Friday, September 30, 2016

தொடரும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டம்


சம்­பள உயர்வு போராட்­டத்தில் குதித்­துள்ள தோட்டத் தொழி­லா­ளர்கள் வீதி­களை மறித்தும், டயர்­களை எரித்தும் பேர­ணி­களை நடத்­தியும் தமது எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்தி வந்த நிலையில் நேற்று நான்­கா­வது நாளா­கவும் போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தனர்.


நேற்­றைய தினமும் டயர்­களை எரித்து வீதி­களை மறித்­த­துடன் உருவப் பொம்­மையை எரித்தும் தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தினர்.  

17 மாதங்­க­ளாக தமக்கு சம்­பள அதி­க­ரிப்­பினை வழங்­காது முத­லா­ளிமார் சம்­மே­ளனம் தம்மை ஏமாற்றி வரு­வ­தா­கவும் தமது வாழ்­வா­தா­ரத்­தோடும் பொரு­ளா­தார நிலை­மை­க­ளு­டனும் பிள்­ளை­களின் கல்விச் செயற்­பாட்­டு­டனும் விளை­யாடி வரு­வ­தா­கவும் அதி­கா­ரிகள் மீதும் சம்­பந்­தப்­பட்ட தரப்­பினர் மீதும் தமது விரக்­தி­யையும் அதி­ருப்­தி­யையும் தெரி­வித்து கோஷங்­களை எழுப்­பி­யதை அவ­தா­னிக்க முடிந்­தது.
இவ்­வாறு நேற்று நான்­கா­வது நாளாக இடம்­பெற்ற தோட்டத் தொழி­லா­ளர்­களின் எதிர்ப்பு போராட்­டத்தில் பதுளை, நுவ­ரெ­லியா மற்றும் கண்டி மாவட்ட தொழி­லா­ளர்கள், ஆத­ர­வா­ளர்கள் இணைந்து கொண்­டனர். இதன்­போது எதிர்ப்பு பதா­கை­களை ஏந்­தி­ய­வாறு கோஷங்­களை எழுப்­பி­ய­துடன் வீதி­களை மறித்து டயர்­களை போட்டு எரித்­தனர்.
அத்­துடன் போடை சந்­தியில் கூடிய தொழி­லா­ளர்கள் ஹட்டன் சாஞ்சி மலை பிர­தான வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­துடன் முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தன் பிர­தா­னி­யொ­ரு­வரின் உருவப் பொம்­மையை வீதியில் நிறுத்தி தீயிட்டு கோஷ­மிட்­டனர்.

நுவ­ரெ­லி­யாவில்
நுவ­ரெ­லியா, கண்டி பிர­தான வீதியில் லபுக்­கலை பிர­தே­சத்தில் கூடிய லபுக்­கலை மேற்­பி­ரிவு, கீழ்­பி­ரிவு, கொண்­டக்­கலை, வெஸ்டோ, பம்­ப­ர­கலை ஆகிய தோட்­டங்­களைச் சேர்ந்த தொழி­லா­ளர்கள் வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இதனால் குறித்த பிர­தே­சத்தில் சுமார் இரண்டு மணி­நேரம் போக்­கு­வ­ரத்து தடைப்­பட்­ட­துடன் பெரும் வாகன நெரி­சலும் பதற்ற நிலையும் உரு­வா­னது.
போராட்­டத்தில் கலந்து கொண்ட தொழி­லா­ளர்கள் தமக்கு 1000 ரூபா சம்­பளம் பெற்றுத் தரப்­பட வேண்டும் என்றும் இல்­லையெல் 850 ரூபா­வை­யேனும் தமக்கு பெற்றுத் தர முத­லா­ளிமார் சம்­மே­ளனம் சம்­ம­திக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்­பினர். தொழி­லா­ளர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட போராட்­டத்தின் போது நுவ­ரெ­லியா பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரித் தலை­மையில் பொலிஸ் பாது­காப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது.
மஸ்­கெ­லியா
மஸ்­கெ­லி­யாவில் கூடிய தோட்டத் தொழி­லா­ளர்கள் 1000 ரூபா கோரிக்­கையை கொண்ட பதா­தையை ஏந்­தி­ய­வாறு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இதன்­போது தமது எதிர்ப்­பி­னையும் வெ ளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். மஸ்­கெ­லியா எரி­பொருள் நிலை­யத்­திற்கு முன்­பாக கருப்புக் கொடி­களை ஏந்­தி­ய­வாறு போராட்­டத்தில் ஈடு­பட்ட தொழி­லா­ளர்கள் 1000 ரூபாவை பெற்றுத் தரு­மாறு இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் பொதுச் செய­லாளர் ஆறு­முகன் தொண்­ட­மானை கோரினர். இதன்­போது அனைத்து தொழிற்­சங்­கங்­க­ளுக்கும் அதி­கா­ரி­க­ளுக்கும் எதி­ரான கோஷங்­க­ளையும் எழுப்­பினர்.
பத்­தனை, போகா­வத்தை
தலவாக்கலை நாவலப்­பிட்டி பிரதான வீதியின் போகா­வத்தை நக­ரத்தில் அணி­தி­ரண்ட பத்­தனை, போகா­வத்தை தோட்டத் தொழி­லா­ளர்கள் பிர­தான வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். தமக்கு நியா­ய­மான சம­ப­ளத்தை பெற்றுத் தரு­மாறு இதன்­போது கோஷங்­களை எழுப்பி நின்­றனர்.
பொக­வந்­த­லாவை வீதியில்
இதே­வேளை அட்டன் தர­வலை, சலங்­கந்தை, இன்­வரி, அட்லி, மாணிக்­க­வத்தை, பட்­டல்­கலை, என்சீ ஆகிய தோட்­டங்­களைச் சேர்ந்த ஆயி­ரக்­க­ணக்­கான தோட்டத் தொழி­லா­ளர்கள் சாலை மறியில் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். தொழி­லா­ளர்கள் கம்­ப­னி­க­ளாலும் தொழிற்­சங்­கங்­க­ளாலும் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­வ­தாக தமது கவ­லை­யையும் கோபத்­தையும் வெ ளியிட்­டனர்.
தல­வாக்­கலை
தல­வாக்­கலை, இரட்­ன­க­ரிய, பாமஸ்டன் ஆகிய தோட்டத் தொழி­லா­ளர்கள் பாமஸ்டன் சந்­தியில் ஒன்­று­கூடி 1000 ரூபா கோரிக்­கையை முன்­வைத்த போராட்டம் நடத்­தினர். இதன்­போது 400 க்கும் மேற்­பட்ட தொழி­லா­ளர்கள் கலந்து கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். கூட்டு ஒப்­பந்­தத்தை உட­ன­டி­யாக புதுப்­பித்து தமக்கு சம்­பள அதி­க­ரிப்பை பெற்றுத் தரு­மாறு இதன்­போது வலி­யு­றுத்திக் கூறினர்.
இதே­வேளை லிந்­துலை ஹென்போல்ட் தோட்­டத்தைச் சேர்ந்த 500 க்கும் மேற்­பட்ட தொழி­லா­ளர்கள் தல­வாக்­கலை பாம் வீதியில் திஸ்­பன சந்­தியில் வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இதனால் இங்கு சுமார் ஒரு­ம­ணி­நேரம் போக்­கு­வ­ரத்து ஸ்தம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.
மேலும் வட்­ட­வளை, டெம்­பல்ஸ்டோ தோட்­டங்­களைச் சேர்ந்த தொழி­லா­ளர்கள் அட்டன் கொழும்பு வீதியில் ரொசல்ல பிர­தே­சத்தில் கூடி பதா­கை­களை ஏந்­தி­ய­வாறும் எதிர்ப்புக் கோஷங்­களை எழுப்­பி­ய­வாறும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். அதே­போன்று அட்டன் ஸ்டிரதன் பிர­தேச தோட்டத் தொழி­லா­ளர்­களும் அட்டன் கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.
 அட்டன் வன­ராஜா மேற்­பி­ரிவு தோட்­டத தொழி­லா­ளர்கள் பொக­வந்­த­லாவை பிர­தான வீதியில் பதா­கை­களை ஏந்­தி­ய­வாறும் கோஷங்­களை எழுப்­பி­ய­வாறும் டிக்­கோய நக­ரத்தில் பேர­ணி­யு­ட­னான போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர். அத்­துடன் டிக்­கோயா பட்­டல்­கலை தோட்டத் தொழி­லா­ளர்­களும் டய­கம பிர­தான வீதியில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.
பதுளை மாவட்­டத்தில்
இது இவ்வாறிருக்க பதுளை மாவட்டத்தில் அப்புத்தளை, வியாரகலை, தங்கமலை, கிளனூர் உள்ளிட்ட தோட்டங்களிலும், லுணுகலை அடாவத்தையிலும் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்பு வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அடாவத்தையில் ஒன்றுகூடிய தொழிலாளர்கள் வீதியில் டயர்களை போட்டு எரித்தும் கோஷங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெ ளியிட்டதுடன் உடனடியாக சம்பள அதிகரிப்பினை பெற்றுத் தருமாறு கோஷமிட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையீடு செய்து சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்திக் கோரினர்.
நன்றி- வீரகேசரி

No comments: