Thursday, October 8, 2015

மேலதிக பிரதேச சபைகள்

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் மேல­திக பிர­தேச சபைகள் உரு­வாக்­க­ப்பட வேண்டும். நாட்டில் பிற பகு­தி­களில் ஆறா­யிரம் பேருக்கு ஒரு பிர­தேச சபை இருக்கும் போது நுவ­ரெலியா மாவட்­டத்தில் மாத்­திரம் இரண்டு இலட்சம் பேருக்கு ஒரு பிர­தேச சபை இருப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இது மலை­யக தமி­ழ­ருக்கு கடந்த  இரு­பத்­தி­யெட்டு வரு­டங்­க­ளாக இழைக்­கப்­பட்­டுள்ள  ஜன­நா­யக மறுப்பு அநீதி. இது எனது அமைச்சு பொறுப்பில் உள்ள தேசிய சக­வாழ்வு விட­யத்­துக்கு முர­ணா­னது. எனவே இந்த  மிக நீண்ட கால அநீதி இப்­போ­தா­வது நிவர்த்தி செய்­யப்­பட வேண்டும் என தேசிய கலந்­து­ரை­யா­டல்கள் அமைச்­சரும், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி-­ஜ­ன­நா­யக மக்கள் முன்­னணி தலை­வ­ரு­மான மனோ கணேசன்  எம்.பி. உள்­ளூ­ராட்சி தேர்தல் எல்லை சீர்­தி­ருத்த அமைச்­ச­ரவை உப­கு­ழுவில் தெரி­வித்­துள்ளார்.  
 
இது தொடர்பில்  கூறி­ய­தா­வது, இந்த முக்­கி­ய­மான விவ­காரம் தொடர்பில் ஏற்­க­னவே ஒரு கருத்­தொ­ரு­மைப்­பாடு இருக்­கின்­றது. எனவே உள்­ளூ­ராட்சி தேர்தல் எல்லை சீர்­தி­ருத்த அமைச்­ச­ரவை உப­குழு, நுவ­ரெலியா மாவட்ட பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளையும், மாவட்ட செய­லாளர் மற்றும் அதி­கா­ரி­க­ளையும் அழைத்து கலந்­து­ரை­யாடி, புதிய பிர­தேச சபை­களை நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உரு­வாக்க வேண்டும். இது எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள அடுத்த உள்­ளூ­ராட்சி தேர்­தல்­க­ளுக்கு முன்னர் நடை­பெற வேண்டும். எனது இந்த கோரிக்­கையை,  உள்­ளூ­ராட்சி மற்றும் மாகா­ண­ச­பைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா மற்றும் உள்­ளூ­ராட்சி தேர்தல் எல்லை சீர்­தி­ருத்த அமைச்­ச­ரவை உப­குழு உறுப்­பி­னர்கள் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். இந்­நி­லையில் வெகு விரைவில் நமது அமைச்­ச­ரவை உப­கு­ழுவை சந்­திக்கும் முக­மாக, நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள், நுவரெ­லியா மாவட்ட செய­லாளர் மற்றும் அதி­கா­ரிகள் ஆகி­யோ­ருக்கு அழைப்பு அனுப்­பு­வ­தற்கு முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.
இந்த  மிக நீண்ட கால அநீதி நிவர்த்­திக்­கப்­பட வேண்டும் என்­பது தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் நிலைப்­பா­டாகும். இது தொடர்­பான முடிவு கூட்­ட­ணியின் கடந்த செயற்­குழு கூட்­டத்தில் எடுக்­கப்­பட்­டது. எனவே எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அடுத்த உள்ளூராட்சி தேர்தல்களுக்கு முன்னர் செய்து முடிக்கப்பட வேண்டிய இந்த நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .

காலா­வ­தி­யான திரி­போஷா

கினி­கத்­தேனை வைத்­தி­ய­சா­லையில் கர்ப்­பிணித் தாய்­மா­ருக்கும் பாலூட்டும் தாய்­மா­ருக்கும் காலா­வ­தி­யான திரி­போஷா சத்­து­ணவுப் பொதிகள் வழங்­கப்­ப­டு­வ­தாக மத்­திய மாகாண சபை உறுப்­பினர் கண­பதி கன­கராஜ் குற்றம் சாட்­டினார்.
மாகாண சபை அமர்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு குற்றம் சாட்­டினார்.
இங்கு அவர் மேலும் கூறு­கையில், கினி­கத்­தேனை பகு­திக்கு சென்­றி­ருந்த போது அங்கு சில கர்ப்­பிணித் தாய்­மாரும் பாலூட்டும் தாய்­மாரும் தமக்கு வைத்­தி­ய­சா­லையில் வழங்­கப்­பட்ட திரி­போஷா சத்­து­ணவுப் பொதி­க­ளுடன் என்னை சந்­தித்து கினி­கத்­தேனை வைத்­தி­ய­சா­லையில் காலா­வ­தி­யான திரி­போச சத்­து­ணவு வழங்­கப்­ப­டு­வ­தாக தெரிவித்­தனர்.
அத்­துடன் என்­னிடம் சில காலா­வ­தி­யான பொதி­க­ளையும் வழங்கி சரி­யான தீர்வை பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறும் கோரினர். அவர்கள் என்­னிடம் கொடுத்த காலா­வ­தி­யான திரி­போஷா பொதி­களை இந்த சபையின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­வ­தோடு இவற்றை சுகா­தார அமைச்­ச­ரிடம் ஒப்­ப­டைக்­கிறேன்.
மத்­திய மாகாண சுகா­தாரத் துறையில் இது­போன்ற பல குறை­பா­டுகள் காணப்­ப­டு­வதை கடந்த காலங்­க­ளிலும் நான் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறேன். அர­சாங்க வைத்­தி­ய­சா­லை­களில் காலா­வ­தி­யான, மக்­களின் சுகா­தா­ரத்­திற்கு பங்கம் ஏற்­ப­டுத்­து­கின்­ற­வற்றை வழங்­கு­கின்­ற­போது அதனால் மக்­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்ற பாத­க­மான விளை­வு­களை சுகா­தார அமைச்சு கவ­னத்தில் கொள்­ள­வேண்டும். இவ்­வா­றான நிலை தொட­ரு­மானால் சுகா­தார துறையில் மக்கள் நம்­பிக்கை இழந்­து­வி­டு­வது மட்­டு­மல்­லாமல், அவர்கள் மன­ரீ­தி­யிலும் உடல் ரீதி­யிலும் பாதிப்­ப­டைவர்.
கினி­கத்­தேனை வைத்­தி­ய­சா­லையில் வழங்­கப்­பட்ட காலா­வ­தி­யான திரி­போஷா பொதி­களை மீள­ப்பெற்று உரி­ய­வர்­க­ளுக்கு நிவா­ர­ணத்தை வழங்க வேண்டும். கினி­கத்­தேனை வைத்­தி­ய­சாலை உட்­பட மத்­திய மாகா­ணத்தில் உள்ள ஏனைய வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் காலா­வ­தி­யான திரி­போஷா பொதிகள் களஞ்­சியப் படுத்­தப்­பட்­டி­ருந்தால் அவற்றை அகற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வேண்­டு­கிறேன்.
இவ்­வி­டயம் தொடர்பில் மத்­திய மாகாண சகா­தார அமைச்­சர் கூறுகையில் இவ்விடயம் தொடர்பில் பூரண விசாரணைக்கு தான் உத்தரவிடுவதாகவும் அடுத்த மாகாண சபை அமர்வில் விசாரணை அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார்.

Tuesday, October 6, 2015

மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகள்

கொத்மலை, இரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க இன்று மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் அடிக்கல் நாட்டி வைத்தார்.

1960 ஆண்டு காலப்பகுதியில் பெரிய மஸ்கெலியா பகுதியிலிருந்து தற்போது மண்சரிவு ஏற்பட்டிருந்த கயிறுகட்டி தோட்டத்திற்கு குடியிருப்பாளர்களாக வந்திருந்த பரம்பரையை சார்ந்த 7 பேரைக் காவுக்கொண்ட வெதமுல்ல லிலிஸ்லேண்ட் என்று அழைக்கப்படும் கயிறுகட்டி தோட்டத்திற்கு 1948 ஆண்டில் வெள்ளையர் காலப்பகுதியின் பின்னர் நீர் மறைப்புக்காக பெரிய மஸ்கெலியா எடம்ஸ்பீக் தோட்டம் உட்படுத்தப்படுகையில் அங்கிருந்து வெளியேறிய மக்களே அனர்த்தம் ஏற்பட்ட வெதமுல்ல  தோட்டத்தில் 1966 ஆண்டு குடியமர்ந்தனர்.

கே.கே.காளியப்பாபிள்ளை தோட்டம் என அழைக்கப்பட்ட வெதமுல்ல கயிறுகட்டி தோட்டத்தில் பதியப்பட்ட பரம்பரையினரே அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கு வெதமுல்ல பெருந்தோட்ட பகுதியில் குடியிருப்புகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

குறித்த ஒரு வீட்டிற்கு 12 இலட்சம் ரூபா செலவிடப்படுகின்றது. இந்த நிதி உதவியை மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு வழங்குகின்றது. 3 மாதத்திற்குள் இந்த வீடுகள் கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Sunday, October 4, 2015

மண்சரிவு அபாயம் - 220 பேர் பாடசாலையில்

சீரற்ற கால­நிலை மற்றும் மண்­ச­ரிவு அபாயம் கார­ண­மாக பண்­டா­ர­வளை அம்­பிட்­டி­கந்த பெருந்­தோட்­டத்தில் 67 தொழி­லாளர் குடும்­பங்­களைச் சேர்ந்த 220 பேர் கடந்த சனிக்­கி­ழமை அங்­கி­ருந்து வெளியேற்­றப்­பட்டு அம்­பிட்­டி­கந்த தமிழ் வித்­தி­யா­ல­யத்தில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். மேற்­படி தோட்­டத்தில் மண் சரிவு அபாயம் ஏற்­பட்­டதைத் தொடர்ந்து, அங்­கி­ருந்து தோட்டத் தொழி­லா­ளர்­களை வெளியே­று­மாறு பிர­தேச செய­லாளர் உத்­த­ர­விட்டும் அவ் உத்­த­ர­வினை தொழி­லா­ளர்கள் செவி­ம­டுக்­க­வில்லை. அதை­ய­டுத்து பொலி­ஸாரின் துணை­யுடன் தோட்டத் தொழி­லா­ளர்கள் உட­ன­டி­யாக குறிப்­பிட்ட இடத்­தி­லி­ருந்து வெளியேற்றப்பட்டு அம்­பிட்­டி­கந்த தமிழ் வித்­தி­யா­ல­யத்தில் தங்­க­வைக்­கப்­பட்­டனர். இவர்­க­ளுக்­கான அனைத்து வச­தி­க­ளையும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சுப் பதுளை மாவட்டப் பணி­யகம் மேற்­கொண்­டுள்­ளது.
 
அத்­துடன், ஹப்­புத்­தளைப் பகு­தியின் உட­வே­றியா தோட்­டத்தின் 50 க்கும் மேற்­பட்ட தொழி­லா­ளர்கள், அங்­கி­ருந்து வெளியேற்­றப்­பட்டு, பாது­காப்­பான இடங்­களில் குடி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ளனர்.
கால­நிலை மாற்­றத்­தினால் பதுளை மாவட்ட மக்­களின் இயல்பு வாழ்க்கை முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது தொடர்ந்தும் மழை பெய்து கொண்டிருப்பதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

Wednesday, September 16, 2015

இந்தியாவின் ஏழை முதலமைச்சர்

முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்களைக் கூட விட்டு விடு வோம். ஒரு வார்டு கவுன்சிலர் ஒரு பீரி யட் பதவியில் இருந்தால் குத்து மதிப்பாக எத்தனை லட்சங்கள், எத்தனை கோடிகள் சம்பாதிப்பார் என்பதையே நம்மால் கணக்கிட முடியாது. ஆனால் மூன்று பீரியட்கள் திரிபுரா மாநில முதலமைச்சராக இருந்த ஒருவரது மொத்த சொத்தின் மதிப்பு வெறும் 10,800 ரூபாய்தான் என் றால் நம்பமுடிகிறதா? அவருக்குச் சொந் தமாக வீடோ, வாகனமோ, செல்ஃ போனோ கிடையாது என்றால் நம்புவீர் களா? வேறொரு நாட்டில் இருக்கும் யாரோ ஒருவரைப் பற்றிச் சொல்லும் இன்டர்நெட் செய்தி இல்லை இது. நமது பாரத நாட்டின் வட உச்சியில் உட்கார்ந்திருக்கும் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் மாணிக் சர்க்கார்தான் அந்த உத்தமர்.

தற்போது 64 வயதாகும் மாணிக் சர்க்கார் சிபிஎம் கட்சியைச் சேர்ந்த முழு நேர ஊழியர். 1981 இடைத்தேர்தல் மூலம் எம்எல்ஏ ஆனவர். 1998ல் திரிபுராவின் முதல்வரானவர். மூன்று ஐந்தாண்டுகள் முதல்வராய் இருந்த அவர், சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று நான்காம் முறையாக முதல்வராகியுள்ளார். அதிலும் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் கூடுதல் சீட்டுகள் பெற்றும், அவரது தொகுதியில் கூடுதல் வாக்குகள் பெற்றும் முதல்வர் பதவியைத் தக்க வைத்திருக்கிறார்.சமீபத்தில் நடந்த தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தபோது தனது சொத்துக் கணக்கை வெளியிட்டார்.

அவரின் மொத்த சொத்தின் மதிப்பே ரூ.10,800-தான். மனைவி, பிள்ளைகள் பேரில் சொத்தை குவித்திருப்பாரோ என்று குறுக்கே சிந்திக்க வேண்டாம். அரசு ஊழியராய் இருந்து ஓய்வுபெற்ற அவரது மனைவி பாஞ்சாலியின் மொத்த சேமிப்பு ரூ. 46,000-தான். இந்தத் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. சொந்த வீடோ, வாகனமோ கிடையாது. சொந்த வேலையாக வெளியே போனால், ஆட்டோ ரிக்ஷா பயணம்தான். சர்க்காரின் அரசு காரில், சுழலும் சிவப்பு விளக்கும் கிடையாது.முதலமைச்சருக்கு என்று ஒரு சம்பளம் உண்டல்லவா? அதையும் கட்சிக்குக் கொடுத்து விடுகிறார் சர்க்கார்.

கட்சி பார்த்து அவருக்கு மாதச் சம்பளம் ரூ.5000 தருகிறது. ‘இந்த பணமும் எனது மனைவியின் பென்சனும் எங்கள் எளிய வாழ்க்கைக்குப் போதுமானது’ என்கிறார் சர்க்கார்.
 
‘தினமும் காலை, அவர் உடுத்தும் உடைகளை அவரே துவைத்து போட்டு விட்டுத்தான் வெளியே கிளம்புவார்’ என்று தனது கணவர் பற்றி கூறுகிறார் பாஞ்சாலி.‘எனது வெட்டிச் செலவு என்று பார்த்தால் தினசரி ஒரு சிறிய மூக்குப் பொடி மட்டை, ஒரு சிகரெட்தான்’ என்று முன்பு ஒருமுறை வெள்ளந்தியாய் கூறிய சர்க்கார்: தற்போது அந்தப் பழக்கங்களையும் விட்டுவிட்டார்.

2009ல் சர்க்காரின் அம்மா மறைந்த போது, பூர்வீக வீடு ஒன்று அவருக்கு வந்து சேர்ந்தது. வாரிசு இல்லாத தனக்கு அந்த வீடு தேவையில்லை என்று கூறி, தனது தங்கைக்கு அந்த வீட்டைக் கொடுத்து விட்டார் சர்க்கார். சர்க்காரின் அப்பா ஒரு சாதாரண டெய்லர். ஆனாலும் 60களின் இறுதியிலேயே சர்க்காரை மேற்குவங்காள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்க வைத்தார் அவர். சர்க்காரின் குடும்பத்தினர், உறவினர்கள் எல்லோருமே சராசரி நடுத்தர வர்க்கத்துக்கும் கொஞ்சம் கீழே உள்ள குடும்பங்கள்தான்.

Wednesday, August 12, 2015

மலையக கட்சிகளின் பதில் என்ன?

இலங்கை அரசியலில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி யுள்ளது. ரணில் தலைமை யிலான ஐக்கிய தேசிய முன்ன ணிக்கும் மஹிந்த தலைமை யிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் இடையே பலமான போட்டி நிலவுகிறது. மலையகத்தில் போட்டியிடுகின்ற திகாம்பரம், ராதாகிருஷ்ணன் சார்ந்துள்ள கட்சிகள் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதோடு, ரங்காவின் கட்சியும் ஆறுமுகம் தொண்டமானின் காங்கிரஸ் கட்சியும் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கி புதிய ஆட்சியைக் கைப்பற்ற முழு மூச்சுடன் களத்தில் நிற்கின்றன.
மலையகம் சார்ந்த தமிழ் கட்சிகளில் ரங்காவின் கட்சியைத் தவிர திகாம்பரம், ராதாகிருஷ்ணன், ஆறுமுகம் தொண்டமான் சார்ந்த கட்சிகள் பதுளை, நுவரெலியா பிரதேசங்களில் ஆசனங்களைப் பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மலையகத்தின் ஏனைய பிரதேசங்களில் தமிழ் வாக்குகளை யானைக்கும் வெற்றிலைக்கும் பெற்றுக்கொடுப்பதில் மலையகக் கட்சிகள் ஆர்வத்தோடு செயற்படுகின்றன. தமது அணிக்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்து நாடாளுமன்ற ஆசனங்களை பெற்றுக் கொள்ளத் துடிக்கும் மலையக அரசியல்வாதிகள் தமது அணிசார்ந்து பெருந்தோட்டத்துறை வாழ் மக்களுக்கும் பொதுவாக மலையகத்துக்கும் பெற்றுக்கொடுக்கப் போவது என்ன? மக்களைக் கவரும் மேடைப் பேச்சுக்களோ, துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்படுபவை போன்றன என்றும் ஏட்டுச்சுரக்காய்தான்.
முன்னைய மஹிந்தரின் ஆட்சியிலும், இவ்வருடம் ஜனவரியில் பதவியேற்ற ரணில் தலைமையிலான அரசும் தொழிலாளர்களுக்கு 7 பர்ச்சஸ் காணி என்பதையே உறுதிப்படுத்திவிட்டன. இரண்டாவது, சம்பள ஒப்பந்த விடயம். தேர்தல் முடிந்ததும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். இதனை விட வேறு விடயங்கள் உள்ளனவா?
பெருந்தோட்டங்களை உள்ளடக்கி மலையக வாழ் தமிழர்களின் தனித்துவமிக்க அடையாளங்களை பேணிப்பாதுகாக்கவும் சமூக, கலை, கலாச்சார, பாதுகாப்பு விடயமாகவும் மண்சார்ந்த பொருளாதார அபிவிருத்தி தொடர்பாகவும் முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வுகள் என்ன?
இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 1911இல் 13 வீதமாக இருந்த மலையகத் தமிழர்கள் 2011இல் 4.8 வீதமாக குறைந்திருப்பதற்கான சமூக அரசியல் பின்னணி என்னவென ஆராய வழிவகுக்கப்படுமா? இதன் பாதிப்புகள் வெளிக்கொணரப் படுமா? (பெருந்தோட்ட ஆரம்பப் பாடசாலை கள் பிள்ளைகளின் வரவின்றி தொடர்ச்சியாக மூடப்படுகின்றன).
அரசு பெருந்தோட்டங்களை பொறுப்பேற்றுக் கொண்டதும் JEDB, SLSPC, எல்கடுவ பிளான்டேஷன் கம்பனி ஆகியவற்றிடமும் பெருந்தோட்டங்கள் நிறுவைக்குக் கொடுக்கப்பட்டன. இத்தோட்டங்களில் தொழில்புரிந்தோரின் EPF, ETF பணமான ரூபா 1888 மில்லியனுக்கும் அதிகமான தொகை மிக நீண்டகாலமாக மத்திய வங்கியில் வைப்பிலிடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இப்பணத்தின் உரிமையாளர்களான தொழிலாளர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு உத்தரவாதம் என்ன?
பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரை 1904இல் – 1320, 1980இல் – 668, 1992இல் – 506, 2013இல் – 427 என தோட்டங்கள் குறைந்துகொண்டு வருகின்றன. இதனால், இத்துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்படும் சமூக பாதிப்புகள் பற்றி ஆராயப்படுமா?
தொழிலாளர்களாக 1981இல் – 497,995 பேர், 1992இல் – 376,498 பேர், 2013இல் – 193,412 பேர் எனக் குறைந்துள்ளதோடு, தொழிலாளர்கள் சுயமாகவே பெருந்தோட்டங்களை விட்டு வெளியேறுவதற்கான பின்புலங்கள் திட்டமிட்டே உருவாக்கப்படுகின்றமைக்கான அரசியல் பொருளாதார காரணிகள் கண்டறியப்படவும், இவர்கள் தமது வாழ்விடங்களில் தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட திட்டங்கள் உள்ளனவா?
மேலும், 1995இல் 82,000 ஹெக்டேயராக இருந்த சிறு தோட்டங்க ள் 2012இல் 120,000 ஹெக்டேயராக அதிகரித்துள்ளதோடு, தேயிலை உற்பத்தியில் 70 வீதத்தினை இவர்களே மேற்கொள்கின்றனர். இன்று ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் சிறுதோட்ட உரிமையாளர்களாக உள்ளனர். இந்நிலைக்கு 200 ஆண்டுகால அனுபவம் வாய்ந்த மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களும் உயர்த்தப்படுவார்களா?
மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள மற்றும் நல விடயமாக 2 வருடத்திற்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்படுகிறது. அதற்காக போலிப் போராட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் இருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களை விடுவித்து நிலத்தோடு ஒட்டிய சுயபொருளாதாரத்தில் அபிவிருத்தியடைய வகுத்துள்ள திட்டம் என்ன?
பெருந்தோட்ட தொழிலாளர்களில் 32 வீதமானோர் ஏழ்மை நிலையில் உள்ளனர் என்றும், 11.4 வீதமானோர் தேசிய வறுமைக் கோட்டுக்குக் கீழ் நிலையில் வாழ்கின்றனர் என்றும் கடந்தகால புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்நிலை போக்க எடுக்கப்படவுள்ள உடனடி நடவடிக்கைகள் ஏதும் உண்டா?
பெருந்தோட்டங்கள் தோறும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் பாலர் பாடசாலைகளும் உருவாக்கப்படுகின்றன; வரவேற்றகத் தக்கது. இது தொழில் காரணங்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. இதை யாவரும் அறிவர். இந்நிலையில், வாழ்வின் இறுதிவரை உழைத்து வயதுமுதிர்ந்த நிலையில் ஆதரவற்று இருப்போருக்காக வயோதிப இல்லங்கள் உருவாக்கப்பட திட்டங்கள் உள்ளனவா?
பெருந்தோட்டக் கம்பனிகள் தமது பயன்பாட்டிலிருந்து வருடாந்தம் ஒதுக்கப்படும் காணிகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அதாவது, 2005 – 2011 காலப்பகுதியில் வருடாந்தம் 1,650 ஹெக்டேயர் காணிகள் பாவனையிலிருந்து நீக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. பெருந் தோட்டங்கள் தொடர்ச்சியாக நட்டமடைவதாகக் கூறுகின்ற இக்காலக்கட்டத்தில் காணி சட்டத்தின் கீழ் மீண்டும் அரசு பெருந்தோட்ட காணிகளைப் பொறுப்பேற்று பிரதேச செயலர்கள் ஊடாக மலையக மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்க புதிய திட்டங்கள் வகுக்கப்படுமா?
இறுதியாக மலையக மக்களும் இந்நாட்டில் வாழும் இன்னுமொரு தேசிய இனம் என்பதற்கான அனைத்து அடையாளங்களும், உரிமைகளும் கொண்டிருப்பவர்களாக விளங்குகின்றனர். இலங்கை வாழ் மலையக மக்கள் எனும் கௌரவ நிலையை அரசியல் சாசனம் ஊடாக உறுதிப்படுத்த முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?
மலையக அரசியல்வாதிகளே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உங்களுக்கான சலுகைகளையும் பாதுகாப்பையும் அதிகரித்துக் கொள்வீர்கள். பாதுகாப்புப் படைகளோடு உலாவருவீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்கள் இந்நாட்டின் கௌரவ பிரஜைகளாக வாழ அரசியல், பொருளாதார, சமூக பாதுகாப்பைப் பெற்றுக்கொடுக்கத் தீட்டப்படும் திட்டங்கள் மூலமே உங்களுடைய எதிர்காலம் நிலையானதாக அமையும் என்பதை கருத்திற்கொள்ளப்பட வேண்டும் என்பது சமூக அக்கறை கொண்ட அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
அருட்தந்தை மா. சத்திவேல்
நன்றி: மாற்றம்

Tuesday, August 11, 2015

மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய சம்பளம் இல்லை

1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் 6ம் திகதி முதல் 16ம் திகதிவரை பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்து வந்த மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய பணம் மாதாந்த வேதனத்தில் சேர்க்கப்படாததால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் 4ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்ததால், அப் பேச்சுவார்த்தையிலிருந்து இ.தொ.கா. வெளிநடப்பு செய்ததுடன் ஜூலை 6ம் திகதி முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களை மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபடுமாறு பணித்தது.

இதற்கமைவாக பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் 1,000 ரூபாய் சம்பளத்தை வலியுறுத்தி மெதுவாக பணிசெய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக் காலப் பகுதியில் வழமையாக எடுக்கும் கொழுந்தின் நிறைக்கு பதிலாக 3 கிலோ கிராம் கொழுந்தே எடுத்தனர். இது தோட்ட கம்பனிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதால் தோட்ட அதிகாரிகளும் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தொடங்கினர்.

இருதரப்பு போரட்டங்களும் நீடித்ததில் எடுக்கப்பட்ட கொழுந்துகள் பிரயோசனமற்ற நிலையில் குப்பைகளில் கொட்டப்பட்டன.

நிலைமையை கருத்தில் கொண்டு மீண்டும் தொழிற்சங்கங்களுக்கும் 23 கம்பனிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை கடந்த மாதம் 15ஆம் திகதி அமைச்சர் எஸ்.பி.நாவின்ன தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்றது.

இப் பேச்சுவார்த்தையில் மெதுவாக பணி செய்த காலத்துக்குரிய வேதனத்தையும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமென பிரதான தொழிற்சங்கமான இ.தொ.கா வலியுறுத்தியது.

இப் பேச்சுவார்த்தை எவ்வித முடிவுகளும் எட்டப்படாத நிலையில் தேர்தலுக்கு பின் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ´இம் மாத வேதனம் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதுள்ளதாகவும் மெதுவாக பணிசெய்த காலத்துக்குரிய வேதனத்தை தவிர்த்தே மாதாந்த சம்பளம் வழங்கப்பட்டுள்ளதால் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால், கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் தமது பிள்ளைகளை வழியனுப்புவதற்கு கூட பணம் வழங்க முடியாத நிலையில் அவல வாழ்வை எதிர்கொண்டுள்ளதாகவும் இம் மக்கள் தெரிவிக்கின்றனர்.  சில தோட்டங்களில் இன்று (10) மாதாந்த சம்பளம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு தோட்ட தொழிலாளிகளுக்கு இம்முறை சம்பளம் 40 வீதம் குறைவாக காணப்பட்டிருப்பதாகவும் அத்தோடு தோட்ட கம்பனியால் மேலதிகமாக முற்கொடுப்பனவாக 2000 ரூபாய் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தோட்ட கம்பனி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.