Thursday, October 15, 2015

தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வு தொடர்­பான கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யாகி ஆறு மாதங்கள் ஆகியும் புதிய ஒப்­பந்தம் செய்து கொள்­ளப்­ப­ட­வில்லை. அதனால், தொழி­லாளர்­க­ளுக்கு சம்­பள உயர்வும் கிடைக்­க­வில்லை.

மேலும் தீபா­வளிப் பண்­டிகை காலத்தில் அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலையும் நாளுக்கு நாள் அதி­க­ரித்துச் செல்கின்­றது. எனவே, தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க அர­சாங்கம் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என மலை­யக மக்கள் முன்­னணி உப தலைவர் செல்­லையா சிவ­சுந்­தரம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.
அவர் மேலும் தமது அறிக்­கையில், தீபா­வளிப் பண்­டிகை நெருங்கி வரும் வேளையில் பருப்பு, சீனி முத­லான அத்­தி­யா­வ­சியப் பொருட்­களின் விலை நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்ணம் இருக்­கின்­றது. இதனால் குறைந்த வரு­மானம் பெறு­கின்ற தோட்டத் தொழி­லா­ளர்கள் பெரும் பொரு­ளா­தாரச் சுமைக்கு முகங் கொடுக்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.
 
கடந்த வரவு செலவுத் திட்­டத்தில் அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கும், தனியார் துறை ஊழி­யர்­க­ளுக்கும் அறி­விக்­கப்­பட்ட சம்­பள உயர்வு வழங்­கப்­பட்­டுள்­ளது. எனினும், இந்த சம்­பள அதி­க­ரிப்பு தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்குக் கிடைக்­க­வில்லை. மேலும், அவர்­க­ளுக்கு கடந்த ஏப்­ரல் மாதத்­தி­லி­ருந்து கிடைக்க வேண்­டிய சம்­பள உயர்வும் கிடைக்­க­வில்லை.
 
அதற்­காக தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் கம்­ப­னி­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தைகள் அனைத்தும் தோல்­வியிலேயே முடிவடைந்­துள்­ளன. இந்­நி­லையில் அடுத்த மாதம் 10 ஆம் திகதி தீபா­வளிப் பண்­டி­கையைக் கொண்­டாடும் தோட்டத் தொழி­லா­ளர்கள் புத்­தாடை கொள்­வ­னவு செய்­யவும், பண்­டி­கைக்குத் தேவை­யான பல­கா­ரங்­களைத் தயா­ரிக்­கவும் பெரும் சிர­மத்தை எதிர்­நோக்கி வரு­கின்­றார்கள். பண்­டிகை காலத்­துக்குத் தேவை­யான அத்­தி­யா­வ­சியப் பொருட்கள் அனைத்­தி­னதும் விலை­வாசி திடீ­ரென அதி­க­ரித்­துள்­ளது. இதனால் ஏற்­க­னவே, பொரு­ளா­தாரச் சுமையில் சிக்கித் தவிக்கும் தொழி­லா­ளர்கள் மேலும் சுமைக்கு ஆளாகி இருக்­கின்­றார்கள். கம்­ப­னி­க­ளுக்கும், தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் இடையில் இடம்­பெறும் பேச்­சு­வார்த்­தைகள் தொடர்ந்து இழு­பறி நிலையில் காணப்­ப­டு­கின்­றது. எனவே, கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லிலும், பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் இன்­றைய அர­சாங்கம் ஆட்­சி­ய­மைக்க பெரு­ம­ளவில் நம்­பிக்­கை­யுடன் வாக்­க­ளித்த
 
மக்­க­ளுக்கு நிவா­ரணம் கிடைக்கும் வகையில் அர­சாங்கம் தலை­யிட்டு நியா­ய­மான சம்­பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் செல்­லையா
சிவ­சுந்­தரம் வேண்­டுகோள் விடுத்துள்ளார்.

அரிய வகை உயிரினங்கள் அழியும் அபாயம்

இலங்கையில் மட்டுமே உள்ளதாக கூறப்படும் அரிய வகை உயிரினங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுச் சூழலியலாளரான பிரதீப் சமரவிக்கிரம தெரிவித்தார்.

"கொள கொடையா" என்றழைக்கப்படும் மீனினம், 4 அரியவகை பச்சோந்திகள், 10 வகையான வண்ணத்துப்பூச்சிகள், 11 வகையான முலையூட்டிகளே இவ்வாறு அழியும் நிலையை எதிர்கொண்டுள்ளன.

இவை, மகாவலி கங்கையை சூழ அமைந்துள்ள சிறிய சிறிய தீவுகளில் வாழ்ந்து வருவதாகவும் இக்கங்கையில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் இராசாயன பதார்த்தங்கள் காரணமாக அவை அழியும் நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அபாய அறிவித்தல்

பதுளை மாவட்டத்தில் மண் சரிவு, மலை சரிதல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும். இதனால் அம் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 50,000 மக்களை அப்பிரதேசத்திலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.  
இதேவேளை பதுளை மாவட்டத்தில் கடந்த புதன் கிழமை மாலை மிகக் குறுகிய நேரத்தில் 80- 100 மி.லீ வரை மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
பதுளை மாவட்டம் மட்டுமன்றி நுவரெலியா, கேகாலை, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கும் மேற்படி அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இயக்குநர் பிரதீபு பொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.  
காற்றுடன் கூடிய மலை நாட்டின் பல பாகங்களிலும் பெய்யக்கூடுமென வாநிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.
தொடர்ச்சியான மழையினால் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தை அண்டிய மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்யுமானால் நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படும்  என தெரிவிக்கின்றனர். இதேவேளை நுவரெலியா, ஹட்டன், கினிகத்தேன உட்பட மலையகத்தின் பல பகுதிகளில் அதிக பனி மூட்டம் காணப்படுவதால் வாகனங்களை செலுத்வோர் மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 
இறம்பொடை, வெதமுல்ல கயிறுக்கட்டி தோட்டத்திலுள்ள 2ஆம் லயன் குடியிருப்பிலிருந்து 7குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேற்படி லயன் குடியிருப்புத் தொகுதியின் பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்டிருந்த மதில் இடிந்து விழும் அபாயமுள்ளதாக தெரிவித்தே குறித்த 7குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Wednesday, October 14, 2015

உள்ளூராட்சித் தேர்தல்களின் போது தமிழ் பிரதிநிதித்துவம் குறைவடையும் அபாயம்

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்­களில், தற்­போ­துள்ள மிகச் சொற்­ப­மான தமிழ் பிர­தி­நி­தித்­து­வங்கள் கூட கைந­ழுவிப் போகக்­கூ­டிய அபாயம் இருப்­ப­தாக மத்­திய மாகாண சபை உறுப்­பினர் எம்.சிவ­ஞானம் தெரி­வித்தார். ஞாயி­றன்று மாத்­தளை இ.தொ.கா. அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற தோட்டக் கமிட்டித் தலை­வர்­களின் கூட்­டத்தின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். மாவட்டப் பிர­தி­நிதி எஸ்.கம­ல­நா­தனின் தலை­மையில் நடை­பெற்ற இக் கூட்­டத்தில் அவர் மேலும் பேசிய போது.
 
கடந்த காலங்­களில் பெரும்­பான்மை இன அர­சியல் கட்­சிகள் தான் பல­வ­கை­யான திரு­கு­தா­ளங்­களைச் செய்து நமது மக்­களின் வாக்­கு­களைச் சித­ற­டித்து அவர்கள் நன்­மை­ய­டைந்து வந்­தனர். ஆனால் எதிர்­காலம் அப்­படி இருக்கப் போவ­தில்லை.
 
நம்­ம­வர்­களே தமது பலத்தைக் காட்­டு­வ­தாக முயற்­சி­களில் இறங்கி அதன் மூலம் நமது மக்கள் மத்­தியில் நிலவும் ஒற்­று­மையை சீர்­கு­லைத்து அவர்­களின் வாக்­கு­க­ளையும் சித­ற­டிக்கும் கைங்­க­ரி­யத்தில் இறங்கும் அபாயம் இருக்­கி­றது. ஆகவே பெருந்­தோட்­டங்­க­ளி­லுள்ள நமது மக்கள் மிகவும் விழிப்­பாக இருந்து பிரி­வி­னைக்கு வழி­வ­குக்கும் சக்­தி­களை ஓரங்­கட்ட முன்­வர வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மாகும்.
 
தொழி­லா­ளர்கள் குடும்­பங்­க­ளுக்கு ஏழு பர்ச்சஸ் காணி வழங்கும் திட்­டத்தை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள போவ­தில்லை. தோட்­டங்கள் திட்­ட­மிட்டு காடு­க­ளாக மாற்­றப்­பட்டு வரு­கின்­றன. அப்­படி நிர்­வா­கத்தால் கைவி­டப்­பட்­டுள்ள காணி­களை ஒரு குடும்­பத்­துக்கு தலா இரண்டு ஏக்கர் வீதம் தொழி­லா­ளர்­க­ளுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்­ப­தையே நாங்கள் தொடர்ந்தும் வலி­யு­றுத்தி வரு­கின்றோம். ஆகவே நமது கோரிக்கை தொட­ரவே செய்யும் என்று குறிப்பிட்டார்.

தோட்ட அதிகாரியின் தாக்குதலால் தாய், மகன் வைத்தியசாலையில்


வலப்பனை, மாவுவா தோட்டத்தில் தோட்ட அதிகாரியின் தாக்குதல் காரணமாக அதே தோட்டத்தை சேர்ந்த திலகேஷ்வரி (வயது 40), செலக்ஷன் (வயது 16) ஆகிய இருவரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது வலப்பனை, மாவுவா தோட்டத்தில் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி ஓய்வூதிய கடிதங்களைப் வழங்கும் நடவடிக்கையில் தோட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது.
 
மத்துரட்ட பிளான்டேசன் கம்பனியின் கீழ் இயங்கும் இத்தோட்டத்தில் மொத்தமாக 385 தொழிலாளர்கள் தொழில்புரிகின்றனர். ஒரு தொழிலாளிக்கு தலா 1,000 தேயிலை மரங்கள் வீதம் பிரித்து தருவதாகக் கூறி, அதற்கு தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து 272 தொழிலாளர்களிடமிருந்து தோட்ட நிர்வாகம் கடிதங்களை பெற்றுக்கொண்டுள்;ளது. இதில் 150 தொழிலாளர்களுக்கு 14 நாட்களுக்கான காசோலைகளும் வந்து விட்டன. இவர்களில் சிலர் இதற்கு உடன்படாததால் தோட்ட நிர்வாகம் அவர்களை பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது.
 
இவ்வாறிருக்க தனி வீடொன்றில் வசித்து வரும் திலகேஷ்வரி என்ற பெண்ணின் வீட்டுக்கு நேற்று சென்ற தோட்ட அதிகாரி, கணக்கப்பிள்ளை மற்றும் தோட்ட குமாஸ்தாக்கள் தேயிலைச் செடிகளை பிடிங்கியதாக கூறி இப்பெண்ணிடம் முரண்பட்டுள்ளனர். இதன்போது தோட்ட அதிகாரி அப்பெண்ணை தாக்கியுள்ளார். தனது தாயை தோட்ட அதிகாரி தாக்குவதை கண்ட அப்பெண்ணின் மகன் அதனை தடுக்க முற்பட்டபோது அச்சிறுவனையும் தோட்ட அதிகாரி மற்றும் கணக்கப்பிள்ளை ஆகியோர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
 
இவர்களின் தாக்குதலில் காயமடைந்த இருவரும் உடனடியாக வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
 
இச்சம்பவத்துடன் தொடர்புடைய கணக்கபிள்ளையை பொலிஸார் கைதுசெய்த போதும் ஒரு சில மணித்தியாலங்களில் விடுவித்துள்ளதாகவும் இது தொடர்பிலான விசாரணைகள் மேலிடத்துக்கு மாற்றியுள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை, தோட்ட அதிகாரியை தாக்கியதாக கூறி தொழிலாளி ஒருவரை வலப்பனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
 
இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்ட மக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.மாவுவா தோட்டத்தில் இத்தகைய சம்பவங்கள்  தொடர்ந்து நடைபெற்று வருகின்றபோதும் தொழிலாளர்களின் சந்தாவை பெறும் எந்த தொழிற்சங்கங்களும் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இத்தோட்டத்தை கைவிட்டதை போன்று தொழிற்சங்கங்களும் நடந்துகொள்வதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Thursday, October 8, 2015

பஸ்சுக்காக காத்திருக்கும் நயாபான மக்கள்

“இன்னும் 8 அடி கம்ராலே தான் இருக்காங்க, அதுக்குள்ள தான் எல்லாருமே வாழ்ந்துட்டு இருக்காங்க. அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சினு எல்லாரும் அந்த காம்ராகுள்ள தான் படிக்கனும், சாப்டனும் மத்த எல்லா வேலைகளையும் செஞ்சிக்கனும். கொஞ்சம் பேர்க்கு கரன்ட் இருக்கு, கொஞ்சம் பேர்க்கு இல்ல. மழை வந்துச்சினா ஒரு சட்டி பானைய அல்லது வாலிய எடுத்து வச்சிட்டு தான் தூங்குவம். இங்கு எதுவுமே எங்களுக்கு சொந்தம் இல்ல. வீட்டு தின்னைய தான்டினா பிள்ளைங்களுக்கு விளையாட கூட இடம் இல்ல. வீட ஒடச்சி கட்டவோ, வீட்டுக்கு முன்னால இருக்கிற மரத்த வெட்டவோ எதுக்குமே எங்களுக்கு உரிம இல்ல” – என்று தன்னுடைய ஊர் மக்கள் வாழும் வாழ்க்கை குறித்து (மலையக மக்களின் வாழ்க்கை) என்னிடம் மனம் வெறுத்த நிலையில் பேசிக்கொண்டிருந்த தவனேஸ் என்ற இளைஞனின் பேச்சை கேட்டுக் கொண்டே நான் அந்த மண்டபத்தினுள் நுழைந்தேன்.

மலையகம் என்றாலே அழகுக்கு குறைவில்லை. மலைகளும் மலை சார்ந்த தோட்டங்களும் எங்கு சென்றாலும் மீண்டும் மீண்டும் அவ்விடத்திற்கு செல்லத் தோன்றும். ஒவ்வொரு முறையும் நான் வேலைப்பார்க்கும் நிறுவனத்தின் வேலைத்திட்டத்திற்காக கிராமங்களுக்கும் தோட்டங்களுக்கும் போவது வழக்கம். அந்த வகையில் அண்மையில் நயாபான என்ற தோட்டத்திற்கு போக நேர்ந்தது. கம்பளை நகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் இருக்கும் தோட்டமே இது.

கம்பளையில் எனது நண்பனை சந்தித்து நான் போகவிருக்கும் தோட்டம் குறித்து தெரிவித்தேன். “அங்கு போக பஸ் இல்லை” – உடனே அவன் வாயில் இருந்த பதில் இது. சரி ஆட்டோவுல போவோம் என்று புறப்பட்டோம். பயணிக்க ஆரம்பித்து ஒரு மணித்தியாலத்தின் பின்னர்தான் அந்தத் தோட்டத்தை நெருங்கினோம்.

ஒருமாதிரியாக தோட்டத்தைச் சென்றடைந்தோம். அங்கு நண்பரின் உதவியுடன் வேலைத்திட்டத்திற்காக கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தேன். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இளைஞர்கள் வந்திருந்தனர். இடைவிடாமல் பெய்துகொண்டிருக்கும் மழையினால்தான் வரவில்லை போல. மழை கொஞ்சம் ஓய ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தனர்.

இளைஞர்கள் அனைவரும் வருகை தந்ததன் பின்னர் என்னுடன் வருகை தந்த சக நண்பர் நாங்கள் வந்ததற்கான காரணத்தை கூறி கலந்துரையாடலை ஆரம்பித்தார். தோட்டத் தலைவரும் தபால் உத்தியோகத்தர் ஒருவரும் அமர்ந்திருந்தார்கள்.

நண்பர் வந்த நோக்கத்தை கூறி சிறிது நேரத்திலேயே உங்களுடைய தோட்டத்தில் காணப்படும் பிரதான பிரச்சினைகள் என்ன என்று கேட்டார். சுமார் 25 இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்திருந்த அந்தக் கூட்டத்தில் இருந்து மனோஜ் என்ற இளைஞன் எழும்பினான். வயது 18 இருக்கும், இம்முறை தான் உயர்தர பரீட்சை எழுதுகிறானாம். எழுந்த வேகத்திலேயே பேச ஆரம்பித்துவிட்டான், எங்களுடைய தோட்டத்தில் இருக்கும் பிரதான பிரச்சினையே பஸ்தான் என்று ஆரம்பித்தான்.

“எங்கட தோட்டத்துக்கு சிடிபி பஸ் வந்து 20 வருஷங்களுக்கு மேல ஆகுது. எங்களுக்கு தெரிஞ்சி இந்த ஊருக்கு சிடிபி பஸ் வந்ததே இல்ல. அப்படியே பஸ் வந்தாலும் ஒரு நாள், ரெண்டு நாள் மட்டும்தான் வேல செய்யும். இல்லன்னா வார பஸ் வழியில எங்கையாவது ஒடஞ்சிடும். அங்க இருந்து நாங்க வீல் புடிச்சிதான் எங்க ஊருக்கு வரனும். ஒரே ஒரு பிரைவட் பஸ் இங்க வேல செய்து. காலைல 6.30 மணிக்கு ஊர்ல இருந்து இந்த பஸ்ஸ எடுப்பாங்க, அதுவும் சனம் நெரஞ்சா மட்டும் தான். அப்படியே போனாலும் பாரதெக சந்தி வரைக்கும்தான் போகும். அதுக்கு மேல பஸ் இல்ல. நுவரெலியா பக்கம் பஸ் வந்தா, அதுலதான் போகனும். ஒரு நாளைக்கு ரெண்டுதரம் தான் இந்த பஸ்சும் வேல செய்யும். 6.30 மணிக்கு போர இந்த பிரைவட் பஸ்சுலதான் கம்பல கண்டினு எல்லா இடங்களுக்கும் வேலைக்கு போறவங்க போவாங்க. அந்த பஸ்லயே தான் கம்பள, புஸ்ஸல்லாவைல இருக்க தமிழ் ஸ்கூலுக்கு போர பிள்ளைங்களும் போகனும். சில நேரங்கள்ல பஸ் நெரஞ்சிட்டா ஸ்கூல் போர பிள்ளைங்களுக்கு அந்த பஸ்ல போகவே கிடைக்காது, இந்த நிலைதான் இப்பவரைக்கும் எங்களுக்கு இருக்கிற பிரச்சினை”.

மூச்சுவிடாமல் பேசியவன், கொஞ்சம் நிறுத்தி மீண்டும் ஆரம்பித்தான். பஸ் பிரச்சினையால் நிறைய பாதிக்கப்பட்டவன் போல.

“கம்பல டவுன்ல இருந்து 15 கி.மீ தூரத்துலதான் நாங்க இருக்கம். ஸ்கூல் பிள்ளைங்க பஸ்ஸ விட்டுடா வீல்ல தான் போகனும். அப்டியே போரதுனாலும் 300 ரூபா குடுத்து தான் போகனும். எந்தனாலும் வீல்ல போர அளவுக்கு எங்கட அம்மா அப்பாவுக்கு வருமானம் இல்ல. இதனால ஊர்ல இருக்க பெரியவங்க டிப்போல போய்ட்டு பஸ் கேட்டாங்க, பலமுறை கேட்டும் கூட, பஸ் இல்ல அல்லது பஸ் டிரைவர் இல்ல எண்டு சாக்கு போக்கு சொல்லி அனுப்பிடுராங்க. தொடர்ந்து இதுதான் நடக்குது, நாங்களும் எவ்வளவோ பேசி பார்த்துட்டம், ஒரு முடிவும் இல்ல. இப்போ மாத்திரம் இல்ல, பல வருடமா தொடர்ந்து இருக்கிற பிரச்சின இது தான்” என்று முடித்தார் அந்த இளைஞன்.

குளிருக்கு பஞ்சம் இல்லாத தோட்டம் போல. மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. கண் முன்னே இருக்கும் இளைஞர்களை தெளிவாக பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு பணி மூட்டம். மாலை 3.00 மணியே ஆகினாலும் கூட மாலை 6.00 மணியை போல இருள் சூழ்ந்து கொண்டது.

இவ்வாறு மனோஜ் பேசி முடிக்கும் போதே தபால் உத்தியோகத்தர் சுமார் 28 வயது மதிக்க தக்க நபர் இன்னும் ஒரு முக்கியமான பிர்ச்சினை இருக்கு என்று பேச ஆரம்பித்தார்.

“இந்த தோட்டத்துல இருக்க பிரதான பிரச்சினை வேலை இல்லாத பிரச்சினைதான். இங்க இருக்குர இளைஞர்களோட அம்மா, அப்பா எல்லாருமே தோட்டத்துல தான் வேலை செய்றாங்க தொடர்ந்து 22 நாள் வேலை செஞ்ஞா மாத்திரம் தான் 600 ரூபா சம்பளம் கொடுப்பாங்க. 21 நாள் வேலை செஞ்ஞாலும் கூட 450 ரூபா தான் கிடைக்கும். அதுவும் தோட்டத்த பொருத்தவரைல ஒவ்வொரு மாதமும் 22 நாள் வேலை இருக்கும் என்டு சொல்லவே முடியாது”.

“கடந்த மாதம்தான் நாங்க ரொம்பவே கஷ்டத்த அனுபவிச்ச மாசம். இந்த அரசியல் வாதிங்க பேச்ச கேட்டு இங்க உள்ளவங்க எல்லாருமே மெதுவா வேலைய செஞ்சிட்டு போனாங்க. கட்டாயமா சம்பளத்த கூட்டுவாங்க என்ற நம்பிக்கைல. ஆனா, சம்பளம் கூட்டப்படவும் இல்ல, மெதுவா வேலை செஞ்சவங்க யாருக்குமே கடைசி வரைக்கும் அந்த மாதத்துக்கான சம்பளமும் கிடைக்கவே இல்ல”.

“எங்கட தோட்டத்துல இருந்து வெளியில டவுனுக்கு வேலைக்கு போரதுனாலும் பஸ் பிரச்சினைதான். ஒரு நாள் போனா ஒரு நாள் போக கிடைக்காது, பஸ் இருக்காது. தொழில், வீடு, கல்வி என எல்லா வகையிலும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற தோட்டமே இந்த நயாபான தோட்டம்” என்று கூறி முடித்தார் தபால் உத்தியோகத்தர்.

இவ்வாறு பிரச்சினைகளையும் வினவிக் கொண்டு எங்களுடைய வேலைத்திட்டத்தினையும் தெளிவுபடுத்திக் கொண்டு எவ்வித எதிர்பார்ப்பையும் அவர்களுக்கு வழங்காமல் நாங்கள் அவ்விடத்தில் இருந்து விடைபெற்று, அருகில் இருக்கும் இரு தோடங்களுக்கும் சென்றுவிட்டு மாலை 4.00 மணியளவில் நயாபான தோட்டம் ஊடாகவே சென்றோம்.

அப்போது நயாபான தோட்டத்திற்குச் செல்லும் பஸ்ஸைக் கண்டேன். அசைந்து அசைந்து மனித வேகத்தில் நடந்து வந்துகொண்டிருந்தது. அந்த பஸ்ஸில் அதிகபட்சமாக 25 அல்லது 30 பேர் மாத்திரமே செல்ல முடியும். ஆனால், 60இற்கும் அதிகமானோர் அடைப்பட்டு, தொங்கிக்கொண்டு செல்வதைக் கண்டேன். அளவுக்கு அதிகமான சுமையுடன் செல்லும் அந்த பஸ்வண்டியில் மிகவும் சிரமத்துக்கு மத்தியிலேயே எங்களை தாண்டி சென்றது. இதுதான் இந்த நயாபான தோட்ட மக்களின் பிரதான பிரச்சினை.

மலையக தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். நயாபான மக்கள் விதிவிலக்கல்ல. ‘மாற்றம்’ அரசில் அங்கம் வகித்துள்ள மலையக அரசியல்வாதிகள் இவற்றையும் தேடிப்பார்ப்பார்களா?

எம். பிரதீபன்

தல­வாக்­கலை ரத்­னீ­ல­கல வாசி­க­சாலை கட்­ட­டத்தை மக்கள் பாவ­னைக்கு வழங்கவும்

மேல்­கொத்­மலை மீள்­கு­டி­யேற்­றத்­திட்­டத்தின் கீழ் தல­வாக்­கலை ரத்­னீ­ல­கல குடி­யி­ருப்­புத்­திட்­டத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள வாசி­க­சாலை கட்­ட­டத்தை மக்கள் பாவ­னைக்குக் கைய­ளிக்­கு­மாறு மலை­யக தொழி­லாளர் முன்­னணி கோரிக்கை விடுத்­துள்­ளது.
 
மேல் கொத்­மலை நீர்மின் திட்­டத்தின் கீழ் இடம்­பெ­யர்ந்த ஹொலிரூட், ரத்­னீ­ல­கல பிரிவை சேர்ந்த தொழி­லா­ளர்­களின் நலன் கருதி அமைக்­கப்­பட்ட புதிய குடி­யி­ருப்புத் தொகு­தியில் புதிய வாசி­க­சாலை கட்­டடம் ஒன்று அமைக்­கப்­பட்­டது.
 
குடி­யி­ருப்­புக்கள் 2009 ஆம் ஆண்­டி­லேயே மக்கள் பாவ­னைக்­காக கைய­ளிக்­கப்­பட்டு விட்ட போதிலும் வாசி­க­சாலை கட்­டடம் இது­வரை மக்கள் பாவ­னைக்­காக கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை.
எனவே தாம­த­மின்றி மேற்­படி கட்­டடத்தை மக்­களின் பாவ­னை க்­காக கைய­ளிக்­கு­மாறு தோட்ட நிர்­வாகி மேல் கொத்­மலை திட்ட அதி­காரி, மாவட்ட மற்றும் பிர­தேச செய­லா­ளர்கள் மின்­சக்தி எரி­பொருள் அமைச்சர் ஆகி­யோ­ருக்கு கடிதங்களை அனுப்பியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலவாக்கலை மாநில நிர்வாக அதிகாரி எஸ். வரதராஜன் தெரிவித்தார்.