பொகவந்தலாவ தோட்டக் கம்பனிக்கு உட்பட்ட நோர்வூட் ருக்கூட்ஸ் தோட்டத் தொழிலாளர்கள்அண்மையில் மேற்கொண்ட பணிப்பகிஷ்கரிப்பிற்கான தீர்வைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினை தொடர்பில் தோட்டக் கம்பனியின் அதிகாரிகளுடன்
கலந்துரையாடியுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளதாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் எதிர்நோக்கும் சில பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து நோர்வூட் ருக்கூட்ஸ் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 4 ஆம் திகதியில் இருந்து 23 ஆம் திகதி வரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைத்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், அவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட 18 நாட்களுக்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, ஓரிரு தினங்களில் இதற்கான தீர்வு வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் உறுதியளித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment