, இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றினால் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்தும் நீடிக்க அனு­ம­திக்க முடி­யாது. இந்­நிலை நீடித்து பெருந்­தோட்­டங்கள் மூட வேண்­டிய சூழல் ஏற்­ப­டு­மே­யானால் அத் தோட்­டங்­களை நம்­பி­யி­ருக்கும் தொழி­லா­ளர்­களின் சாபங்­க­ளுக்கு அனைத்து மலை­யக தலை­மை­களும் உட்­ப­ட­வேண்­டி­வரும் என்றார்.

தோட்­டத்­திற்கு எக்­கா­ரணம் கொண்டும் செல்ல மாட்டோம் வேறு எங்­கா­வது வீடு­களை அமைத்து தாருங்கள்

மண்­ச­ரிவு ஏற்­பட்டு 16 உயிர்­களை காவு கொண்ட புளத்கொ­ஹு­பிட்­டிய களு­பான தோட்­டத்­திற்கு இனிமேல் எக் காரணம் கொண்டும் நாங்கள் செல்ல மாட்டோம். எங்­களுக்கு வேறு எங்­கா­வது வீடு­களை அமைத்து தரு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். இதனை மன்­றாட்­ட­மாக கோரு­கின்றோம் என்று புளத்­கோ­ஹு­பிட்­டிய மண்­ச­ரிவில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தெரி­வித்­தனர். தயவு செய்து களு­பான தோட்­டத்­திற்கு செல்­லு­மாறு எங்­களை வற்­பு­றுத்த வேண்டாம். அதனை ஒரு பாவப்­பட்ட இட­மா­கவே பார்க்­கின்றோம். எங்­களால் இனிமேல் புளத்­கோ­ஹு­பிட்­டிய களுப்­பான தோட்­டத்தில் நிம்­ம­தி­யாக வாழவே முடி­யாது என்றும் அந்த மக்கள் குமு­று­கின்­றனர்.

புளத்­கோ­ஹு­பிட்­டிய களு­பான தோட்­டத்தில் ஏற்­பட்ட மண்­ச­ரி­வை­ய­டுத்து, அங்­கி­ருந்து இடம்­பெ­யர்ந்து யக்­கல மகா­வித்­தி­யா­ல­யத்தில் 57 குடும்­பங்கள் தற்­கா­லி­க­மாக தஞ்­ச­ம­டைந்­துள்­ள அந்த மக்­கள் இந்த உருக்­க­மான கோரிக்­கையை முன்­வைத்­தனர். பாதிக்­கப்­பட்ட மக்கள் தொடர்ந்தும் துய­ரத்தை வெளி­யி­டு­கையில்,

உங்­க­ளிடம் ஒரு­வி­ட­யத்தை மன்­றாடிக் கோரு­கின்றோம். நாங்கள் கோரு­கின்ற இந்த விட­யத்தை தயவு செய்து அர­சாங்­கத்­திடம் எடுத்துக் கூறுங்கள். புளத்­கோ­ஹு­பிட்­டிய களு­பான தோட்­டத்தில் நாம் இது­வரை காலமும் வசித்தோம். ஆனால் அங்கு ஏற்­பட்ட மண்­ச­ரி­வினால் எமது உற­வுகள் 16 பேரை இழந்­து­விட்டோம். அந்த 16 பேரும் மண்­னோடு மண்­ணாக புதைந்து போகி­னர்.

அந்த வகையில் பார்க்­கும்­போது புளத்­கோ­ஹு­பிட்­டிய களு­பான தோட்டம் வாழ்­வ­தற்கு ஆபத்­தான இட­மென்­பது நிரு­ப­ன­மா­கி­விட்­டது. எனவே எக்­கா­ரணம் கொண்டும் இதன்­பின்னர் புளத்­கோ­ஹு­பிட்­டிய களு­பான தோட்­டத்­திற்கு நாங்கள் செல்­லவே மாட்டோம். அங்கு சென்று எம்மால் ஒரு­போதும் நிம்­மி­யாக வாழ முடி­யாது.இதனை புரிந்து கொள்­ளுங்கள். எமது நிலை­மையை உண­ருங்கள். எமது 16 உற­வு­களை பரித்­தே­டுத்த அந்த தோட்­டத்தில் எம்மால் இனி வாழ முடி­யாது.
எனவே எமக்கு வேறு ஒரு பாது­காப்­பான இடத்தில் வீடு­களை அமைத்து தாருங்கள் நாங்கள் அங்­கி­ருந்து கொண்டு வேண்­டு­மானால் களு­பான தோட்­டத்­திற்கு தொழி­லுக்­காக சென்று வர­மு­டியும். ஆனால் களு­பான தோட்­டத்தில் வாழ மாட்டோம்.

மண்­ச­ரிவு ஏற்­பட்­டதன் பின்னர் எமது பகு­திக்கு வருகை தந்த அமைச்சர் திகாம்­பரம் புதிய வீடு­களை அமைத்து தரு­வ­தாக உறு­தி­ய­ளித்தார். ஆனால் களு­பான தோட்­டத்தில் எமக்கு வீடு­களை அமைக்க வேண்டாம். மாறாக வேறு ஓர் இடத்தில் எமக்கு வீடு­களை அமைத்து தர வேண்டுமென அமைச்சர் திகாம்பரத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இந்த விடயத்தில் அமைச்சர் மனோகணேசனும் எமக்கு ஆதரவு வழங்குவார் என நம்புகிறோம். தயவு செய்து எம்மை கைவிட்டு விட வேண்டாம். இந்த விடயத்தை அரசாங்கத்திடம் எடுத்து செல்லுங்கள் என்றனர்.