தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த, கிளைபோசெட் பாவனைத் தடை நீக்கப்பட்டுள்ளதாக, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் அடுத்த வாரமளவில் அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் ஏனைய விவசாய உற்பத்திகளுக்கான, கிளைபோசெட் பாவனைத் தடை தொடருமெனவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்
கிளைப்போசைட்டின் செறிவு தேயிலையில் அதிகம்
விவசாயப் பொருட்களில், தேயிலையிலேயே கிளைப்போசைட்டின் செறிவு அதிகளவில் காணப்படுவதாக அமெரிக்காவின் உயர் பல்கலைக்கழகம் ஒன்றின் சமீபத்திய ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின்,சுகாதார தொழில் மற்றும் அறிவியலுக்கான மொரொக்சி கல்லூரியினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளைப்போசைட் களைக்கொல்லியாக உலகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அமெரிக்காவின் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள ஆய்வில், தேயிலை,தேயிலை பை,கோப்பி,தேன் ஆகியப் பொருட்களில் கிளைப்போசைட் செறிவு அதிகளவில் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment