Wednesday, November 11, 2015

335 உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­களில் 30 உள்­ளூராட்சி நிறு­வ­னங்­க­ளா­வது இருக்க வேண்டும்

மலை­ய­கத்தில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தொகையை அதி­க­ரிக்க வேண்­டுமே தவிர வட்­டா­ரங்­களை விஸ்த­ரிப்­பதால் உரிய பயன் விளையப் போவ­தில்லை என்று மலை­யக மக்கள் முன்­ன­ணியின் ஏ.லோரன்ஸ் தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், உள்­ளூ­ராட்சி விட­யங்கள் தொடர்பில் தற்­போது அதி­க­மாக பேசப்­ப­டு­கின்­றது. உள்­ளூ­ராட்சி முறை­மையை சாத­க­மாக்கிக் கொள்ள ஒவ்­வொரு சமூ­கத்­தி­னரும் முயன்று வரு­கின்­றனர். இந்­நி­லையில் மலை­ய­கத்­த­வர்­க­ளுக்கு உள்­ளூ­ராட்சி முறையை சாத­க­மாக்கிக் கொடுக்க மலை­யக அர­சி­யல்­வா­திகள் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்டும். மலை­யக மக்கள் மலை­ய­கத்தின் பல பகு­தி­களில் செறி­வாக வாழ்­கின்­றார்கள். எனினும் சனத்­தொ­கைக்­கேற்ப உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­களின் எண்­ணிக்கை போதா­துள்­ளது. மலை­யக அர­சியல்வாதிகள் இவ்­வி­ட­யத்தில் கரி­ச­னை­யுடன் செயற்­பட வேண்­டிய தேவை இருக்­கின்­றது.
 
மலை­யக மக்கள் சுமார் 15 இலட்சம் பேர் உள்­ளனர். எனவே மொத்­த­மாக உள்ள 335 உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­களில் எம்­ம­வர்­க­ளுக்கு 30 உள்­ளூராட்சி நிறு­வ­னங்­க­ளா­வது இருக்க வேண்டும். எனினும் இப்­போது இரண்டு பிர­தேச சபை­களும் இரண்டு நகர சபை­க­ளுமே எம்­வ­ச­மாக உள்­ளன. வட்­டார முறை இப்­போது இடம்­பெற்று வரு­கின்­றது. வட்­டா­ரங்­களை 35 இற்கு மேற்­ப­டக்­கூ­டாது என்று மேல் எல்­லையும் வகுத்­துள்­ளார்கள். மேல் எல்லை வகுக்­கப்­ப­டாது இருந்­தி­ருந்தால் மலை­யகப் பகு­தி­களில் வட்­டா­ரங்­களின் தொகை அதி­க­ரித்­தி­ருக்கும். குறிப்­பாக அம்­ப­கல பகு­தியில் நாற்­பது அல்­லது ஐம்­பது வட்­டா­ரங்­களும் நுவ­ரெ­லியா பகு­தியில் பல வட்­டா­ரங்­களும் ஏற்­ப­டுத்­தப்­படும் வாய்ப்­புள்­ளது. எனினும் மேல் எல்லை எமக்கு மிகவும் பாத­க­மா­கி­யுள்­ளது.
 
இரண்டு இலட்சம் பேருக்கு உள்ள வட்­டா­ரங்­களின் தொகையும் 60 ஆயிரம் பேருக்கு உள்ள வட்­டா­ரங்­களின் தொகையும் ஒரே­ய­ளவில் இருப்­ப­தனை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது.
 
இதில் என்ன நியாயம் இருக்­கின்­றது? தல­வாக்­கலை நகர சபைக்கு ஒன்­பது வட்­டா­ரங்­களும், நுவ­ரெ­லியா மாந­கர சபைக்கு 12 வட்­டா­ரங்­க­ளு­மா­கவே ஏற்­பா­டுகள் இடம் பெற்­றுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. வட்­டார ஏற்­பா­டு­களில் நாம் பின்­தள்­ளப்­பட்­டி­ருக்­கிறோம் என்­பது புல­னா­கின்­றது. இதுவும் ஒரு மோச­மான நிலை­மை­யையே வெளிப்­ப­டுத்­து­கின்­றது.
 
நாட்டில் அநே­க­மான கிராம சபைகள் காணப்­ப­டு­கின்­றன. வாக்­கு­ரிமை பறிக்­கப்­பட்ட நிலையில் கிரா­ம­சபை வாய்ப்­புக்கள் கூட எமக்கு கைந­ழுவிப் போய் உள்­ளமை வருத்­தத்­தக்க விட­ய­மாகும். 1987ஆம் ஆண்டு 15ஆவது இலக்க பிர­தே­ச­சபைச் சட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு உட்­பட்ட பிர­தேச சபைகள் உரு­வாக்­கப்­பட்­டன. இந்த நிலையில் மலை­யக மக்­க­ளுக்கு பிர­தேச செய­ல­கங்கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டாத நிலையில் பிர­தேச சபை­களும் ஏற்­ப­டுத்த முடி­யாமல் போய்­விட்­டது. பிர­தேச செய­ல­கங்­களை உரு­வாக்­காமல் பிர­தேச சபை­களை பற்றி யோசிக்க முடி­யாது. நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 12 பிர­தேச செய­ல­கங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென மலை­யக கட்­சிகள் அனைத்தும் ஒன்­றி­ணைந்து கோரிக்கை விடுத்­தி­ருந்­தன. இப்­போது 5 பிர­தேச செய­ல­கங்கள் மட்­டுமே காணப்­ப­டு­கின்­றன. எனினும் இது சாத்­தி­யப்­ப­ட­வில்லை. இவ்­வாறு சாத்­தி­யப்­ப­டு­மி­டத்து தமிழ் மக்கள் வாழும் பகு­தி­களில் 7 பிர­தேச சபை­களும் சிங்­கள மக்கள் வாழும் பகு­தி­களில் 5 பிர­தேச சபை­க­ளு­மாக மொத்­த­மாக 12 பிர­தேச சபைகள் உரு­வாகும். மலை­ய­கத்தில் அதி­க­மான நக­ர­ச­பை­களை ஏற்­ப­டுத்தும் வாய்ப்­புள்­ளது. கொட்­ட­கலை, பொக­வந்­த­லாவை, மஸ்­கெ­லியா, அக்­க­ரப்­பத்­தனை, கந்­தப்­பளை, இரா­கலை, உட­பு­சல்­லாவ, புசல்­லாவ, பூண்­டு­லோயா போன்ற இடங்­களை தர­மு­யர்த்­து­வது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
 
உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­களின் ஊடாக எமது மக்­க­ளுக்கு உரிய சேவை கிடைப்­ப­தில்லை என்­பது உண்­மைதான். எனினும் நுவ­ரெ­லியா, தம்­ப­க­முவ போன்ற பகு­தி­களில் மாகாண மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் உத­வி­யுடன் உள்­ளூ­ராட்சி உறுப்­பி­னர்கள் பல வேலைத்­திட்­டங்­க­ளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். கீழ் மட்ட குடியரசாகிய உள்ளூராட்சி மன்றங்களில் எமது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு அதிகரித்துக் கொண்டதன் பின்னர் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்தி உள்ளூராட்சி மன்ற நிதியினை எமது சமூகத்துக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதைவிடுத்து உள்ளூராட்சி நிதி எமக்குக் கிடைக்கவில்லை என்பதற்காக உள்ளூராட்சி தேர்தலில் நாம் போட்டியிடாமல் இருந்துவிட முடியாது. எமது பிரதிநிதித்துவம் மிகவும் அவசியமாகும் என்றார்.

இழு­பறி நிலை கூட்டு ஒப்பந்தம் தாமதத்துக்கு காரணம்

முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்திற்கும் பெருந்­ தோட்ட தொழிற்­சங்­க­ளுக்கும் இடை­யே­யான இழு­பறி நிலை கார­ண­மா­கவே தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தொடர்­பான கூட்டு ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டு­வது கால தாம­த­மா­வ­தாக தெரி­வித்த அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன ஆயிரம் ரூபா சம்­பள உயர்­வுக்கு முத­லா­ளிமார் சம்­மே­ளனம் கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.
 
கொழும்பு டார்லி வீதி­யி­லுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும் போதே தொழில் மற்றும் தொழி­லாளர் உற­வுகள் தொடர்­பான அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன இவ்­வாறு தெரி­வித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,
 
பெருந்தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பளம் இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை முத­லா­ளிமார் சம்­மே­ள­னமும் தோட்ட தொழிற்­சங்­கங்­களும் இணைந்து கையெ­ழுத்­திடும் கூட்டு ஒப்­பந்­தத்தின் மூலமே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.
 
டந்த மார்ச் 31 ஆம் திகதி இந்தக் கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யா­கி­விட்­டது. இந்­நி­லையில் முத­லா­ளிமார் சம்­மே­ளனம், தோட்டத்தொழி­லாளர் சங்­கங்கள் மற்றும் தேசிய ஊழியர் ஆலோ­சனை சபை­யுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டன.
 
நானும் இப்­பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­கொண்டேன். இதன்­போது தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­பள உயர்வு வழங்­கப்­பட வேண்டும் என தொழிற்­சங்­கங்கள் வலி­யு­றுத்­தின.
 
ஆனால் முத­லா­ளிமார் சம்­மே­ள­னமும் இக் கோரிக்­கைக்கு தமது கடு­மை­யான எதிர்ப்பை வெளி­யிட்­டது. 620 ரூபா வழங்­கு­வ­தற்கு முத­லா­ளிமார் சம்­மே­ளனம் இணக்கம் தெரி­வித்­தது.
 
இதனை தொழிற்­சங்­கங்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. இதன்­போது 770 ரூபா சம்­பள உயர்வு தொடர்­பி­லான யோச­னையை நான் முன் வைத்தேன்.
 
ஆனால் இது­வ­ரையில் இத்­தொகை தொடர்பில் முத­லா­ளிமார் சம்­மே­ள­னமும் தொழிற்­சங்­கங்­களும் இணக்­கப்­பாட்­டுக்கு வராது இழு­பறி நிலை­யி­லேயே உள்­ளது. எனவே தான் தோட்டத்தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தொடர்­பான கூட்டு ஒப்­பந்தம் கையெ­ழுத்­தி­டு­வது காலதாம­த­மா­கி­யுள்­ளது.
 
இவ் ­வி­டயம் தொடர்பில் இரு தரப்பினரிடமும் இணக்கப்பாட்டுக்கு வருமாறு நான் கோரிக்கை விடுத்தேன். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இணக்கப்பாடு காணப்படாததனாலேயே தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றார்.

நன்றி- வீரகேசரி

 

Thursday, November 5, 2015

மலையகத்தில் சீரற்ற காலநிலை

மலையகத்தில் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன

அந்தவகையில் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ்  பகுதியில் கடும்மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மேற்படி தோட்டப்பகுதியில் அமைந்துள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்ததால் வெள்ளம் அப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கும், கடைகளுக்கும் உட்புகுந்ததால் 70 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.எனினும் நீர் வடிந்து சென்றதன் பின் தங்களுடைய வீடுகளுக்கு சென்று விட்டனர். இப்பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை சந்தித்து வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர். 

அத்தோடு ஹட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியிலான வீதி நேற்றிரவு நீரில் மூழ்கியது. இதனால் பல மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இடைவிடாது பெய்துவரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
மேலும் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை ஆட்லோ தோட்டத்தை சேர்ந்த 25 வீடுகளில் வெள்ள நீர் உட்புகுந்ததனால் மக்கள் இடம் பெயர்ந்து உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர். அத்துடன்  நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலரண்டன் தோட்டத்தில் 45 க்கும் மேற்பட்ட வீடுகளும் நீரில் மூழ்கி உள்ளன.

இது தவிர தலவாக்கலை டயகம பிரதான வீதியில் பாரிய கற்பாரைகள் சரிந்து விழுந்ததால் சில மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. அக்கரப்பத்தனை ஹோல்புரூக் நகரத்தில் ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு அருகாமையில் பாரிய மண்மேடுகள் சரிந்த வண்ணம் இருப்பதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
 
தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருவதனால் மேலும் அனர்த்தங்கள் நிகழக்கூடும் என மக்கள் கருதுகின்றனர். கடும் மழை காரணமாக பெருமளவு பயிர்ச்செய்கை நிலங்களும் நீரில் மூழ்கி உள்ளன.

மேலும் அக்கரபத்தனை ஆகுரோவா தோட்டத்தில் மண்மேடு சரிந்துள்ளது. இதன்காரணமாக மூன்று வீடுகள் சேதமாகியுள்ளது. அத்தோடு அதே தோட்டத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் பின் பகுதியில் பாரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அக்கரபத்தனை  நல்லதண்ணி தோட்டத்தில் மண்சரிவால் 3 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது.

அத்தோடு லக்ஸபான பிரதேசத்தில் நேற் முதல் பெய்து கடும் மழை காரணமாக லக்ஸபான நீர்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் இரண்டு அங்குலத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும், நோட்டன் பகுதியில் பெய்த கடும் மழையினால் விமல சுரேந்திர நீர்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு மேலாக வெள்ளம் பெருகெடுத்துள்ளதாகவும், அத்துடன் காசல்ரீ நீர்தேக்கத்தில் அணைக்கட்டுக்கு மேலாக நீர் பெருக்கெடுத்துள்ளது. 

மவுஸாக்கலை நீர்தேக்கத்தில் நீர் நிரம்புவதற்கு இன்னும் ஐந்து அடி மாத்திரமே இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று திறக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சிய மழை பெய்யும் பட்சத்தில் மலையகத்தில் உள்ள ஏனைய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறந்துவிட வேண்டிய நிலை காணப்படுவதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ்பகுதியில் ஆற்றுக்கு அருகாமையில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மரக்கறி மற்றும் தேயிலை உற்பத்திகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

மழை காரணமாக பல இடங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்புக்களும் பல இடங்களில் இடம்பெற்று வருகின்றன.

 நன்றி- வீரகேசரி

கறுப்பு தீபாவளி திருநாளா தொழிலாளர்களுக்கு.... ?

பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க  வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய 1000 ருபா சம்பள உயர்வு எமக்கு வேண்டும். இல்லாவிடின் தோட்ட தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் மாதம் தோறும் வழங்கி வரும் தொழிற்சங்க சந்தா பணத்தினை நிறுத்தி விடுவோம்.

அத்தோடு எதிர்வரும் தீபாவளி திருநாளை கறுப்பு கொடி ஏந்தி தான் கொண்டாடுவோம் என டிக்கோயா சாஞ்சிமலை டிலரி தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இன்று காலை நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் . 
சுமார்  150ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக 7 தடவை நடைபெற்ற பேச்சுவார்தையின் உண்மையான வெளிபாடு என்ன என தொழிலாளர்கள் சந்தேகம் கொள்கின்றனர். எமக்கான சம்பள உயர்வு தொடர்பாக ஆறுமுகன் தொண்டமான், திகாம்பரம், இராதாகிருஸ்ணன் மனோகனேசன் இன்னும் பல தலைவர்கள் பேசுகின்றார்களே தவிர 1000 ருபா சம்பள உயர்வு எந்தவகையில் பெற போகின்றார்கள் என்ற உண்மையை எமக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

 ஆனால் வாக்களியுங்கள் 1000 ருபா சம்பள உயர்வை பெற்று தருகின்றோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நம்பியே வாக்களித்தோம் ஆகையால் ஜனாதிபதியும், பிரதமரும் இந்த சம்பள விடயத்தில் தலையிடவேண்டுமென வழியுறுத்துகின்றோம். சீரற்ற காலநிலையிலும் அட்டை கடியை பொருட்படுத்தாமல் 08 மணிநேரம் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களை ஏமாற்றவேண்டாம்.

தொழிலாளர்களை பகடகாய்களாக்கி துரோகம் நினைக்க இனிமேலும் இடம் கொடுக்க போவதில்லை என தெரிவிக்கும் தொழிலாளர்கள் நாங்கள விழித்துகொண்டே இருக்கின்றோம்.எங்களுடைய பண்டிகை காலத்தில் மாத்திரம் ஏன் இந்த நிலை ஏற்படுகின்றது என தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.

அத்தோடு 10000 மற்றும் 15000 ரூபா பெற்றுத்தருகின்றோம் என கூறிய தொழிற்சங்கவாதிகள் தற்போது எங்கே இருக்கின்றார்கள் என 

கேள்விகளையும் தொழிலாளர்கள் எழுப்பினர். எனவே இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tuesday, November 3, 2015

சிறு தோட்ட தேயிலை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

தெனி்யாய நகரில் சிறுத்தோட்ட தேயிலை உரிமையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடு்த்திருந்தனர்.

தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கும் கொழுந்திற்கு நியாயமான விலையை பெற்றுத் தருமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தெனியாய வைத்தியசாலையிலிருந்து பேரணியாக வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தெனியாய பஸ் தரிப்பிடம் வரை சென்று தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

சிறுதோட்ட தேயிலை உரிமையாளர்கள் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், சுமார் ஒன்றரை மணித்தியாலம் வரை தொடர்ந்துள்ளதுடன், இதில் 300க்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர்

இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில்,  கொழும்பில் எதிர்வரும் 6ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

நிலைமை எப்போது மாறும்

நுவரெலியா மாவட்டத்தில் இறம்பொடை கெமினிதன் தோட்டத்தில் இருந்து இறம்பொடை இந்துக் கல்லூரிக்கு 05 கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது.

கெமினிதன் தோட்டத்திற்கும் பாடசாலைக்கும் இடையில் போக்குவரத்து செய்வதற்கான வசதிகள் இல்லாததால் மாணவர்கள் நடந்தே பாடசாலைக்கு செல்ல வேண்டும்.

அண்மையில் வெதமுல்லையில் ஏற்பட்ட மண்சரிவின் போது இந்த தோட்டத்திற்கு செல்லும் பாதையும் சேதமாகியுள்ள நிலையில், மாணவர்கள் மட்டுமல்லாமல் பிரதேச மக்களும் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்கள் 05 கிலோ மீற்றர் தூரம் நடந்து நாளாந்தம் பாடசாலைக்கு செல்கின்றனர்.

இவ்வாறு பாடசாலைக்குச் சென்று திரும்பும் மாணவர்கள் இடையில் வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்றினை மறித்து ஏறிச் சென்ற காட்சி எமது செய்தியாளரின் கெமராவில் பதிவாகியுள்ளது.
பல கனவுகளை சுமந்து கொண்டு நாளாந்தம் பாடசாலை செல்லும் இம்மாணவர்கள் பாடசாலை முடிந்த பின்னும் 5 கிலோ மீற்றர் தூரம் நடந்து வர வேண்டியுள்ளது. மலையக்தில் நாளாந்தம் இவ்வாறு பாடசாலை மாணவர்கள் பல கஸ்டங்களை எதிநோக்கி வருகின்றனர்.

இந்த நிலமை இவ்வாறு தொடராத வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் அண்மையில் தேயிலை தொழிற்சாலையிலிருந்து கழிவு தூள்களுடன் நல்ல தேயிலைதூள்களையும் தனியார் வர்த்தகர் ஒருவர் இரவு  வேளையில் கொண்டு செல்ல முற்படுகையில் அத் தோட்டத்தொழிலாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக திம்புள பத்தனை பொலிஸில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட வர்த்தகர் அத்தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இம்முறைப்பாட்டில் பொதுமக்கள் சிலர் தம்மை தாக்கியதாகவும் கொலை முயற்சியில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தோட்ட நிர்வாகமும் பொலிஸ் நிலையமும் பொதுமக்களின் முறைப்பாட்டிற்கு சரியான தீர்வினை எடுக்காத பட்சத்தில் இதுவரை 13 தொழிலாளர்கள் இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரனைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைஆட்சேபித்து மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் இன்று குறித்த தோட்டத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எமது தோட்டத்தில் தோட்ட நிர்வாகம் ஒழுங்கற்ற ரீதியில் வர்த்தகருக்கு தேயிலை தூளை வழங்கியமை அச்சத்தை தருவதாக நாம் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
ஆனால் இதற்கு நடவடிக்கை எடுக்காமல் தொழிலாளர்கள் மீது தோட்ட நிர்வாகமும் பொலிஸாரும் நடவடிக்கை எடுப்பது வேடிக்கையான விடயமாகும் என போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.