பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தோட்ட தொழிலாளர்களுக்கான 2500ரூபா இடைக்கால கொடுப்பனவை தோட்ட கம்பனிகள் வழங்காமல், மாற்று திட்டத்தை முன்வைக்க முயல்வதாக குற்றஞ்சாட்டிய முன்னணி சோசலிஷ சட்சியின் தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் அமைப்பாளரும் செயலாளருமாகிய துமிந்த நாகமுவ தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளில் பாராளுமன்றம் சென்றுள்ளவர்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க விரும்புவதில்லை. அவர்கள் சுகபோக வாழ்க்கை அனுபவிக்க மாத்திரமே விரும்புகின்றனர் என்றார்.
29-06-2016 அன்று ஹட்டனில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவிக்கையில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உடன்படிக்கை 2015.03.31ம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், உடன்படிக்கை பேச்சுவார்தை இழுபறி நிலையில் இருந்தது.
இந் நிலையில் பொருளாதார நெருக்கடியில் உள்ள தொழிலாளர்களுக்கு இடைக்கால தொகையாக 2500ரூபாவை வழங்க அரசாங்கத்தினால் தீர்மானம் நிறைவேற்றபட்டது. எனினும் தோட்ட கம்பனிகள் தட்டி கழிக்கும் நோக்கில் ஈடுபட்டுள்ளதுடன், மாற்று திட்டத்தை முன்வைக்க முனைகின்றனர். நாம் அதனை எதிர்கின்றோம்.
தோட்ட தொழிலாளர்களின் வாக்குகளில் பாராளுமன்றம் சென்றுள்ள திகாம்பரம், தொண்டமான் போன்றோர் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க விரும்புவதில்லை. அவர்கள் சுகபோக வாழ்க்கை அனுபவிக்க மாத்திரமே விரும்புகின்றனர்.
தேயிலை மலையில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் கால்களில் அட்டை கடித்து இரத்தம் உறிஞ்சுவது போலவே மலையக அரசியல்வாதிகளும் தொழிலாளர்களின் பிரச்சினையில் குளிர் காய்கின்றனர்.
200 வருட காலமாக இலங்கையில் வாழும் தோட்ட தொழிலாளர்களும் ஏனைய சமூகத்தை போல, சகல உரிமைகளும் உடையவர்களாக வாழவேண்டும். நாட் சாம்பளமாக 1000 ரூபாவும் காணி மற்றும் வீட்டுரிமையும் வழங்கபட வேண்டுமென தெரிவித்தார்.
எமது போரட்டமானது தமிழ் சிங்கள் முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தே ஆரம்பிக்க உள்ளோம். ஆகவே இப் போராட்டத்தில் தமிழ் சிங்கள முஸ்லிம் சமுக அமைப்புகளும் தோட்ட தொழிலாளர்களும் இணைந்துகொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார்.
No comments:
Post a Comment