இந்நிலையில், கடந்த 8ஆம் திகதி பெய்த மழையின் போது, 07 வீடுகளைக் கொண்ட இரண்டு லயன் தொகுதி மேல் மண்மேடு விழுந்து, குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.
Saturday, December 5, 2015
இரண்டு மாடி குடியிருப்பில் வெடிப்பு
கடும் மழை காரணமாக, லிந்துலை திஸ்பனை தோட்டத்தின் குடியிருப்புப்
பகுதியிலுள்ள பாரிய மண்மேடுகள், லயன் குடியிருப்புக்கள் மீது சரிந்து
விழுந்துள்ளதாகவும் அதனை அப்புறப்படுத்துவதற்கு எந்தவொரு அதிகாரியும்
முன்வரவில்லை என்றும் குடியிருப்பிலுள்ள மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது, 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட
மாடி வீடமைப்புத் திட்டம், 2004ஆம் ஆண்டின் போது, லிந்துலை திஸ்பனை
தோட்டத்திலுள்ள சுமார் 197 பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
இவ்வாறு அமைக்கப்பட்ட மாடி வீட்டு லயன்கள் அனைத்தும், மண்மேடுகள் உள்ள பிரதேசத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 8ஆம் திகதி பெய்த மழையின் போது, 07 வீடுகளைக் கொண்ட இரண்டு லயன் தொகுதி மேல் மண்மேடு விழுந்து, குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.
மேலும், அதே பகுதியில், 14 வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டு, அவை உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளன. இதேவேளை, கடந்த 05ஆம் திகதி பெய்த கடும் மழையினால், இக்குடியிருப்புக்கள்
மீது பாரிய மண்மேடுகள் விழுந்ததில், 05 லயன் தொகுதிகள் சேதமடைந்துள்ளன.
இதனால் 84 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும்
தெரிவிக்கப்படுகின்றது.
மண்மேடுகள், குடியிருப்புகளின் சமையல் அறைகளிலும் விழுந்துள்ளதனால்,
மக்கள் தங்களது அன்றாட சமையல் நடவடிக்கைகளில் கூட ஈடுபட முடியாத நிலையில்
இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய தோட்டத் தொழிலாளர்
சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய தொழிற்சங்க அதிகாரிகளுக்கும்
நுவரெலியா மாவட்டப் பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் இப்பகுதி கிராம
அதிகாரிக்கும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாக
வந்து பார்வையிட்ட பின்னர், இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக
உறுதியளிக்கப்பட்ட போதும், அனைத்தும் பொய்யாகிவிட்டதென மக்கள்
தெரிவிக்கின்றனர். எனவே, இனியாவது தங்களது குடியிருப்புக்களைப்
பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் மக்கள் கோரி
நிற்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 8ஆம் திகதி பெய்த மழையின் போது, 07 வீடுகளைக் கொண்ட இரண்டு லயன் தொகுதி மேல் மண்மேடு விழுந்து, குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.
மலையகத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற சிறுவர்
துஷ்பிரயோகங்களை கண்டித்தும் மக்களுக்கு தெளிவுறுத்தும் வகையில்
பொகவந்தலாவ கெம்பியன் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது.
மலையகத்தில் சிறுவர்கள் வேலைக்கு
அமர்த்தக்கூடாது எனவும் சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு
உள்ளாக்குபவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குமாறு கோறியும் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட சிறுவர்கள் கோஷம் வெளியிட்டனர்.
இதேவேளை மக்களிடம் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் செல்லும்
அரசியல்வாதிகள் பாரளுமன்றத்திற்கு சென்று மௌனம் காக்காமல் சிறுவர்
துஷ்பிரயோகத்திற்கான கடுமையான சட்டதிட்டங்களை அமுல்படுத்துமாறு
பாராளுமன்றத்தில் அழுத்தத்தை தெரிவிக்கபட வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்ட சிறுவர்கள் மேலும் தெறிவித்தனர்.
இந்த தெளிவூட்டும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150கும் மேற்பட்ட சிறுவர்கள்
கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் பொகவந்தலாவ கெம்பியன் தோட்ட
வைத்தியசாலையில் இருந்து கெம்பியன் நகர்வரை பாதாகைகளை ஏந்தி பேரணியாக
சென்றமை குறிப்பிடதக்கது.
இதேவேளை கெம்பியன் தோட்ட வைத்தியசாலையில் சிறுவர்கள் எதிர்நோக்கும்
துஷ்பிரயோகங்கள் குறித்து சிறுவர்களை தெளிவூட்டும் செயலமர்வு ஒன்று
பொகவந்தலாவ பொலிஸாரால் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Tuesday, November 17, 2015
தொழிற்சங்க பலமும் பேரம் பேசும் சக்தியுமே போதுமானது
பெருந்தோட்ட மக்களுக்கு உரிய சம்பள உயர்வினை பெற்றுக்
கொடுப்பதற்கு அரசியல் பலம் அவசியமில்லை. தொழிற்சங்க பலமும் பேரம்
பேசும் சக்தியுமே தேவை. அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் இதனையே
கையாண்டு சாதனை படைத்தார் என்று சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.
அந்தோனிமுத்து தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கூட்டு ஒப்பந்த நவடிக்கைகள் தற்போது இழுபறியான தன்மையினை
அடைந்திருக்கின்றன. தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம்
கொடுத்து வருகின்ற நிலையில் உடனடியாக சம்பள உயர்வினை பெற்றுக்
கொடுக்க வேண்டிய தேவை மேலெழுந்துள்ளது. எனினும் இது
சாத்தியப்படாமல் போயிருக்கிறது. 1970 முதல் 77 வரையான
காலகட்டத்தில் அமரர் தொண்டமான் எவ்விதமான அரசியல் பலமோ அந்தஸ்தோ
இல்லாது பல்வேறு தொழிற்சங்க போராட்டங்களையும் நடத்தி மலையக
மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். துன்ப துயரங்களை
தனதாக்கிக் கொண்டு துணிவுடன் செயற்பட்டார். அக்காலப்பகுதியில்
பெருந்தோட்ட மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்த
நிலையில் முழு மலையகமும் ஸ்தம்பிக்கும் வகையில் ஒரு பாரிய வேலை
நிறுத்தப் போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார்.
சாத்வீக போராட்டங்களை நடத்திய அவருக்கு 1977இல்
பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பு கிடைத்தது. அமரர் தொண்டமான்
அரசியலில் கிங் மேற்கராக திகழ்ந்தார். அவர் நடத்திய பிரார்த்தனை
ரீதியிலான தொழிற்சங்க போராட்டமே பெருந்தோட்ட மக்களது பிரஜா
உரிமைக்கும் சம்பள உயர்வு மற்றும் சமசம்பளத்திற்கும் வித்திட்டது
எனலாம்.
உரிமை இல்லாதிருந்த மலையக சமூகத்திற்கு
உரிமைகளையும், முகவரியையும் தொண்டமானே பெற்றுக் கொடுத்தார் என்றால்
மிகையாகாது. மலையக மக்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு அவரே உந்து
சக்தியாக இருந்தார் என்பதே உண்மையாகும்.
அரசியல் பலம் இல்லாத போதும் தொழிற்சங்க பலம், பேரம்
பேசும் சக்தி என்பன மலையக மக்கள் பல்வேறு உரிமைகளையும் பெற்றுக்
கொள்ள வழிவகுத்தது. இத்தகைய செயற்பாடுகள் ஒரு
முன்னுதாரணமாகவும் அமைந்தது. தொழிலாளர் சம்பள உயர்வு
விடயத்திலும் அமரர் தொண்டமானின் காய் நகர்த்தல்களை முன்னிறுத்தி
செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கூட்டு ஒப்பந்தம்
கைச்சாத்திடப்படுகின்றது. இந்நிலையில் கம்பனிகள் நட்டம்
ஏற்பட்டு விட்டதாக கூக்குரல் இடுவதனை விடுத்து இலாபம் தரும் நோக்கில்
கம்பனிகளின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மேல்மட்ட செலவுகளை
கட்டுப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வினை பெற்றுக்கொடுப்பது
ஒன்றும் கம்பனிகளுக்கு கடினமான விடயமல்ல என்றார்.
இ.தொ.கா வை விமர்சிப்பதிலேயே காலம் கழிகிறது
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகிய பின்னர் தோட்டத்
தொழிலாளர்களுக்கு அதிக சம்பளத்தை பெற்றுத்தருவதாக சிலர்
கூறினர். அவ்வாறு கூறியவர்களே தற்போது காணாமல் போயுள்ளதாக ஊவா மாகாண
அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து பேசுகையில்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளத்தை ஆயிரம்
ரூபாவாக அதிகரித்துக் கேட்டவர்கள் நாமே. நாம் மக்களுடன் தான்
இருக்கின்றோமேயன்றி எங்கும் காணாமல் போய்விடவில்லை. ஆனால் தேர்தல்
காலத்தில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறவைத்து தான் அமைச்சரவை
அந்தஸ்துள்ள அமைச்சரானால் தோட்டத் தொழிலாளர்களினது
நாட்சம்பளத்தை அதிகரித்து பெற்றுக்கொடுப்பேனென்று மலையக
அமைச்சர் ஒருவர் கூறியிருந்தார்.
அவர் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை
ஏமாற்றியுள்ளார். அவர் அமைச்சராகிய பின்னர். தோட்டத்
தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து பேசுவதே கிடையாது. அவர் தான் தற்போது காணாமல் போயுள்ளார். தோட்டத்
தொழிலாளர்களுக்கு எவ்வளவு, சம்பள உயர்வென்றாவது குறிப்பிட்ட
அமைச்சருக்கு அறிவிக்க முடிகின்றதா?
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு
கேட்டது இ.தொ.கா. வேயாகும். தற்போதைய வாழ்க்கைச்செலவு உயர்வுக்கு
அமைய கோரப்பட்ட ஆயிரம் ரூபா சம்பள உயர்வும் போதாத நிலையே
காணப்படுகின்றது. மா மற்றும் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை
உயர்வையும் இங்கு குறிப்பிடலாம்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகியதும் மாற்றத்தை
ஏற்படுத்துவதாகக் கூறிய கூற்று தற்போது என்னவாயிற்று? ஒரு
வருடத்தில் இருபது வீடுகளை மட்டும் கட்டிவிட்டு, இருபத்து
மூவாயிரம் வீடுகளை, மலையகத்தில் நிருமாணித்த இ.தொ.கா. வை குறைகூறி
விமர்சிப்பதற்கு எவருக்கும் அருகதை கிடையாது.
மலையகத்தில் அமைச்சர்களாகியும் கூட, மலையக மக்களின்
மேம்பாடுகள் குறித்து செயற்படாமல், எதற்கெடுத்தாலும் இ.தொ.கா. வை
விமர்சிப்பதிலேயே அவர்கள் காலத்தை கழித்து வருகின்றனர்.
இ.தொ.கா. சார்பில் மத்திய அரசில் அமைச்சர்களாக இல்லாத
போதிலும் தோட்டத் தொழிலாளர்களின் மேம்பாடு விடயத்தில்,
இயன்றவரையிலான சேவைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் மலையகத்தில் அமைச்சர்களாக இருப்பவர்கள் தமது இயலாமையை உணர்ந்து வெட்கப்படல் வேண்டும்.
மலையக அமைச்சர்களாக இருக்கும் இவர்கள் தோட்ட
தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக எத்தனை போராட்டங்களை
நடத்தினார்கள் என்பது கேள்வி குறியதாகும். இத்தகைய நிலையை கைவிட்டு
தோட்டத்தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் விடயங்களை அவர்கள் முன்னெடுக்க
பழகிக்கொள்ளல் வேண்டும்.
மக்களுக்கு சேவை செய்ய இந்த அமைச்சர்களுக்கு
திராணியில்லாவிட்டால் அந்த அமைச்சர் பதவியினால் எத்தகைய பயனும் கிடையாது
என்பதனையும் உணர வேண்டும் என்றார்.
நேபாளத்தைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்துக
மோடி அரசாங்கம், நேபாளத்துடன் மேற்கொண்டுள்ள மோதல் போக்கு, முன்னெப்போதும்
இல்லாத அளவிற்கு இந்திய - நேபாள உறவில் விரிசலை ஏற் படுத்தி இருக்கிறது.
பாஜக அரசாங்கம், செப்டம்பர் 20ஆம் தேதி, நேபாளத்தில் பிரகடனம் செய்யப்பட்ட
அரசமைப்புச் சட்டத் திற்கு எதிர்மறையான அணுகுமுறையைப் பின்பற்றத்
தொடங்கியபின், மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது அதிகரித்திருக்கிறது. கடந்த
இரண்டு மாதங்களாக, இந்தியாவிலிருந்து நேபாளம் செல்லும் அனைத்துப் பாதைகளும்
அடைக்கப்பட்டிருக் கின்றன. நேபாளம், தன்னுடைய அனைத்து அத்தியாவசியப்
பொருள்கள் மற்றும் வர்த்தகத்தையும் இந்தியா வழியாகத்தான் செய்து வந்தது.
மோடி அரசாங்கத்தால் தூக்கிப்பிடிக்கப்பட்டுள்ள மாதேசி கிளர்ச்சி காரணமாக,
ராக்சால் - பிர்குஞ்ச் குறுக்குச்சாலையும் மற்றும் பல பாதைகளும்
அடைக்கப்பட்டுவிட்டன. இது அத்தியாவசியப் பொருள்கள் மற் றும் எரிபொருள்
பற்றாக்குறையை கடுமையாக ஏற்படுத்தி இருக்கிறது.
நேபா ளம் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபின், அப்பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் புனர்நிர் மாண வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். சாலைகள் அடைக்கப்பட்டதால் புனர்நிர் மாண வேலைகளில் ஈடுபட்ட மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குளிர்காலம் வருவதற்குள்ளாகவே ரெடிமேட் வீடுகளைக் கட்டிட வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மலைப்பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்துவந்த ஹெலிகாப்டர் களுக்குப் போதிய எரிபொருள் கிடைக்காத தால் அவற்றின் இயக்கமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் சமையலுக்கான எரிபொருள் கிடைக் காததால், காட்டு மரங்களை வெட்டி விறகுகளாகப் பயன்படுத்துகிறார்கள். இது வனத்தையே அழிக்கக்கூடிய அளவிற்கு இட்டுச்சென்று கொண்டிருக்கிறது. மாதேசி கிளர்ச்சியால்தான் சாலைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன என்றும், அவ்வாறு சாலைகள் அடைக்கப் பட்டிருப்பதற்கும், இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கிற இந்திய அரசாங்கத்தின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே யான எல்லைப் பகுதிகளில் போக்கு வரத்து இயல்பாக நடந்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று இந்திய அரசின் சார்பில் இதுவரை ஓர் அறிக்கை கூட வெளியிடப்படவில்லை. இருநாடுகளுக்கும் இடையே போக்கு வரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளப்பட்டதாகவும் தெரியவில்லை. உண்மையில், கிளர்ச்சிகள் எதுவும் நடைபெறாத கிழக்கு நேபாள எல்லையில்கூட சாலைகளை அடைத்திட இந்திய அரசுஅதிகாரப்பூர்வமற்ற முறையில் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்ப தாகக் கூறப்படுகிறது.நேபாளத்தில் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததற்குப்பின்னர், கே. பி. சர்மா ஒலி பிரதமராகப் பொறுப்பேற்றதை அடுத்து, புதிய அரசாங்கம் நேபாளத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, நேபாளத் துணைப் பிரதமர்தில்லிக்கு விஜயம் செய்தார். இந்திய அயல்விவகாரங்கள் துறை அமைச்சருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, கிழக்குப் பகுதியில் சில குறுக்குச் சாலை கள் போக்குவரத்திற்காக, திறந்துவிடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் இவரது வேண்டுகோளுக்கு இந்தியாவின் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித பதிலும் இல்லை. மாதேசி கிளர்ச்சியை ஆதரிப்பதில் இந்திய அரசாங்கம் எவ்விதத் தயக்கமும் காட்டவில்லை. மாதேசி கிளர்ச்சிக் குழுவினர் நரேந்திர மோடி மற்றும் இந்தியஅரசாங்கத்தின் ஆதரவினை வெளிப் படையாகவே கோரி வருகின்றனர்.
அக்டோபரின் கடைசி வாரத்தில், மாதேசி தலைவர்களின் தூதுக்குழுவினர் தில் லிக்கு விஜயம் செய்திருந்தனர். இது, நேபாளத்தின் உள் விவகாரங்களில் பகிரங்க மாகவே தலையிடும் விஷயமாகும். பிர்குஞ்ச் பகுதியிலிருந்து கிளர்ச்சியா ளர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று நேபாள அதிகாரிகள் கோரியபோது, .இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, போலீஸ் துப்பாக்கிச்சூடு நடைபெறுவதற்கு இட்டுச்சென்றது. இதில்இந்திய சிறுவன் ஒருவன் இறந்தான். கிளர்ச்சியில் ஈடுபட்ட சில இந்தியர்களைக் கைது செய்திருப்பதாக, நேபாள அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இந்திய அரசாங்கத்தின் மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை இந்திய அயல்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கைஅம்பலப் படுத்திவிட்டது. அவர் அந்தஅறிக்கையில், “நேபாளத்தை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் அரசியல் முக்கியத்துவம் உடையவைகளாகும். அவற்றை வலுக்கட்டாயமாகத் தீர்த்திட முடியாது. தற்போதைய மோதலுக்குக் கார ணங்களாக அமைந்துள்ளவை குறித்து, நேபாள அர சாங்கம் உண்மையாகவும், வலுவாகவும் தீர்மானிக்க வேண்டியது அவசியமாகும்.’’ இந்தியா ஆதரிக்கும் மாதேசிகளின் கோரிக்கையை நேபாளம் அங்கீகரிக்க வேண்டியது அவசியம் என்று இந்தியா நேபாளத்தின் நெற்றியில் துப்பாக் கியை வைத்து மிரட்டும் செயலே இது வன்றி வேறல்ல. இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அனைத்து சாலைகளையும் அடைத்து வைத்திருப்பது, நேபாள மக்களின் மத்தியில் கடும் எரிச்சலை ஏற் படுத்தி இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராகமக்களில் பெரும்பான்மையோர் ஆத்திரப் படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேபாள அரசாங்கத்தையும் அதன் அரசி யல் நிறுவனத்தையும் மிரட்டி அடக்க மோடி அரசாங்கம் முரட்டுத்தனமாக மேற் கொண்டுள்ள முயற்சிகளுக்கு எதிராக நேபாளத்தில் இயங்கும் அனைத்துக் கட்சிகளும் கட்சி வித்தியாசமின்றி ஒன்று பட்டுள்ளன. இதனால் நேபாளம் சீனாவைஅணுக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி யுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஓர்ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, திபெத்திலிருந்து தரைமார்க்கம் வழியாக சீனா 1000 மெட்ரிக் டன் பெட்ரோல் வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்தியாஅனைத்து சாலைகளையும் அடைத்து வைத்திருப்பது குறித்து, நேபாள அயல்துறை அமைச்சர் ஐ.நா.அமைப்பிடம் முறையிட்டிருக்கிறார். நேபாள மக்கள் சாலைகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதன் காரண மாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து சார்க் நாடுகள் அனைத்தும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன. நேபாளம் குறித்த மோடி அரசாங்கத்தின் அணுகுமுறை ஓர் அரைவேக்காட் டுத் தனமான ஒன்று என்று சொல்வதற் கில்லை. இந்தப் பிராந்தியத்தில் தான் ஒரு தேசிய வெறி கொண்ட பெரிய வல்லரசு நாடு என்று காட்டிக்கொள்வதற்காக, மோடி அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள் கிறது. மேலும் நேபாள அரசியல் நிர்ணயசபை, நேபாளத்தை ஓர் மதச்சார்பற்ற குடியரசு என்று பிரகடனம் செய்ததற் காக, ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்கள் நேபாள அரசை பகிரங்கமாகவே அவமதித்துக் கொண்டிருக்கின்றன. நரேந்திர மோடி யும், பாஜக அரசாங்கமும் மாதேசிகளின் ஆதரவினைப் பெறுவதற்காக நேபாள அர சைப் பகைத்துக்கொள்ளவும் தயாராகவே இருக்கின்றன. இதன்மூலம் பீகாரில் வாழும் மாதேசிகளின் ஆதரவினைப் பெற்று தேர்தலில் வென்றுவிடலாம் என் பது பாஜகவின் எண்ணம். ஆனால் அது நடக்கவில்லை.தெற்கு ஆசியாவில் மோடி அரசாங்கத்தின் அயல்துறைக் கொள்கையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித்ஜோவல், வடிவமைத்துக் கொண்டிருக் கிறார். இவரது நடவடிக்கைகளின் காரண மாக பாகிஸ்தானுடனான உறவுகள் ஏற்க னவே சிதிலமடைந்துவிட்டன. இப்போது, மிக நீண்ட காலம் கலாச்சார ரீதியாகவும், நாகரிக உறவுகளிலும் மிகவும் நெருக்க மாக இருந்த நேபாளத்தையும் எதிரி நாடாகமாற்றிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, நேபாளம் பாதுகாப்புக் கோரி, சர்வ தேச அமைப்புகளை அணுக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறது. இதனால்சர்வதேச அளவில் இந்தியாவின் சித்திரம்மிகவேகமாக சிதைந்து கொண்டிருக்கிறது.நேபாளத்தைக் கொடுமைப்படுத்தும் இக்கொடூரமான கொள்கையை மோடி அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண் டும். நேபாள அரசாங்கத்துடன் கலந்துபேசி எல்லையில் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடைகளை அகற்றிட வேண் டும். மாதேசிகள் மற்றும் ஜன்ஜாதிகள் பிரச்சனைகள் நேபாளத்திற்குள் அரசியல் நடவடிக்கைகள் மூலமாக சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இந்தத் திசை வழியில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு மாதேசி குழுக்களிடம் இந்திய அரசு தன் செல்வாக்கினைப் பயன்படுத்திட வேண்டும்.
(தமிழில்: ச. வீரமணி)

நன்றி- தேனீ இணையம்
ஸ்ரீலங்காவுக்கு வருகை தரவிருந்த தமிழ்நாட்டு தீவிரவாத இஸ்லாமியத் தலைவர் ஜெய்னுல் ஆப்தீனின் முயற்சி ஸ்ரீலங்காவிலுள்ள மிதவாத முஸ்லிம் தலைவர்களால் முறியடிக்கப்பட்டது
தீவிரவாத இஸ்லாத்தின் தமிழ் முகம் அவருடையது. மௌலவி பி ஜெய்னுல் ஆப்தீன்,
பிஜே, என்று பிரபலமாக அறியப்படுபவர், மற்றும் அடிப்படைவாதிகளான தமிழ்நாடு
தௌகீத் ஜமாத்தினது (ரிஎன்ரிஜே) நட்சத்திரப் பேச்சாளர், ஸ்ரீலங்காவில் கடந்த
வாரம் நடைபெற்ற ஒரு இஸ்லாமிய மாநாட்டில் “உண்மையான இஸ்லாம்” என்ற
தலைப்பில் அவர் போதிப்பதாக இருந்த பேச்சை நடத்துவதற்காக அவருக்கு
ஸ்ரீலங்காவுக்கு வருவதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவில்
உள்ள முஸ்லிம் சமூகம், பௌத்த கடும்போக்காளர்கள் மற்றும் தமிழ் புலிகள்
ஆகிய இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட அநேக கலவரங்கள் மற்றும்
தாக்குதல்களினாலும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைத் தாங்கியுள்ளது,
இல்லையெனில் அதைப்பற்றி சிந்தித்தும் உள்ளது. பிஜே யினை ஸ்ரீலங்கா தொளவீத்
ஜமாத் (எஸ்எல்ரிஜே) நவம்பர் 8ல் குரானின் சிங்கள மொழிபெயர்ப்பை
வெளியிடுவதற்காக ஸ்ரீலங்காவுக்கு அழைத்திருந்தது.
அகில
இலங்கை ஜமய்த்து உலாம மற்றும் ஏனைய மிதவாத முஸ்லிம் அமைப்புக்கள் இந்த
வரவை எதிர்த்திருந்தன, மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அதற்கு
இணங்கவேண்டியதாயிற்று. இஸ்லாம் பற்றிய பிஜே யின் வகாபி கருத்துக்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தலாம் என இந்த மிதவாத
முஸ்லிம் குழுக்கள் உணர்ந்தன. முன்னர் 2005லும் பிஜே இதே காரணங்களுக்காக
இங்கிருந்து வெளியேற்றப்பட்டார். தான் இஸ்லாம் அல்லாதது எனக் கருதும்
பிரபலமான இல்லாமிய நடவடிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதற்கும்
மக்களின் மத நம்பிக்கைகளை மாற்றுவதற்கும் ஏற்ற இடமாக ஸ்ரீலங்காவை அவர்
இலக்கு வைத்துள்ளார்.
பி.ஜே .யிற்கு மிதமான நிலைப்பாடு கிடையாது
தமிழ்
நாட்டை சேர்ந்த தீவிரமான அடிப்படைவாதியான ஒரு மௌலவி, குரான் மற்றும்
சுன்னாவினை அடிப்படையாகக் கொண்ட தூய இஸ்லாத்தை கூட்டலோ அல்லது குறைத்தலோ
இன்றி பரப்பும் பணியினை மேற்கொள்வதற்காக தன்னை ஒப்படைத்துள்ளார், என்பதை
அவரது இணையத்தளம் தெரிவிக்கிறது. ஜெய்னுல் ஆப்தீன் தனது அரசியல்
செயற்பாட்டை தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை (ரிஎன்எம்எம்கே) 1995
ல் நிறுவியதன் மூலம் ஆரம்பித்தார். எனினும் 2004ல் தமிழ் நாடு முஸ்லிம்
முன்னேற்றக் கழகத்தில் ஒரு பிளவு உருவானதால் பிஜே தமிழ்நாடு தௌகீத்
ஜமாத்தினை, மதம் மற்றும் அரசியல் கலந்த ஒரு அமைப்பாக உருவாக்கினார்.
.
நீதிபதி ரங்கநாதன் மிஸ்ரா ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக்காக போராடுவதைக் காட்டிலும், இஸ்லாம் ஒரு அமைதியான மதம் அதன் கலாச்சாரம் இன நல்லிணக்கம் என்பதையே, அந்த அமைப்பு சித்தரித்து வந்தது. இது ஒரு சாமர்த்தியமான உத்தி, ஏனென்றால் உள் வகுப்புவாத நல்லிணக்கத்தை பரப்பும் அதேவேளை, அவர் வெளிப்படையாகவே சிகாக்கள், போராக்கள் மற்றும் அகமதியாக்கள் அல்லது காடிவானிகள் போன்ற பல்வேறு அடிப்படைவாதமற்ற இஸ்லாமிய அமைப்புக்களின் இருப்பினை எதிர்த்து வந்தார்.

பின்னணி
ஸ்ரீலங்காவில்
உள்ள முஸ்லிம்கள் இப்போது 21 மில்லியனான தீவின் மொத்த சனத்தொகையில் 9.5
விகிதமாவார்கள், கிமு 7ம் நூற்றாணடில் ஏற்பட்ட அவர்களது வருகையிலிருந்து
சமாதானத்தை நேசிக்கும் ஒரு சமூகமாகவே அவர்கள் இருந்து வருகிறார்கள்.
எனினும் அவர்களது தொழில் முனைப்பும் மற்றும் அமைதியான இருப்பும்
காலத்துக்கு காலம் பயங்கரமான சவால்களை எதிர்கொள்ளவேண்டியதாக உள்ளது. 1980
களில் தமிழர்கள் சுதந்திரத் தமிழீழத்தை அடைவதற்காக ஆயுதப் போராட்டத்தை
அணுகியபோதும், முஸ்லிம்கள் தங்களை அதில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.
வியாபாரிகள் என்கிற வகையில் அவர்கள் சமாதானத்தையே விரும்பினார்கள் மற்றும்
இதனால் எரிச்சலடைந்த புலிகள் 75,000 முஸ்லிம்களை அவர்களின்
இருப்பிடத்திலிருந்து துரத்தியடித்தார்கள்.
பின்னர்
சிங்கள குடிமக்களும் கூட அவ்வப்போது முஸ்லிம்கள்மீது தாக்குதலை
மேற்கொண்டார்கள். மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் (2005 – 2014) புதிய அமைப்பான
பொதுபலசேன, ஹிஜாப் மற்றும் ஹலால் சான்றிதழ்களுக்கு தடை ஏற்படுத்தவேண்டும்
என்று அழைப்பு விடுத்ததுக்கும் மற்றும் மசூதிகளைத் தாக்குவதற்கும் ஊக்கம்
வழங்கியது.
ஜூன்
2014ல் பொதுபலசேனாவினால் ஏவப்பட்ட சிங்களவர்களால் ஒரு கலகம்
தொடங்கப்பட்டது. முஸ்லிம்களின் பொருளாதார பின்புலத்தை தகர்ப்பதற்கு
மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியினால் அந்தச் சமூகம் ராஜபக்ஸ தலைமையிலான
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு எதிராக பாராளுமன்றத் தேர்தலில்
வாக்களிப்பதற்கு வழிசெய்தது, அதன் காரணமாக அவரது வெளியேற்றத்தையும்
காணமுடிந்தது. கடந்த பல வருடங்களாக வகாபிக்கள், சுபிக்கள், சுன்னிகள்,
ஷிகாக்கள், போராக்கள், மலேயர்கள், இந்திய மற்றும் இலங்கை வம்சாவழியை
சேர்ந்த முஸ்லிம்கள் ஆகிய அனைவரும் ஒன்றுசேர்ந்து குறைந்தது சமூக மற்றும்
அரசியல் நலன்களுக்காக ஒரு ஒற்றை முஸ்லிம் சமூகமாக மாறியுள்ளார்கள்.
நிலவரம்
1.2012
குடிசன மதிப்பீட்டின்படி ஸ்ரீலங்கா கொண்டுள்ள முஸ்லிம் சனத்தொகையானது
1,967,227 ஆகும், அது மொத்த சனத்தொகையின் 9.5 விகிதமாகும்.
2.நாட்டிலுள்ள
முஸ்லிம் சனத்தொகையில் அதிகளவு எண்ணிக்கையானவர்கள் வர்த்தகர்கள். அவர்கள்
நாட்டுக்கு வந்தது முதல் இதையே செய்து வருகிறார்கள்.
1990 படுகொலைகள்
தமிழ்
புலிகள், ஓகஸ்ட் 3,1990ல் காத்தான்குடி ஜூம்மா பள்ளிவாசலில் பிரார்த்தனைக்
கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த முஸ்லிம்களை படுகொலை செய்தார்கள். அடுத்த
சில மாதங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள், வட மாகாணத்தை சேர்ந்த
முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு உளவு பார்ப்பதாக குற்றம் சுமத்தி
கிட்டத்தட்ட 75,000 முஸ்லிம்களை அங்கிருந்து விரட்டியடித்தார்கள்.
2009ல் ஏற்பட்ட குழப்பங்கள்
2009ல் ஏற்பட்ட குழப்பங்கள்
சிங்களவர்களுக்கும்
மற்றும் முஸ்லிம்களுக்கும் இடையிலான ஒற்றுமை, எல்.ரீ.ரீ.ஈயின் அழிவு
மற்றும் 2006 – 2009ல் நடந்த ஈழப்போர் 4 ன் போது தமிழர்கள் அவமானப்
படுத்தப் பட்டதின் பின்னர் தளர்வடைய ஆரம்பித்தது. அதைத்தொடர்ந்து சிங்கள
வர்க்கம் முஸ்லிம்களை அடக்கியாள தொடங்கியது. மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம்
ஒரு புதிய அமைப்பான பொது பல சேனா என்கிற அமைப்பு ஹிஜாப், மற்றும் ஹலால்
சான்றிதழ்களுக்கு தடை ஏற்படுத்த வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கும்
மற்றும் பள்ளிவாசல்களைத் தாக்கும் செயல்களுக்கும் கூட ஊக்கம் அளித்தது.
2014 கலவரங்கள்
ஜூன்
2014ல், நாட்டின் தென் மேற்கு பகுதிகளில் மத மற்றும் இன கலவரங்கள்
ஏற்படுவதற்கு ஸ்ரீலங்கா சாட்சியானது. முஸ்லிம்கள் மற்றும் அவர்களின்
சொத்துக்கள் என்பன களுத்துறை மாவட்டத்தின் மூன்று நகரங்களில் சிங்கள
பௌத்தர்களால் தாக்குதலுக்கு உள்ளாகின. அவர்கள் குறைந்தது மூன்று பேரைக்
கொன்றதுடன் 80 பேருக்கு காயம் விளைவித்தார்கள். 8,000 முஸ்லிம்கள் மற்றும்
2,000 சிங்களவர்கள் இந்தக் கலவரத்தால் இடம்பெயர்ந்தார்கள், வீடுகள், வாத்தக
நிலையங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள்
நடத்தப்பட்டதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானவர்கள் வீடற்றவர்களானார்கள்.
கடும்போக்கு பௌத்த குழுவான பொது பல சேனா ஊhவலம் நடத்தியதின் விளைவாகவே
கலவரங்கள் ஏற்பட்டதாக கருதப்படுகிறது, ஆனால் அந்தக் குழுவினர் அதற்கான
பொறுப்பை நிராகரிக்கின்றனர்.
தீவிரவாதிகளின் தாக்குதல்
2013ல்
பௌத்த கடும்போக்காளர்களினால் முஸ்லிம்கள்மீது ஒரு சில தாக்குதல்கள்
மேற்கொள்ளப் பட்டன. அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொழும்புக்கு அருகில்
உள்ள முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் கடைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
ஒரு முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான ஆடைக் களஞ்சியத்தை அவர்கள்
தீயிட்டுக் கொளுத்தினார்கள்.பி.கே. பாலச்சந்திரன்
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
(நன்றி: நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்)
Wednesday, November 11, 2015
335 உள்ளூராட்சி நிறுவனங்களில் 30 உள்ளூராட்சி நிறுவனங்களாவது இருக்க வேண்டும்
மலையகத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் தொகையை
அதிகரிக்க வேண்டுமே தவிர வட்டாரங்களை விஸ்தரிப்பதால் உரிய பயன்
விளையப் போவதில்லை என்று மலையக மக்கள் முன்னணியின்
ஏ.லோரன்ஸ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி விடயங்கள் தொடர்பில் தற்போது அதிகமாக
பேசப்படுகின்றது. உள்ளூராட்சி முறைமையை சாதகமாக்கிக் கொள்ள
ஒவ்வொரு சமூகத்தினரும் முயன்று வருகின்றனர். இந்நிலையில்
மலையகத்தவர்களுக்கு உள்ளூராட்சி முறையை சாதகமாக்கிக் கொடுக்க
மலையக அரசியல்வாதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். மலையக
மக்கள் மலையகத்தின் பல பகுதிகளில் செறிவாக வாழ்கின்றார்கள். எனினும்
சனத்தொகைக்கேற்ப உள்ளூராட்சி நிறுவனங்களின் எண்ணிக்கை
போதாதுள்ளது. மலையக அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் கரிசனையுடன்
செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது.
மலையக மக்கள் சுமார் 15 இலட்சம் பேர் உள்ளனர். எனவே
மொத்தமாக உள்ள 335 உள்ளூராட்சி நிறுவனங்களில் எம்மவர்களுக்கு 30
உள்ளூராட்சி நிறுவனங்களாவது இருக்க வேண்டும். எனினும் இப்போது
இரண்டு பிரதேச சபைகளும் இரண்டு நகர சபைகளுமே எம்வசமாக உள்ளன.
வட்டார முறை இப்போது இடம்பெற்று வருகின்றது. வட்டாரங்களை 35 இற்கு
மேற்படக்கூடாது என்று மேல் எல்லையும் வகுத்துள்ளார்கள். மேல் எல்லை
வகுக்கப்படாது இருந்திருந்தால் மலையகப் பகுதிகளில்
வட்டாரங்களின் தொகை அதிகரித்திருக்கும். குறிப்பாக அம்பகல
பகுதியில் நாற்பது அல்லது ஐம்பது வட்டாரங்களும் நுவரெலியா
பகுதியில் பல வட்டாரங்களும் ஏற்படுத்தப்படும் வாய்ப்புள்ளது.
எனினும் மேல் எல்லை எமக்கு மிகவும் பாதகமாகியுள்ளது.
இரண்டு இலட்சம் பேருக்கு உள்ள வட்டாரங்களின் தொகையும் 60
ஆயிரம் பேருக்கு உள்ள வட்டாரங்களின் தொகையும் ஒரேயளவில் இருப்பதனை
அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
இதில் என்ன நியாயம் இருக்கின்றது? தலவாக்கலை நகர
சபைக்கு ஒன்பது வட்டாரங்களும், நுவரெலியா மாநகர சபைக்கு 12
வட்டாரங்களுமாகவே ஏற்பாடுகள் இடம் பெற்றுள்ளதாக அறிய
முடிகின்றது. வட்டார ஏற்பாடுகளில் நாம்
பின்தள்ளப்பட்டிருக்கிறோம் என்பது புலனாகின்றது. இதுவும் ஒரு
மோசமான நிலைமையையே வெளிப்படுத்துகின்றது.
நாட்டில் அநேகமான கிராம சபைகள் காணப்படுகின்றன.
வாக்குரிமை பறிக்கப்பட்ட நிலையில் கிராமசபை வாய்ப்புக்கள் கூட
எமக்கு கைநழுவிப் போய் உள்ளமை வருத்தத்தக்க விடயமாகும். 1987ஆம்
ஆண்டு 15ஆவது இலக்க பிரதேசசபைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன.
இந்த நிலையில் மலையக மக்களுக்கு பிரதேச செயலகங்கள்
ஏற்படுத்தப்படாத நிலையில் பிரதேச சபைகளும் ஏற்படுத்த முடியாமல்
போய்விட்டது. பிரதேச செயலகங்களை உருவாக்காமல் பிரதேச சபைகளை
பற்றி யோசிக்க முடியாது. நுவரெலியா மாவட்டத்தில் 12 பிரதேச
செயலகங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென மலையக கட்சிகள் அனைத்தும்
ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்திருந்தன. இப்போது 5 பிரதேச
செயலகங்கள் மட்டுமே காணப்படுகின்றன. எனினும் இது
சாத்தியப்படவில்லை. இவ்வாறு சாத்தியப்படுமிடத்து தமிழ் மக்கள்
வாழும் பகுதிகளில் 7 பிரதேச சபைகளும் சிங்கள மக்கள் வாழும்
பகுதிகளில் 5 பிரதேச சபைகளுமாக மொத்தமாக 12 பிரதேச சபைகள்
உருவாகும். மலையகத்தில் அதிகமான நகரசபைகளை ஏற்படுத்தும்
வாய்ப்புள்ளது. கொட்டகலை, பொகவந்தலாவை, மஸ்கெலியா,
அக்கரப்பத்தனை, கந்தப்பளை, இராகலை, உடபுசல்லாவ, புசல்லாவ,
பூண்டுலோயா போன்ற இடங்களை தரமுயர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்த
வேண்டும்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் ஊடாக எமது மக்களுக்கு
உரிய சேவை கிடைப்பதில்லை என்பது உண்மைதான். எனினும் நுவரெலியா,
தம்பகமுவ போன்ற பகுதிகளில் மாகாண மற்றும் பாராளுமன்ற
உறுப்பினர்களின் உதவியுடன் உள்ளூராட்சி உறுப்பினர்கள் பல
வேலைத்திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றார்கள். கீழ் மட்ட
குடியரசாகிய உள்ளூராட்சி மன்றங்களில் எமது பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கச்
செய்தல் வேண்டும். இவ்வாறு அதிகரித்துக் கொண்டதன் பின்னர் ஜனநாயக ரீதியில்
போராட்டங்களை நடத்தி உள்ளூராட்சி மன்ற நிதியினை எமது சமூகத்துக்குப்
பெற்றுக் கொடுக்க வேண்டும். இதைவிடுத்து உள்ளூராட்சி நிதி எமக்குக்
கிடைக்கவில்லை என்பதற்காக உள்ளூராட்சி தேர்தலில் நாம் போட்டியிடாமல்
இருந்துவிட முடியாது. எமது பிரதிநிதித்துவம் மிகவும் அவசியமாகும் என்றார்.
Subscribe to:
Posts (Atom)