Wednesday, August 12, 2015
Tuesday, August 11, 2015
மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய சம்பளம் இல்லை
1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 6ம் திகதி முதல் 16ம்
திகதிவரை பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்த மெதுவாக பணி செய்த
காலத்துக்குரிய பணம் மாதாந்த வேதனத்தில் சேர்க்கப்படாததால் தொழிலாளர்கள்
அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் 4ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்ததால், அப் பேச்சுவார்த்தையிலிருந்து இ.தொ.கா. வெளிநடப்பு செய்ததுடன் ஜூலை 6ம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களை மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபடுமாறு பணித்தது.
இதற்கமைவாக பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இக் காலப் பகுதியில் வழமையாக எடுக்கும் கொழுந்தின் நிறைக்கு பதிலாக 3 கிலோ கிராம் கொழுந்தே எடுத்தனர். இது தோட்ட கம்பனிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால் தோட்ட அதிகாரிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தொடங்கினர்.
இருதரப்பு போரட்டங்களும் நீடித்ததில் எடுக்கப்பட்ட கொழுந்துகள் பிரயோசனமற்ற நிலையில் குப்பைகளில் கொட்டப்பட்டன.
நிலைமையை கருத்தில் கொண்டு மீண்டும் தொழிற்சங்கங்களுக்கும் 23 கம்பனிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை கடந்த மாதம் 15ஆம் திகதி அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்றது.
இப் பேச்சுவார்த்தையில் மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய வேதனத்தையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென பிரதான தொழிற்சங்கமான இ.தொ.கா வலியுறுத்தியது.
இப் பேச்சுவார்த்தை எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் தேர்தலுக்கு பின் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ´இம் மாத வேதனம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதுள்ளதாகவும் மெதுவாக பணிசெய்த காலத்துக்குரிய வேதனத்தை தவிர்த்தே மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டுள்ளதால் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால், கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் தமது பிள்ளைகளை வழியனுப்புவதற்கு கூட பணம் வழங்க முடியாத நிலையில் அவல வாழ்வை எதிர்கொண்டுள்ளதாகவும் இம் மக்கள் தெரிவிக்கின்றனர். சில தோட்டங்களில் இன்று (10) மாதாந்த சம்பளம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு தோட்ட தொழிலாளிகளுக்கு இம்முறை சம்பளம் 40 வீதம் குறைவாக காணப்பட்டிருப்பதாகவும் அத்தோடு தோட்ட கம்பனியால் மேலதிகமாக முற்கொடுப்பனவாக 2000 ரூபாய் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தோட்ட கம்பனி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் 4ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்ததால், அப் பேச்சுவார்த்தையிலிருந்து இ.தொ.கா. வெளிநடப்பு செய்ததுடன் ஜூலை 6ம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களை மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபடுமாறு பணித்தது.
இதற்கமைவாக பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இக் காலப் பகுதியில் வழமையாக எடுக்கும் கொழுந்தின் நிறைக்கு பதிலாக 3 கிலோ கிராம் கொழுந்தே எடுத்தனர். இது தோட்ட கம்பனிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால் தோட்ட அதிகாரிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தொடங்கினர்.
இருதரப்பு போரட்டங்களும் நீடித்ததில் எடுக்கப்பட்ட கொழுந்துகள் பிரயோசனமற்ற நிலையில் குப்பைகளில் கொட்டப்பட்டன.
நிலைமையை கருத்தில் கொண்டு மீண்டும் தொழிற்சங்கங்களுக்கும் 23 கம்பனிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை கடந்த மாதம் 15ஆம் திகதி அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்றது.
இப் பேச்சுவார்த்தையில் மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய வேதனத்தையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென பிரதான தொழிற்சங்கமான இ.தொ.கா வலியுறுத்தியது.
இப் பேச்சுவார்த்தை எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் தேர்தலுக்கு பின் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ´இம் மாத வேதனம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதுள்ளதாகவும் மெதுவாக பணிசெய்த காலத்துக்குரிய வேதனத்தை தவிர்த்தே மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டுள்ளதால் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால், கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் தமது பிள்ளைகளை வழியனுப்புவதற்கு கூட பணம் வழங்க முடியாத நிலையில் அவல வாழ்வை எதிர்கொண்டுள்ளதாகவும் இம் மக்கள் தெரிவிக்கின்றனர். சில தோட்டங்களில் இன்று (10) மாதாந்த சம்பளம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு தோட்ட தொழிலாளிகளுக்கு இம்முறை சம்பளம் 40 வீதம் குறைவாக காணப்பட்டிருப்பதாகவும் அத்தோடு தோட்ட கம்பனியால் மேலதிகமாக முற்கொடுப்பனவாக 2000 ரூபாய் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தோட்ட கம்பனி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Friday, August 7, 2015
மனசாட்சி உடன்படிக்கையில் மலையக மக்களுக்கும் தீர்வு
மக்கள் விடுதலை முன்னிணியின் மனசாட்சி உடன்படிக்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம்,கிறிஸ்தவ மக்கள் உட்பட மலையக மக்களின் பிரச்சினை களுக்கும் தீர்வு உள்ளடக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை க்கு சரியான தீர்வு பெற்று கொடுப்பதோடு அவர்களின் சம்பள உயர்வு விடயத்தில் நாம் போராட்டம் நடத்தி அதை பெற்றுகொடுக்க முன்னின்று செயல்படுவோம் என்று தெரிவித்துள்ள சுந்தரலிங்கம் பிரதீப் ஊழல் இல்லாத அரசியல் கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டு வருகின்றது. தவறு செய்பவர்களை தட்டி கேட்கக்கூடிய தகுதி, இக்கட்சிக்கு மட்டுமே உள்ளது என்றார்.
'கடந்தகால தேர்தல்களைவிட இம்முறை தேர்தலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக நான்கு இன மக்களும் என்றும் இல்லாதவாறு இன்று, மக்கள் விடுதலை முன்னணியை ஆதரிக்கின்றனர். இதனால், இரத்தினபுரி மாவட்டத்தில் ம.வி.மு.இன் பிரதிநிதி ஒருவர் நிச்சயமாக நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
'மக்களின் கஷ்டங்களை நன்கு அறிந்த ம.வி.மு மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு என்றுமே தயாராக உள்ளது. இன,மத,மொழி,பேதங்களின்றி ஒரே குறிக்கோளுடன் செயற்பட்டு வரும் மக்கள் விடுதலை முன்னணியுடன் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்' என அழைப்புவிடுத்தார்.
23,500 ரூபா சம்பளம் என்பதில் உண்மையில்லை
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கென்று நியமனம் பெற்ற
உதவி ஆசிரியர்களுக்கு கூடுதல் சம்பளம் பெற்றுக் கொடு
க்கப்படுமாயின் முதலில் மகிழ்ச்சியடைபவன் நானாகவே இருப்பேன்.
ஆனால் உதவி ஆசிரியர்களுக்கு 23 ஆயிரத்து ஐநூறு ரூபா
என்றடிப்படையில் கூடுதல் சம்பள த்தைப் பெற்றுக் கொடுப்பதாகக் கூறி
வருவது உண்மைக்குப் புறம்பானதாகு மென்று இ.தொ.கா வின் உப தலைவர்
செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
மடுல்சீமை, ஊவா பரணகமை, அப்புத்தளை போன்ற இடங்களில்
நடைபெற்ற இ.தொ.கா. வின் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் இ.தொ.கா. உப
தலைவர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்பேசுகை யில் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் பேசுகையில்;
‘‘கடந்த ஆட்சியின் போது இ.தொ.கா. எடுத்துக் கொண்ட
முயற்சிகளின் பலனாக மூவாயிரம் உதவி ஆசிரியர் நியமனங்கள் வழங்க அரசு
இணக்கம் தெரிவித்திருந்தது. அதற்கமைய புதிய ஆட்சயின் போது ஒரு
தொகுதி உதவி ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.
இந்நியமன ங்களில் ஊவா மாகாணத்தில் 599 பேர்
உள்வாங்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு 23 ஆயிரத்து ஐநூறு ரூபா
என்ற அடிப்படை யில் கூடுதல் சம்பளம் பெற்றுத் தருவதாக மாகாண அமைச்சர்
வடிவேல் சுரேஷ் தெரிவித்திருந்தார்.அவ்வுதவி ஆசிரியர்களுக்கு
கடந்த மாதம் வழங்கப்பட்ட சம்பளமும் வர்த்த மானி அறிவித்தலில்
குறிப்பிட்டிருந்தப டியே வழங்கப்பட்டிருக்கின்றது. அவர்களுக்கு
கூடுதல் சம்பளத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கான எந்தவொரு முயற்சியும்
எடுக்கப்படவில்லை. கூடுதல் சம்பளம் பெற்றுக் கொடுப்பதாக
கூறப்படும் கூற்று க்கள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானதாகும்.
புத்திஜீவிகளான ஆசிரியர் சமூகத்தையே ஏமாற்றியிருக்கும் இவர்கள்
பாமர மக்களை எவ்வகையில் ஏமாற்றுவார்கள் என்பது அம் மக்களுக்கே
தெரிந்த விடயமாகும்.
கூடுதல் சம்பளம் பெற்றுக் கொடுப்பது தொடர்பான உண்மை
நிலையினையறிய சம்பந்தப்பட்டவர்களை அணுகி வினவியபோது,
‘‘நியமனங்கள் வழங்கப்பட்ட உதவி ஆசிரியர்களுக்கு வர்த்தமானி
அறிவித்தலில் குறிப்பிட்டுள்ள பிரகாரம், சம்பளம் வழங்கப்பட்டு
வருகின்றது. கூடுதல் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்பது குறித்து
எத்தகைய தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை” என்று கூறினர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்
வினை இ.தொ.கா. பெற்றுக் கொடுப்பது உறுதியாகும். பெற்றுக் கொடுக்க
முடியாவிட்டால் இ.தொ.கா. அக் கோரிக்கையை முன்வைக்காது. தோட் டக்
கம்பனிகளின் ஆதரவாள ர்களாக செயல்பட்டுவரும் மலையக
தொழிற்சங்கங்கள் சில ஆயிரம் ரூபா சம்பள உயர்வினை வழங்க மறுக்கும்
கம்பனியாளர்களை எதிர்க்காமல் சம்பள உயர்வினைப் பெற்றுக் கொடுக்க
முனையும் இ.தொ.கா. வை எதிர்க்கவும், விமர்ச னம் செய்யவுமான
செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர். பெருந்தோட்ட மக்கள் குறித்து அக்கறை யுடனும் உணர்வு பூர்வமாகவும் செயற்ப டும் ஒரே அமைப்பு இ.தொ.கா. மட்டுமேயாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற் கும் இ.தொ.கா.
விற்கும் இடையில் பூரண நல்லுறவுகள் தொடர்ந்த வண்ணமேயு ள்ளன. அந்
நல்லுறவுகளின் பயனாக மேலும் மூவாயிரம் தமிழ் ஆசிரியர்களுக்கு நியமனங்களைப்
பெற்றுக் கொடுக்கவும், தோட்டப் பிரிவுகள் அடிப்படையில் ஒவ் வொரு தோட்டப்
பிரிவிற்கும் கிராம சேவை உத்தியோகத்தர்களை நியமிக்கவும் ஏற்பாடுகளை செய்து
வருகின்றோம் என் றார்.
Friday, July 17, 2015
சம்பள விவகாரத்தில் இழுத்தடிப்பு வேண்டாம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி நான்கு மாதங்கள் நிறைவடையப்போகின்ற நிலையிலும் புதிய கூட்டு உடன்படிக்கையை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக தோல்வியையே சந்தித்து வருகின்றன. பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமக்கு நாட் சம்பளமாக 1000 ரூபாவை வழங்கக்கோரி நிற்கின்ற நிலையில் முதலாளிமார் சம்மேளனம் அதனை நிராகரித்துவருகின்றது. கூட்டு ஒப்பந்த விவகாரம் தொடர்பில் இதுவரை ஆறு சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவிட்டபோதும் அவை தோல்வியிலேயே முடிவடைந்தன.
முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இதுவரை நடைபெற்ற நான்கு சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன. அதன் பின்னர் தொழில் அமைச்சுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தன. அந்தவகையில் நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் சார்பில் 1000 ரூபா நாட் சம்பளம் கோரப்பட்டுவருகின்ற போதும் தோட்ட கம்பனி நிர்வாகங்கள் அந்த கோரிக்கையை நிராகரித்துவருகின்றன.
முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழில் அமைச்சுக்கும் இடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு மொத்த சம்பளமாக 700 ரூபாவை வழங்க முன்வந்தன. எனினும் தொழிலாளர்கள் சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தொழிற்சங்கங்கள் கம்பனிகளின் இந்த அறிவிப்பை நிராகரித்துள்ளன.
தொழிற்சங்கங்கள் சம்பள உயர்வாக 1000 ரூபாவையே பெற்றுத்தர வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் 700 ரூபாவைவிட அதிகரிக்க முடியாது என்ற ரீதியில் முதலாளிமார் சம்மேளனமும் பிடிவாதப் போக்கை கடைப்பிடித்ததால் நான்கு மணி நேரம் நீடித்திருந்த ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகள் இன்றி முடிவுக்கு வந்தது.
எனினும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததும் மீண்டும் பேசித் தீர்மானம் ஒன்றுக்கு வருவதென முடிவெடுப்பதற்கு இந்த ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தலைமையில் தொழில் அமைச்சில் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் உள்ளிட்ட பிரதிநிதிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதி, முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரிகள், தோட்ட முகாமைத்துவ கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அதாவது தற்போதைய சூழ்நிலையில் சர்வதேச சந்தையில் தேயிலையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக கம்பனிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவது இன்றைய நிலையில் சாத்தியமில்லை எனவும் 700 ரூபாவையே மொத்த சம்பளமாக வழங்கமுடியும் என கம்பனிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கம்பனிகளின் இந்நிலைப்பாட்டை நிராகரித்துள்ள பெருந்தோட்டத் தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம், கம்பனிகள் கொடுக்கின்ற பணிகளை தொழிலாளர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் முழுமையாக நிறைவேற்றுகின்றனர். எனவே அவர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியதுடன் தோட்டங்களை இலாபமீட்டும் வகையில் நிர்வகிக்க வேண்டியதும் அபிவிருத்தி செய்யவேண்டியதும் தோட்டக் கம்பனிகளின் பொறுப்பாகும். அதற்கு தொழிலாளர்கள் பொறுப்புக் கூறமுடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூட்டு ஒப்பந்த காலம் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்த நிலையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினால் தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பொன்றை முதலாளிமார் சம்மேளனம் வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை பெருந்தோட்டத்துறையின் ஏனைய தொழிற்சங்கங்களும் வலியுறுத்தியதுடன் போராட்டங்களும் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் இதுவரை விமோசனம் கிடைக்காமல் உள்ளது.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தமது உடலை வருத்தி மேற்கொள்கின்ற உழைப்புக்கு ஏற்ற நியாயமான ஊதியத்தை பெறுவதில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பாரிய போராட்டத்தையே நடத்தவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் தோட்ட தொழிலாளர்களின் உழைப்புக்கு நியாயமான சம்பளம் கிடைக்காமல் இருப்பதானது பெரும் வேதனைக்குரிய நிலையாகும்.
நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும் மக்களின் சமூக வாழ்க்கை நிலையில் முன்னேற்றங்கள் வந்துகொண்டிருக்கின்ற சூழலிலும் பெருந்தொட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையும் அவர்களின் பொருளாதாரக் கட்டமைப்பும் தொடர்ந்தும் வீழ்ச்சிப்பாதையில் பயணிப்பதானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அந்த மக்களின் வருமான கட்டமைப்பானது தொடர்ந்தும் பரிதாபகரமான நிலையிலேயே இருந்துவருகின்றது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான கூட்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுவருகின்ற போதிலும் அந்த மக்கள் கோருகின்ற நியாயமான சம்பள உயர்வு அவற்றின் ஊடாக வழங்கப்பட்டதில்லை. இதனால் பெருந்தோட்ட மக்கள் மிகவும் பரிதாபகரமான வாழ்க்கையையே நடத்தவேண்டிய துர்ப்பாக்கிய சூழல் நிலவிவருகின்றது.
பெருந்தோட்ட மக்கள் வறுமை நிலையிலேயே தமது வாழ்க்கைப் பயணத்தைக் கொண்டு நடத்தவேண்டியுள்ளதால் பாரிய பொருளாதார பிரச்சினைகளை சந்தித்துவருகின்றனர். தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கி அவர்களை சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு கொண்டுவருவதில் அந்த மக்கள் பாரிய பிரச்சினைகளையும் சிக்கல்களையும் எதிர்நோக்கிவருகின்றனர்.
கல்விப் பிரச்சினை, சுகாதாரப் பிரச்சினை, போக்குவரத்து மற்றும் சமூக வசதியின்மை உள்ளிட்ட பல சிக்கல்களுக்கு பெருந்தோட்ட மக்கள் முகம்கொடுத்துவருகின்றனர். தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு பாரிய திண்டாட்டங்களையே தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவருகின்றனர். எனவே தோட்டத்தொழிலாளர்களின் இந்தப் பிரச்சினையை தொடர்ந்து இழுத்தடிப்பதற்கு இடமளிக்கக்கூடாது. 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதில் மலையக தொழிற்சங்க மற்றும் அரசியல் தலைமைகள் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும். எக்காரணம் கொண்டும் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான சம்பள கோரிக்கையான 1000 ரூபா விடயத்தை தொழிற்சங்க மற்றும் அரசியல் தலைமைகள் கைவிட்டுவிடக்கூடாது.
அத்துடன் இது தோட்டத்தொழிலாளர்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையிலான பிரச்சினை என்று கருதி அரசாங்கம் இந்த விடயத்தில் மௌனப் போக்கை கடைப்பிடிக்கக்கூடாது. தொழில் அமைச்சு இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான பங்களிப்பை செய்ய முன்வரவேண்டும்.
ஏற்கனவே தொழில் அமைச்சு முதலாளிமார் சம்மேளனத்துடன் இந்த விவகாரம் தொடர்பில் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒரு ஆரோக்கியமான தலையீட்டை மேற்கொண்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். ஆனால் இத்துடன் நிறுத்திவிடாமல் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் வரை அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிடவேண்டியது அவசியமாகும்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் காணப்படுகின்ற துயர்மிக்க வரலாற்றுக்கு முடிவு கட்டவேண்டியது அவசியமாகும். அந்த மக்களின் நியாயமான சம்பள அதிகரிப்புக்கு வழிவகுக்கவேண்டியது கட்டாயம். தொடர்ந்து அந்த மக்கள் வேதனையுடன் வாழும் நிலைக்கு இட்டுச்செல்லக்கூடாது. தோட்டக் கம்பனிகள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று கூறி மக்களின் நியாயமான சம்பள உயர்வை வழங்காமல் விட்டுவிடக்கூடாது. நடைமுறையில் இருந்த கூட்டு உடன்படிக்கை காலாவதியாகி நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அதனை தொடர்ந்தும் இழுத்தடித்துக்கொண்டிருக்காமல் இந்த விடயத்துக்கு உடனடியாக தீர்வைக்காண அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் தமது பங்களிப்பை செய்ய முன்வரவேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம்.
நன்றி- வீரகேசரி
|
தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவர்த்தை கடந்த புதன் கிழமை 15-07-2015 கொழும்பு தொழில் அமைச்சில் தொழில் அமைச்சர் நாவின்ன தலைமையில் இடம்பெற்றது.
பேச்சுவார்த்தையின்போது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும் பங்குபற்றியிருந்தனர்.
பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 450 ரூபாயிலிருந்து 510 ரூபாயாக அதிகரிக்க முடியுமென முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்ததற்கமைய தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 510 ரூபாவாகவும்,; ஊக்குவிப்புத் தொகையாக 40 ரூபாயும் வரவுத்தொகையாக 140 ரூபாயும் ஊழியர் சேமலாப நிதியுடன் சேர்த்து மொத்தமாக 766 ரூபா வழங்குவதாக தெரிவித்துள்ளமையை இ.தொ.கா மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் எஸ் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ளப்படும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டொப்பந்த பேச்சுவார்த்தை, கடந்த 2013 ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையின் உடன்படிக்கை 2015 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை ஏப்ரல் 24ஆம் திகதியும் இரண்டாவது பேச்சுவார்த்தை மே 18, மூன்றாவது பேச்சுவார்த்தை ஜூன் 22, நான்காம்கட்ட பேச்சுவார்த்தை ஜூலை 2ம் நடைபெற்றது. இம்முறை நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் அவை எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் தோல்வியில் முடிவடைந்தன.
இதனையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடந்த 06-07-2015 முதல் 1000 ரூபா வை வலியுறுத்தி மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தை தொடர்ந்ததையடுத்து தோட்ட நிர்வாகங்களும் பணி பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.
இறுதிநாள் பேச்சுவார்த்தையின் போது இ.தொ.கா கடந்த ஒருவார காலமாக தொழிலாளர்களின் மெதுவாக வேலை செய்த நாட்களுக்கான சம்பளத்தை வழங்குமாறு கோரியதுடன். சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை தேர்தல் முடிந்த பிறகு மேற்கொள்ள கோரியுள்ளனர். முதலாளிமார் சம்மேளனம் இதற்கும் இணங்காததால் மீண்டும் பேச்சுவார்த்தை திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Saturday, July 11, 2015
தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு
கொழும்பில் தொழில் அமைச்சில் தொழில் அமைச்சின் ஆலோசகர் சி.விமலசேன தலைமையில் நேற்று (10-07-2015) இடம்பெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தையின் போது முடிவுகள் எதுவும் எட்டப்படாததால் மீண்டும் எதிர்வரும் 15-07-2015ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வரையான நாள் சம்பள அதிகரிப்பு தேவை என்ற நிலைப்பாட்டில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நேற்றைய முக்கிய பேச்சுவார்த்தையிலும் தீர்மானகரமாக இருந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களின் இந்த நிலைப்பாட்டிற்கு பதிலளிக்கும்; வகையிலான உறுதியான திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு தொழில் அமைச்சு 23 கம்பனிகள் அடங்கிய முதலாளிமார் சம்மேளனத்திற்கு அறிவித்துள்ளது.
மேலும் ஏற்கனவே முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த யோசனைத்திட்டத்தை தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொள்ளாததால் அந்த யோசனையை மீண்டும் சமர்பிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தொழில் அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சி.விமலசேன தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் தொழில் அமைச்சு சார்பில் தொழில் அமைச்சின் செயலாளர், தொழில் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், செந்தில் தொண்டமான், கே.வேலாயுதம், ராமநாதன், சந்திரசேன ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
பெருந்தோட்டங்கள் சார்பில் 23 கம்பனிகளின் பிரதிநிதிகள், முதலாளிமார் சம்மேளன அதிகாரிகள் கலந்து கொண்டனா இதேவேளை பேச்சுவார்த்தை 15ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தோட்டங்களில் மெதுவாக வேலைசெய்யும் போராட்டம் தொடரும் என இ.தொ.கா தெரிவித்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)




