சப்ரகமுவ மாகாணத்தில் மேலும் 1,500 பட்டதாரி ஆசிரியர்கள் சேவையில் இணைத்தக் கொள்ளப்படவுள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாகவும் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார்.
சப்ரகமுவ மாகாணத்தில் பட்டதாரிகளுக்கு அசிரியர் நியமனம் வழங்குவது குறித்து நேற்று(28) சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சப்ரகமுவ மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு மேலும் 1,500 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்வதற்கு, மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனடிப்படையில், விஞ்ஞானம், கணிதம், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சி ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கமைய, 2016-04-04 திகதி தமது பட்டத்தை முழுமையாக முடித்துக்கொண்ட, சப்ரகமுவ மாகாணத்தில் நிரந்தர வதிவிடத்தை கொண்ட பட்டதாரிகளை, ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆங்கில ஆசிரியர் குறித்து உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பாடநெறியை டிப்ளோமா பாடநெறியை முழுமையாக முடித்துக்கொண்டவர்கள் விண்ணப்பிக்க முடியுமென சப்ரகமுவ மாhகண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment