கம்பனிகளின் அடக்குமுறை கூட்டு ஒப்பந்த
விடயத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தோட்டங்கள் நட்டத்தில்
இயங்குவதாக காரணம் காட்டி தொழிலாளர் சம்பள உயர்வு விடயத்தில்
கம்பனிகள் இழுத்தடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.
தோட்டங்கள் நட்டத்தில் இயங்குகின்றன என்பதில் எந்தளவுக்கு
உண்மையுள்ளது எனத்தெரியவில்லை என்று மலையக மக்கள் முன்னணியின்
செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வு
வழங்கப்பட வேண்டுமென்று பிரதமர் தனது கரிசனையை வெளிப்படுத்தி
இருக்கின்றார். இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் தமிழ் முற்போக்கு
கூட்டணியும் அரசாங்கத்துக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்கும்
அழுத்தம் கொடுத்து வருகின்றது
கம்பனிகளின் அடக்குமுறை கூட்டு ஒப்பந்த
விடயத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தோட்டங்கள் நட்டத்தில்
இயங்குவதாக காரணம் காட்டி தொழிலாளர் சம்பள உயர்வு விடயத்தில்
கம்பனிகள் இழுத்தடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இதில்
எந்தளவுக்கு உண்மையுள்ளது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டிய
நிலை காணப்படுகின்றது. தேயிலை என்பது விவசாயத்துடன் தொடர்புடைய
ஒன்றாகும். விவசாயத்தில் விளைச்சல் என்பது இயற்கையானது. இலாபமும்
நட்டமும் மாறி மாறி வரும். தொடர்ந்து இலாபம் கிடைக்கும் என்று
எதிர்பார்க்க முடியாது. விவசாயப் பொருட்களுக்கு விலைத்தளம்பல்கள்
இருப்பதும் இயற்கையாகும். இதனை புரிந்தும் புரியாதவாறு செயற்படும்
கம்பனியினர் நட்டம் ஏற்பட்டு விட்டதாக கூக்குரல் இடுகின்றனர்.
கம்பனியினரின் அடக்கு முறையே இதில் வெளிப்படுவதை காணக்கூடியதாக
உள்ளது. கம்பனியினர் சாட்டுகளை கூறி சம்பள உயர்வு விடயத்தை
மழுங்கடிக்கச் செய்வது எவ்விதத்திலும் நியாயமில்லை.
இதேவேளை தமது அமைச்சு விடயங்கள் தொடர்பாக
கலந்துரையாடுவதற்கொன்று அண்மையில் எமது மலையக மக்கள்
முன்னணியின் தலைவர் வி.இராதாகிருஷ்ணன் பிரதமரை சந்தித்துள்ளார்.
இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தோட்டத் தொழிலாளர்களுக்கு
நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற தனது கரிசனையை
வெளிப்படுத்தி இருக்கின்றார். தொழிலாளர்களின் பொருளாதார
நெருக்கடிக்கு பரிகாரமாக உடனடியாக சம்பள உயர்வினை பெற்றுக்
கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
கம்பனியினரின் கெடுபிடிகளை விரைவில்முடிவுக்கு கொண்டு வந்து தொழிலாளர்க ளுக்கு நியாயமான
சம்பளத்தை பெற்றுக் கொடுக்க சகல தரப்பினரும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அத்துடன் புதிய கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதில் காலதாமதம்
ஏற்பட்டுள்ளதால் நிலுவைத் தொகையும் தொழிலாளர்களுக்கு உரிய வாறு வழங்கப்பட
வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment