Friday, May 27, 2016

அணுகுமுறைகள் முரண்பட்டு காணப்படுவதாலேயே பேச்சுக்கள், போராட்டங்கள் தோல்வியடைகின்றன

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வைப் பெற்­றுக் ­கொ­டுக்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டி­லேயே தொழிற்­சங்­கங்கள் இருந்து வரு­கின்­றன. ஆனாலும் தொழிற்­சங்­கங்­களின் அணு­கு­மு­றைகள் முரண்­பட்­ட­தாகக் காணப்­ப­டு­கின்­றன. அதி­கா­ரப்­போட்டி, மாறு­பட்ட கொள்கைத் திட்டம், மலை­யகத் தலை­மை­க­ளி­டத்தில் இருந்­து ­வ­ரு­கின்ற வரட்டு கௌர­வங்கள் ஆகி­ய­வற்றின் கார­ண­மாக பேச்­சு­வார்த்­தைகள், போராட்­டங்கள் மாத்­தி­ர­மின்றி அப்­பாவித் தொழி­லா­ளர்­களும் ஏமாற்­றப்­பட்டு, தோல்­வி­ய­டைந்து, சோர்ந்து போகின்­றனர் என்று ஐக்­கிய தோட்டத் தொழி­லாளர் சங்கப் பொதுச்­செ­ய­லாளர் முத்­து­லிங்கம் தெரி­வித்­துள்ளார்.
பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு விட­ய­மாக அவர் கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் கூறு­கையில், தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வைப் பெற்­றுக் ­கொ­டுக்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டி­லேயே, தொழிற்­சங்­கங்கள் இருந்து வரு­கின்­றன. ஆனாலும் அத் தொழிற்­சங்­கங்­களின் அணு­கு­மு­றைகள் முரண்­பட்ட வகை­யி­லேயே அமைந்­துள்­ளன. தமக்கே அனைத்து ஆக்கற் சக்­தி­களும் இருப்­ப­தாக நி­னைத்தே தற்­போது மலை­யகத் தலை­மைகள் செயற்­பட்டு வரு­வதைக் காண முடி­கி­றது. அதி­கா­ரப்­போட்டி, மாறு­பட்ட கொள்கைத் திட்டம், மலை­யகத் தலை­மை­க­ளி­டத்தில் இருந்­து­வ­ரு­கின்ற வரட்டு கௌர­வங்கள் ஆகி­ய­வற்றின் கார­ண­மாக பேச்­சு­வார்த்­தைகள், போராட்­டங்கள் மாத்­தி­ர­மின்றி அப்­பாவித் தொழி­லா­ளர்­களும் ஏமாற்­றப்­பட்டு, தோல்­வி­ய­டைந்து, சோர்ந்து போகின்­றனர்.
தோட்டத் தொழி­லாளர் சமூகம் என்ற ரீதியில் முரண்­பா­டு­களை ஒதுக்கி வைத்து அனைத்து மலை­யக சிறிய, பெரிய தொழிற்­சங்­கங்­களும் ஒன்­றி­ணைந்து தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்­வினை முன்­னி­லைப்­ப­டுத்தி ஒன்­றி­ணைந்த போராட்­டங்­க­ளையும் ஒன்­றி­ணைந்த ஆக்கற் காரி­யங்­க­ளையும் முன்­னெ­டுக்க வேண்டும். இப்­போ­ராட்­டங்கள் அர­சையும், தோட்­டங்­களை பொறுப்­பேற்­றி­ருக்கும் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­தையும் வலி­யு­றுத்தி, அழுத்­தங்­களைக் கொடுக்­கக்­கூ­டி­ய­தா­கவே அமைய வேண்டும். அவ்­வாறு அமைந்தால் மாத்­தி­ரமே பிர­தி­ப­லனைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்கும்.
மலை­யக தொழிற்­சங்­கங்கள் தனித்­த­னி­யாக பிரிந்து நின்று போராட்­டங்­களை மேற்­கொள்­வதன் மூலம் போராட்டம் பல­வீ­ன­ம­டை­யவே செய்யும். அனைத்து தொழிற்­சங்­கங்­களின் இலக்கு சம்­பள உயர்வு விட­யத்தில் ஒன்­றா­ன­தாக இருக்கும் போது அத்­தொ­ழிற்­சங்­கங்கள் ஒன்­றி­ணைந்து போராட்­ட­மாக முன்­னெ­டுக்­கப்­படும் பட்­சத்தில் அதன் பயனை தோட்டத் தொழி­லா­ளர்கள் அனு­ப­விக்க கூடி­ய­தாக இருக்கும். அர­சாங்­கத்­தினால் தனியார் துறை­யி­ன­ருக்கும் வரவு செலவுத் திட்­டத்தின் மூலம் அறி­விக்­கப்­பட்ட 2500 ரூபா சம்­பள உயர்வு தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு மட்டும் கிடைக்­காமை அடிப்­படை உரிமை மீற­லாகும். இதனை அனை­வரும் புரிந்­து­கொண்டு செயற்­படல் வேண்டும். முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷ தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள உயர்வு வழங்­கப்­படல் வேண்­டு­மென்று அடிக்­கடி கூறி வந்த போதிலும் அக்­கூற்று இது­வ­ரையில் போலித்­த­ன­மா­ன­தான அமைந்து விட்­டமை வேத­னைக்­கு­ரி­ய­தாகும்.
தற்­போ­தைய வாழ்க்கைச் செலவு உயர்­வினை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளினால் எதிர்­கொள்ள முடி­யாது அவர்கள் சொல்­லொணாத் துய­ரங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றனர். வாழ்க்கைச் செல­வினை ஈடு­செய்ய முடி­யா­மை­யினால் அவர்கள் தோட்டத் தொழில் துறை­யி­லி­ருந்து வில­கிச்­சென்று கொண்­டி­ருக்­கின்­றனர். இந்­நிலை தொடரும் பட்­சத்தில் தொழி­லா­ளர்கள் இன்றி தோட்டத் தொழில் துறை­யி­னையே மூட­வேண்­டிய அவலம் ஏற்படும். உழைப்பிற்கேற்ற சம்பளமின்மை, இயற்கை அனர்த்தங்கள் ஆகியவற்றினால் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்தும் நீடிக்க அனு­ம­திக்க முடி­யாது. இந்­நிலை நீடித்து பெருந்­தோட்­டங்கள் மூட வேண்­டிய சூழல் ஏற்­ப­டு­மே­யானால் அத் தோட்­டங்­களை நம்­பி­யி­ருக்கும் தொழி­லா­ளர்­களின் சாபங்­க­ளுக்கு அனைத்து மலை­யக தலை­மை­களும் உட்­ப­ட­வேண்­டி­வரும் என்றார்.

No comments: