Wednesday, May 10, 2017

கொள்கைப் பிரகடனங்களை ‘மாகாண சபையில் முன்வைக்க வேண்டும்

 எதிர்வரும் மாதங்களிலாவது, மலையக மக்களின் சமூக சீரமைப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து கொள்கைப் பிரகடனங்களை மாகாண சபைகளில் முன்வைக்க வேண்டும். அதற்கான அழுத்தங்களையே இங்கு முன்வைக்கின்றோம்” என்று, ஊவா சக்தி அமைப்பின் இணைப்பாளர் இராமசுந்தரம் ரகுராஜ் தெரிவித்தார். ஊவா சக்தி அமைப்பினால், அவ் அமைப்பின் தலைவர் நடேசன் சுரேஸ் தலைமையில் நேற்று(09) பதுளை ரிவர் சைட் விடுதியில் நடைபெற்ற மலையக மக்களின் சமூக சீரமைப்பு விடயமான கொள்கைப்பிரகடனமொன்றினை வெளியீட்டுவைக்கும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு பதுளை மாவட்ட அரச அதிபர் நிமால் அபேயசிரி கருத்துத் தெரிவிக்கையில், “பதுளை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் முஸ்லிம் பாடசாலைகள் சிலவற்றில் க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானம், கணிதம் பாடங்கள் புகட்டப்படுகின்றன. ஆனால், தமிழ் மொழி மூலப்பாடசாலைகளில் க.பொ.த உயர்தரங்களில் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களை கற்பிக்க பாட ரீதியிலான ஆசிரியர்கள் இல்லாதுள்ளனர். பெருந்தோட்ட மக்களின் மேம்பாடுகளுக்கு பெரும் தடைகளாக இருப்பது தெளிவற்ற நிலையும் கல்வி மேம்பாடுகள் இன்மைகளேயாகும். அம்மக்களின் பெரியவர்கள் எத்தனை பேருக்கு தமிழ் அறிச்சுவடிகள் தெரியுமென்பதே, கேள்விக்குறியாகும். இந்நிலை மாற வேண்டும்” என்றார் -

No comments: