கொத்மலை, இரம்பொடை வெதமுல்ல பிரிவு லிலிஸ்லேண்ட் தோட்டத்தில் ஏற்பட்ட
மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளை கட்டிக்கொடுக்க இன்று
மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் அடிக்கல் நாட்டி வைத்தார்.
1960 ஆண்டு காலப்பகுதியில் பெரிய மஸ்கெலியா பகுதியிலிருந்து தற்போது
மண்சரிவு ஏற்பட்டிருந்த கயிறுகட்டி தோட்டத்திற்கு குடியிருப்பாளர்களாக
வந்திருந்த பரம்பரையை சார்ந்த 7 பேரைக் காவுக்கொண்ட வெதமுல்ல லிலிஸ்லேண்ட்
என்று அழைக்கப்படும் கயிறுகட்டி தோட்டத்திற்கு 1948 ஆண்டில் வெள்ளையர் காலப்பகுதியின் பின்னர் நீர் மறைப்புக்காக பெரிய
மஸ்கெலியா எடம்ஸ்பீக் தோட்டம் உட்படுத்தப்படுகையில் அங்கிருந்து வெளியேறிய
மக்களே அனர்த்தம் ஏற்பட்ட வெதமுல்ல தோட்டத்தில் 1966 ஆண்டு குடியமர்ந்தனர்.
கே.கே.காளியப்பாபிள்ளை தோட்டம் என அழைக்கப்பட்ட வெதமுல்ல கயிறுகட்டி
தோட்டத்தில் பதியப்பட்ட பரம்பரையினரே அனர்த்தத்தில் உயிரிழந்தவர்கள் என்பது
குறிப்பிடதக்கது. அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 19 குடும்பங்களுக்கு வெதமுல்ல பெருந்தோட்ட பகுதியில் குடியிருப்புகள் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.
குறித்த ஒரு வீட்டிற்கு 12 இலட்சம் ரூபா செலவிடப்படுகின்றது. இந்த நிதி
உதவியை மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு
வழங்குகின்றது. 3 மாதத்திற்குள் இந்த வீடுகள் கட்டி முடிக்கப்படும் என
தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment