Saturday, January 10, 2009

மத்திய மாகாணசபைத் தேர்தல் அன்றும் இன்றும்

எதிர்வரும் பெப்ரவரி 14ம் திகதி நடைபெறவுள்ள வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய பிரதான கட்சி கூட்டணிகளும், சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழும் மத்திய மாகாணத்தில் சிறுபான்மை கட்சிகள் தனித்து போட்டியிடாமல் பிரதான தேசிய கட்சிகளில் இணைந்து போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆளும் அரசு கட்சியான ஐ.ம.சு முன்னணியின் வெற்றிலை சின்னத்தில்
இ.தொ.கா சார்பில் முன்னாள் மத்திய மாகாண கல்வியமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன், மற்றும் திருமதி அனுஷா சிவராஜா, சிங் பொன்னையா, ஏ. சத்திவேல் எம்.ராம், எம். ரமேஷ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

மலையக மக்கள் முன்னணி சார்பில் எல். பாரதிதாசன், ஆர். கணகரட்ணம், எம். மயில்வாகனம் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் மத்திய மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் எஸ் அருள்சாமி, ஏ.கே. கல்யாணகுமார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
புத்திரசிகாமணி தலைமையிலான மலையக தேசிய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் எம். நடராஜபிள்ளை போட்டியிட இருந்தபோதும் அவர் சுகயீனம் காரணமாக விலகிக் கொண்டார் அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.

ஆக மொத்தம் ஐ.ம.சு முன்னணி சார்பில் 11 தமிழ் வேட்பாளர்களும், 8 பெரும்பான்மை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில்
ஐ.தே.க சார்பில் எம் ரவீந்திரன், ஏ.ஹரிசந்திரன், எல். நேருஜி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் பி. திகாம்பரம், சங்கத்தின் பொருளாளர் ஆர். உதயகுமார் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் சார்பில் எஸ் சதாசிவம், அக் கட்சியின் உப தலைவருமான கணபதி கணகராஜ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் (மனோ கணேசன் தலைமை) பிரகாஷ் கணேசன் களத்தில் உள்ளார்.

குறிப்பு:-
  • 2004ம் ஆண்டு ஐ.தே.க யின் யானை சின்னத்தில் இ.தொ.கா சார்பில் போட்டியிட்ட ஆறு பேர் வெற்றி பெற்றிருந்தனர். அன்று ஐ.தே.க(ஐ.தே.க, இதொ.கா, தொழிலாளர் தேசிய சங்கம்) முன்னணிக்கு 1,38,572 வாக்குகள் கிடைத்திருந்ததால் இ.தொ.கா வின் உறுப்பினர்கள் ஆறு பேர் உட்பட மேலும் இருவர் தெரிவாகி இருந்தார்கள்.
  • 2004ம் ஆண்டு மலையக மக்கள் முன்னணி தனித்து போட்டியிட்டு 36,939 வாக்குகளை பெற்று இரு உறுப்பினர்கள் தெரிவானார்கள்.(எஸ் அருள்சாமி, பி.திகாம்பரம்)
  • 2004ம் ஆண்டு ஐக்கிய சுதந்திர முன்னணி (பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜே.வி.பி, இலங்கை ஜனநாயக முன்னணி) க்கு 89,192 வாக்குகள் பெற்று ஆறு உறுப்பினர்கள் தெரிவானார்கள். இங்கு சிறுபான்மை இனத்தவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை.
    எதிர்வரும் தேர்தலில் கள நிலைமைகள் முற்றும் மாறுபட்டவையாகவே காணப்படுகின்றன. முன்பு ஒன்றாக இணைந்து வெற்றி பெற்றவர்கள் இன்று இரு வௌ;வேறு கூட்டணிகளில் தனித்தனியாக போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற சிறுபான்மை கட்சிகளின் உறுப்பினர்கள் இம் முறை வெற்றி பெறுவது பெரும் பல பரீட்சையாக அமைந்துள்ளது. – பானா தங்கம்

No comments: