Sunday, January 11, 2009

மத்திய மாகாணசபை தேர்தல் அன்றும் இன்றும்

மத்திய மகாணசபைத் தேர்தல் - கண்டி மாவட்டத்தில் கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில்
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2,44,595 வாக்குகளை பெற்று 16 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். சிறுபான்மை மக்கள் சார்பாக எவரும் தெரிவாகவில்லை.
    எதிர்வரும் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் இ.தொ.கா சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் துரைமதியுகராஜா, மற்றும் கே. செல்லமுத்து ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
  • மலையக மக்கள் முன்னணி சார்பில் கே. வரதராஜ் என்பவர் போட்டியிடுகின்றார்.
  • ஸ்ரீ.ல.சு.க சார்பாக கே. கோவிந்தராஜ் போட்டியிடுகின்றார்.
  • 2004 ஐக்கிய தேசிய கட்சி 2,02,264 வாக்குகளை பெற்று 14 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். சிறுபான்மை சமூகத்தின் சார்பில் தெரிவாகியிருந்த ஐந்து பேரில் இ.தொ.கா வின் துரை மதியுகராஜா தெரிவாகியிருந்தார்.
    மாத்தளை மாவட்டம்- 2004ம் ஆண்டு தேர்தலில்
  • ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 92,510 வாக்குகளை பெற்று ஆறு பேர் தெரிவாகினர். தமிழ், முஸ்லீம் பிரதிநிதிகள் எவரும் தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    மத்திய மகாணத்தில் மொத்த ஆசனங்களின் எண்ணிக்கை -56 கண்டி மாவட்டம்- 30 உறுப்பினர்கள்மாத்தளை மாவட்டம்-10 உறுப்பினர்கள்நுவரெலியா மாவட்டம்-16 உறுப்பினர்கள் வீரகேசரியில் - பானா. தங்கம்

மாத்தளை வாழ் தமிழ் மக்கள் சிந்தனைக்கு….

மாத்தளை மாவட்டத்தில் ஏறத்தாழ 35,000 தமிழர் வாக்குகள் இருந்த போதும் தமிழர் பிரதிநிதித்துவம் தெரிவு செய்யப்படவில்லை. 1994ம் ஆண்டில் ஒருவரும், 2000ம் ஆண்டில் ஒருவரும் மத்திய மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

எதிர்வரும் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் (வெற்றிலை சின்னம்) இ.தொ.கா சார்பாக எம். சிவஞானம், ஐ.தே.க சார்பாக (யானை சின்னம்) எம். சுதாகரனும் போட்டியிடுகின்றனர். இதேவேளை மாத்தளை எல்கடுவ தோட்டத்தைச் சேர்ந்த சண்முகம் ஸ்ரீனிவாஸ் தலைமையில் 13 தமிழ் வேட்பாளர்களை கொண்ட சுயேட்சைக் குழு களத்தில் இறங்கியுள்ளது.

15 - 16 ஆயிரம் விருப்பு வாக்குகளே மாகாணசபைக்கு தெரிவாவதற்கு போதுமானது. தமிழர்களின் வாக்குகளை சிதறடிப்பதற்கு மறைமுக முயற்சிகளும் இடம் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய மாத்தளை வாழ் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

No comments: