எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும் தொழிலாளர் விடுதலை முன்னணி அரசுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அக் கட்சியில் பொதுச் செயலாளர் எஸ் அருள்சாமி தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் உயர் மட்ட அரசியல் குழு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவை கொழும்பில் 16 ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடியபோது
- தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு தோட்டத் தொழிலாளர்கள் மானிய விலையில் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தற்போது தோட்டப்பகுதிகளில் மந்தகதியில் முன்னெடுக்கப்படுகின்ற தனி வீட்டுத் திட்டத்தினைத் துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பெருந்தோட்டப்பகுதி இளைஞர், யுவதிகள் வாழ்கின்ற பிரதேசங்களில் உரிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். போன்ற விடயங்கள் பேச்சுவார்த்தையின் போது மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதாகக் குறிப்பிட்டார்
No comments:
Post a Comment