Sunday, February 7, 2010

nghJeyd; fUjp midtUk; xd;wpiztJ fhyj;jpd; NjitahFk;

ele;J Kbe;j [dhjpgjpj; Nju;jypy; MSk; If;fpa kf;fs; Rje;jpu Kd;dzp Ntl;ghsu; [dhjpgjp k`pe;j uh[gf;\ tuyhW fhzhj ngUk;ghd;ik thf;Ffshy; ntw;wp ngw;Ws;shu;. ngUk;ghd;ik rpq;fs thf;fhsu;fspd; ghupa gq;Fk; rpWghd;ik thf;fhsu;fshd tl fpof;F jkpo;> K];ypk; kw;Wk; kiyaf thf;fhsu;fspd; ngUk;gq;Fk; ,tupd; ntw;wpf;F NgUjtpahf mike;jpUe;jJ.

,jid %bkiwf;f rpy gpw;Nghf;Fr; rf;jpfs; Kidg;NghL nray;gLtij mtjhdpf;f $bajhf cs;sJ. mj;Jld; ghuhSkd;wj;jpd; MAs; epiwTngWk; jWthapy; cs;sijAk; ftdj;jpy; nfhs;Sjy; mtrpakhFk;.

,t;thwhd ntw;wp Kfj;JlNd ghuhSkd;w Nju;jiy re;jpf;f If;fpa kf;fs; Rje;jpu Kd;dzp jahuhfp tUfpd;wJ. kf;fs; nry;thf;Fs;s re;ju;g;gj;jpy; ghuhSkd;w Nju;jiy re;jpj;jhy; ngUk;ghd;ikahd Mrdq;fis ifg;gw;w KbAk; vd;w ek;gpf;ifapUf;fpwJ. ,e;epiyapy; kiyaf thf;fhsu;fs; jq;fspd; gpujpepjpj;Jtj;ij epiyepWj;jpf;nfhs;s rpe;jpf;f Ntz;ba jUzk; ,JthFk;.

ele;J Kbe;j [dhjpgjp Nju;jypd; NghJ kiyafj;jpy; ngUk;ghd;ik thf;fhsu;fs; ele;J nfhz;l Kiw tpj;jpahrkhf mike;jpUe;jJ. ,e;epiy ePbf;Fkhdhy; jq;fspd; gpujpepjpj;Jtj;ij ,og;gNjhL jq;fspd; mbg;gil Njitfisf; $l epiwNtw;wpf;nfhs;s Kbahj epiyf;F js;sg;gLthu;fs;.

Njrpa murpaypy; mjpfhuj;Jf;fhd Nghl;bfs; Kd; vg;NghJkpy;yhj tifapy; cf;fpukile;J tUk; mNjNtisapy; gpuhe;jpa uPjpahfTk; jq;fspd; ,Ug;ig jf;f itj;Jf;nfhs;s mjPj gpuaj;jdq;fs; Nkw;nfhs;sg;gl;L tUtijAk; fhzf; $bajhf ,Uf;fpd;wJ. mNj Nghd;wnjhU epiyikjhd; kiyafj;jpYk;> murpay;> njhopw;rq;f Nghl;bfs; $u;ikaile;J tUtNjhL td;Kiwf; fyhrhuKk; jiyJ}f;Ffpd;w Nghf;F fhzg;gLfpd;wJ.

,j;jifa R+o;epiyia jkf;F rhjfkhfg; gad;gLj;jpf;nfhs;s Kaw;rpf;Fk; rpy gpw;Nghf;F re;ju;g;gthj rf;jpfs; ghuhSkd;w nghJj; Nju;jiy ,yf;F itj;J kiyafj;jpy; gpuNtrpf;f Kaw;rp nra;fpd;wd. ,t;thW tUNthUf;F ve;j murpay; r%f gpd;dzpAk; ,y;yhJ tpsk;gu mwpKfj;Jld; murpay; gpuNtrk; nra;a Kidfpd;wd. ,tu;fs; ahu;? ,tu;fspd; gpd; Gynkd;d? vjw;fhf murpay; gpu Ntrk;? Nghd;w Nfs;tpfs; kiyaf kf;fs; kj;jpapy; vohky; ,y;iy.

,tu;fspd; grg;G> ghrhq;F thu;j;ij [hyq;fspy; kaq;fp jkJ kf;fs; jq;fspd; vjpu;fhy murpaiy njhiyj;J murpay; mehijfshf khwptplf;$lhJ. vdNt ,d;iwa epiyapy; ajhu;j;j murpaiy Gupe;Jnfhz;L mjw;F ,irthf ehKk; ekJ murpay; fha; efu;j;jiy Kd;itf;f Ntz;Lk;.

epiwNtw;W mjpfhuKila [dhjpgjp ,d;Dk; 7 Mz;Lfs; mjpfhuj;jpy; ,Uf;f Nghfpd;whu;. mtiu mjpfhuj;jpy; ,Ue;J mfw;w ,d;iwa murpay; ahg;gpd;gb vtuhYk; KbahJ. ,tupd; Ml;rpapd; fPo; ehKk; ekJ gpujpepjpj;Jtj;ij cWjpnra;tjd; Clhf ekJ Njitfis epiwNtw;wpf;nfhs;s KbAk;. ,J Nghd;wnjhU neUf;fbahd fhyfl;lk; 1999 Mk; Mz;il ghu;f;fyhk;. mg;NghJ ekJ kf;fspd; ed;ik fUjp kiwe;j mikr;rUk; ,. njh. fh. jiytUkhd nrskpa %u;j;jp njhz;lkhd; kiyafj;jpd; kf;fspd; eyd; rhu;e;J nray;gLk; murpay; fl;rpfs;> njhopw;rq;fq;fs;> mur rhu;gw;w mikg;Gf;fs;> rptpy; r%f mikg;Gfs; kw;Wk; Gj;jp[Ptpfis cs;slf;fpa ,e;jpa tk;rhtsp kf;fs; Nguzp vd;W ekf;fhf $l;Lj; jiyikapy; Xu; mikg;G cUthf;fg;gl;lJ. xU khfhz rigj; Nju;jiyAk; mf;fhy fl;lj;jpy; re;jpj;Njhk;. mg;NghJ fzprkhd Mrdq;fisAk; ngwf;$bajhf ,Ue;jJ. mNj Nghd;wnjhU epiyikjhd; ,g;NghJ Njhd;wpAs;sJ.

vdNt murhq;fj;Jld; ,ize;Js;s murhq;fj;Jld; Kuz;glhky; ,ize;J nray;gLk; ,af;fq;fs; ahTk; xU nghJ Ntiyj;jpl;lj;jpd; fPo; ,iza Ntz;Lk;. jkJ nrhe;j tpUg;G ntWg;GfSf;F mg;ghy; r%f eyd; rhu;e;j tplaq;fSf;F Kd;Dupik toq;fp gpsTgl;bUf;Fk; ehk; midtUk; Xu; $l;likg;ghf ,ize;J tpl;Lf;nfhLg;Gld; nray;gl;lhy; vkJ gpujpepjpj;Jtj;ij fhf;f KbAk;. ,y;iyNay; MSf;F nfhQ;r thf;Ffis gq;F Nghl;Lf;nfhz;L ekJ gpujpepjpj;Jtj;ij ,of;f NeupLk;.

,d;iwa R+o;epiyapy; muRld; ,Ug;gtu;fSk; mjd; Ner rf;jpfSk; Kjw;fl;lkhf nghJ Ntiyj;jpl;lj;jpd; fPo; xd;wpiza Ntz;Lk;. mjd; gpd; gue;Jgl;l kf;fs; ,af;fq;fis xd;wpizj;J $l;likg;nghd;iw cUthf;f KbAk;. mg;NghJjhd; ,d;W eilngWk; td;Kiw murpay; fyhrhuj;ij khw;w KbAk;. gopthq;Fk; murpaiy ,y;yhky; xopj;J fdthd; murpaiyAk; ey;yhl;rpiaAk; Vw;gLj;j KbAk;. ,y;iyNay; murpay; cupik ,oe;J mtjpg;gl NeupLk;. xd;Wgl;lhy; cz;L tho;T vd;w KJnkhopf;Nfw;g nrhe;j murpay; eyd;fis xJf;fp nghJeyd; fUjp midtUk; xd;wpiztJ fhyj;jpd; NjitahFk;.

gp. Nkhfd; Rg;gpukzpak;

`l;ld;

மலையக பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வது எப்படி?

‘நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ’ என்ற பாரதியின் வரிகள் தான் மலையக அரசியல் தொழிற்சங்க நிலைப்பாடுகளை நினைக்கும் போது ஞாபகத்திற்கு வருகிறது.

போராடி பெற்றுக் கொண்ட வாக்குரிமையை கூறுபோட்டு பகிர்ந்து கொள்கின்ற பரிதாப நிலையையும், இருக்கும் பிரதிநிதித்துவங்களையும் இழந்து விடுகின்ற நிலையை எண்ணும் போது இந்த சரிவிலிருந்து விடுபடுவதற்கு உடனடியான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தன் அவசியத்தை உணர்த்துகிறது.
நூற்றாண்டு காலமாக உழைப்பை மட்டுமே ஒப்புவித்த மலையக தொழிலாளர் சமூகம் இலங்கை பிரித்தானியரிடமிருந்து பெற்ற உரிமை தமக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் 1948 ஆம் ஆண்டின் பிரஜாவுரிமைச் சட்டமும் 1949ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தேர்தல் சட்டமும் இவர்களுக்கு பிரஜாவுரிமையும், வாக்குரிமை மறுப்பையுமே தந்த வரலாற்றை எம்மால் மறந்துவிட முடியாது.

அண்மைக்கால இந்திய வம்சாவளியினர் என்ற முத்திரைக் குத்தலோடு நாடற்றவர்களாக இருந்த மலையகத்தில் காணப்பட்ட ஒற்றுமையின் வெளிப்பாடு, உரிமைப் போராட்டத்தின் உத்வேகம், தொழிற்சங்கத்தின் எழுச்சிப்போராட்டம், போராட்டச் சிந்தனைகள் அனைத்தும் மலையகத்தில் வாக்குரிமை கிடைத்த பின்னர் இந்த சமூகம் வந்த வழியை மறந்து நிற்பது வேதனை தரும் விடயமாகும்.

இன்று நாம் பெற்றுள்ள வாக்குரிமைக்கு பின்னால் பெரியதொரு பின்னணியிருப்பது அதற்காக இயற்றப்பட்ட சட்டங்களின் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.

(1) 1949இல் 3ஆம் இலக்கத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய பாகிஸ்தானின் வதிவிட (பிராஜவுரிமை) சட்டம்
(2) 1964 ஆம் ஆண்டு கொண்டுவரப் பட்ட (03.10.1964) ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தம்.
(3) 1974 ஆம் ஆண்டு ஜனவரி 27இல் கொண்டுவரப்பட்ட ஸ்ரீமா - இந்திரா ஒப்பந்தம்.
(4) 1987 ஆம் ஆண்டு இலக்கம் 5இல் கொண்டுவரப்பட்ட நாடற்றவர் களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் சட்டம்.
(5) 1988 ஆம் ஆண்டின் இல. 39 இன் படி கொண்டுவரப்பட்ட நாடற்றவர் களுக்கு பிரஜாவுரி¨மை வழங்கும் (விசேட சரத்துக்கள்) சட்டம்.
(6) இல. 35 இன் படி 2008 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இலங்கை வம்சாவளியினருக்கு பிரஜாவுரிமை வழங்கும் சட்டம்

என இந்தச் சட்டங்களின் பின்னணியில் எத்தனை போராட்டங்கள் இடம்பெற்றன என்பதை காலம்தான் பதில் சொல்லும். இத்தனை சட்டங்கள் வந்து நாம் வாக்களிக்கின்ற தகைமை பெற்றாலும் அடிப்படையில் இன்னும் இரண்டாந்தர பிரஜைகளாகவே கணிக்கப்படும் நிலைதான் காணப்படுகிறது.

ஆங்கிலேயர் காலத்திலும் அதற்குப் பின்னரும் 1930 களில் இருந்து இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்து வரும் தொழிலாளர்கள் தேசிய அரசியலமைப்பில் பொருத்தமான பிரதிநிதித்துவத்தை இன்னும் பெற்றுக்கொள்ளா திருக்கின்றனர் என்றே கூறவேண்டும்.

குறிப்பாக 1931இல் இடம்பெற்ற முதல் கிராம சபைத் தேர்தலில் மலையக சமூகம் அனுமதிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டமை ஒரு வரலாற்று நிகழ்வாகும். சுதந்திரத்திற்கு பின்னர் நடந்த முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் 95 பேர் இருந்த இடத்தில் 08 பிரதிநிதிகள் மட்டுமே இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டனர். வாக்குரிமை பறிக்கப்பட்டதன் பின்னர் 1952 இலிருந்து 1977 வரை பிரதிநிதிகளை தெரிவு செய்யும் உரிமை எமக்கில்லாமல் போனது.

1977இற்குப் பின்னர் படிப்படியாக தேசிய அரசியலுக்குள் பிரவேசிக்க முடிந்ததெனினும் இந்திய வம்சாவளி மக்களின் சனத்தொகைக்கு ஏற்ப பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியாமல் போய்விட்டது. மலையக மக்கள் முன்னணி கூறியுள்ளது போல 16 பிரதிநிதிகள் இருக்க வேண்டிய இடத்தில் அதில் பத்தாக குறைந்து அதிலும் ஒருவர் வேறொரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு நிலைமையைத்தான் மலையக அரசியல் நிலைப்பாட்டில் காண்கின்றோம்.

மலையகத்தை பொறுத்தவரையின் அரசியலும் தொழிற் சங்கமும் இணைந்தே காணப்படுவதால் இலக்கை எட்டமுடியாமல் இருப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது. அரசியல் தொழிற்சங்கப் போட்டா போட்டிகள் காரணமாக அறுபதுக்கும் மேற்பட்ட அரசியல் தொழிற்சங்கங்களையும் பத்துக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளையும் வைத்துக்கொண்டு சிதறுண்டு தேசிய கட்சிகளிலே இன்னமும் தங்கியிருக்க வேண்டிய பரிதாப நிலை தொடர்கிறது.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பெற்றுக்கொண்ட உரிமையை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு மலையக இந்திய வம்சாவளி மக்கள் ஒவ்வொருவருக்கும் உரித்துடையதாக இருக்கிறது. ஆகவே மலையக பிரதிநிதிகள் முழுமையாக தேசியக் கட்சிகளில் பிணைத்துக் கொண்டோ அல்லது தனித்தனி குழுமங்களாக பிரிந்து நின்றோ போட்டியிட வேண்டும் என்பதற்காக தனிக் குழுக்களாக செயற்படுவார்களேயானால் இருக்கும் தமிழ் பிரதிநிதித்துவங்களையும் எதிர்காலங்களில் இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
ஒன்பது தொகுதிகளை கொண்டிருக்கும் பதுளை மாவட்டத்தில் 2008 ஆம் ஆண்டில் வாக்காளர் பதிவின் அடிப்படையில் 5,74,814 வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களில் கணிசமான தொகையினர் இந்திய வம்சாவளியினராவர். மொத்த எண்ணிக்கையில் 16.44 வீதத்தினர் தேசிய அடையாள அட்டையைக் கூட பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றனர். பதுளை மாவட்ட வாக்குகளை தொகுதிவாரியாக பார்க்கும் போது மஹியங்கனை 85,562, வியலுவ 48,231, பசறை 60,002, பதுளை 51,468, ஹாலி-எல 63,124, ஊவா பரணகம 59,472, வெளிமடை 68,937, பண்டாரவளை 77,312, அப்புத்தளை 60,706 ஆகும். இந்நிலையில் பெருந்தோட்ட வாக்காளர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு பயன்படுத்தப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதனூடே பசறை, நமுனுகுல பகுதிக்கு அண்மித்த தென்னக்கும்புர, கந்தவேரன போன்ற தோட்டங்கள் மொனராகலை மாவட்டத்திற்குள் உள்ளடங்குவதும் குறிப்பிடத்தக்கது. நுவரெலியா மாவட்டத்தில் 4,57,137 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருப்பதோடு இவர்களிலும் பெரும்பான்மையினர் இந்திய வம்சாவளி தமிழ் மக்களே. நுவரெலியா மாவட்ட தேர்தல் வாக்காளர் பதிவின் அடிப்படையில் நுவரெலியா மஸ்கெலியா 2,47,069, கொத்மலை 70,730, ஹங்குராங்கெத்த 65,969, வலப்பனை 73,369 என குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகியன ஆளுங் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மலையக மக்கள் முன்னணியின் இன்னொரு பிரிவினர் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட தயாராகி வருவதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகியவற்றுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பன ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலின் போது இ. தொ. காவிலிருந்து வெளியேறிய எம். சச்சிதானந்தன் ஐக்கிய தேசியக் கட்சியிலும், சுகாதார பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆளுங்கட்சியிலும் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. நுவரெலியா மாவட்டத்திலும் இவ்வாறான நிலையே காணப்படுகின் றது. எது எப்படியிருப்பினும் அகலமாக காலை வைக்க நினைக்காமல் ஆழமாக வைத்தால் மட்டுமே மலையகம் இருக்கும் பிரதிநிதித்துவத்தையாவது பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதே மலையக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

பசறையூர் க. வேலாயுதம்

Saturday, February 6, 2010


தோழர் இளங்கோ மறைவு

கடந்து வந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும் இன சமூகங்களின் ஐக்கியத்திற்காகவும் சமூக சமத்துவத்திற்காகவும் தன்னை அர்ப்பணித்தவர் தோழர் இளங்கோ

சாவக்கச்சேரி நுணாவிலை பிறப்பிடமாகக் கொண்ட தோழர் இளங்கோ (கணபதிபிள்ளை ரவீந்திரன்) தனது சமூகப் பணிகளுக்காக தனது பல்கலைகழக கல்வியைகூட துறந்தவர். யாழ் பல்கலைகழகத்தில் வர்த்தகத்துறை மாணவர் அவர்.

மக்களை விழிப்படையச் செய்வதற்கான கலை வடிவங்களின் ஊடான பிரச்சாரங்களை தனது சக தோழர்களுடன் சேர்ந்து முன்னெடுத்தவர். வீதி நாடகங்களை நடாத்தியவர். தனது நெஞ்சுக்கு நீதியாக அவர் வாழ்ந்தவர். எமது சமூகத்தின் சராசரி மனிதர்கள் போல் உலகத்தின் ஏதோவொரு மூலைக்குச் சென்று அவர் மிக சௌகரியமாக வாழ்ந்திருக்க முடியும்.

பல்வேறு உடல் உபாதைகள் மத்தியில் துன்ப துயரங்களின் மத்தியில் அவர் நாட்டில் சக தோழர்களுடன் தோழராக வாழ்ந்தவர். 1986 புலிகள் இயக்கம் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை தொடுத்த போது தோழர் இளங்கோவும் புலிகளால் கைது செய்யப்பட்டார். அவர் அனுபவித்த சித்திரவதைகளும், அவர் காண நேர்ந்த கொடுமைகளும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.

அந்த அனுபவங்களை பல தடவை தனது சக தோழர்களுடன் பகிர்ந்திருக்கிறார்.

மரணத்தின் விளிம்பிற்குச் சென்று மீண்டவர் அவர்.

அவரது தோழர்கள் நண்பர்கள் மத்தியில் தோழர் இளங்கோ மிகவும் இனிமையான, பண்புள்ள மனிதராகவே காணப்பட்டார். தோழர் இளங்கோ இருக்குமிடம் எப்போதும் கலகலப்பானதாக இருக்கும். அவருடைய சமூகப் பார்வையில் ஆழமான பொருள் பொதிந்த இயல்பு காணப்படும். ஒரு வசீகரமான மனிதர் அவர். எப்போதும் அவரை சுற்றி ஒரு கூட்டம் இருந்து கொண்டிருக்கும்.

ஜனநாயக இடைவெளியை உருவாக்குவது பற்றியும் மக்களின் சுதந்திரமான வாழ்வு பற்றியும் அக்கறை கொண்டிருந்தார்.

அவருடைய மனைவியார் சிவசக்தி அவர்களும் அவருடைய சமூக அரசியல் வாழ்வில் இணைந்திருந்தார். தனது சமூக அரசியல் அக்கறைகளுக்கு மத்தியில் தமது பி;ள்ளைகளின் கல்வி மற்றும் இதர செயற்பாடுகளிலும் அவர் அக்கறை செலுத்தினார்.

எப்போதும் சோம்பிக் கிடப்பவரல்ல அவர். உழைப்பின் மகத்துவத்தை அவர் உணர்ந்தவர். சங்கீதம், பாடல்கள், இசை பற்றிய ஞானம் அவருக்கு இருந்தது. இவற்றை இவற்றை நேர்த்தியாக தொகுப்பதிலும் அவர் ஆற்றல் பெற்றிருந்தார்.

அவரது தந்தையார் கணபதிப்பிள்ளை ஒரு கவிஞர். கலைஞர்,அவருடைய இரு சகோதரர்கள் சமூக விடுதலை இயக்கத்தில் பங்குபற்றியவர்கள்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாணசபையில் அவர் அங்கத்தவராக இருந்தவர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் பிரச்சார பணிகளில் முக்கிய பங்காற்றியவர்.

இடர்மிகுந்த காலங்களில் எல்லாம் அவர் எம்மோடு நின்றிருந்தார். கட்சியின் திசைவழி அன்றாட அரசியல் நிகழ்வுகள் நீண்டகால இலக்குகள் தொடர்பான கூர்மையான அவதானமும் கரிசனையும் அவருக்கிருந்தது.

உள்ளுரிலும், சர்வதேச அளவிலும் வாழும் தோழர்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவர். தோழமைக்கும், நட்புக்கும் இலக்கணமாக திகழ்ந்தவர்.

51 வயது என்பது ஒரு குறுகியகால பகுதியே. அடிக்கடி நோய்வாய்படுதல், பல்வேறு உடல் அசௌகரியங்களுக்கு மத்தியில் வன்னி முகாம்களில் வாழ்ந்த மக்கள் மீள் குடியேற்றப்படும் இடங்களுக்கு சக தோழர்களுடன் சென்று அவர்களை பார்வையிட்டவர். தோழர்களின் இன்ப துன்பங்களில் பங்குபற்றினார். கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் கூட தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். எப்போதும் அவர் சோர்வடைந்ததில்லை. யாழ், மட்டுநகர், வன்னி , திருமலை தமிழகம் என பல இடங்களிலும் மனிதர்களுடன் உறவாடிய அனுபவம் அவருக்கு இருந்தது. எப்போதும் தனக்கென பாதுகாப்பான வாழ்க்கையொன்றை தேடிக்கொண்டவரல்ல அவர். நெருக்கடிகள் மத்தியில் மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளில் அவர் பெரும்பாலான காலம் வாழ்ந்திருக்கிறார்.

ஒரு மனிதன் வாழும் போது எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர். எமது சமூகத்தில் நிலவிய அராஜகம் அவரை பெரும் கொந்தளிப்பும் புயலுமாக இருந்த சூழ்நிலையில் வாழ நிர்ப்பந்தித்தது. அவர் மெலிதானதும், மனிதாபிமான ஈரமும் ஜனநாயக உணர்வும் கொண்ட மனிதராகத்தான் வாழ்ந்தார். பெப்ரவரி 06ம் திகதி அதிகாலை பொழுதில் அவர் நிரந்தரமாக உறங்கிவிட்ட செய்தி எம்மை வந்தடைந்தது.

தோழர் இளங்கோ அவர்களுக்கு எம் இதய அஞ்சலிகள்


பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

Monday, February 1, 2010


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலையகத்தில் பெருவெற்றி பெற்றுள்ளார் - ஆறுமுகன் தொண்டமான்


இலங்கை வாழ் ஒட்டுமொத்த தமிழர்களும், வடகிழக்கு மக்களும் எதிரணி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவினை ஆதரிக்க மலையகத்தின் பலம் பெரும் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மட்டும் குறிப்பாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் வெற்றி பெறுவார் என உறுதியாக கூறிவந்தார்.

இந்நிலையில் இவரது கூற்றினை ஏற்றுக் கொள்ளாத அக்கட்சி உறுப்பினர்கள் சிலர் அக்கட்சியை விட்டு விலகி சென்ற போதிலும், அமைச்சர் தொண்டமான் அந்த உறுதியுடன் செயற்பட்டார். இவரது ஆதரவுடன் ஏற்கனவே இவர் கூறியது போல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 18 இலட்சம் மேலதிக வாக்குளால் வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் நேர்காணல்



கேள்வி: நீங்கள் ஏற்கனவே கூறியதுபோல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றுவிட்டாரே?

பதில்: உண்மைதான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலையக மக்களுக்குமட்டுமல்ல நாட்டிலுள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் பல்வேறு அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுள்ளார்.

அதனால் அவரது வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. இது தெரியாத அரசியல் ஞானமற்றவர்கள்தான்,

ஜனாதிபதி தோல்வி அடைவார் என கூறி, அவருக்கெதிராக செயற்பட்டு தங்களையும் இழந்து வருகின்றனர். ஜனாதிபதியின் வெற்றிக்கு மலையக மக்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.


கேள்வி: நுவரெலியா மாவட்டம் எதிரணி வசமானதே?

பதில்: நுவரெலியா மாவட்டத்தை மட்டும் கவனத்தின் கொள்ளக் கூடாது. மலையக மக்கள் பரந்து வாழும் பகுதிகளிலும் ஜனாதிபதி அமோக வெற்றி பெற்றுள்ளார். மலையக மக்களின் ஆதரவு இல்லாமல் அவரால் அமோக வெற்றி பெற்றிருக் முடியாது.

2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், இ.தொ.கா. எதிர்க்கட்சி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவினை ஆதரித்தது. இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மிடையிலான வாக்கு வித்தியாசம் ஒரு இலட்சத்திற்கு மேலதிகமாக காணப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகவும் குறைந்த எண்ணிக்கையான வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். ஆனால் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ஒரு இலட்சத்து 51 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளதுடன், எதிரணி வேட்பாளருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான வாக்கு வித்தியாசம் வெறும் 29 ஆயிரமாகும். இதனை ஒப்பிடுகையில் நுவரெலியா மாவட்டத்தில் ஜனாதிபதி அமோக வெற்றி பெற்றுள்ளார் என்றே கூறவேண்டும்.

அதுமட்டுமல்ல மலையக மக்கள் உள்ள சகல மாவட்டங்களிலும் இம்முறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூடுதலான வாக்குகளை பெற்றுள்ளார். இதற்கு இ.தொ.கா பெரும் பங்களிப்புச் செய்துள்ளது.


கேள்வி: அனைத்து தமிழ் பிரிவினரும், எதிரணி வேட்பாளரை ஆதரிக்க நீங்கள் மட்டும் எவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை ஆதரித்தீர்கள்?

பதில்: என்ன சொல்கியர்கள்? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலையக மக்களை ஏனைய சமூகங்களுடன் சமமாக மதித்து அவர்களுக்கு கடந்த 4 வருடங்களாக பல்வேறு அபிவிருத்திப் பணிகள் அரச மற்றும் ஆசிரியர் நியமனங்களை வழங்கியுள்ளார். இதற்கு நன்றி செலுத்தப்படவேண்டும் என்பதற்காகவே நாம் அவருக்கு ஆதரவு அளித்தோம். எமது வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மலையக மக்கள் நன்றியுணர்வுடன் வாக்களித்துள்ளனர். அத்துடன் அவர்களின் பாதுகாப்பினையும் கடந்த காலங்களில் ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளதுடன் விசாரணையின்றி சிறையில் வாடிய மலையக இளைஞர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர் இதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டாமா?


கேள்வி: இ.தொ.கா தேசிய அமைப்பாளர் ஆர். யோகராஜன் உள்ளிட்ட பலர் அக்கட்சியிலிருந்து விலகிவிட்டனரே? அவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வீர்களா?

பதில்: 3 பேர் கட்சியிலிருந்து விலகிவிட்டதற்காக எமது கட்சி பலமிழக்கவில்லை. பலம் கூடியுள்ளது. அவர்கள் தனிப்பட்ட சுயலாபத்திற்காக சென்றுள்ளனர் அவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள நாம் விரும்பவில்லை. அதனை எமது தொண்டர்களும் விரும்பவில்லை. அரசியல் ஞான மற்றவர்களால் எமது சமூகத்திற்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை.


கேள்வி: கட்சியைவிட்டு விலகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரி. வி. சென்னன், ஏ. எம். டி. இராஜன் போன்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைந்துகொண்டுள்ளனரே?

பதில்: இவர்கள் ஐயா (அமரர் தொண்டமான்) காலத்திலிருந்து கட்சியை கட்டி காத்ததுடன், கட்சிக்காக பாடுபட்டவர்கள். தற்போது விலகியவர்கள் கட்சியினை பயன்படுத்தி தம்மை வளப்படுத்திக் கொண்டவர்கள். இவர்களால் மலையக சமூகத்திற்கு எவ்வித நன்மையும் ஏற்பட போவதில்லை.

இந்த விமர்சனங்களினால் அவர்களே அவர்களுக்கு குழிதோண்டிக் கொள்கின்றனர் என்பதனை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.


கேள்வி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியின் பின்னர் அவரை போய் சந்தித்தீர்களா? மலையகத்தின் எதிர்கால திட்டம் குறித்து அவருடன் கலந்துரையாடினீர்களா?

பதில்: சந்தித்தேன், வாழ்த்துக் கூறினேன். மலையக மக்களின் அபிவிருத்திற்கு நாம் 10 ஆண்டு திட்டம் +றிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை அவர் ஏற்கனவே ஏற்றுக்கொண்டு, பல பதவிகளையும் நிதிகளையும் வழங்கினார். இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உறுதியளித்துள்ளார்.

இதன் காரணமாகவே தான் நாம் நிபந்தனையற்ற ஆதரவினை இத்தேர்தலில் ஜனாதிபதிக்கு வழங்கினோம். மலையக சமூகத்திற்கு என்னென்ன தேவை என்பதனை நாம் திட்டமிட்டு காலத்திற்கு ஏற்றால் போல் செயற்படுவோம். எங்களை விமர்சனம் செய்பவர்களுக்கும் நாம் உதவி செய்துள்ளோம். அத்துடன், மலையக மக்கள் இரண்டாந்தர பிரஜையல்ல என்பதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு ஏனைய சமூகத்துடன் சமமான முறையில் அவர்களின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றார்.

அத்துடன் இ.தொ.கா. தனிப்பட்ட எவருக்கும் எதனையும் செய்ய விழையாது. மலையக சமூகத்திற்கு தான் செய்யும் இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது உண்மையாகும்.


கேள்வி: எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்டியிடுவீர்களா? அல்லது வேறு கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுவீர்களா?

பதில்: பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானவுடன், இது குறித்து எமது கட்சி கூடி தீர்மானம் மேற்கொள்ளும்.


கேள்வி: சபரகமுவ மாகாண தமிழ் கல்விப் பணிப்பாளர்கள் பலர் பல்வேறு காரணங்களினால் பதவி இழந்துள்ளனர். இந்நிலையில் இம்மாகாண தமிழ் கல்வி அபிவிருத்தி கேள்விக்குறியாகும் நிலை காணப்படுகின்றது? இது குறித்து,

பதில்: இவ்வாறானதொரு நிலை முதற்தடவையாக எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ணுர்கள், அங்குள்ள மக்கள் தமது தேவைகுறித்து என்னிடம், தொடர்பு கொள்ளும் பொருட்டு இது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.

எமது சேவை மலையக மக்களுக்கு எப்போதும் கிடைக்கும்.


கேள்வி: இறுதியாக மலையக மக்களுக்கு என்ன கூற விரும்புகியர்கள்?

பதில்: மலையக மக்கள் ஒற்றுமையாக எம்முடன் இணைந்து தமது தேவைகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை பெற்றுக் கொள்ள முடியும். வீண், விமர்சனங்கள் செய்து மக்களையும் ஏமாற்றாமல், தம்மையும் ஏமாற்றிக்கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். விமர்சனம் செய்வதனால் இ.தொ.கா.விற்கோ அதன் தலைமைக்கோ எவ்வித பாதிப்புமில்லை. விமர்சனம் செய்பவர்களுக்கு தான் என்பதனை புரிந்துக்கொள்ள வேண்டும்.

நேர்கண்டவர்: எஸ். ஆர். இரவீந்திரன்

நன்றி – தினகரன் வாரமஞ்சரி

Friday, January 8, 2010

அமரர் பெ. சந்திரசேகரனின் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு எஸ்.அருள்சாமி

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான அமரர் பெரியசாமி சந்திரசேகரனின் மறைவைத்தொடர்ந்து ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு மத்திய மாகாணத்தின் முன்னாள் தமிழ்க் கல்வியமைச்சர் சந்தனம் அருள்சாமி நியமிக்கப்பட்டுள்ளதாக 08-01-2010 ம் திகதி வெளியிடப்பட்டுள்ள அதி விசேஷ அரசாங்க வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோஷலிஷக் குடியரசின் அரசியலமைப்பின் 99 ஆம் உறுப்புரையின் 13(ஆ)பிரிவின் கீழ், மறைந்த சந்திரசேகரன் பெரியசாமி வெற்றிடத்தை நிரப்புவதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நுவரெலியா தேர்தல் மாவட்டத்திற்கான ஆறாவது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவராக சந்தனம் அருள்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க அரசாங்க வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணி தனித்துப்போட்டியிட்ட போது அதன் தலைவர் அமரர் பெ.சந்திரசேகரன் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.

மலையக மக்கள் முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் சந்திரசேகரனுக்கு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் அருள்சாமி.

அருள்சாமி ம.ம.முன்னணியின் நிர்வாகச் செயலாளராகவும் மத்திய மாகாணசபை உறுப்பினராகவும் செயற்பட்டவர். 2004 ஆம் ஆண்டு முன்னணியிலிருந்து விலகி தனித்துச் செயற்பட்டு, மத்திய மாகாணத்தின் தமிழ்க் கல்வியமைச்சராகப் பதவியேற்றவர்.

தற்போது தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளராகவும் ஜனாதிபதி ஆலோசகர்களில் ஒருவராகவும் செயற்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

மலையகத்தில் 40,000 வீடுகள் - முத்துசிவலிங்கம்

மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் மலையகத்தில் வருடாந்தம் ஐயாயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

2006 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை 12,230 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு வீட்டைத்தானும் நிர்மாணிக்கவில்லையென்று சில அரசியல்வாதிகள் கூறுகிறார்கள் இதில் எவ்வித உண்மையுமில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 3,179 ஆசிரிய நியமனங்கள்; வழங்கப்பட்டுள்ளன. 500 தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரலாற்றில் முதற் தடவையாக 300 தபால் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் 100 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இணைந்து செயற்படுவதன் மூலமே இந்த நன்மை கிடைத்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக எமது கட்சியே மலையகத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளது. எனவே, இந்தத் தேர்தலில் இ. தொ. கா.வின் முடிவின்படி மலையக மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Saturday, January 2, 2010

மலையக மக்களின் தலைவர் பெ. சந்திரசேகரன் அவர்கட்கு எம் இதய அஞ்சலிகள் - தி. ஸ்ரீதரன் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.


மலையக மக்களின் மனம் கவர்ந்த இளம் சிரேஷ்ட தலைவரான திரு. பெரியசாமி சந்திரசேகரன் அவர்களின் திடீர் மறைவு எம்மை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

முற்போக்கு சிந்தனை கொண்ட சந்திரசேகரன் அவர்கள் மலையக மக்கள் உட்பட இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்களுக்கு செய்த சேவை அளப்பரியவை. அவரது அரசியல் பயணத்தில் பல சவால்களை எதிர்நோக்கியவர். 1980 களின் இறுதி பகுதி தொடக்கம் 1990 களின் முற்பகுதி வரை சிறைவாசத்தையும் அவா அனுபவித்தார்.

மலையக தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளுக்காக மாத்திரமல்லாமல் மலையக மக்கள் ஒரு சமூகம் என்ற வகையில் அம் மக்களின் தனித்துவ உரிமைகளுக்காகவும் குரல கொடுத்தவர். மலையகத்தில் லயன் காம்பிராவுக்கு மாற்றாக வீடமைப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் காத்திரமான பங்களிப்பை வழங்கியவர். மலையக மக்கள் வாழும் பிரதேசங்களில் கிராம சேவகர்களை நியமித்து பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், அடையாள அட்டை போன்றவற்றை பெறுவதற்கு காத்திரமான முறையில் செயற்பட்டவர். மலையகத்தில் உள்ளக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் அயராது பாடுபட்டவர். குறிப்பாக இளந்தலைமுறையினரின் கல்வி தொழில் தொடர்பான விடயங்களில் கரிசனையை செலுத்தியவர்.

தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் சமாதானத் தீர்வு காணப்தற்கு பாடுபட்டவர். மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தமது சகாக்களுடன்ஃ இணைந்து இடையறாது குரல் கொடுத்து வந்தவர்.


ஒரு அதிகாரப் பகிர்வு முறைமையொன்று மலையக மக்களுக்கும் ஏற்படுத்தப்பட வேண்டுமென்று அதற்கான பங்களிப்பை வழங்கியவர். அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவிலும் அதற்கு அனுசரணையாக இருந்த நிபுணர் குழுவின் முன்னிலையிலும் அதற்கான நியாயங்களை எடுத்துரைத்தவர்.

துமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான நியாயங்களை சர்வதேச அரங்கிலும் குறிப்பாக இந்திய தமிழக முதல்வர், தலைவர்களை சந்தித்து எடுத்துரைத்தவர்.

திரு. பெ. சந்திரசேகரன் அவர்களின் மறைவு இலங்கையின் அரசியல் வானிலும் மலையக மக்களின் அரசியல் அரங்கிலும் பாரிய வெற்றிடமொன்றை தோற்றுவித்துள்ளது.

இலங்கையில் சகல சமூகங்களும் சமத்துவமாக ஐக்கியமாக வாழ வேண்டுமென்ற எழிலார்ந்த கனவுடன் வாழ்ந்தவர்.

குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் தமது உரிமைக்களுக்காக ஐக்கியமாகவும், நிதானமாகவும் புத்திசாதுரியமாகவும் செயற்பட வேண்டுமென்று தனது இறுதி மூச்சுவரை வலியுறுத்தியவர்.

அன்னாரின் குடும்பத்தினருக்கும் அவர் தலைமை வகித்த மலையக மக்கள் முன்னணிக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு. சந்திரசேகரன் அவர்களுக்கு பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது இதய அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.



தி. ஸ்ரீதரன்
பொதுச்செயலாளர்
பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.