Sunday, June 21, 2015

வீடமைப்புக்கான காணி வழங்கும் விடயத்தில் சமூகப்பொறுப்பு அவசியம்


புதிய அரசாங்கத்தின் 100 நான் வேலைத்திட்டத்தின் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்புக்காக வழங்கும் 07 பேர்ச் காணி வழங்கும் திட்டத்தில் சகலரும் சமூகப்பொறுப்புடன் செயற்படுவது அவசியம் எனவும் தொழிற்சங்க அரசியல் பேதமின்றி இத்திட்டம் முன்னெடுக்கும்பட்சத்தில் இரண்டு இலட்சம் தனி வீடுகள் மலையக பகுதிகளில் அமைக்கப்படும் சாத்தியம் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் லபுக்கலை தோட்டப்பாடசாலைக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கான உபகரணங்கள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் கடந்த 200 ஆண்டுகளாக அதிகார வர்க்கத்தினாலும், இனவாதிகளாலும் சின்னாப்பின்னப்படுத்தப்பட்ட தேசிய உழைப்பாளிகளான தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு அங்குலம் காணி சொந்தமாகக் கிடையாது. இந்த நாட்டை செல்வம் கொழிக்கும் பூமியாக மாற்றியவர்கள் இந்த இந்திய வம்சாவளி மக்கள் என்பதை மறுக்க முடியாது 
கடந்த காலத்தில் அமரர் அமைச்சர் சந்திரசேகரன் நிர்மாணித்து வழங்கிய 23,000 வீடுகளுக்கு உறுதிப்பத்திரத்தை வழங்கவில்லை. ஆனால் இத்தனை வருட காலமாக அமைச்சர்களாக இருந்தவர்களால் ஏன் செய்ய முடியாது போனது என்று கேள்வி எழுப்பினார். 

Friday, November 14, 2014

சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தத்தின் ரணம்

இலங்கையில் 9,75,000 இந்திய வம்சா வளியினர், பிரஜா உரிமை இல்லாமல், நாடற்றவர்களாக நாதியற்று இருந்த காலத்தில், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்பதற்காக, சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தம் 1964 அக்டோபர் 30-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது. இன்றோடு 50 ஆண்டு நிறைவாகிறது. எதற்காக இந்த ஒப்பந்தம்?

1815 கால கட்டத்தில், கண்டி ராஜ்ஜியம் வீழ்த்தப்பட்டு, ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கையின் மய்யப் பகுதியான மலையகத்தில், ஆங்கிலேயர் காப்பி பயிரிட்டனர். காப்பித் தோட்டப் பணிகளுக்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டதால், தமிழகத்தின் திருநெல்வேலி, இராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளிலிருந்து தொழிலாளர்களை கடற்கரை வரை கூட்டம் கூட்டமாக நடத்தி அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்து கடலில் பயணித்தபோது பலர், தவறுதலாக வங்கக் கடலில் விழுந்து மாண்டனர். மன்னாரில் இறக்கி மலையகம் வரை அடர்ந்த காடுகள் வழியாக அழைத்துச் சென்றபொழுது, பலரும் நோய்வாய்பட்டும், காட்டு விலங்குகளுக்கு பலியாகியும் இறந்தனர். பயணத்தின்போது சோறு, தண்ணீர் இல்லை.

1842-லிருந்து 1945 வரை இந்தியாவிலிருந்து நான்கு முறை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோரை மனிதநேயமின்றி அடிமைகளைபோல் அழைத்துச் சென்றனர். பிரடெரிக் நார்த் என்ற ஆங்கிலேயர் பரிபாலனத்தில், இலங்கையில் இருந்த ஆங்கில அரசுகள் இந்திய வம்சாவளியினரை, மனிதர்கள் என்று நினைக்காமல் பார்சல் பொருளாக நடத்தின.

தமிழ்நாட்டில் அன்றைக்கு எஸ்டேட் மேனேஜ்மெண்ட் அலுவலகங்கள் செங்கல்பட்டு, வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு, சேலம், சிவகாசி, கோயம்புத்தூர், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் துவக்கப்பட்டன. இதற்கு தலைமையிடமாக திருச்சியில் "பிளான்டேஷன் கோஸ்ட் ஏஜென்சி' என்ற அமைப்பு செயல்பட்டது. இதன் மூலம் தமிழகத்திலுள்ள ஏழ்மையான மக்கள் இலங்கைக்கு தோட்டத் தொழிலுக்காக அனுப்பப்பட்டனர்.

தோட்டத் தொழிலில் ஈடுபட்டபோது அங்குள்ள கடுங்குளிரும், சூழலும் ஒத்துகொள்ளாமல் 70,000 இந்திய வம்சாவளியினர் இறந்ததாக கொழும்பு "அப்சர்வர்' ஏடு அப்போது தெரிவித்தது. பஞ்சம், வறட்சி, கொள்ளை நோய் இங்கிருந்து சென்றவர்களை வாட்டி வதைத்தன.

ஒரு கட்டத்தில் காப்பி பயிர்கள் சரியாக விளையவில்லையென்று, ஆங்கிலேயர்கள் தேயிலை, ரப்பர், தென்னை, சிங்கோனா என்று விளைச்சலை மாற்றினர். கடுமையாக உழைத்த இந்த தொழிலாளர்கள் கங்காணி முறையில் கண்காணிக்கப்பட்டனர். ÷
அப்பகுதியில் பாடப்பட்ட நாட்டுப்புற பாடல் ஒன்று:

கண்டி கண்டி எங்கா தீங்கா
கண்டி பேச்சு பேசாதீங்க
சாதி கெட்ட கண்டியிலே
சங்கிலியன் கங்காணி

பயத்திலும், அச்சத்திலும் தொழிலாளர்கள் வாழ வேண்டிய நிலைமை இருந்தது. காலை 6 மணியிலிருந்து இரவு 7 மணி வரை கடும் உழைப்பு. அந்த உழைப்பின்போது, காட்டில் உள்ள அட்டைகள் அவர்கள் ரத்தத்தை உறிஞ்சின.

இதிலிருந்து அவர்கள் தப்பி போக முடியாதவாறு வேலிகள் இருந்தன. தப்ப முயன்று அகப்பட்டால் கடுமையான தண்டனை உண்டு. இது சுருக்கமான வரலாறு.

இலங்கை, 4.2.1948 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. அன்றைய தினத்திலிருந்து இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரஜா உரிமை மறுக்கப்பட்டு, சட்ட விரோதமாக குடியேறியவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

விடுதலை பெற்ற இலங்கை அரசு இதனைக் கண்டு கொள்ளவில்லை. இவர்கள் படும் அவஸ்தைகள், அன்றைய பிரதமர் நேருவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. நேரு இதுகுறித்து இலங்கை அதிபர் கொத்லவாலாவிடம் பேசினார்.

1954-இல் டில்லி வந்த கொத்லவாலா, நேருவின் கையைப் பிடித்துக் கொண்டு, "நீங்கள் இலங்கை வந்தபோது, உங்கள் கூட்டத்தில் எங்கள் நாட்டினர் கல் வீசினார்கள் என்று எங்கள் மீது கோபம் காட்டாதீர்கள். இந்திய வம்சாவளியினரின் பிரச்னைகளை தீர்க்க ஒத்துழைப்புத் தாருங்கள்' என்று மன்றாடி கேட்டுக் கொண்டார். பின்னர் நேரு - கொத்லவாலா ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.

நேரு - கொத்லவாலா ஒப்பந்தத்தின்படி, மலையக தமிழ் மக்களுக்கு பிரஜா உரிமை வழங்க இலங்கை அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்லாது, நேரு காலமான பின்பு, இந்திய வம்சாவளியினரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதிலேயே இலங்கை கவனமாக இருந்தது.

நேருவின் அணிசேராக் கொள்கை, பஞ்சசீலம் இவற்றின் அடிப்படையில், அண்டை நாடுகளுடன் ஒத்துழைக்க வேண்டுமெனவும், சீன இந்திய போர் போன்றவைகளை காரணமாக வைத்து, சிரிமாவோ } சாஸ்திரி ஒப்பந்தத்தை உருவாக்க சரியான நேரம் இதுதான் என்றும் முடிவு செய்து பண்டார நாயகா 1964 அக்டோபர் 22-ஆம் தேதி தில்லி வந்தார்.

சிரிமாவோவின் கோரிக்கையை இந்திய அரசு ஏற்றது. இதனைத் தொடர்ந்து இலங்கையின் வற்புறுத்தலால், சாஸ்திரி } சிரிமாவோ ஒப்பந்தம் கையொப்பமானது. இந்திய அரசு இலங்கையின் கோரிக்கையை வாய்மூடி ஏற்றுக் கொண்டது.

பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுவரண் சிங், தமிழக அமைச்சர் வி. ராமய்யா ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்திற்கு இசைவு கொடுக்கப்பட்டது. தமிழக அமைச்சரான வி. ராமய்யா அப்போது வாய் திறந்து எந்த கருத்தையும் சொல்லவில்லை.
இந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கையில் பிரஜா உரிமையற்று, நாடற்றவர்களாக இருக்கும் 9,75,000 பேரில் 5.25 லட்சம் பேருக்கு இந்தியாவும், 3 லட்சம் பேருக்கு இலங்கையும் குடியுரிமை வழங்குவது, மீதமுள்ள 1.5 லட்சம் பேரின் நிலையை பிற்பாடு முடிவெடுப்பது என்கிற ஒப்பந்தம் 1964 அக்டோபர் 30 அன்று கையெழுத்தானது.

இதே 1964-இல் சேது சமுத்திரத் திட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்பும் கிடப்பில் போடப்பட்டதும், கச்சத்தீவு தமிழர்களின் விருப்பத்திற்கு மாறாக காவு கொடுக்கப்பட்டது என்பதும் வேறு விஷயம். தமிழக தலைவர்கள் அண்ணா, ராஜாஜி, ம.பொ.சி. போன்றோர் தமிழகத்தின் கருத்து அறியாமல் இந்த ஒப்பந்தம் எப்படி ஏற்றுக் கொள்ளப்பட்டது என வினா எழுப்பினர்.

ஒப்பந்தம் 1964-இல் கையெழுத்தானாலும், 1967-இல்தான் நடைமுறைக்கு வரும் என்று ஒப்புக் கொண்டனர். ஆனால், 1965 - 66-லேயே சில தோட்ட தொழிலாளர்களின் குடும்பங்களை இந்தியாவிற்கு அனுப்பியது இலங்கை அரசு.

ஆரம்பத்தில் தமிழகத்திலிருந்து தமிழர்களை எப்படி அழைத்துச் சென்றார்களோ, அதே போன்று சாரை சாரையாக கப்பலில் ஏற்றி தூத்துக்குடியிலும் சென்னையிலும் படகு மூலம் இராமேஸ்வரத்திலும் கைதிகள் போல் இந்திய மணலில் இறக்கி விட்டனர். என்ன வேதனை?

அப்படி வந்து இறங்கியவர்களுக்கு இந்தியா, தொடர்பற்ற மண்ணாக தெரிந்தது. தங்களுடைய மூதாதையரின் மண்ணில் திக்கு தெரியாமல் திகைத்தனர். இங்குள்ள மாறுபட்ட சூழலில், ஜீவனத்துக்கு வழியில்லாமலும், தொழில் தொடங்க கடனுக்கு மன்றாடுதல் எனவும் நிலைகுலைந்து போயினர்.

மீண்டும் தேயிலைத் தோட்டத் தொழிலுக்காக கொடைக்கானல், நீலகிரி, மூணாறு, வால்பாறை, கர்நாடகத்தில் உள்ள சிக்மகளூர், கேரளா, டார்ஜிலிங் வரை பயணித்தனர். பலர் துயரம் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்திய மண்ணோ, அவர்களை தங்களுடைய சகோதரர்கள் என நினைக்காமல், சிலோன்காரர்கள் என்ற பிரிவினையோடு பார்த்தது. இதனால் பலர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு பைத்தியக்காரர்களான கதைகளும் உண்டு. இதே நிலைமை இன்று வரை நீடிக்கிறது.

பல குடும்பங்கள் வேதனையான வாழ்க்கையை இன்றும் அனுபவித்து வருகின்றனர். 1983 கலவரங்களுக்கு பின் ஈழத்திலிருந்து வந்து அகதிகளாக இருப்போர் இப்போது படுகின்ற துன்பங்களை போன்றுதான், அன்று மலையகத் தமிழர்களும் சொந்த நாட்டுக்குத் திரும்பிய பிறகும் கஷ்டங்களை அனுபவித்தனர்.

மனித உரிமைகள், மானுடம் என பேசிடும் நாம், 50 ஆண்டுகளுக்கு முன்னால் நிறைவேறிய சாஸ்திரி } சிரிமாவோ ஒப்பந்தம், மலையக மக்களை சாவு குழிக்கும், அடிமை சாசனத்திற்கும் அழைத்துச் சென்றது என்ற ரணமான செய்தியைப் பதிவு செய்யும் நிலையில் இருக்கின்றோம்.
பிஜித் தீவு காப்பி தோட்டத்தில் தமிழர்கள் பட்ட பாடுகளை கண்ட பாரதி, "விதியே விதியே, தமிழ் சாதியே என் செய்ய நினைத்தாய்?' என்று பாடினானே, அந்த வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

கே.எஸ். ராதாகிருஷ்ணன்-
தினமணி

மலையக மக்களின் நட்பு சக்திகளை சரியாக அடையாளம் காண்போம்


மலையகத்தில் பதுளை மீரியபெத்த என்ற இடத்தில் அண்மையில் நடைபெற்ற மண்சரிவினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆதரவுக் கரங்களை நீட்டும் முகமாகவும், மரணித்தவர்களுக்கான கண்ணீர் அஞ்சலிக்காகவும் இந்திய வம்சாவழித் இலங்கைத் தமிழர் (SLTCIO) என்ற அமைப்பு ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பொன்று எனக்கு கிடைத்தது. இலங்கைப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் இந்த உழைக்கும் மக்களின் நலன்களில் நீண்ட காலமாகவே எனக்கிருந்த ஈடுபாடு என்னை இந்த நிகழ்வில் கலந்து கொள்ள என்னை இழுத்துச் சென்றது.
 
புலம் பெயர் தேசம் ஒன்றில் முதல்? தடவையாக மலையக மக்களின் நிகழ்வு ஒன்றில் வடக்கு, கிழக்கு தமிழ்ப் பிரநிதிகள் கலந்து கொண்டதாக கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்களின் பேச்சுக்களில் குறிப்பிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை நிதிகளாகவும், பொருட்களாகவும் சேர்த்து அனுப்புதல் என்பதுவும் இந்த நிகழ்வின் ஒரு நோக்கமாக இருந்தது. மேலும் மலையக மக்களின் பிரச்சனையை மலையக மக்கள் தவிர்ந்த ஏனை வடக்கு, கிழக்கு மக்களுக்கு எடுத்தியம்பும் ஒரு ஏற்பாடாகவும் இதனைப் பார்க்கலாம் என்ற கருத்துக்களையும் ஏற்பாட்டாளர்கள் முன்வைத்தனர்.
இந்த கூட்டதை ஒழுங்கு செய்தவர்கள் யாவரும் மலையகத்தை பிறப்பிடமாக கொண்டவர்களாகவே இருந்தனர். ஆனால், இன்று மத்தியதர வர்க்க வாழ்க்கை முறைகளுக்குள் தம்மை இணைத்துக் கொண்டு அந்த வர்க்க குணாம்சத்துடன் வாழ்க்கை நடாத்துகின்றனர் என்ற செயற்பாடுகளே இங்கு மேலோங்கி இருந்தது. மக்களின் துயரத்தை பகிரும் ஒரு நிகழ்வில் ஒரு கொண்டாட்டத் தன்மை சற்று தலைதூக்கியிருந்தது என் பார்வையில் வருந்தத்தக்கதாக உணரப்பட்டது. இது எனது மனவலையிலிருந்து இருந்து உதிர்ந்தவைதான். வேறு எந்த குறை கூறும் நோக்கம் கொண்டு இங்கு நான் இதனைப் பதிவு செய்யவில்லை என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் கலந்து கொண்ட சிலரிடையே என்னையொத்த மனவலையின் பிரதி பலிப்பு இருந்ததை நான் உணர்ந்தும் கொண்டேன். இது திட்டமிட்டு நடைபெற்ற தவறு அல்ல? மாறாக ஏதேச்சையாக நடைபெற்ற தவறு என்ற எண்ணமும் என் மனவலையில் போராட்டமாக இன்றும் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தமிழ் (பேசும்) மக்கள் என்ற உணர்வலைகள் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களுடன் இணைவது என்ற இனத்துவ உணர்வுகளே மேலோங்கியிருக்கக் காணப்பட்டது. இலங்கையின் தலமைத்துவ வர்க்கமான இந்த அடிமட்ட உழைக்கும் மக்களின் சமூக மாற்றத்திற்கான முக்கியத்துவம் இங்கே சற்றே மறைந்திருந்தது காணக் கூடியதாக இருந்தது. மேலும் வடக்கு, கிழக்கில் இந்த உழைக்கும் மக்களின் நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில் நாடு கடந்த தமிழீழம், மாநகர கவுன்சிலர், தேர்தலில் எதிர்காலத்தில் நிற்கப் போகின்றவர்கள் என்ற மேற்தட்டு வர்க்க செயற்பாட்டாளர்களே இவர்களால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இது இவர்களின் வர்க்கக் அடிப்படையிலான ஐக்கிய முன்னணித் தந்திரோபாயக் கண்ணோட்டத்தில் உள்ள தப்புத் தாளங்களையே எடுத்தியம்பி நின்றன.
இந்த அமைப்பின் பெரும்பாலான செயற்பாட்டாளர்களிடம் இருந்த ‘வெள்ளந்தித்தனம்’ மலையக உழைக்கும் அடிமட்ட மக்களுக்கான விடுதலைக்கான நட்புச்சக்திகளை இனம் காணுவதில் தவறான போக்கிற்கு இழுத்துச் செல்லப்பட்டதாக என்னால் உணரப்பட்டது. இந்நிகழ்வின் பிரமுகர்களாக மீண்டும், மீண்டும் (கவனிக்க மீண்டும் மீண்டும்)) இனம் காட்ட பேசப்பட்ட பேச்சுக்கள், செயற்பாடுகள் போன்றவற்றின் வெளிப்படும் சேதியின் அடிப்படையில் இதனை நான் இங்கு பதிவு செய்கின்றேன். நம்பிக்கையுடன் பலகாலமாக என்னால் அவதானிக்கப்பட்டு வந்த மலையக சகாக்கள் சிலர் பேச்சுக்கள் கூட ஏமாற்றம் அழிப்பதாகவே இருந்தது. காரணம் இவர்கள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரமுகர்கள் என்று அதிகமாக முதன்மைப்படுத்தி சுட்டிக் காட்டி பேசிய பேச்சுக்கள் ஆகும். இந்த நிகழ்விற்கு பெருமை சேர்ப்பவர்கள் யார் என்பதை அடையாளப்படுத்துவதில் இவர்கள் இந்த பிரமுகர்களிடம் தொங்கிக்கொண்டு இருப்பதாகவே இவர்கள் தம்மை காட்டிக் கொண்டனர்.

இவர்களின் இந்த பேச்சு, செயற்பாடுகள் ஒரு ஆரோக்கியமான தடங்களாக மலையக பெரும்பான்மை அடிமட்ட மக்களின் விடிவிற்கு அமையப் போவது இல்லை. ஒரு நல்ல முயற்சிற்கான நிகழ்வு சரியான நட்பு சக்திகளை அடையாளப்படுத்தாமல் எங்கேயோ இழுத்துச் செல்லப்படுவது போன்ற உணர்வலையை என்னிடம் இருந்து பிரித்தெடுக்க என்னால் முடியவில்லை என்பதை இங்கு மன வருத்ததுடன் பதிவு செய்ய விருப்புகின்றேன். ஒரு துயர் பகிர்வு நிகழ்வில் ‘யாரும்’ கலந்து கொள்ள அனுமதிப்பது இதற்கான சபை நாகரிகம், மரியாதை என்பது வேறு. மாறாக இவர்களே, இவர்களாலே இந்த துயர் பகிர்வு பெருமை, முழுமை அடைகின்றது என்ற கருத்தியல் அப்படையில் நடந்து கொள்வது வேறு.

மலையக மக்களின் வாழ்க்கைகான சமூகப் புரட்சி வெற்றியளிக்க வேண்டுமாயின் அங்கும், இங்கும் இந்த மக்களின் நலன்களில் உண்மையான அக்கறையுள்ளவர்களின் தலைமைத்துவத்தை உருவாக்கி நண்பர்கள் யார், நட்பு இல்லாத சக்திகள் யார்? என்பதை சரியாக இனம் கண்டு அவர்களுடன் ஐக்கிய முன்னணி அமைத்தல் வேண்டும். புரட்சிகரமாக வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இந்த மக்கள் அணிதிரட்டி வழி நடத்தி சரியான நட்பு சக்திகளுடன் ஐக்கியப்பட்டு இணைந்து இந்த மக்களின் தலமையில் போராடினால், செயற்பட்டாலே அது சாத்தியம் ஆகும். இதில் மனிதத்துவமே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் மாறாக இனம், மொழி, மதம் முன்னிலை பெற்றலால் வேணும் என்றால் உசுப்பேத்தி தேர்தலில் வெற்றி பெற்று தொண்டமான்காளாக வர உதவுமே தவிர இந்த மக்களின் நிரந்தர வடிவிற்கான செயற்பாடாக அமையப் போவதில்லை.
 
என்ன இன்னும் ஒரு ஆறுமுகம், செந்தில்களை மலையகத்தில் மட்டும் இல்லை புலம்பெயர் தேசங்கள் எல்லாம் உருவாக்க முடியுமே தவிர மலையக மக்களுக்கான விடிவு கிடைக்க உதவப் போவதில்லை. இந்த நிகழ்வில் உங்களால் முன்னிலைப்படுதப்பட்ட பிரமுகர்கள் மனோகணேசன், விக்னேஸ்வரன் வகையறாக்கள் என்பதை கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்வது போல் உணரப்படக் கூடாது என்ற அக்கறையில் இங்கு இதனைப் பதிவு செய்கின்றேன். இதில் நாங்கள் யாரும் தவறிவிடக் கூடாது என்பதை ஈழவிடுதலைப் போராட்டதின் முடிவுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்வோம். இந்த துயர் பகிர்வு நிகழ்வுகளில் மேலோங்கி நின்ற தவறான சில விடயங்களை இங்கு பதிவு செய்கின்றேன். இந்நிகழ்வைப் பார்த்தால் அது ‘மௌனிக்கப்பட்டவர்’களின் சாம்பலில் இருந்து புறப்பட விளையும் தவறான நட்பு, நடப்புக்களையே எனக்கு உணர்த்தி நிற்கின்றது.

- சாகரன்-

Tuesday, October 14, 2014

ஹட்டன் விபத்தில் தந்தையும் மகனும் காயம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன், குயில்வத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் காயமடைந்து வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் களுத்துறை ஹொரனை பகுதியை சேர்ந்தவர்களே காயமடைந்துள்ளனர் என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனிலிருந்து கினிகத்ஹேனை நோக்கி பயணித்த டிப்பர் ரக வாகனம் ஒன்றுடன் கினிகத்ஹேனையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தகப்பனும், மகனுமே படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

53 வீத­மா­ன மலை­யக தமி­ழர்கள் வாழு­கின்­ற நுவ­ரெ­லி­யாவில் பல்­க­லைக்­கழகம் அமைவது சாத்தியமானது.

எமது சமூ­கத்­தினர் தம்மை இந்­திய வம்­சா­வளி தமி­ழர்கள் மற்றும் மலை­யக தமி­ழர்கள் என்று அடை­யா­ளப்­ப­டுத்த தவ­று­வதன் விளைவே மலை­ய­கத்தில் பல்­க­லைக்­க­ழகம் ஒன்­றினை பெற்றுக் கொள்­வ­தற்கு தடை­யாக உள்­ள­து.

இந்­திய தமிழர், மலை­யக தமிழர் என்று எமது இன அடை­யா­ளத்­தினை வெளிப்­படுத்த வெட்­கப்­பட்டுக் கொண்டு இலங்கை தமிழர் என்று பலரும் தம்மை பதிந்து கொள்­ளு­கின்­றனர். இதன் விளைவு இன புள்ளி விப­ர­வி­யலில் மலை­யக இந்­திய வம்­சா­வளி­யி­னரின் இனப்­ப­ரம்பல் குறை­வ­தோடு அது நாம் உரி­மை­க­ளையும் சலு­கை­க­ளையும் பெற்­றுக்­கொள்­வ­தற்கு பெருந்­த­டை­யாக உள்­ளது. இந்த விளைவே மலை­யக பல்­க­லைக்­க­ழகம் ஒன்­றினை பெற்­றுக்­கொள்­வ­தற்கும் தடை­யாகவுள்ளது.

மலை­ய­கத்தில் பல்­க­லைக்­க­ழகம் ஒன்று அமை­வதன் அவ­சி­யப்­பாடு தொடர்பில் 15 வரு­டங்­க­ளுக்கு முன்­பி­ருந்தே நாம் பேசி வரு­கின்றோம். அம­ரர்­க­ளான சௌமி­ய­மூர்த்தி தொண்­டமான் மற்றும் சந்­திர சேகரன் ஆகியோர் இது தொடர்பில் அதி­க­மான அக்­கறை செலுத்­தி­னார்கள். அமரர் சந்­தி­ர­சே­கரன் இது தொடர்பில் எம்­முடன் அதி­க­ளவில் கலந்­து­ரை­யா­டினார். அவ­ரது காலத்தில் எப்­ப­டி­யா­வது ஒரு பல்­க­லையை பெற்று விடலாம் என்ற எமது எண்ணம் அவ­ரது மர­ணத்­தோடு நின்று போனது.

ஆயினும் தொடர்ந்து இது தொடர்பில் பல முயற்­சி­களை நாம் முன்­னெ­டுத்தோம். இதற்கு பல்­வேறு விமர்­ச­னங்­களை நாம் சந்­திக்க வேண்­டி­யி­ருந்­தது.

நாம் இன்று மீண்டும் இவ்­வி­டயத்தில் பல்­வேறு விமர்­ச­னங்­களை தாண்டி மலை­ய­கத்தில் பல்­க­லைக்­க­ழகம் ஒன்றின் தேவை தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­கின்றோம். எமக்கு பல்­க­லைக்­க­ழகம் ஒன்று தேவை என்று மட்டும் தான் தற்­போது கேட்­கின்றோம்.

இன்று இலங்­கையில் மாகாண, பிராந்­தி­யத்­திலும் உத்­தி­யோ­க­பூர்வம் இன்றி இன அடை­யா­ளத்­தோடும் பல பல்­க­லைக்­க­ழ­கங்கள் இயங்­கு­கின்­றன. ஆனால் மலை­ய­கத்­தினை இந்­திய வம்­சா­வ­ளி­யி­ன­ரினை பிர­தி­ப­லிக்கும் அவர்­க­ளது கலை கலா­சா­ரங்­களை உள்­ள­டக்­கு­கின்ற எந்த பல்­க­லைக்­க­ழ­கமும் இல்லை.

யாழ். பல்­க­லைக்­க­ழகம், கிழக்கு பல்­க­லைக்­க­ழகம், தென் கிழக்கு பல்­க­லைக்­க­ழகம் என்று அனைத்தும் அப் பிராந்­தி­யத்­தி­னையும் உத்­தி­யோ­க­பூர்­வ­மின்றி ஓர் இனத்­தி­னையும் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்­து­வ­தா­கவே உள்­ளன. ஆனால், மலை­ய­கத்தில் உள்ள பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கத்தில் எமது இன ரீதி­யான அடை­யா­ளத்­தினை வெளிப்­ப­டுத்­து­வ­தாக இல்லை. அத்­தோடு இலங்­கையில் எந்த பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் மலை­ய­கத்தின் கலை கலா­சா­ரங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற எந்த துறையோ பிரிவோ இல்லை. இது வேத­னை­யான விடயம்.

15 இலட்சம் சனத்­தொ­கை­யினை கொண்ட மலை­யக தமி­ழர்­க­ளுக்கு ஒரு பல்­க­லைக்­க­ழகம் பெற்­றுக்­கொள்ள கூடிய தகு­தி­யுள்­ளது. நாம் எம்மை இந்­திய வம்­சா­வளி தமிழர், மலை­யக தமிழர் என்று பதிந்து கொண்­டோ­மானால் எமது சனத்­தொகை பரம்பல் புள்ளி விப­ர­வி­யலில் அதி­க­ரிக்கும். இல்­லை­யென்றால் நாம் இலங்கை தமி­ழர்கள் என்ற பிரி­விற்குள் உள்­ள­டங்கி விடுவோம். இவ்­வா­றான நிலை உரு­வாகும் பட்­சத்தில் ஏற்­க­னவே இலங்­கையில் இலங்கை தமி­ழ­ருக்கு என்று யாழ். பல்­க­லைக்­க­ழகம், கிழக்கு பல்­க­லைக்­க­ழகம் என்­பன உள்­ளன. எனவே, இன்­னொன்று தேவை இல்லை என்று எமக்­கான பல்­க­லைக்­க­ழ­கத்­தினை பெற்­றுக்­கொள்ள முடி­யாது போகும் நிலை உரு­வாகும்.

எனவே, இலங்கை தமிழர் என்று பதி­யாமல் இந்­திய மலை­யக தமிழர் என்று பதிந்து கொள்­ளுங்கள். இதன் மூலமே பல்­வேறு உரி­மை­க­ளையும் சலு­கை­க­ளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

பல்­க­லைக்­க­ழகம் ஒன்று அமையும் பட்­சத்தில் அதற்கு என்று 100 கோடி ரூபா நிதி ஒதுக்­கப்­படும். இதன் மூலம் பல்­வேறு அபி­வி­ருத்­திகள் இடம்­பெறும். அத்­தோடு வேலை வாய்ப்­புகள் கிடைக்கும். ஆனால், மலை­ய­கத்தில் மலை­யக பல்­க­லைக்­க­ழகம் இல்­லா­மை­யினால் எமக்கு இந்த நிதி கிடைப்­ப­தில்லை.

உயர்­கல்வி அமைச்­சினால் 4000 கோடி ரூபா ஒதுக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால், இதி­லி­ருந்து ஒரு சதத்­தினை கூட எமது சமூ­கத்­தினால் அனு­ப­விக்க முடி­யாமல் உள்­ளது. இதற்கு காரணம் பல்­க­லைக்­க­ழகம் ஒன்று எமக்­கென்று இல்­லா­மையே. சிலர் மலை­ய­கத்தில் சப்­ர­க­முவ, பேரா­தனை பல்­க­லைக்­க­ழ­கங்கள் உள்­ள­தென கூறு­கின்­றனர். ஆனால், அவற்றில் எம்மால் ஒரு தமிழ் நூலினையேனும் வெளி­யிட முடி­யுமா? அங்கு எமது அடை­யாளம் இல்லை. இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்­துடன் இணைந்து இரா­ம­நாதன் இசை கல்­லூரி உள்­ளது. அது போலவே விபு­லா­னந்த இசை கல்­லூரி என்று கலைப்­பி­ரிவு கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் உள்­ளது. இதனை போல கொழும்பில் நாம் எமது இன கலை கலா­சார அடை­யா­ளத்­தினை வெளிப்­ப­டுத்­து­கின்ற ஒரு பிரிவை உரு­வாக்க முடி­யுமா? முடி­யாது. அதற்கு அனு­மதி கிடைக்­காது. விட­மாட்­டார்கள்.
தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்­தினை அமரர் அஷ்ரப் உரு­வாக்­கினார். அதன் மூலமே முஸ்­லிம்­களின் வர­லாற்றின் மைல்­கல்­லான ஒலுவில் பிர­க­டனம் முன்­வைக்­கப்­பட்­டது. அதேபோல் தமிழர் விடு­தலை போராட்­டத்தில் வட­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழ­கங்­களின் பங்கு அளப்­ப­ரி­யது. ஆனால், இது போன்ற ஓர் இன உறு­திப்­பாட்­டுக்கு அடை­யா­ளத்­தினை, சமூக உணர்­வு­களை சமூ­கத்­தினை மலை­ய­கத்தில் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு இய­லாமல் உள்­ளது. பல்­க­லைக்­க­ழகம் ஒன்று அங்கு அமைக்­கப்­படும் போது அது தேசிய ரீதி­யிலும் எமது இனத்­திற்கு உறு­து­ணை­யாக அமையும்.

பல்­க­லைக்­க­ழகம் ஓர் இனத்தின் பிர­தே­சத்தின் கலை கலா­சார வளர்ச்­சிக்கு உத­வு­கின்­றது. இஸ்­லா­மிய கற்­கைக்­கான போதனா பீடம் ஒலுவில் பல்­க­லைக்­க­ழ­கத்தில் உள்­ளது. அங்கு ஒரு தமிழர் உப­வேந்­த­ராக முடி­யாது. அதேபோல் யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு சிங்­க­ளவர் ஒருவர் பீடா­தி­ப­தி­யாக முடி­யாது. இதன் மூலம் இனப்­பி­ர­தேசம் என்­பதில் பல்­க­லைக்­க­ழ­கத்தின் செல்­வாக்கு புரி­கி­றது.

15 இலட்சம் இந்­திய வம்­சா­வளி தமி­ழர்கள் உள்ள இந்த நாட்டில் அவர்­க­ளது இன, பிர­தேச அடை­யா­ள­மாக ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்­தினை பெற்­றுக்­கொள்­வது நியா­ய­மா­னது. இது தொடர்பில் அமைச்சர் டிலான் பெரே­ரா­விடம் ஏற்­க­னவே ஒரு முறை பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். அவர் இதற்கு உதவி அளிப்­ப­தா­கவும் தெரி­வித்தார். ஆனால் அதுவும் சாத்தியப்படவில்லை.

இந்த நாட்­டிற்கு 1830 இல் வந்த இந்­திய வம்­சா­வளி தமி­ழர்கள் இந்த நாட்டின் பொரு­ளா­தா­ரத்­தினை உயர்த்­து­வ­தற்­காக தம்மை அர்ப்­ப­ணித்து அழிந்து போயுள்­ளனர். அதற்கு சன்­மா­ன­மாக ஒன்­றரை நூற்­றாண்­டாக இந்த நாட்­டிற்கு செய்த சேவைக்­காக 15 கோடி ரூபா­யினை நாட்­டிற்கு வரு­மா­ன­மாக பெற்றுக் கொடுக்­கின்­றனர். இதற்கு வெகு­ம­தி­யாக ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்தை தாருங்கள் என்றே கேட்­கின்றோம்.

 இந்த பல்­க­லைக்­க­ழ­கத்தில் தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கும் ஒரு பயிற்சி நெறியை உரு­வாக்க வேண்டும். அவர்­க­ளுக்கு ஒரு டிப்­ளோமோ நெறி உரு­வாக்கி கல்வி பயிற்­று­விக்க வேண்டும். தொழிற் பயிற்சி வழங்க வேண்டும் என்­பது எனது குறிக்­கோளில் ஒன்­றாக உள்­ளது. இது நிச்­சயம் நிறை­வேற வேண்டும்.

எங்­களால் இப்­படி ஒரு பல்­க­லைக்­க­ழகம் எமது சமூ­கத்­திற்கு வேண்டும் என்று குரல் கொடுக்க முடி­யுமே ஒழிய அதனை நேர­டி­யாக பெற்­றுக்­கொ­டுக்க கூடிய இய­லுமை எம்­மிடம் இல்லை. அது அர­சியல் தலை­மை­க­ளுக்கே உள்­ளது. இலங்கை வர­லாற்றில் பல பல்­க­லைக்­க­ழ­கங்கள் குறித்த பிர­தே­சத்தின் அர­சியல் தலை­மை­களின் அழுத்­தங்கள் கார­ண­மாக பெற்றுக் கொள்­ளப்­பட்­ட­மையை நாம் அவ­தா­னிக்க முடி­கி­றது. அது போன்ற ஒரு நட­வ­டிக்­கையை மலை­ய­கத்­திலும் எடுக்க வேண்டும்.

அமரர் தொண்­டமான் இது தொடர்பில் ஆர்­வ­மாக இருந்­த­தோடு அமரர் சந்­தி­ர­சே­கரன் ஹட்டன் நகரில் இவ்­வா­றான ஒரு பல்­க­லைக்­க­ழ­கத்தை அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை துடிப்­புடன் எம்­முடன் இணைந்து முன்­னெ­டுத்தார். ஆனால் தற்­போது அதற்­கான எந்த நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுக்­கப்படாமல் உள்­ளது.

1942 இல் இலங்­கையில் ஒரே ஒரு பல்­க­லைக்­க­ழகம் தான் முதல் முதலில் உரு­வாக்­கப்­பட்­டது. இன்று 15 பல்­க­லைக்­க­ழ­கங்கள் உள்­ளன. அவற்றில் ஒன்று கூட எமக்­கான தனித்­துவ பண்­பு­களை உள்­ள­டக்­கி­ய­தாக இல்லை. ஆரம்­பத்தில் பொன்­னம்­பலம் இரா­ம­நாதன் போன்ற தலை­வர்கள் வெள்­ளை­க்கா­ரர்­க­ளிடம் எமக்­கொரு பல்­க­லைக்­கழகம் வேண்டும் என்று கேட்ட போது அது உங்­க­ளுக்கு எதற்கு தேவை­யற்­ற­தென்ற ஒரு கருத்­தையே அவர்கள் கொண்­டி­ருந்­தனர். அதுபோன்ற கருத்தே இன்றும் அர­சியல் தலை­மை­க­ளிடம் நில­வு­கின்­றது.

நாம் பல்­க­லைக்­க­ழகம் ஒன்­றினை கேட்­ப­தற்­கான தகுதி அற்­ற­வர்­க­ளாக 19, 20 ஆம் நூற்­றாண்டில் இருந்­தி­ருக்­கலாம். இது 21 ஆம் நூற்­றாண்டு இப்­போது இதனை கேட்கும் தகுதி எம்­மிடம் உள்­ளது. மலை­ய­கத்தில் படிப்­பது குறைவு. படிப்­ப­றிவு இல்லை. படிக்­கா­த­வர்கள் எதற்கு பல்­க­லைக்­க­ழகம் என்று இவர்கள் கேட்­கின்­றனர். உண்­மையில் இதற்­கொரு உதா­ரணம் கூறு­கின்றேன். KFC உரு­வாக்­கும்­போது இப்­படி சன கூட்டம் நிறைந்து வழியும் என்று எதிர்பார்த்தா உரு­வாக்­கி­யி­ருப்­பார்கள்.

இல்­லையே கட்­டடம் உரு­வாக்­கப்­பட்­டது. சனம் நிறைந்­தது. அது போல பல்­க­லைக்­க­ழகம் ஒன்று உரு­வாக்­கப்­பட்டால் அந்த கட்­ட­டத்தை பார்த்­தா­லா­வது இதில் நாமும் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்­வத்தில் படிக்­கா­த­வனும் கூட படிக்க ஆரம்­பிக்­கலாம்.

முதலில் ஒரு கட்­டடம் இடம் அமைந்­தாலே போது­மா­னது. யாழ். பல்­க­லைக்­கழகம் ஆரம்­பத்தில் இத்­தனை கட்­ட­டங்­க­ளோடு உரு­வா­க­வில்லை. யாழ். பர­மேஸ்­வரா கல்­லூ­ரிதான் பெயர்­பலகை மாற்­றப்­பட்­டதும் யாழ். பல்­க­லைக்­க­ழ­க­மாக மாறி­யது. அது போலவே வந்­தாறுமூலை மத்­திய பாட­சாலையே கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கமாக மாறி­யது. இது போல ஒரு பழைய தேயிலை தொழிற்­சா­லை­யை­யேனும் பல்­க­லைக்­க­ழ­க­மாக மாற்­றலாம். முதலில் பெயர்­ப­லகை ஒன்று மாட்­டி­னா­லேயே போதும். ஏனை­யவை தானாக அமையும்.

யார் பீடா­தி­பதி? யார் உப­வேந்தர்? என்­றெல்லாம் பேசா­தீர்கள். முதலில் இடம் கட்­டடம் என்ற ஒன்றே தேவை. அதனை அர­சியல் தலை­மைகள் பெற்றுக் கொடுத்தால் போதும் பல்­க­லைக்­க­ழகம் எவ்­வாறு அமைய வேண்டும், அங்கு இருக்க வேண்­டிய கற்கை நெறிகள் எவை, பாட­வி­தா­னங்கள், துறைசார் கல்வி என்று அனைத்தும் பற்­றிய செயற்­றிட்ட கோப்­புகள் என்­னிடம் உள்­ளன. 15 கோப்­புகள் இது தொடர்பில் தயா­ரித்து வைத்­துள்ளேன். பல்­க­லைக்­க­ழகம் அமைக்­கா­வி­டினும் கூட எமது கனவு பல்­க­லைக்­க­ழ­கத்தின் செயற்­றிட்ட கோப்பு புதிய நூற்­றாண்டில் ஒரு பல்­க­லைக்­க­ழகம் என்ற பெயரில் நூல்­வ­டி­வ­மாக விரைவில் வெளி வரும். நிச்­ச­ய­மாக இதனை வெளி­யி­டுவேன். நூல் வடி­வி­லேனும் அது என்னால் வெளி­வ­ரட்டும்.

மலை­ய­கத்தில் 15 இலட்சம் மலை­யக தமி­ழர்கள் வாழு­கின்­றனர். இவர்­களில் 53 வீத­மா­ன­வர்கள் நுவ­ரெ­லியா மாவட்­டத்­தி­லேயே வாழு­கின்­றனர். அவ்­வா­றெனில் நுவ­ரெ­லி­யாவில் பெரும்­பான்மை சமூ­க­மாக தமி­ழர்­களே உள்­ளனர். தமி­ழர்கள் அதி­க­மாக பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழும் நுவ­ரெ­லி­யாவில் இவ்­வா­றான பல்­க­லைக்­கழகம் அமைவது மிகவும் சாத்தியமானது.
மலேசியாவில் கூட 7–-8 வீதமாக வாழும் தமிழர்கள். அங்கு உயர் கல்வியை தமிழில் கற்க முடியாது. அங்கு இந்திய ஆய்வு என்ற ஒரு கற்கை பிரிவு உள்ளது. ஆனால் உலகில் அதிகமாக உயர்கல்வியை தமிழில் கற்கின்ற நாடு இலங்கைதான். கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் இலங்கையில் தமிழ் மொழியிலே உயர்கல்வியை கற்கின்றனர். இந்த நிலை இந்தியாவில் கூட இல்லை. ஆனால் தகுதிகள் இல்லாமல் போய்விடும் என்று பல்கலைக்கழகம் அமைவதற்கு சிலர் தடைக்கற்களை போடுகின்றனர். ஆனால், இவையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் காரணங்கள் அல்ல.

மலையக சமூகமும் ஒரு தேசிய இனமே. நாம் எமக்கான கலை கலாசார விழுமியங்களை வெளிப்படுத்துகின்ற ஒரு பல்கலைக்கழகத்தினை எமது பிரதேசத்தில் உருவாக்குவதற்கான பெற்றுக்கொள்ளுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டவர்களே. இதில் எமது அரசியல் தலைமைகள் பிடிப்பாக இருந்தால் அமரர் அஷ்ரப் ஒலுவில் பல்கலைக்கழகத்தினை தன் சமூகத்திற்கு பெற்றுக்கொடுத்தது போல எமது அரசியல் தலைமைகளும் ஒரு பல்கலைக்கழகத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.

அதற்கு எமது அரசியல் தலைமைகள் முயற்சி எடுப்பார்கள் ஆயின் அதற்கு தேவையான துறைசார் ஆலோசனைகள் அனைத்தினையும் வழங்குவதற்கு நான் தயாராக உள்ளேன் என்று பேராசிரியர் சோ. சந்திரசேகரன் மேலும் தெரிவித்தார்.

Wednesday, August 27, 2014

தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பெனிக்கு சொந்தமான 4 தோட்ட பிரிவுகளை சேர்ந்த சுமார் 1000ற்கும் அதிகமாக தொழிலாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை முதல் மஸ்கெலியா தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த தோட்டங்களில் கடமையாற்றும், தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோரிக்கைவிடுத்து, தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தோட்ட அதிகாரி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வந்தவர் எனவும் அவர் சிறந்த முறையில் தனது கடமைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அவரை இடமாற்றம் செய்வதனை ஏற்றுகொள்ள முடியாது என வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டடுள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் மேற்படி தோட்ட அதிகாரியை அவரின் தனிப்பட்ட காரணத்திற்காக இடமாற்றம் செய்துள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர்களுக்கு புதிய குடியிருப்பு

பெருந்­தோட்­டங்­களில் பணி­யாற்றும் தொழி­லா­ளர்­களின் வாழ்க்­கைத்­த­ரத்தை மேம்­ப­டுத்தும் வகையில் ஹற்றன், நுவ­ரெ­லியா, இரத்­தி­ன­புரி, கேகாலை, காலி, கண்டி மற்றும் பதுளை ஆகிய பிர­தே­சங்­களில் புதிய குடி­மனைத் தொகு­தி­களை நிர்­மா­ணிக்கும் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பெருந்­தோட்ட முத­லா­ளிமார் சம்­மே­ளனம் அறி­வித்­துள்­ளது. கால்­நடை மற்றும் கிரா­மிய அபி­வி­ருத்தி அமைச்சர் ஆறு­முகம் தொண்­டமான் மற்றும் அமைச்சின் வழி­காட்­ட­லுக்கு அமை­வாக இந்த திட்டம் பெருந்­தோட்­ட­ம­னி­த­வள அபி­வி­ருத்தி நிதி­யத்தின் மூலம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.
 
இந்த குடி­ம­னைத்­தொ­கு­திகள் நிர்­மா­ணித்து கைய­ளிக்கும் திட்­டத்­துக்கு அமை­வாக 855 தனி வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளன. இவை இந்த ஆண்டின் இறு­தி­யினுள் பூர்த்­தி­ய­டையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. பெருந்­தோட்ட கம்­ப­னி­களின் மூலம் நிர்­வ­கிக்­கப்­படும் பெருந்­தோட்­டங்­களை சேர்ந்த தொழி­லா­ளர்­க­ளுக்­காக பழங்­கால வீடு­களில் 60 வீத­மா­னவை புதுப்­பிக்­கப்­பட்­டுள்­ளன அல்­லது கூரைகள் வேயப்­பட்டும், உட்­கட்­ட­மைப்பு வச­திகள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு மெரு­கேற்றம் செய்­யப்­பட்­டுள்­ளன.
 
நவீன வடி­வ­மைப்பில் அமை­ய­வுள்ள இந்த குடி­ம­னைகள், ஒவ்­வொன்றும் 7 பேர்ச் காணியில் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளன. 550 சதுர அடியில் அமை­ய­வுள்ள இந்த மனைகள் ஒவ்­வொன்­றையும் நிர்­மா­ணிக்க 515,000 ரூபா வீதம் செல­வாகும் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
 
2 படுக்­கை­ய­றைகள், வசிப்­பிட பகுதி, சமை­ய­லறை, குளி­ய­லறை மற்றும் குழாய் நீர் வச­தி­யுடன் இந்த புதிய வீடுகள் அமை­ய­வுள்­ளன. வீட்­டைச்­சூழ காணப்­படும் 3 பேர்ச் காணியை தோட்டச் செய்­கை­க­ளுக்கு பயன்­ப­டுத்திக் கொள்ள முடியும். மேலும், புதிய வீட்­டுத்­திட்­டத்­துக்கு மேல­தி­க­மாக, தற்­போது காணப்­படும் வீடு­களின் கூரை­களை மாற்றம் செய்­வ­தற்­காக 94 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.
 
இதற்­க­மை­வாக சுமார் 1700 அல­குகள் புதி­தாக வழங்­கப்­ப­ட­வுள்­ளன. இந்த புதிய வீடு­களின் மூலம் அனு­கூலம் பெறுவோர், அவற்றின் உரி­மை­யா­ள­ரா­வார்கள். இந்­த ­கு­டி­ம­னை­களின் நிர்­மா­ணப்­ப­ணி­களின் போதும், நிர்­மாண நட­வ­டிக்­கை­களில் ஓர­ளவு உத­வி­க­ளை­வ­ழங்­கு­வார்கள். நிர்­மா­ணப்­ப­ணி­களின் ஓர­ளவு பங்­க­ளிப்­புக்­காக கடன் வச­தி­களும் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளன.
 
இவை அனைத்தும் சொந்த உரி­மையை உறுதி செய்­வ­தற்கு முக்­கி­ய­பங்­க­ளிப்பை வழங்­கு­வ­தாக அமையும். மேம்­ப­டுத்­தப்­பட்ட சுகா­தாரம் மற்றும் தூய்மை, கல்­வி­செ­யற்­பா­டு­க­ளுக்­கான தனிமை போன்­றன சமூக ரீதி­யான அனு­கூ­லங்­களும் இதன் மூலம்­ கு­டும்­பத்­தா­ருக்கு கிடைக்கும்.
 
இந்த புதிய குடி­ம­னைத்­தொ­கு­திகள் கைய­ளிப்பின் மூலம் பெருந்­தோட்­டத்­து­றையை சேர்ந்த மக்­க­ளின் ­வாழ்க்கை முறையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடியும் என்­பதில் பெருந்­தோட்ட கம்­ப­னி­கள்­ நம்­பிக்­கையை கொண்­டுள்­ளன.
 
இதன் மூலம் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் மேலும் அர்ப்­ப­ணிப்­பு­டன்­ த­மது தொழில்­ந­ட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பார்கள் எனவும் எதிர்­பார்க்­கி­றது. எமது துறையை பொறுத்­த­மட்டில் மனி­த­வ­ளங்கள் என்­பது முது­கெ­லும்­பாக அமைந்­துள்­ளது.
 
வெவ்­வே­று­வீ­ட­மைப்­புத்­திட்­டங்­களின் மூலம் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களின் வாழ்க்­கைத்­த­ரத்தை மேம்­ப­டுத்­து­வது தொடர்பில் தமது அர்ப்­ப­ணிப்பை கம்­ப­னிகள் வெ­ளிப்­ப­டுத்­தி­யுள்­ளன. பெருந்­தோட்ட கம்­ப­னி­களின் மூலம் வழங்­கப்­படும் சமூக பொறுப்­பு­ணர்வு வாய்ந்த செயற்­பா­டு­களின் மூல­மாக பெருந்­தோட்­டங்­களில் வசிக்கும் மக்­களின் வாழ்க்­கைத்­த­ரத்தில் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­படும் என்ற நம்­பிக்­கையை நாம் கொண்­டுள்ளோம்.
 
இந்த திட்டம் மற்றும் ஏனைய நிகழ்ச்­சி­களின் மூல­மாக இந்த துறையில் சிறந்த பெறு­பே­று­களை நாம் எதிர்­பார்க்­கிறோம் என பெருந்­தோட்ட முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தின் தலைவர் ரொஷான் ராஜ­துரை தெரிவித்தார்.
 
இலங்­கையின் பெருந்­தோட்ட கம்­ப­னிகள் எப்­போதும் பெருந்­தோட்ட மக்­களின் வாழ்க்­கைத்­த­ரத்தை மேம்­ப­டுத்­து­வதன் முக்­கி­யத்­துவம் பற்றி தொடர்ந்து வலி­யு­றுத்தி கவனம் செலுத்தி வரு­கின்­றன. 200,000க்கும் அதி­க­மான தொழி­லாளர் சனத்­தொ­கைக்கு வீடுகள் வழங்­கு­வது என்­பதன் மூலம் 1 மில்­லியன் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு அனு­கூ­லங்­களை வழங்­கு­வ­தாக அமைந்­தி­ருக்கும்.
இதில் பெரும்­பா­லா­ன­வர்கள் வெளி­யி­டங்­களில் பணி­யாற்­று­ப­வர்­க­ளாக இருப்­பார்கள். இலங்­கையின் தேசிய பொரு­ளா­தா­ரத்தின் மூன்­றா­வது மிகப்­பெ­ரிய பங்­க­ளிப்­பா­ள­ராக திகழும் தேயி­லைத்­து­றையின் பிர­தான சவா­லாக, வினைத்­திறன் வாய்ந்த தொழி­லா­ளர்­களை பேணு­வது அமைந்­துள்­ளது. இதன் கார­ண­மாக நாம் இதை உணர்ந்து, பெருந்­தோட்­டங்­களில் முன்­னெ­டுத்­துள்ள அபி­வி­ருத்தி திட்­டங்கள் பற்றி சம்பந்தப்பட்ட துறைசார்ந்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என ராஜதுரை மேலும் குறிப்பிட்டார்.