மேல்கொத்மலை மீள்குடியேற்றத்திட்டத்தின் கீழ்
தலவாக்கலை ரத்னீலகல குடியிருப்புத்திட்டத்தில்
அமைக்கப்பட்டுள்ள வாசிகசாலை கட்டடத்தை மக்கள் பாவனைக்குக்
கையளிக்குமாறு மலையக தொழிலாளர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த
ஹொலிரூட், ரத்னீலகல பிரிவை சேர்ந்த தொழிலாளர்களின் நலன் கருதி
அமைக்கப்பட்ட புதிய குடியிருப்புத் தொகுதியில் புதிய வாசிகசாலை
கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டது.
குடியிருப்புக்கள் 2009 ஆம் ஆண்டிலேயே மக்கள்
பாவனைக்காக கையளிக்கப்பட்டு விட்ட போதிலும் வாசிகசாலை கட்டடம்
இதுவரை மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவில்லை.
எனவே தாமதமின்றி மேற்படி கட்டடத்தை மக்களின் பாவனை
க்காக கையளிக்குமாறு தோட்ட நிர்வாகி மேல் கொத்மலை திட்ட அதிகாரி,
மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் மின்சக்தி எரிபொருள் அமைச்சர்
ஆகியோருக்கு கடிதங்களை அனுப்பியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின்
தலவாக்கலை மாநில நிர்வாக அதிகாரி எஸ். வரதராஜன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment