தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் பெற்றுக்கொடுப்போம் என்று கூறிய தொழிற்சங்கங்கள், இறுதியில் 730 ரூபாயுடன் வாயை மூடிக்கொண்டன. இது அப்பாவி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இதனை மக்கள் விடுதலை முன்னணி, வன்மையாகக் கண்டிக்கின்றது’ என ஜே.வி.பியின் பெருந்தோட்டத் தொழிற்சங்கமான அகில இலங்கைத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஜே.எம்.ஏ.பிரேமரத்தின தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
“தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு, அவர்களது போராட்டங்களும் மக்கள் சக்தியுமே காரணம். இந்நிலையில், 730 ரூபாயை பெற்றுக்கொடுத்தவர்கள், தொழிலாளர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிலுவைப் பணத்தையும் முதலாளிமார் சம்மேளனத்தின் சட்டைப்பைக்குள் வைத்துவிட்டு வந்துள்ளனர்.
2014ஆம் ஆண்டில் வாழ்க்கைச் செலவை முன்னெடுக்க,நாளொன்றுக்கு 1,450 ரூபாய் தேவையென எமது சங்கம் கூறியிருந்தது. ஆனால், 2016இல் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு 1,500ரூபாயும் போதாது.
இந்நிலையில், 1,000 ரூபாயை கோரிக்கையாக முன்வைத்துவிட்டு இறுதியில் 730 ரூபாய்க்கு கூட்டொப்பந்தத்தை கைச்சாத்திட்டமை தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்” என்றார்.
நன்றி- தமிழ் மிரர்
No comments:
Post a Comment