இலங்கையின் தேயிலை கைத்தொழிலுக்கு 150 வருடங்கள் நிறைவடைந்ததை குறிக்குமுகமாக உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும், சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கும் இவ்விழாக்களில் முக்கிய இடம் கிடைக்கவில்லையென விமர்சனமும் எழுந்துள்ளது.
எமது தேயிலைத் தொழிற்துறைக்கு சிறு தேயிலை தோட்டங்களின் பங்களிப்பை நாம் குறைவாக எடைபோட முடியாது.
சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் தேசபற்று விஜேரத்ன தேவ கெதர கூறுவது என்னவென்றால், சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் எண்ணிக்கை 2016ம் ஆண்டு 3,93,420 ஆகும். அவர்கள் 121.967 ஹெக்டயார் காணியில் தேயிலையைப் பயிரிட்டிருந்தார்கள். அவர்கள் 2016ம் ஆண்டு 21806 இலட்சம் கிலோ தேயிலையை உற்பத்திச் செய்திருந்தார்கள்.
அண்ணளவாக 25 இலட்சம் பேர் சிறிய தேயிலைத் தோட்டம் மூலம் வாழ்க்கை நடத்துகின்றார்கள். மொத்த தேயிலை உற்பத்தியில் 74.5 வீதம் 2016ம் ஆண்டு சிறிய தேயிலைத் தோட்ட பிரிவினருக்கே கிடைத்தது. 2016ம் ஆண்டு தேயிலை ஏற்றுமதி வருமானமாக 1269 மில்லியன் அமெரிக்க டொலர் கிடைத்தது. அதாவது 184777 மில்லியன் ரூபா கிடைத்தது. சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை 1977ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01ம் திகதி சிறுதேயிலைத் தோட்டங்களை அபிவிருத்தி செய்யவே ஆரம்பிக்கப்பட்டது.
சிறிய தேயிலை தோட்டங்களின் உற்பத்தியை அதிகரித்தல், வர்த்தக சந்தர்ப்பங்களை அதிகரித்தல், அத்துறையில் தொழில் ஈடுபட்டுள்ள மக்களின் சமூக நலங்களை வழங்குதல் என்பன அவ் அதிகார சபைக்கு வழங்கப்பட்ட பணிகளாகும்.
கிராமிய பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதும் அரச கொள்கையின் முக்கிய இரு விடயங்களாகும். கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் சிறிய தோட்டங்களுக்கும், சிறிய இறப்பர் தோட்டங்களுக்கும் முக்கிய பங்குள்ளது.
தேயிலை உற்பத்தியாளர்களின் அசமந்தம்
சில கணக்கெடுப்புகள் மூலம் வெளிவந்த விடயம் என்னவென்றால் தேயிலை உற்பத்தி செய்யக் கூடிய காணிகள் அதிகமாக இருந்தும். அதற்காக முயற்சி செய்யும் உற்பத்தியாளர்கள் குறைவாகவே காணப்படுகின்றார்கள். ஆகவே அவர்கள் உற்பத்தியை மேற்கொள்ள அவர்களை ஊக்குவிக்க வேண்டிய நிலைமை தோன்றியுள்ளது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக மாத்தறை, காலி, களுத்துறை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் சிறிய தேயிலைத் தோட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. இது தொடர்பாக ஆய்வுகள் நடத்திய தேயிலைத் தோட்ட அபிவிருத்திச் சபையின் கணக்கெடுப்பின்படி முற்றாக அழிவடைந்த காணிகளின் அளவு 658.14 ஹெக்டயராகும். இக் காணியின் உரிமையாளர்கள் 4053 பேராகும். அவர்கள் 07 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகும்.
இவ்வாறு பாதிப்பு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் பெருமளவு பச்சை தேயிலைக் கொழுந்துகள் மூலம் உயிர் வருமானத்தை பெற்றுக் கொண்டிருந்தார்கள். தெற்கு மாகாணத்தில் 1 கிலோ பச்சைத் தேயிலை கொழுந்து 1 கிலோவுக்கு 100-110 ரூபா வரை கிடைத்ததாக அதிகார சபையின் தலைவர் கூறியுள்ளார். வருமானத்தை இழந்த தேயிலைக் காணி சொந்தக்காரர்களின் நிலைமையை மேம்படுத்துதற்காக அரைவாசி மற்றும் முற்றாக பாதிப்படைந்த காணிகளை புனர்நிர்மாணம் செய்ய வேண்டியுள்ளது.
அதற்காக உதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. முற்றாக பாதிப்படைந்த காணிகளின் மீண்டும் தேயிலையை நட 280.4 மில்லியன் ரூபாவும் அரை வாசி பாதிப்படைந்த காணிகளின் மீண்டும் தேயிலை நடுவதற்கு 111.66 மில்லியன் ரூபாவும் தேவையென கணக்கிடப்பட்டுள்ளது. மே மாதம் தொடக்கத்தில் தேயிலைக் கன்றுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமென கூறப்பட்டதோடு தனியார் துறையினரினது நாற்று மேடைகளிலும் தேயிலைக் கன்றுகளின் விலை அதிகரிக்குமென கூறப்பட்டது.
சந்தை குறித்த தவறான கருத்து
சிறிய தேயிலைத் தோட்ட அதிகார சபைக்குச் சொந்தமான களுத்துறை, கேகாலை, கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை போன்ற இடங்களிலுள்ள நாற்று மேடைகளில் தேவையான அளவு தேயிலைக் கன்றுகள் விநியோகிக்கப்படுவதாக தலைவர் கூறினார். மினவும் உயர் தரத்திலான தேயிலைக் கன்றொன்றை 25 ரூபா வீதம் தேயிலை மீள் நடுகைப் புரிபவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
சர்வதேச தேயிலைச் சந்தையில் இலங்கைத் தேயிலையின் தரம் குறைவடைந்து வருவதாகக் பிரசாரம் செய்யப்பட்டது. வியட்நாமில் தேயிலை உற்பத்தி விரைவாக முன்னேற்றம் அடைவதால் இலங்கையின் இடத்தை வியட்நாம் கைப்பற்றும் என எதிர்வு கூறப்பட்டது. ஆனால் இலங்கை தேயிலை என்றும் வர்த்தகப் பெயருக்குள்ள வணிக தரம் குறைவடையாது காணப்படுகின்றது. கொழும் தேயிலை ஏல விற்பனைக்கு முன்வைக்கப்படும் தேயிலையின் அளவு 7 மில்லியன் கிலோ அளவுக்கும் அதிகமாகவே உள்ளது. இவ் அளவானது சிறு தேயிலைத் தோட்ட காணி உரிமையாளர்களின் உற்பத்தி குறைவடைந்த போதெ காணப்பட்டுள்ளது.
தேயிலைத் தோட்டம் என 10 பர்சஸ் தொடக்கம் 10 ஏக்கர் வரையான காணிகளையே குறிப்பிடுகின்றார்கள். சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கான சங்கம் ஒன்றும் செயட்படுகின்றது. 2014 ல் 1383 ஆக காணப்பட்ட சங்க்களின் எண்ணிக்கை 2015ல் 1394 ஆகவும் 2016ல் 1407 ஆகவும் அதிகரித்தது. அதன் மூலம் தொழிலின் அபிவிருத்திக்கான ஒருங்கிணைந்த குரலும் எழுப்படுகின்றது. தேயிலைத் தொழிலின் இன்னுமொரு முக்கிய அம்சம் தேயிலைத் தொழிற்சாலைகளாகும். சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் தேயிலைச் தொழிற்சாலைகளை நவீனமயப்படுத்த பெருந்தோட்டக் கைத்தொழில் துறை அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
ஜப்பானில் தேயிலைத் தொழிற்சாலை சூரிய சக்தி மூலம் இயக்கப்படுகின்றது. அதேபோல் எமது தொழிற்சாலைகளை நவீனப்படுத்த வேண்டுமென அவர் கூறினார். அதற்காக வெளிநாட்டு உதவிகளும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் கோப்பிப் பயிர்ச் செய்கை அழிவடைந்த பின்னரே தேயிலை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது. 1880 ம் ஆண்டு கோப்பி களஞ்சியசாலைகள் தேயிலைத் தொழிற்சாலைகளாக மாற்றம் பெற்றன. பின்னர் இங்கிலாந்தின் மார்ஷல் நிறுவம் மற்றும் பர்மின்ஹாம் மற்றும் பெர்பர்ஸ்ட் நிறுவனமும் தேயிலை தொழிற்சாலைக்கான இயந்திரங்களை உற்பத்தி செய்து இலங்கைக்கு கப்பல் மூலம் கொண்டு வந்தார்கள். அதன் பின்னரே தேயிலைத் தொழிற்சாலை யுகம் ஆரம்பிக்கப்பட்டது.
அபிவிருத்திக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
தற்போது இலங்கையில் தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்களின் சங்க அங்கத்துவ தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 200க்கும் அதிகமாகும். பல தரத்திலான ஊழியர்கள் தேயிலை உற்பத்தியில் பங்குகொள்கின்றார்கள். முன்னர் நீராவி மூலம் இயந்திரங்கள் இயக்கப்பட்டாலும் தற்பொது மின்சாரம் மூலம் இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன.
சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் கொழுந்தை தொழிற்சாலைகளே கொள்வனவு செய்கின்றன.
சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் நிலைமையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் பற்றிய விபரங்களை அனைத்து அதிகார சபை கிளை காரியாலயங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும். காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் பண்டாரவெல ஆகிய இடங்களில் காரியாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்காரியாலயங்களை மேம்படுத்த 80 இலட்சம் ரூபாய் செலவிடப்படவுள்ளது. அதேபோல் மீண்டும் நடுகையை மேற்கொள்ள தேயிலைச் செடியை அகற்றுவோருக்கு சுயதொழில் மூலம் வருமானத்தைப் பெற திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.
திட்ட அதிகாரிகள் சேவையும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதன் மூலம் சிறு தேயிலைத் தோட்ட செய்கையில் ஈடுபடுபவர்களு தேயிலைன ஆலோசனைகள் வழங்கப்படும். மண்சரிவுக்குள்ளான காணிகளுக்குப் பதிலாக வேற்று காணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல் அரசாங்கம் காணிகள் தொடர்பாக புதிய கொள்கையொன்றையும் பின்பற்றவுள்ளது. அதன் மூலம் மக்கள் முகங்கொடுக்கும் காணிப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் இதன் மூலம் சிறு தேயிலைத் தோட்டங்களின் அதிகரிப்பும் நிகழுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
கருணாரத்ன அமரதுங்க
தமிழில்: வீ. ஆர். வயலட்
நன்றி- தினகரன்
No comments:
Post a Comment