ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய, கேகாலை மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 3,000 வீடுகளை அமைக்கும் பணியை விரையில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் அதன் இணைத் தலைவர்களான சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மின்சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய, கேகாலை மாவட்ட ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஜய பெரேரா ஆகியோர் தலைமையில் கேகாலை மாவட்ட செயகத்தில் நடைபெற்றது.
இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 3,000 வீடுகளை அமைத்து கொடுக்கவென 800 ஏக்கர் காணிகள் தேவைப்படுகின்றது. இதில் 75 வீதமான காணிகள் புவியியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பெற்றுகொடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் கேகாலை பெருந்தோட்ட கம்பனியின் மூலம் 190 ஏக்கர் காணிகளும், பொகந்தலாவை பெருந்தோட்ட கம்பனியின் மூலம் 49 ஏக்கர் காணிகளும், கெலனிவெளி பெருந்தோட்ட கம்பனியின் மூலம் 72 ஏக்கர் காணிகளும், மல்வத்த பெருந்தோட்ட கம்பனியின் மூலம் 17 ஏக்கர் காணிகளும் மற்றும் ஜனவசம மூலம் 3 ஏக்கர் காணிகளும் பெற்று கொள்ளப்பட்டுள்ளன.
இதைத்தவிர, மேற்படி மாவட்டத்தில் 6 பாடசாலைகளும் 3 மத வழிபாட்டு ஸ்தலங்களும் மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றை புதிதாக அமைத்துக் கொடுக்வும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவில் பாதிக்கப்பட்ட தெஹியோவிட்ட தமிழ் வித்தியாலயத்தை வேறு இடத்தில் அமைப்பதற்காக கெலனிவெளி பெருந்தோட்ட கம்பனியின் மூலம் 2 ஏக்கர் காணியும் பெற்று கொள்ளப்பட்டுள்ளன. தற்போது இக்காணிகளை அளக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய, மேற்படி மாவட்டத்தில் வீடுகளை அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக முப்படையினரன் உதவிகளை பெற்று கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ் வீடுகள் அமைப்பதற்காக மூன்று திட்டங்கள் முன்வைக்கப்படவுள்ளன. அரசாங்கத்தினால் 20 பேர்ச் காணியில் வீடுகள் அமைக்கப்படும். அதற்காக 12 இலட்சம் பெறுமதியான கட்;டப் பொருட்கள் அரசாங்கத்தினால் பெற்று கொடுக்கப்படும். உடலுழைப்பு மறு;றும் கட்டடப் பொருட்களை பெற்று கொடுப்பதன் மூலம் 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீடு ஒன்று பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துக்கு சொந்தமாகும்.
இதற்காக சகல செலவுகளையும் மேற்கொள்வதற்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடாக, அமைச்சரவையில் அவசர அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டு அனுமதி பெற்று கொள்ளப்படவுள்ளது.
3,000 வீடுகளுக்கு மேலதிகமாக வீதி அபிவிருத்தி மற்றும் நீர், மின்சாரம் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கத்தின் மூலம் பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் வெள்ளம் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வீதிகள் மற்றும் மின்சாரம், நீர் உட்பட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கத்தின் மூலம் அமைத்து கொடுக்கப்படும்.
அத்தோடு, விவசாய நிலங்களை இழந்த மக்களுக்கு புதிதாக ஒரு ஏக்கர் காணிகள் வீதம் பெற்று கொடுப்பதற்கும் மற்றும் தமது சொத்துக்களை இழந்த சிறிய, பெறிய வியாபாரிகளுக்கு அரசாங்கத்தின் ஊடாக வந்திகளை பெற்று கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயம் மற்றும் வியாபாரத்தை இழந்த மக்கள் மீண்டும் அவற்றை சீர்படுத்திகொள்ளும் வரை அந்த குடும்பங்களுக்காக மாதாந்தம் சிறு கொடுப்பனவை வழங்குவதற்கான திட்டத்தை அரசாங்கம் முன்வைத்தள்ளதாக மேற்படி அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment