இந்திய அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை கட்டிடத்தை கட்டங்கட்டமாக திறப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. முதல் கட்டமாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் பழைய கட்டடத்தில் உள்ள வெளிநோயாளர் பிரிவையும் கிளினிக் பிரிவையும் ஆகஸ்ட் மாதம் முதல் கிழமையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டடத்துக்கு மாற்றம் செய்து திறக்கவுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர்.அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
இந்தியா அரசாங்கத்தின் 500 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் 150 கட்டில்கள் உட்பட 6 சத்திர சிகிச்சை நிலையங்கள், 3 அவசர சிகிச்சை பிரிவு, மின்தூக்கி வசதிகள் உட்பட பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர். அன்வர் ஹம்தானி கருத்து தெரிவிக்கையில், 'தற்போது புதிய கட்டடத்தில் சகல வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறித்த வைத்தியசாலைக்கு இந்திய அரசாங்கத்தினால் புதிய இயந்திரங்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் முதல் கிழமையில் முதல் கட்டமாக வெளிநோயாளர் பிரிவும் கிளினிக் பிரிவும் திறந்து வைக்கப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார். இக்கட்டடத்தை திறக்குமாறு கோரி பல தடவைகள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment