Tuesday, September 27, 2016

சம்பள அதிகரிப்பை கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கூட்டு ஒப்பந்தத்தை உடனடியாக புதுப்பித்து தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவ தோட்டத் தொழிலாளர்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டம் பொகவந்தலாவ, கெம்பியன், அத்துடன் சாமிமலை ஸ்ரபி தோட்டத்திலும் இடம்பெற்றன.

வீதிமறியல் போராட்டத்தின் காரமாண போக்குவரத்து தடைப்பட்டிருந்ததன் காரணமாக பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதேவேளை தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி முதலாளிமார் சம்மேளனத்துக்கு  மகஜர் ஒன்றை அனுப்பி வைப்பதற்கு ஒருவார கால அவகாசத்தை கேட்டு ஸ்டர்ஸ்பி தோட்ட மக்கள் தோட்ட அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை தமது கோரிக்கைகள், நிலைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் தொடர்ந்தும் இழுத்தடிப்புக்களை மேற்கொண்டால் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.  

பொகவந்தலாவ மேற்பிரிவு, கீழ்ப்பிரிவு, டின்சின் தோட்டம், ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்றுகூடி பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை கொட்டியாக்கலை, கெம்பியன், மற்றும் செப்பல்டன் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கெம்பியன் நகரத்தில்  ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். 

இதேபோன்று சாமிமலை ஸ்டர்ஸ்பி தோட்டத்திலும் சுமார் 500 இற்கு மேற்பட்டோர் ஒன்று திரண்டு அர்ப்பாட்டங்களையும், போராட்டங்களை முன்னெடுத்ததோடு முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிரான கோசங்களை எழுப்பினர். 

No comments: