Saturday, July 11, 2015

தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு

கொழும்பில் தொழில் அமைச்சில்  தொழில் அமைச்சின் லோசகர் சி.விமலசேன தலைமையில் நேற்று (10-07-2015) இடம்பெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தையின் போது முடிவுகள் எதுவும் எட்டப்படாததால் மீண்டும் எதிர்வரும் 15-07-2015ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வரையான நாள் சம்பள அதிகரிப்பு தேவை என்ற நிலைப்பாட்டில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நேற்றைய முக்கிய பேச்சுவார்த்தையிலும் தீர்மானகரமாக இருந்துள்ளனர். 

தனைத் தொடர்ந்து கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்களின் இந்த நிலைப்பாட்டிற்கு பதிலளிக்கும்; வகையிலான உறுதியான திட்டம் ஒன்றை முன்வைக்குமாறு தொழில் அமைச்சு 23 கம்பனிகள் அடங்கிய முதலாளிமார் சம்மேளனத்திற்கு அறிவித்துள்ளது. 
மேலும் ஏற்கனவே முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த யோசனைத்திட்டத்தை தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொள்ளாததால் அந்த யோசனையை மீண்டும் சமர்பிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தொழில் அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சி.விமலசேன தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் தொழில் அமைச்சு சார்பில் தொழில் அமைச்சின் செயலாளர், தொழில் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், செந்தில் தொண்டமான், கே.வேலாயுதம், ராமநாதன், சந்திரசேன ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

பெருந்தோட்டங்கள் சார்பில் 23 கம்பனிகளின் பிரதிநிதிகள், முதலாளிமார் சம்மேளன அதிகாரிகள் கலந்து கொண்டனா இதேவேளை பேச்சுவார்த்தை 15ம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தோட்டங்களில் மெதுவாக வேலைசெய்யும் போராட்டம் தொடரும் என இ.தொ.கா தெரிவித்துள்ளது.  

No comments: