Thursday, October 8, 2015

மேலதிக பிரதேச சபைகள்

நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் மேல­திக பிர­தேச சபைகள் உரு­வாக்­க­ப்பட வேண்டும். நாட்டில் பிற பகு­தி­களில் ஆறா­யிரம் பேருக்கு ஒரு பிர­தேச சபை இருக்கும் போது நுவ­ரெலியா மாவட்­டத்தில் மாத்­திரம் இரண்டு இலட்சம் பேருக்கு ஒரு பிர­தேச சபை இருப்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இது மலை­யக தமி­ழ­ருக்கு கடந்த  இரு­பத்­தி­யெட்டு வரு­டங்­க­ளாக இழைக்­கப்­பட்­டுள்ள  ஜன­நா­யக மறுப்பு அநீதி. இது எனது அமைச்சு பொறுப்பில் உள்ள தேசிய சக­வாழ்வு விட­யத்­துக்கு முர­ணா­னது. எனவே இந்த  மிக நீண்ட கால அநீதி இப்­போ­தா­வது நிவர்த்தி செய்­யப்­பட வேண்டும் என தேசிய கலந்­து­ரை­யா­டல்கள் அமைச்­சரும், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி-­ஜ­ன­நா­யக மக்கள் முன்­னணி தலை­வ­ரு­மான மனோ கணேசன்  எம்.பி. உள்­ளூ­ராட்சி தேர்தல் எல்லை சீர்­தி­ருத்த அமைச்­ச­ரவை உப­கு­ழுவில் தெரி­வித்­துள்ளார்.  
 
இது தொடர்பில்  கூறி­ய­தா­வது, இந்த முக்­கி­ய­மான விவ­காரம் தொடர்பில் ஏற்­க­னவே ஒரு கருத்­தொ­ரு­மைப்­பாடு இருக்­கின்­றது. எனவே உள்­ளூ­ராட்சி தேர்தல் எல்லை சீர்­தி­ருத்த அமைச்­ச­ரவை உப­குழு, நுவ­ரெலியா மாவட்ட பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளையும், மாவட்ட செய­லாளர் மற்றும் அதி­கா­ரி­க­ளையும் அழைத்து கலந்­து­ரை­யாடி, புதிய பிர­தேச சபை­களை நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் உரு­வாக்க வேண்டும். இது எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்ள அடுத்த உள்­ளூ­ராட்சி தேர்­தல்­க­ளுக்கு முன்னர் நடை­பெற வேண்டும். எனது இந்த கோரிக்­கையை,  உள்­ளூ­ராட்சி மற்றும் மாகா­ண­ச­பைகள் அமைச்சர் பைசர் முஸ்­தபா மற்றும் உள்­ளூ­ராட்சி தேர்தல் எல்லை சீர்­தி­ருத்த அமைச்­ச­ரவை உப­குழு உறுப்­பி­னர்கள் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். இந்­நி­லையில் வெகு விரைவில் நமது அமைச்­ச­ரவை உப­கு­ழுவை சந்­திக்கும் முக­மாக, நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள், நுவரெ­லியா மாவட்ட செய­லாளர் மற்றும் அதி­கா­ரிகள் ஆகி­யோ­ருக்கு அழைப்பு அனுப்­பு­வ­தற்கு முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.
இந்த  மிக நீண்ட கால அநீதி நிவர்த்­திக்­கப்­பட வேண்டும் என்­பது தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் நிலைப்­பா­டாகும். இது தொடர்­பான முடிவு கூட்­ட­ணியின் கடந்த செயற்­குழு கூட்­டத்தில் எடுக்­கப்­பட்­டது. எனவே எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள அடுத்த உள்ளூராட்சி தேர்தல்களுக்கு முன்னர் செய்து முடிக்கப்பட வேண்டிய இந்த நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .

No comments: