ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பினை இலங்கைத் தொழிலாளர்
காங்கிரஸ் அன்றைய வாழ்க்கைச் செலவின் நிலைமையை கருத்திற்கொண்டே
முன்வைத்தது. இன்றைய நிலையில் 1500 ரூபா பெற்றுக்கொடுத்தாலும்
போதுமானதாக இருக்காது. இ.தொ.கா. விடம் போதிய அரசியல் அதிகாரபலம்
இருந்திருக்குமேயானால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப்
பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கும். சம்பள
உயர்வுகளும் சாத்தியமாகியிருக்கும். கூட்டு ஒப்பந்தம்
கைச்சாத்திடப்படுவதும் தாமதமாகியிருக்காது என்று ஊவா மாகாண
அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண அமைச்சர் பொறுப்புக்களை ஏற்றபின்னர்
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தோட்டத் தொழிலாளர்களின்
சம்பள உயர்வு தாமதம் குறித்து விளக்குகையிலேயே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், தற்போது மலையகத்தின் அமைச்சர்களாக இருப்பவர்கள்
இலங்கைத் தொழிலா ளர் காங்கிரஸை விமர்சிப்பதிலேயே கால த்தை
கடத்திக்கொண்டிருக்கின்றனர். அவ் அமைச்சர்களினால் ஏன் தோட்டத்
தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை
என்று நாம் மட்டுமல்ல இன்று மக்களும் கேள்வி கேட்கத்
தொடங்கிவிட்டனர். அப்படியானால் விமர்சனங்களை மட்டுமே
முன்வைத்துவரும் அவர்களின் செயற்பாடுகள் கையாலாகாத் தன்மையையே
காட்டுகின்றன.
இ.தொ.கா. முன்வைக்கும் சம்பள அதிகரிப்புத் தொகையைவிட
அதிகரித்த தொகை யையே ஏனைய தொழிற்சங்கங்கள் முன்வைப்பது வழக்கமாக
இருந்து வந்தது. எனினும் நாம் முன்வைத்த 1000 ரூபா கோரிக்கையைவிட
அதிகரித்த தொகையை கோராது அதிலும் குறைவான தொகையே கோரப்பட்டது.
அன்றைய வாழ்க்கைச்செலவின் நிலைமையை கருத்திற்கொண்டே
ஆயிரம் ரூபா உயர்வினை கோரியிருந்தோம். இது தொழிலாளர்கள் மட்டில்
நியாயமான கோரிக்கையாகும். இதனை அவர்களும் ஏற்றுள்ளனர். இ.தொ.கா.
முன்வைக்கும் சம்பள உயர்வுக்கு மேலாகவே ஏனைய தொழிற்சங்கங்கள்
கேட்பது வழமையாகும். ஆனால், இ.தொ.கா.வின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு
கோரிக்கைக்கு அனைத்து தொழிற்சங்கங்களும் இணங்கியது
புதுமையேயாகும். சில தொழிற்சங்கங்கள் 1000 த்திலும் குறைவான
தொகையையும் முன்வைத்து வந்தன.
இன்றைய வாழ்க்கைச்செலவு உயர்வுக் கேற்ப இந்தத்
தொகையும் போதுமானதன்று. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின்
விலைகளும் அதிகரித்துள்ளன. நாம் அதிகாரத்தில் இருந்திருந்தால் இவற்றை முறையாக நிர்வகித்திருப்போம். இன்றைய நிலையில் 1500 ரூபா பெற்
றுக்கொடுத்தாலும் போதுமானதாக இருக்காது. இதுவிடயத்தில் ஏனைய தொழிற்சங்கங்கள் இ.தொ.கா.வை விமர்சிப்பதை விடுத்து தோட்டத் தொழிலாளர்கள்
வாழ்க்கைச்செலவை ஈடு செய்யும் வகையில் சம்பள உயர்வினைப் பெற்றுக் கொடுக்க
முன்வரவேண்டும் என்று கூறி னார்.
கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக நியாயமான சம்பள அதிகரிப்பு என்பது கேள்விக்குறியே
கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாக நியாயமான சம்பள
உயர்வினை பெற்றுக்கொள்ள முடியுமா என்பது தற்போது
கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இது குறித்து ஆழமாக சிந்தித்து உரிய
நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மாற்றுத் தொழில்துறை
தொடர்பிலும் மலையக மக்கள் ஆர் வம் செலுத்த வேண்டும் என்று திறந்த
பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எ.எஸ்.சந்திரபோஸ்
தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 1992 ஆம் ஆண்டு முதல் கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில்
உள்ளது. கூட்டு ஒப்பந்த நடவடிக்கைகளின் போது தொழிற்சங்கங்கள்
தொழிலாளர் நலன்கருதி பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றன.
எனினும் இக்கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதில்லை.
தொழிற்சங்கங்கள் கோருகின்ற சம்பள உயர்வும் உரியவாறு
தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. தொழிலாளர்களின் வருமான
மட்டத்தில் பாரியளவு மாற்றத்தினை கூட்டு ஒப்பந்தத்தினால்
கொண்டுவர முடியாமல் போயுள்ளது. கூட்டு ஒப்பந்தத்தில் ஏற்கனவே
ஏற்றுக்கொள்ளப்பட்டவாறு வருடத்தில் 300 நாள் வேலை அல்லது
மாதத்தில் 25 நாள் வேலை வழங்குவதற்கு கம்பனிகள் தயாராக இல்லை.
வேலை நாட்களுக்கேற்ப தொழிலாளர்களுக்கு சம்பளம்
வழங்குகின்ற நடைமுறைகளுக்கும் கம்பனிகள் இன்று ஒத்துவருவதாக
இல்லை அரசாங்கத்தின் அழுத்தத்திற்கேற்ப கம்பனியினர் சிறிய தொகை
சம்பள உயர்வினை தொழிலாளர்களுக்கு இம்முறையும்
பெற்றுக்கொடுப்பார்கள் என்ற போது கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக
நமக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் என்று தொழிலாளர்கள்
இனியும் எதிர்பார்த்திருக்க முடியாது. கூட்டு ஒப்பந்தம்
எதிர்காலத்தில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த
எந்தளவிற்கு கைகொடுக்கப் போகின்றது என்பது இப்போது கேள்விக்
குறியாகியுள்ளது.
இந்த நிலையில் பெருந்தோட்ட மக்களின்
வாழ்வாதாரத்திற்கு மாற்று வழிகளை காண வேண்டிய தேவை இப்போது
மேலெழுந்துள்ளது. தோட்டத் தொழில்துறையைக் காட்டிலும் வேறு
எத்தகைய தொழில் முயற்சிகள் தம்மிடம் இருக்கின்றன என்பதனை
தொழிலாளர்கள் அடையாளம் காணுதல் வேண்டும். இளைஞர்கள் பலர்
தோட்டத்துறை வருமானத்தில் அதிருப்தி கொண்டு தோட்டத்தினை விட்டும்
வெளியேறி நகர்ப்புறங்களில் பணிபுரிய சென்றுள்ளனர். சில இளைஞர்கள்
வெளிநாடுகளுக்கும் தொழில் நிமித்தம் சென்றுள்ளனர். இவர்களுடைய
வருமானத்தை நம்பியே இன்று இவ்விளைஞர்களின் பெற்றோர்கள்
தோட்டத்தில் இருக்கின்றனர். தோட்டத் தொழில் தவிர்ந்த ஏனைய
வருமானங்கள் தான் இன்று தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு
கைகொடுக்கின்றன.
கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் அதிருப்திகள் மேலோங்கி
வருகின்றன. இதன் மீதான நம்பிக்கைத்தன்மை வலுவிழந்து வருகின்றது.
இந்நிலையில் மாற்றுத் தொழில்களை இனங்கண்டு அறிமுகம் செய்வதோடு அதற்குரிய
திறன்களையும் எம்மக்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும். கூட்டு
ஒப்பந்தத்தை இனியும் நம்பி இருப்பது சாத்தியமானதில்லை. விவேகமா னதும் இல்லை
என்றார்.
பிரதமர் தலைமையில் நாளை சம்பளப் பேச்சு
தோட்டத்தொழிலாளரின் சம்பள அதிகரிப்பை
உறுதிப்படுத்தும் கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி 7 மாதம்
கடந்துவிட்ட நிலையில் நாளை வியாழக்கிழமை பிரதமர் தலைமையில்
முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகி
யோருக்கு இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது கூட்டு ஒப்பந்தத்தில்
கைச்சாத்திடும் தொழி ற்சங்கங்களுடன் கைச்சாத்திடாத
தொழிற்சங்கத் தலைவர்களுடனும் பிரதிநிதிகளும்
கலந்துகொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது
அமைச்சர்களான பழனி திகாம்பரம், மனோ கணேசன் மற்றும்
வி.இராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்களுடன்
தொழிலு றவு அமைச்சர் ஜோன் செனவிரட்னவும் இணைந்திருப்பார்.
மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவு க்கு வந்துள்ள
கூட்டு ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்ளும் பொருட்டு
இடம்பெற்றுவந்த 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் தோல்வி
கண்டுள்ளன. தோட்டத்தொழிலாளர்களின் நாளொன்றுக்கான
சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்க வேண்டுமென்பதே இலங்கை
தொழிலாளர் காங்கிரஸின் கோரிக்கையாகும்.
இதனை முன்வைத்த பேச்சுக்களே தோல்வி கண்டுள்ளன. 1000
ரூபா சம்பள அதிகரிப்பினை பெற்றுக்கொள்வதற்கென பொதுத்தேர்தல்
பிரசாரக் காலப்பகுதியில் போராட்டங்களும்
முன்னெடுக்கப்பட்டுள்ளன. முதலாளிமார் சம்மேளனமும் கம்ப
னிகளும் 1000 ரூபா சம்பளம் வழங்குவதற்கு முடியாதென
திட்டவட்டமாக அறிவித்து வந்ததுடன் அதே நிலைப்பாட்டிலேயே இருந்து
வருகின்றன.
மேலும் 770 ரூபாவை அதிகரித்த சம்பளமாக
வழங்கமுடியும் என்பதே கம்பனிகளின் இறுதி முடிவாக உள்ளது. தேயி லை
விலை வீழ்ச்சி, சந்தை வாய்ப்பு வீழ்ச்சி ஆகியவற்றைக் காரணம் காட்டியே
இவ்வாறு சம்பள அதிகரிப்புக்கு முட்டுக்கட்டை இடப்பட்டு வருவதாகக்
கூறப்படுகிறது.
இந்நிலையிலேயே தேர்தல் காலங்களில்
வாக்குறுதியளித்ததன் பிரகா ரம் தோட்டத் தொழிலாளர்களுக்கு
அதிகரித்த சம்பளத்தைப் பெற்றுத் தருவதற்கான பேச்சுவார்த்தை ஒன்று
பிரதமர் தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது கூட்டு
ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள்,
கம்பனிகளின் பிரதானிகள், முதலாளி மார் சம்மேளத்தின் பிரதானிகள் மற்றும் மலையக அமைச்சர்கள் என பல தரப்பினரும் இணைந்து கொள்ளவுள்ளனர். இதன்போது இடம்பெறும் பேச்சுவார்தையில் இறுதி முடிவு எட்டப்படும் என்று நம் பப்படுகிறது.
No comments:
Post a Comment