Thursday, October 22, 2015

தொடரும் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை


தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை புதன்கிழமை(21) தொழில் அமைச்சில் 21-10-2015 இல் தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன நடைபெறவிருந்த நிலையில், மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.  இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை செய்துகொள்ளப்படும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான கூட்டொப்பந்தப் பேச்சுவார்த்தை, மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்தது. 
 
சம்பள உயர்வு தொடர்பான முதற்கட்டப் பேச்சுவார்த்தை ஏப்ரல் 24ஆம் திகதியும் இரண்டாவது பேச்சுவார்த்தை மே 18ஆம் திகதியும், மூன்றாவது பேச்சுவார்த்தை ஜூன் 22ஆம் திகதியும், நான்காம ;கட்டப் பேச்சுவார்த்தை ஜூலை 2ஆம் திகதியும் 5ஆம் கட்டப் பேச்சுவார்த்தை ஜூலை 15ஆம்; திகதியும் ஆறாம் கட்டப் பேச்சுவார்த்தை செப்டெம்பர் 30ஆம் திகதியும் நடைபெற்ற போதிலும் எவ்வித இணக்கப்பாடுகளும் இன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவ்வாறே கடைசி பேச்சுவார்த்தையும் ஒத்திவைக்கப்பட்டது.
 
இது தொடர்பாக கருத்து தெரிவித்த முத்துசிவலிங்கம் முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்தம்சார் தொழிற்சங்கங்களுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகளின்போதும் எவ்விதத் தீர்மானமும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், தலைவர் முத்து சிவலிங்கம், சட்டத்தரணி கா.மாரிமுத்து ஆகியோரும் பெருந்தோட்டக் கூட்டமைப்பின் சார்பில் எஸ்.இராமநாதனும் இலங்கை தேசிய தொழிலாளர் சங்கம் மற்றும் 22 தோட்டக் கம்பனிகளும் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம்
 
சம்பள உயர்வு கோரி பொகவந்தலாவ கொட்டியாக்கலை தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 20-10-2015 அன்று  தொழிற்சாலைக்கு முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொகவந்தலாவ கொட்டியாகலை கீழ்ப்பிரிவு, மேற்பிரிவு, மத்தியப்பிரிவு ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த சுமார் தொழிலாளர்கள் இந்த  கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
 
தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளத்தை பெற்றுத் தருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்  தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் கூறியிருந்தனர். ஆனால், கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து சுமார் 7 மாதங்கள் கடந்துள்ள போதிலும் மலையக அரசியல்வாதிகள் மௌனம் சாதித்து வருவதாக தெரிவித்த தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்காவிட்டால் போராட்டம் தொடருமென கூறினர்

No comments: