மலையக பெருந்தோட்டங்களின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் பெருந்தோட்ட சேவையாளார்கள் பெரும் பங்களிப்புச் செய்கின்றனர். இவர்களது உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என்பதிலும் சலுகைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக இருக்கின்றோம். அதற்கு பெருந்தோட்ட சேவையாளர் ஓரணியில் திரள்வது அவசியம் என பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் சட்டதரணியுமான கா.மாரிமுத்து மஸ்கெலியா கிளண்டில் தோட்டத்தில் நடைபெற்ற தோட்ட சேவையாளர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் பெருந்தோட்டங்களின் வளர்ச்சிக்கு, தோட்ட சேவையாளர்கள் மாத்திரமின்றி தோட்டத் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து செயற்படுகின்ற போது தான் தோட்டங்கள் செழிப்பாக இருப்பதற்கும் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும் ஜீவாதாரங்களிலும் வாழ்வாதாரங்களிலும் மலர்ச்சியை காண்பதற்கும் நல்ல அறிகுறிஅமையும் என்பதை நாம் குறிப்பிட்டாக வேண்டும். பெருந்தோட்ட சேவையாளர்கள் அரைநூற்றாண்டு வரலாற்றை கடந்துவிட்ட போதிலும் அவர்களது அடிப்படை தேவைகள் அவசியப்பாடுகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம். எனினும் அவர்களுடைய சேமநலன்களை கவனிக்க வேண்டியது அவசியமாகும். தோட்டங்களில் உற்பத்தி அதிகரிக்க வேண்டுமானால் இருசாராரும் அதாவது தொழிலாளர்களும் சேவையாளர்களும் புரிந்துணர்வோடு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அப்போதுதான் உற்பத்தி பெருக்கம் உயர்வடையும். தோட்டத்தில் வாழும் சகலரும் சந்தோஷமாகவும் சமாதானமாகவும் சுபிட்சத்துடன் வாழமுடியும். ஆகவே இதனைக் கருத்தில் கொண்டு பெருந்தோட்ட சேவையாளர்கள் ஓரணியின் கீழ் ஒன்றிணைந்து கைகோர்த்து செயற்படுவோர்களானால் எதிர்காலத்தில் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என சட்டத்தரணி கா.மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment